தேர்தல் எங்களுக்காக அல்லவென்ற நிலைப்பாட்டில் மட்டு. மாவட்ட மக்கள்
[28 - February - 2008]
நேரில் சென்று பார்வையிட்ட சிவில் சமூக அமைப்புகள் அறிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் `தங்களுக்காக அல்ல' என்ற பொதுவான பதிலே அந்த மாவட்ட மக்களிடமிருந்து கிடைத்ததாக அங்கு நேரடியாக சென்று பார்வையிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.
சகவாழ்வில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த மட்டக்களப்பிலுள்ள தமிழ், முஸ்லிம் சமூகங்களின் மத்தியில் காணப்பட்ட நட்புறவுப் பிணைப்புகள் மோதலில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினராலும் படிப்படியாக இலக்குவைக்கப்பட்டதை அவதானிக்க முடிந்ததாகவும் அப்பிரதிநிதிகள் குறிப்பிட்டிருப்பதுடன் பல்கலாசாரம், பல்லின, பல்கலாசார உள்ளூராட்சி நிறுவனங்கள், சகல சமூகங்கள் மத்தியிலுமான சகவாழ்வு மற்றும் உண்மையான ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே அப்பகுதிக்கான உடனடித் தேவையென அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டக்களப்புக்கு இம்மாதம் 16- 18 ஆம் திகதி வரை விஜயம் மேற்கொண்டிருந்த மக்களின் பலவந்த வெளியேற்றத்திற்கான விடயங்களை அவதானிக்கும் பிரஜைகள் குழு, சமாதானத்துக்கும் நீதிக்குமான ஆணைக்குழு, மனித உரிமைகள், மனித அபிவிருத்தி செயலகம், சமூக நம்பிக்கை நிதியம், பாரபட்சம், இனவாதம் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச இயக்கம், உருவாக்க ஒருங்கிணைப்புக்கான நீதி, சமாதான அமைப்பு, சட்ட சமூக நம்பிக்கையகம் ஆகிய சிவில் சமூக அமைப்புகள் கூட்டாகத் தயாரித்த அறிக்கை கொழும்பு ரேணுகா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
தற்போது உணர்ந்து கொள்ளக்கூடிய அரசியல் முகவரமைப்பாக அங்கு இருப்பது உள்ளூர் சமூகமானது `எனது அன்புக்குரியவர்களை திருப்பித்தாருங்கள், நான் உங்களுக்கு வாக்களிப்பேன்' என்று பேரம்பேசும் தன்மையே இன்று தென்படுகின்றது என்றும் இந்த சிவில் சமூக அமைப்புகள் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.
இதேவேளை, மட்டக்களப்பு மக்கள் மற்றும் கள நிலைவரம் பற்றியும் ஆராய்ந்த சிவில், சமூக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சிபார்சுகளையும் முன்மொழிந்துள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல்.
அரசியலமைப்பு சபையை நிறுவி, தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட ஆணைக்குழுக்களுக்கு உடனடியாக ஆணையாளர்களை நியமித்து அவற்றை சுயாதீனமாக இயங்க வழிசமைத்தல்.
சகல ஆயுதக் குழுக்களிடமிருந்தும் ஆயுதங்களை களையுதல்.
கிழக்கில் இனங்களுக்கிடையிலான பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருதல்.
அவசியப்படும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை மாத்திரம் வைத்துவிட்டு ஏனையவற்றை உடனகற்றி மக்களிடையே இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துதல் அடையாள அட்டை இல்லாதோருக்கு அவற்றை விநியோகிக்க முன்னுரிமை கொடுத்தல், `இனம்' குறிப்பிடப்படக்கூடாது. மட்டக்களப்பைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதை உறுதிப்படுத்துதல் ஆகிய சிபார்சுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சேது சமுத்திரத் திட்டத்தின் புதிய அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
2/28/2008 6:59:35 PM வீரகேசரி இணையம் -
சேதுசமுத்திர திட்டத்தில் அமைச்சர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு இடையே மத்திய அமைச்சரவை குழு சேதுசமுத்திர அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இராமர் பாலத்தை சிதைத்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இராமர் பாலம் உள்ள ஆதம்ஸ் பகுதியில் பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இராமர் இருக்கிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டதால், பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து, திருத்தியமைக்கப்பட்ட புதிய மனுவை மீண்டும் தாக்கல் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது. மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்த புதிய மனு எப்படி இருக்க வேண்டுமென்பதில், பெரிய குழப்பமும் சிக்கலும் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதால், முடிவு எடுக்க முடியாமல், பல வாரங்களாக இழுபறி நீடித்தது.
ரயில்வே வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட அன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாலிமென்ட் அலுவலகத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், சிவரான் பாட்டில், பாலு, அந்தோணி, கபிலசிபல், பரத்வாஜ் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படப் போகும் புதிய மனு பற்றிய விவரங்களை முழுமையாக படிக்க வேண்டும் என, இரண்டு மூத்த அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சேது சமுத்திர திட்ட விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்க, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரவை குழு புதிய அறிக்கையை ஒப்புதல் அளித்தது. ஒப்புதல் செய்யப்பட்ட புதிய அறிக்கை மார்ச் மாதம் 5 ஆம் திகதி நடைறெவுள்ள வழக்கு விசாரணையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
No comments:
Post a Comment