Sunday, 16 March 2008

மணலாறில் தாய் மண்காக்கும் விடுதலைவேங்கைகள்.

வெலி ஓயாவில் மணல் ஆற்றில் இராணுவம் புலிகள் மோதல்
3/15/2008 11:56:59 AM
வீரகேசரி இணையம்

வெலியோ நிக்கவெவு , கன்பிலிவெவ பகுதிகளில் உள்ள இருதரப்பினரதும் முன்னரங்க நிலைகளுக்கு இடைப்பட்ட சூனியப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையில் கடும் சண்டை இடம் பெற்றதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன . தரைப்படைத் தகவல்களின் படி மேற்படி பிரதேசத்தில் இராணுவம் மட்டுப்படுத்தப்பட்ட போர் நடவடிக்கையில் புலிகளுடன் ஈடுபட்டிருந்தாகவும் நேற்று மாலை புலிகள் தங்களது முன்னரங்க நிலைகளை உடைப்பதற்கு முயற்சி எடுத்த வேளையிலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இராணுவத்தரப்பு கூறுகிறது. நடவடிக்கைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரது சடலம் ஒன்றும் , 4 கண்ணிவெடிகள் , 10 கிலோகிராம் நிறைகொண்ட 2 கிளைமோர்கள் , 2 கிலோகிராம் நிறை உடைய ஒரு கிளைமோர் , என்பனவும் மீட்க்கப்பட்டுள்ளன . வன்னி தகவல்களின் படி டி56 ரக துப்பாக்கி 1 , அதற்கான மகசின் 1 , தோட்டார்க்கள் 50, கிளைமோர் இயக்கும் கருவி 1 தொலைபேசி 1 வயர்றோல் 2 , 2 லீற்றர் நீர் கொள்கலன் 15 பொதி செய்யப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் 7 றோச் பற்றிகள் 34 என்பனவும் மீட்கப்பட்டுள்ளன . அத்தோடு இருதரப்புக்கும் இடையில் கிருமிச்சை பகுதியில் தொடர் மோதல்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. இதேவேளை விடுவிக்கப்பட்டதாக முல்லைத்தீவு , கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும் ஆயு ஊடுரும் படையினர் . விடுதலைப்புலிகளுக்கு இழப்புக்களை கொடுத்து வருவதாகவும் வன்னி படைத்தரப்ப்பு ஆதாரம் சாட்டி தெரிவிக்கப்படுகிறது.

1 comment:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Smartphone, I hope you enjoy. The address is http://smartphone-brasil.blogspot.com. A hug.