Sunday, 2 March 2008

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மருந்து; எதிரிக்கு உணவு-இலங்கைப்பிரதமர்.

எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கை
பிரதமர் தெரிவிப்பு
3/1/2008 5:33:32 PM வீரகேசரி இணையம்
உலகிலேயே தாக்கவரும் எதிரிக்கு உணவையும் கொடுத்து போரிடும் ஒரே நாடு இலங்கையாகும் என பிரதமர் ரட்ணசிறி
விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது: உலகிலேயே பயங்கரவாதிகளுக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக கொடுத்துக்கொண்டு அவர்களுடன் சண்டையிடும் ஒரே நாடு இலங்கையாகும்.
எம்மீது தாக்குதல் நடத்தி நாட்டின் உறுதியையும் பொருளாதாரத்தையும் அழிக்கும் நோக்குடன் செயற்படும் பயங்கரவாதிகளுக்கு அனைத்து
வசதிகளையும் அரசாங்கமே இலவசதிமாக வழங்குகிறது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்கள் யார்? போரின் போது இராணுவத்தின் தாக்குதலில் காயமடைந்த பயங்கரவாதிகளே அங்கு
சிகிச்சை பெறுகின்றனர். அரசாங்கத்தின் மருத்துவ வசதியில் சுகமடைந்து மீண்டும் அவர்கள் நமது இராணுவத்தை தாக்குவதற்கு போர்களத்துக்கு
வருகின்றனர்.
நள்ளிரவு முதல் ஷெல்காஸின் விலை 261 ரூபாவால் உயர்வு
[01 - March - 2008]ஷெல் காஸ் (சமையல் எரிவாயு)
சிலின்டரொன்றின் விலை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 261 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரொன்றின் விலையே மேற்குறித்த தொகையினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஷெல் காஸ் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
எனவே, இதுவரை 1,488 ரூபாவாக இருந்த சிலின்டரொன்றின் விலை 1,749 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஷெல் காஸ் நிறுவனத்தின் நிதிப்
பணிப்பாளரான ரிமோயி சல்டீன் தெரிவித்தார்.
இதேநேரம், ஷெல் காஸின் விலை இதற்கு முன்னர் ஜனவரி மாதம் 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 175 ரூபாவால்
அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் 17.5 சதவீதத்தால் ஷெல் காஸின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கு நுகவோர் பாதுகாப்பு
அதிகார சபையின் அனுமதி கிடைத்து விட்டதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இந்த விலை அதிகரிப்பின் பிரகாரம் 2.3 கிலோகிராம் நிறையுடைய சிலிண்டரொன்றின் புதிய விலை 322 ரூபா என்றும் ஷெல் காஸ் நிறுவனம்
தெரிவித்துள்ளது.
வன்னியில் 8 பொதுமக்கள் கிளைமோர் தாக்குதலில் பலி
[29 - February - 2008]
* முல்லைத்தீவு, நெடுங்கேணி ஆஸ்பத்vரிகளில் சடலங்கள் வன்னியில் நேற்று முன்தினம் புதன்கிழமை ஆழ ஊடுருவும் படையணியினர் நடத்திய இருவேறு கிளைமோர் தாக்குதலில் எட்டு அப்பாவிப்
பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல்களில் இவர்கள் சென்ற உழவு இயந்திரங்களும் பலத்த சேதமடைந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று முறிப்பு பனங்காமம் பகுதியில் முதல் தாக்குதலும் மருதோடை - ஒலுமடு பகுதியில் இரண்டாவது தாக்குதலும்
நடைபெற்றுள்ளது.
பனங்காமம் பகுதியில் பிற்பகல் 1.50 மணியளவில் முதல் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இத் தாக்குதலில், உழவு இயந்திரமொன்றில் சென்று
கொண்டிருந்த நால்வர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த நால்வரதும் உடல் முழுக்க காயங்களேற்பட்டுள்ளது. இவர்கள் சென்ற உழவு இயந்திரமும் பலத்த சேதமடைந்துள்ளது. வீதியோரத்தில்
மரமொன்றின் நடுப்பகுதியில் கட்டப்பட்டிருந்த கிளைமோரே வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த வீதியால் வந்தவர்கள் ஏனையவர்களின் உதவியுடன் சடலங்கள் நான்கையும் முல்லைத்தீவு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று
ஒப்படைத்தனர்.
