'சுட்டும்விழிச்சுடரும்
' எமக்கும் உண்டு.

செய்தி மூலம்:யாழ் உதயன்

லூயிஸ் ஆர்பர் அம்மையார் சுட்டிக்காட்டுகிறார்
இலங்கையில் மோதல்கள் மீண்டும் ஆரம்பமான பின்னர், அந்த நாட்டின் மனித உரிமை மீறல்கள் மிக மோசமடைந்திருக்கின்றன சிக்கலான நிலையை அடைந்துள்ளன. அது மிகவும் மன வருத்தம் தரும் ஒன்றாக மாறியுள்ளது. இலங்கையில் மேலும் வன்செயல்கள் மூளும் அபாயம் உண்டு. அது குறித்தும் கவலைப்படும் நிலை உருவாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் இவ்வாறு தமது அறிக் கையில் சுட்டிக்காட்டி இருக்கிறார். மனித உரிமைக் கவுன்ஸிலின் அமர்வுகளின் முடி வில் அவர் தமது வருடாந்த இறுதி அறிக் கையை சமர்ப்பித்தார்.அவ்வேளையில் அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை வெளிப்படுத் திய போது இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்தும்
பிரஸ்தாபித்தார்.மீண்டும் இலங்கையில் மோதல்கள் தொடங்கிய பின்னர் அந்த நாட்டில் மனித உரிமைகள் மீறல்கள் சிக்கலான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அங்குள்ள நிலைமை வருந்ததக்க அளவுக்கு காணப்படுகின்றது என்று அவர் சொன்னார். லூயிஸ் ஆர்பர் அம்மையார் தமது பதவிக் காலம் முடிவதால், ஐ.நா. செயலா ளர் நாயகம் பான் கீ மூனை வெள்ளியன்று சந்தித்து விடைபெற்றார்.அதற்கு முன்னதாக வருடாந்த இறுதி அறிக்கையை ஐ.நா. மனித உரிமைக் கவுன் ஸிலுக்குச் சமர்ப்பித்தார்.அந்த அறிக்கையிலேயே இலங்கை யில் மனித உரிமைகள் வருந்தத்தக்க அள வுக்கு மிக மோசமடைந்திருப்பதாக தெரி வித்திருக்கிறார்.மேற்கு டார்பூரிலும் இதே நிலை மையே காணப்படுவதாகவும் அவர் தமது அறிக்கையில் தொட்டுக் காட்டியிருப்ப தாகச் சொன்னார்.மேலும், ஐ.நா. சபையின் உலகளாவிய நோக்கு அறிக்கையைச் தயாரிக்கும் போது வளர்ச்சி குன்றிய நாடுகளின் பங்களிப்பும் பெறப்படவேண்டும் என்று தான் அறிக் கையில் வற்புறுத்தி உள்ளதாகத் தெரிவித் தார்.தாம் மனித உரிமைகள் ஆணையாளரா கப் பதவி வகித்த காலத்தில் தமது அனுப வத்தின் பிரதிபலிப்புகளை எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும் கவுன்ஸி லின் மாநாட்டில் வெளியிடுவதாகவும் கூறினார்.ஆர்பர் அம்மையாருக்கு பிரியாவிடை வழங்கிய ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவரின் சேவைகளை மிக வும் விதந்துரைத்துப் பாராட்டினார்.

----------------------------------------------------------------

பிற்குறிப்பு:
உள்நாட்டு மக்களுக்கு அஞ்சி, அவர்கள் அங்கீகரித்த சட்டதிட்டங்களை மீறி குத்தகைச் சிறைச்சாலை குவான்ரனாமாபேயிலும்,டியாகோகாசியா தீவிலும்,முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் இருந்து களவாடிய திருட்டு திரிபுவாத நாடுகளிலும் படு இரகசியமாக உன் நாடு நடத்தும் பாசிசப் பயங்கரம் எந்த வகைப்பட்ட மனித உரிமை ''அம்மையாரே''?
No comments:
Post a Comment