Thursday, 28 February 2008

வடபோர்முனை 'வன்னிகிராட்' -புலிகள் விபரிப்பு.

ஹிட்லருக்கு "ஸ்டாலின் கிராட்' போர்முனை போன்றுபடைத்தரப்பினருக்கு இப்போது வன்னிக் களம்
புலிகளின் ஏடு தகவல்
"இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு படுதோல்வியைக் கொடுத்த ஸ்டா லின்கிராட் சண்டைக்களம் போன்று வன்னிப் போர் அரங்கு தற்போது
திகழ்கிறது. இவ்வாறு தமிழீழவிடுதலைப் புலி களின் அதிகாரபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்' ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
நாள் தோறும் சண்டைகள் நடக்கும் கடுமையான சமர்க்களமாக வன்னிப் போர்க் களம் மாறியுள்ளது. கடந்த 8 மாதகாலமாக பல்வேறு தாக்குதல் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி நிலம் பிடிக்க படைத் தரப்பு முயற்சிக்கின்றது. எனினும், குறிப்பிட்டுக் கூறும் அளவுக்கு அதனால் ஒரு நில ஆக்கிரமிப்பு வெற்றியைப் பெறமுடியவில்லை.இதேவேளை, "எடிபல', "ரணகோச', "ஜெய சிக்குறு', "தீச்சுவாலை' என்று ஒவ்வொரு சமர் களுக்கும் பெயர் சூட்டிய சிங்களப் படைத் தலைமை கடந்த 8, 9 மாத காலமாக வன்னியில் நடக்கும் சண்டைகளுக்கு பெயர் சூட்டவில்லை. வெற்றி பற்றிய நம்பிக்கையீனங்களால்தான் சண்டைகளுக்குப் பெயர் சூட்ட
இராணுவத்தலைமை முன்வரவில்லை. எனினும் பெயர் சூட்டப்படாத பெரும் சண் டைகள் வன்னிச் சமர்களில் நடந்தபடியே உள்ளன. வன்னிச் சமரின் படைப்பரிமாணம் பரந்து விரிந்தது.வடபோர் முனை, மன்னார்க்களம், வவு னியாக்களம், மணலாற்றுக்களம் என்று வன்னிப்போர் அரங்கம் அடையாளப்ப டுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு சமர் அரங்கிற்கும் பொறுப்பாக தகுதிவாய்ந்த தளபதிகளை நியமித் துள்ள புலிகளின் தலைவர், தமிழர் சேனை யின் மரபுப் போர்ப் படைப்பிரிவுகளையும் அங்கு நிலைகொள்ள வைத்துள்ளார். கிட்டு பீரங்கிப் படையணி, குட்டி சிறி மோட்டார் படையணி, விக்டர் கவச எதிர்ப் புப் படையணி, சார்ள்ஸ் அன்ரனி படையணி, சோதியா படையணி,
மாலதி படையணி, ஜெயந் தன் படையணி போன்ற தாக்குதல் படையணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் பொன்னம்மான் கண்ணி வெடிப் பிரிவு மற்றும் சினைப்பர் அணிகள் , ஆர்.பி.ஜி. கொமாண்டோ அணிகள் போன்ற சிறப்பு அணிகளையும் சமரசங்கப் பகுதிகளுக்கு புலிகள் நகர்த்தியுள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் படையினரின் படைக் கட்டுமானங்களுக்கு பதிலடி கொடுக் கும் வகையில் தமிழர் சேனையில் படைக் கட்டுமானங்களை உருவாக்கிய புலிகள், வன்னிப் போரரங்கை படையினரின் புதை குழியாக வியூகம் வகுத்துள்ளனர். இப்போதைய சமரில் புலிகளின் சண்டை வியூகம் வேறுபட்டது. முன்னரங்கப் பகுதி களிலே படைத்தரப்பு கடுமையாக சண்டை யிடுகின்றது. கடந்த 89
மாத காலமாக வன்னியின் முன்னரங்கப் பகுதிகளே சமர் அரங்காக நிலைத்திருக்கின்றன. இந்த முன்னரங்கைத் தாண்டி உள்ளே வர முடியாது
படைத்தரப்பு திணறுகிறது.உள்நகர முன்னரே படைத்தரப்பு பல்வேறு சிதைவு நிலையை அடைந்துள்ளது என்றால் உள்நகர்ந்து அகலக்கால் பரப்பும் நிலை எழுந்தால் படைத்தரப்பு சந்திக்கவுள்ள அபாயம் பற்றிப் போரியல் ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.வன்னிப்பெருநிலப்பரப்பை ஆக்கிரமித்து புலிகளை அழிப்பது என்பதே வன்னிப் போரில் படையினரின் நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைய அது விரிவான நகர் வுத்திட்டத்தை நாடியுள்ளது. வன்னியின் கிழக்கு முனையான கொக்குத்தொடுவாயில் இருந்து மேற்கு முனையான திருக்கேதீச்சரம் வரையுள்ள முன்னரங்க நிலப் பகுதி எங்கும் கம்பளம் விரிப்பதுபோல படை களை நகர்த்தி வன்னியை ஆக்கிரமிப்பது என்ற திட்டத்துடன் உள்ளது.ஆனால், விடுதலைப் புலிகளின் படை நிலை வேறு விதமாக இருக்கும். தனது மண் ணில் தனது மக்களின் ஊர்களில் கால நீட் சியுடன் போர் நடக்கும்போது முழு வளத்தை யும் திரட்டி மக்களை போர் மயப்படுத்தி வெற் றிகரமாக போரை முன்னெடுக்கும் வாய்ப்புகள் விடுதலைப்புலிகளுக்கு உள்ளது. 2ஆம் உலகப்போர் காலத்தில் ஜேர்ம னியப்படையைச் சிதைத்து ஜேர்மனிக்கு படுதோல்விகளைப் பரிசளித்த ஸ்டாலின் கிராட் சண்டையை நினைவூட்டும் களமாக வன்னிப் போரரங்கம் காட்சி மாற்றம் கண்டுவருகின்றது.ஹிட்லரின் ஜேர்மனியப்படைகள் சந்தித்த படுதோல்வியை மஹிந்தரின் படைத் தரப்பு சந்திப்பது திண்ணம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: