வடக்குப் படையெடுப்பை தோற்கடிப்போம்!
பறப்பாங்கண்டலில் பாரிய சண்டை
சனிக்கிழமை விடிகாலையில் விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் பக்ச பாசிசபடைகளுக்கும் பறப்பாங்கண்டலில் போர் மூண்டுள்ளது.இனவெறி இலங்கைப் பாசிச அரசின் வடக்குப் படை எடுப்பை தோற்கடிக்க விடுதலைப்புலிப் போராளிகள் மூர்க்கத்துடன் போராடுவதாக தாயகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னாரையும் மதவாச்சியையும் இணைக்கும் பெருவீதி இன்றுகாலை 10.00 மணியளவில் இருந்து முற்றாக மக்கள் பாவனைக்கு மறுதலிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில் ஆக்கிரமிப்புப் போரில் விடுதலை வேங்கைகள் வீழ்த்திய இனவெறி அரச இராணுவ சிப்பாய்களை அவர்களது சொந்த நாட்டிற்கு கடத்திச் செல்வதற்கு தரை மற்றும் வான் வழிகளில் அவசரகாலப்படைப்பிரிவுகள் தீவிரமாக இறங்கியுள்ளன.வழமை போலவே வேங்கைகள் ஆடிய வேட்டையின் விபரங்கள் வெளியாகவில்லை.ஆனாலும் போர்முனையில் அவர்கள் ஆடும் உக்கிரத்தாண்டவம் வடக்குப் படையெடுப்பை தோற்கடிக்கும் என்பது நிச்சயம்.ஆதரிப்போம்.....நீதியான விடுதலை யுத்தத்தை.
No comments:
Post a Comment