இந்தத் தாக்குதலில் பார்த்தீபன் (18 வயது), சண்முகலிங்கம் தவராசா, செல்வரட்ணம் செந்தூரன் மற்றும் குணபால சிங்கம் ஜெகந்திரையன் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதேநேரம், புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் மருதோடைக்கும் ஒலுமடுவுக்குமிடையே இரண்டாவது கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலிலும் பொதுமக்களுடன் சென்ற உழவு இயந்திரமொன்றே இலக்காகியுள்ளது. இதனால் இந்த உழவு இயந்திரத்தில் சென்ற நால்வரும்
அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் விமலதாஸ், கந்தசாமி, மரியன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கொல்லப்பட்டதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
இவர்களது சடலங்கள் பின்னர் நெடுங்கேணி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேநேரம் இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையினரே
இந்தக் கிளைமோர்த்தாக்குதலை நடத்தியதாக கூறப்படுவதை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார மறுத்துள்ளார்.
அரசமைப்பும் தேசமும்
ஜனநாயகத்தின் பெயரால் கிழக்கில் கொழும்பு அரசு அரங்கேற்ற எத்தனித்திருக்கும் நாடகத்தின் உண்மை வடிவத்தை சிவில் அமைப்புகள் சில ஒன்று கூடி தோலுரித்துக் காட்டியிருக்கின்றன.இந்த ஜனநாயகக் கோமாளித்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்து கிழக்கில் மேடையேற்றும் உள்ளூராட்சித் தேர்தல் நாடகத்தை ரத்துச் செய்யுங்கள்
என்று அந்த அமைப்புகள் கோரியிருக்கின்றன.பொதுமக்களைப் பலவந்த வெளியேற்றத்துக்கு உட்படுத்தும் விடயங்களை அவதானிக்கும் பிரஜைகள் குழு, சமாதானத்துக்கும் நீதிக்குமான
ஆணைக்குழு, மனித உரிமைகள், மனித அபிவிருத்திச் செயலகம், சமூக நம்பிக்கை நிதியம், பாரபட்சம், இனவாதம் ஆகியவற்றுக்கு எதிரான சர்வதேச
இயக்கம், உருவாக்க ஒருங்கிணைப்புக்கான நீதி, சமாதான அமைப்பு, சட்ட, சமூக நம்பிக்கை மையம் ஆகிய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளே
வடக்கு, கிழக்குக்கு நேரடியாக விஜயம் செய்து அந்தந்தப் பிரதேச நிலைமைகளை அவதானித்த பின்னர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் உண்மை
நிலைவரத்தை இப்படி அம்பலப்படுத்தியிருக்கின்றார்கள்.இந்தத் தேர்தல் நாடகத்தை ரத்துச் செய்யக்கோரியுள்ள இந்த சிவில் சமூக அமைப்பினர் மற்றொரு முக்கிய விடயத்தையும்
சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். மட்டக்களப்பு மக்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் தங்களுக்காக நடத்தப்படும் ஒன்றாக அவர்களால் கருதப்படவில்லை என்பதே அவர்களின்
தொடர்பாடல்களின் பின்னர் சிவில் சமூகக் குழுவினர் அம்பலப்படுத்தியுள்ளனர்.இந்த உள்ளூராட்சித் தேர்தல்கள் தமக்குரியவை அல்ல என்று சம்பந்தப்பட்ட அந்த மக்களே கருதுவார்களேயானால், அத்தேர்தல்கள் யாருக்காக
நடத்தப்படுகின்றன? அதையும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் நாசூக்காகச் சுட்டிக்காட்டத் தவறவில்லை.வன்முறைகளுக்குக் காரணமானவர்கள் ஆயுதங்களை வைத்துக்கொண்டே பிரதான அரசியல் நீரோட்டத்துக்குள் நுழைவதன் மூலம் தமது
