Monday 25 February, 2008

அனுராதபுர படைத்தளத்தை தாக்கியழித்த புலிப்படைக்கலன்களை ஆராய அமெரிக்க ஆய்வாளர்கள் இலங்கை விஜயம்.

ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு - அமெரிக்க நிபுணர்கள் வருகை
2/25/2008 6:34:47 PM வீரகேசரி இணையம்
அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட
ஆயுதங்களைப் பரிசோதிப்பதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஏழுபேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர்.
அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்படாத அதிநவீன ரக
ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளதையடுத்தே அந்த ஆயுதங்களைப் பரிசோதிப்பதற்காக
அமெரிக்காவிலிருந்து விசேட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் விசேட விசாரணை பணியகத்தை சேர்ந்த ஏழு நிபுணர்களும் அனுராதபுர மாவட்ட
நீதிமன்றத்திற்கு இன்று திங்கட்கிழமை சென்று அனுராதபுர தாக்குதலுக்கு புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பரிசோதிப்பதற்கான
அனுமதியை பெற்றுக்கொண்டுள்ளதாகப/ நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.
விமான படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அரச இரசாயண/பகுப்பாய்வாளர் வசம் இருப்பது
குறிப்பிடத்தக்கது. அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது புலிகள் 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 22 ஆம் திகதி மேற்கொண்ட தாக்குதலில் படையினர்
ஐவர் பலியானதுடன் 22 பேர் படுகாமடைந்தனர். அத்துடன் புலிகளின் 22 சடலங்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: நீலக்குறியிட்ட எழுத்துக்கள் மூலத்தின்- பொறுப்பற்ற- (தமிழ்) எழுத்துப் பிழைகளைக் குறிப்பன.enb

No comments: