
TNA ஓடுகாலிகளே உடனே பதவி விலகுங்கள்.
*தன் சொந்தப் பிரதிநிதியினுடைய உயிர்குடிக்கும் பாராளமன்றம் எவ்வாறு தமிழீழ தேசியப் பிரச்சனைக்கு தீர்வாகும்?
*யுத்த நிறுத்த ஒப்பந்த கடப்பாடுகளை இலங்கை அரசு ஒருதலைப்பட்சமாக மீறி முறித்துக் கொண்ட பின்னரும், 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' கருங்காலிகளுக்கு பாரளமன்றத்தில் என்ன வேலை?
* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளில் ஒரு வரியைத்தானும் நிறைவேற்ற முடிந்திருக்கிறதா?
*ஓடுகாலிகளே பதவி விலகுங்கள்!
-பாராளமன்றம் பக்ச பாசிஸ்டுக்களின் பயங்கரவாதத்துக்கு மூடுதிரை என்பதை அம்பலமாக்குங்கள்!!
-போராடும் வேங்கைகள் அல்ல உங்கள் போலிப்பாராள மன்றமே பயங்கரவாதத்தின் ஊற்று மூலம் ஆகும், என்பதை நிரூபியுங்கள்!!!
ENB
செய்தி மூலம்:யாழ் உதயன்
யாழ்.மாவட்ட எம்.பி. சிவநேசன் கிளைமோர் தாக்குதலில் பலியானார்!
ஆழ ஊடுருவும் படையணி மீது குற்றச்சாட்டு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டிணர் சிவநேசன் (வயது 51) நேற்றுப் பிற்பகல் 1.20 மணியளவில் வன்னியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் பலியானார். அவரின் வாகனச் சாரதியும் இச்சம்பவத்தில் உயிரிழந்தார். இலங்கை நாடாளுமன்றின் அமர்வில் கலந்துகொண்ட பின்னர் நேற்று விடிகாலை கொழும்பில் இருந்து புறப்பட்டு வன்னியில் தமது வீட்டுக் குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், கனகராயன் குளத்துக்குச் சமீப மாக உள்ள குள்ளர்குயிலங்குளம் என்ற இடத்திலேயே அவரது வாகனம் கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கானது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட் டுப் பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ள இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியே இந்தத் தாக்குதலை நடத் தியிருப்பதாக விடுதலைப் புலிகளின் வட் டாரங்கள் குற்றம் சுமத்தின. கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் சார்பில் யாழ். மாவட் டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி எம். பியானார்.கடந்த தடவை நாடாளுமன்ற அமர் வில் கலந்துகொள்வதற்காக வன்னியிலி ருந்து கொழும்புக்கு வந்த சமயம் மதவாச்சி சோதனைத் தடை நிலையில் தாம் அகௌர வமாக நடத்தப்பட்டார் என்றும், தமது வாகனமும் பொதிகளும் மிக இறுக்கமாகச் சோதனையிடப்பட்டன என்றும் சிவநேசன் நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியிருந்தார். தமது நாடாளுமன்றச் சிறப்புரிமை இதன் மூலம் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சபை யில் தெரிவித்திருந்தார்.""அவரது வாகனமே இப்போது இலக்கு வைத்துத் தாக்கப்பட்டிருக்கின்றது. இராணு வத்தின் விசேட அணியே ஊடுருவி இத் தாக்குதலை நடத்தியிருக்கின்றது.'' என்று புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்தார்.இந்தத் தாக்குதலில் வாகனச்சாரதி அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாய மடைந்த சிவநேசன் எம்.பியை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. எனினும், அதற்கு முன்னரே அவர் மரணமானார் எனக் கூறப்பட்டது. மாங்குளத்துக்குத் தெற்காக 2 கிலோ மீற்றர் தொலைவிலும் ஓமந்தையில் இருந்து 25 கிலேமீற்றர் தொலைவிலும் இத்தாக்குதல் ஏ9 வீதியில் நேற்று வியா ழக்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் இடம்பெற்றது. இத்தாக்குதலில் சிவநேசன் மற்றும் அவரது வாகனச் சாரதியான ஒரு பிள்ளை யின் தந்தையான வவுனியா செட்டிகுளத் தைச் சேர்ந்த பெரியண்ணன் மகேஸ்வர ராஜா (வயது 27) ஆகிய இருவரும் உயிரி ழந்துள்ளனர். மேலும் வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அருளானந்தம் லூயிஸ் நாதன் (வயது 13) என்ற சிறுவன் படுகாய மடைந்துள்ளான்.உயிரிழந்த இருவரது சடலங்களும் மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளன. சிவநேசன் எம்.பியின் சட லம் இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச் சிக்கு எடுத்துவரப்படவுள்ளது என்று தெரி விக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.1957ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் திகதி கரவெட்டியில் பிறந்த இவர் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்.வடபிராந்திய தென்னை, பனை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளராக 96ஆம் ஆண்டில் இருந்து 2004 ஆம் ஆண்டுவரை பணியாற் றினார். யாழ்.தென்னை, பனை வள அபி விருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமா சகத்தில் கணக்காளராகவும் பணியாற்றிய இவர், மல்லாவி மக்கள் அமைப்புக்களின் சம்மேளனத்தின் செயலாளராகவும் இருந் தார்.சிவநேசன் தனது மனைவி, இரு மகன் மார், இரு மகள்மார்களை விட்டுப் பிரிந் துள்ளார். படையினர் மறுப்புஇதேவேளை சிவநேசன் எம்.பி மீதான கிளைமோர் தாக்குதலை படையினரின் ஆழ ஊடு ருவும் அணியினரே மேற்கொண்டனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள் ளனர்.ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத் துள்ள இராணுவம் "இந்தச் சம்பவம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் நடந்திருப்பதால் அதற்கான பொறுப்பை புலிகளே ஏற்கவேண்டும்'' என்று

தெரிவித்துள்ளது.

1)ENB ஒஸ்லோ பிரசுரம் 2002 2)ENB செஞ்சோலைப் பிரசுரம் - 2006
No comments:
Post a Comment