அதிகாரத்தையும் செல்வாக்கையும் சட்ட ரீதியாக்குவதற்கு இத் தேர்தல்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதே சிவில் சமூக அமைப்புகளின்
பிரதிநிதிகளின் கருத்தாகும்.இக்கருத்தை சுருக்கமாகவும், தெளிவாகவும் விளக்குவதானால், அரசின் துணைப்படைகளாக இயங்கும் ஆயுதக் குழுக்களுக்கு ஒட்டுக்குழுக்களுக்கு
மக்கள் பிரதிநிதிகள் என்ற ஜனநாயகப் படம் போட்டு நாமம் சூட்டுவதற்கான அரசியல் நாடகமே இந்தத் தேர்தல் மாய்மாலமாகும்.அரசியல் பின்னணி கொண்ட அரசுத் தலைமை, தன்னுடைய அரசியல் சூத்திரங்களுக்கும் இலக்குகளுக்கும் ஏற்றவாறு நாட்டின் ஜனநாயகத் தேர்தல்
முறைகளையே இவ்வாறு வெகு "ஸிம்பிளாக'ப் பயன்படுத்த முடிகின்றமைக்கு அரசியல் அதிகாரத்தின் கைகளில் தேர்தல் தொடர்பான அதிகாரங்களும்
சிக்கிக் கிடப்பதே பிரதான காரணமாகும்.இந்த அநீதிப் போக்கும், அரசியல் அதிகாரம் தவறாகக் கையாளப்படும் அத்துமீறலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவே அத்தகைய அதிகாரத்
துஷ்பிரயோகம் இடம்பெறாமல் தடுக்கும் நோக்கத்திற்காகவே அரசமைப்பிற்கான 17 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது.அதன்படி தனியான அரசமைப்புக் கவுன்ஸில் ஒன்று செயற்படும். அந்த அரசமைப்புக் கவுன்ஸில் தேர்தல், நீதி, பொலிஸ் போன்ற சுயாதீனமான விடயங்களை
சுதந்திரமாகக் கையாள்வதற்கு தனித்தனி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்கும். அவையே அவற்றின் துறைசார்ந்த விடயங்கள் மற்றும்
நியமனங்கள் குறித்து முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுத்துச் செயற்படுத்தும்.அத்தகைய சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படத் தொடங்கியதும், அவற்றின் விவகாரங்களில் அரசியல் அதிகார வர்க்கம் தலையிடவோ,
செல்வாக்குச் செலுத்தவோ முடியாது போய்விடும்.ஆனால் அரசமைப்பின் அந்த 17 ஆவது திருத்தத்தையோ, அதன் கீழான அரசமைப்புக் கவுன்ஸிலையோ இயங்க விடாமல் தடுக்கும் விதத்தில் அந்தக்
கவுன்ஸிலை ஸ்தாபிக்காமல் இழுத்தடித்து வருகின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.அரசமைப்புக் கவுன்ஸிலையோ அல்லது நீதி, பொலிஸ், தேர்தல் போன்றவை தொடர்பான சுயாதீன ஆணைக்குழுக்களையோ உருவாக விடாமல்
இவ்வாறு தடுக்கும் ஜனாதிபதி, அதன்மூலம் அத்துறைகளின் உயரதிகாரிகள் நியமனம், இடமாற்றம் போன்றவை தொடர்பான அதிகாரமும்
கைமாறிவிடாமல் தன்னிடமும் தனது அரசிடமும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்கின்றார். அதன் வாயிலாக இத்துறைகளில் தாம்
விரும்பியவற்றைத் தம் விருப்பப்படி தமது அரசியல் அபிலாஷைகளுக்கு இசைவாக செயற்படுத்தும் தந்திரத்தை அவர் பேணி வருகின்றார்.அரசமைப்பின் 17 ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு, அரசமைப்பில் கவுன்ஸில் இயங்கத் தொடங்கி, அதன்மூலம் மேற்படி துறைகள்
தொடர்பான சுயாதீன ஆணைக்குழுக்களும் செயற்பட ஆரம்பித்து விட்டால், அத்துறைகள் தொடர்பாக அரச அதிகாரமும், செல்வாக்கும் தனதும் தனது
அரசினதும் கையைவிட்டு அடியோடு பறிபோய்விடும் அத்துறைகள் தம்மை மீறி சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் தம்பாட்டில் இயங்கத்
தொடங்கிவிடும் என அஞ்சுவதால் அந்த அரசமைப்புக் கவுன்ஸில் உருவாக்கத்துக்கு இடக்குப் போட்டு, அதனை முடக்கி வருகின்றார் ஜனாதிபதி.இலங்கைத் தேசத்தின் உயர் சட்டமாக அரசமைப்பைப் போற்றிப் பேணுவதாகக் கூறுகின்றது தென்னிலங்கை.ஆனால் இந்த நாட்டில்தான் அந்த அரசமைப்பில் இடம்பெற்றுள்ள 13 ஆவது திருத்தத்தை 21 வருடங்கள் கழிந்த பின்னரும் இனித்தான்
நடைமுறைப்படுத்த எண்ணுவதும், 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தக் கெஞ்சுவதுமான அரசியல் அவலங்கள் அரங்கேறுகின்றன.நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் எண்ணவும், அதற்காக அவர்களைக் கெஞ்சவும் வேண்டிய விடயமாக அரசமைப்பு இருக்குமானால் அதுக்கு ஏது
மதிப்பு? அத்தகைய நிலையில் இந்தத் தேசத்தின் அரசமைப்பு இருப்பதால்தான் தேசத்துக்கு இந்தச் சீரழிவு..........!

சேதுசமுத்திர திட்டத்தின் புதிய அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
2/28/2008 6:59:35 PM வீரகேசரி இணையம்
சேதுசமுத்திர திட்டத்தில் அமைச்சர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு இடையே மத்திய அமைச்சரவை குழு
சேதுசமுத்திர அறிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இராமர் பாலத்தை சிதைத்து சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை
விசாரித்த உச்சநீதிமன்றம் இராமர் பாலம் உள்ள ஆதம்ஸ் பகுதியில் பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்தது. இவ்வழக்கு தொடர்பாக
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் இராமர் இருக்கிறாரா என்பதே சந்தேகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டதால், பெரிய அளவில் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து, திருத்தியமைக்கப்பட்ட புதிய மனுவை மீண்டும் தாக்கல் செய்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது. மத்திய அரசு
தரப்பில் தாக்கல் செய்த புதிய மனு எப்படி இருக்க வேண்டுமென்பதில், பெரிய குழப்பமும் சிக்கலும் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய
அமைச்சர்கள் மத்தியிலேயே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதால், முடிவு எடுக்க முடியாமல், பல வாரங்களாக இழுபறி நீடித்தது.
ரயில்வே வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்ட அன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் பாலிமென்ட் அலுவலகத்தில் மத்திய
அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், சிவரான் பாட்டில், பாலு, அந்தோணி, கபிலசிபல், பரத்வாஜ் மற்றும் அம்பிகா சோனி ஆகியோர் பங்கேற்ற
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படப் போகும் புதிய மனு பற்றிய விவரங்களை
முழுமையாக படிக்க வேண்டும் என, இரண்டு மூத்த அமைச்சர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால், கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், சேது சமுத்திர திட்ட விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்க, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை
கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சரவை குழு புதிய அறிக்கையை ஒப்புதல் அளித்தது. ஒப்புதல் செய்யப்பட்ட புதிய அறிக்கை மார்ச் மாதம் 5 ஆம் திகதி நடைறெவுள்ள வழக்கு விசாரணையில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

No comments: