Monday, 17 March 2008

இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு: 25 மாவட்டங்களிலும் சிங்கக்கொடி!

நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கக்கொடி ஏற்றப்படுவது உறுதி - பஷில் ராஜபக்ஷ
3/16/2008 8:58:12 PM வீரகேசரி நாளேடு -
நாட்டிலுள்ள 25 மாவட்டங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சிங்கக்கொடி ஏற்றப்படுவது உறுதி. அதன் பின் சகல இன மக்களும்
இன, மத, பேதமின்றி சம உரிமையுடன் வாழும் நிலை உருவாகும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி. யுமான பஷில் ராஜபக்ஷ
தெரிவித்தார். ஜனநாயகத்தை மதிக்கின்ற கிழக்கு மாகாண மக்களுக்காக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டியது இன்றைய தேவையாகும்.
மஹிந்த சிந்தனையின் கீழமைந்த பாரிய 10 திட்டங்களில் 90 வீதமானவை நிறைவடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
மஹிந்தவின் திட்டமான கிராம எழுச்சித் திட்டத்தின் ஒரு நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை களுத்துறை மாவட்டத்திலமைந்துள்ள மாவல
மாரெக்ம பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது கிராம வீதிகள் கொங்ரீட் மூலமாக புனரமைத்தல், நீர் வழங்கல், விவசாய
உற்பத்தி மற்றும் சன சமூக நிலைய அடிக்கல் நாட்டும் நிகழ்வு போன்ற வேலைத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
தேச நிர்மாண அமைச்சரும் களுத்துறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான ரோஹித்த அபேகுணவர்த்தன தøலமையில்
நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பஷில் ராஜபக்ஷ எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து பேசிய பசில் ராஜபக்ஷ எம்.பி. மேலும் கூறியதாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை பாரமெடுக்கும்போது 17 மாவட்டங்களே மிஞ்சியிருந்தன. எஞ்சியிருந்த கிளிநொச்சி, முல்லைத்தீவு,
அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை உட்பட 8 மாவட்டங்களின் கட்டுப்பாடு புலிகளின் கைகளிலேயே இருந்தது. 2002 ஆம் ஆண்டு ரணில்
விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் குறித்த 8 மாவட்டங்களுக்கு தென்பகுதியிலிருந்து அரச தலைவர்கள்,
நீதியரசர்கள் போன்ற தரப்பினர் செல்ல வேண்டுமாக இருந்தால் புலிகளின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலையை இந்த
நாட்டுக்கு உருவாக்கி விட்டவர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவார். ஆனால் இன்று அந்நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டிலுள்ள மக்கள் சமாதானமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் புலிகளுடன் மூன்று தடவைகள் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின்பேரில் நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தைகளுக்கு புலித் தரப்பினர் இசைந்து கொடுக்காத அதேவேளை சமாதானப்
பேச்சுவார்த்தையை தட்டிக் கழித்தனர். இதன் பின்னர் பேசிப் பயன் இல்லை என்ற காரணத்தினாலேயே இராணுவத் தீர்வுக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.
ஆனால் அந்தத் தீர்வு வியக்கத்தக்க வகையில் எமக்கு திருப்தியையும் வெற்றியையும் தந்திருக்கின்றது.
புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து கிழக்கு மாகாணத்தை எமது முப்படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட அந்த பூமியில் இன்று
பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.
கடந்த 10 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்தியது.
வாகரை போன்ற பகுதிகளில் 99.9 வீதமானவர்கள் தமிழர்களாவர். அவர்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். தமிழ் பிரதேசமொன்றில்
சிங்கள வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இவற்றை வைத்துப் பார்க்கும் போது கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதன் பின்னர் அங்குள்ள மக்கள் ஜனநாயக வழிக்கு திரும்பியுள்ளமை
தெளிவாகின்றது. இன்றைய கிழக்கு மக்கள் பிரிவினைவாதத்தை வெறுப்பவர்களாகவும் ஜனநாயகத்தை மதிப்பவர்களாகவும் அல்லது ஜனநாயகத்தை
ஏற்றுக் கொள்பவர்களாகவுமே இருக்கின்றனர். இப்படியான சந்தர்ப்பத்தில் அம் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில்
அரசாங்கம் மிகக் கவனமாக இருக்கின்றது. அதற்காக கிழக்கு மாகாணத்தில் மாகாண சபைத் தேர்தல் ஒன்று இன்றைய தேவையாகவும் இருக்கின்றது.
கிராம எழுச்சித் திட்டத்தினூடாக கிராமங்களுக்கு மின்சார வசதி பெற்றுக் கொடுப்பதும் அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். அதற்காகவே மேல்
கொத்மலை மின் திட்டம் போன்ற அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற மின்சாரத்தின் 60 வீதம் எரிபொருளைக் கொண்டே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால் உலக
சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் போது எரிபொருள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சார பாவனைக்கான கட்டணமும்
அதிகரிக்கப்படுவது தவிர்க்க முடியாததாகும். இதனைத் தவிர்த்துக் கொள்ளும் அரசாங்கத்தின் திட்டமே மேல் கொத்மலை திட்டமாகும்.
இப்படியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ""மஹிந்த சிந்தனை'' பாரிய 10 வேலைத் திட்டங்களில் தற்போது 90 வீதமானவை
பூர்த்தியடைந்துள்ளன.
நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயற்பாடுகளுக்கு பொலிஸாரும்
முப்படையினரும் தோள் கொடுத்து வரும் அதேவேளை அவரது கரங்களைப் பலப்படுத்த அனைவரது ஒத்துழைப்புகளும் மிக மிக அவசியமானதாகும்.
நாடு முழுவதுமான 14,000 கிராம எழுச்சித் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். அந்த வகையில் 2008 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள்
நாட்டின் 25 மாவட்டங்களிலும் சிங்கக் கொடி ஏற்றப்பட்டு சகல இன மக்களும் பேதங்களை மறந்து சம உரிமையுடன் வாழக்கூடிய சூழல்
உருவாக்கப்பட்டுவிடும். இவ்வைபவத்தில் இராணுவ சேவையின் போது கால்களை இழந்த வீரர்களுக்கு சக்கர நாற்காலிகளையும் மற்றும் கழகங்களுக்கு
விளையாட்டு உபகரணங்களையும் பஷில் ராஜபக்ஷ எம்.பி. வழங்கி வைத்தார்.
ஆடைத் தொழிற்சாலையில் உணவு விஷமடைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஆஸ்பத்திரியில்
[16 - March - 2008]
வத்துப்பிட்டிவெல பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றின் உணவு விஷமடைந்ததால் கடந்த இரு நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்
ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் உணவு விஷமானதால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு 25 பெண் ஊழியர்கள் கடுமையாகப்
பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதே தொழிற்சாலையைச் சேர்ந்த மேலும் 80 பெண் ஊழியர்கள் நேற்றுக் காலை வத்துப்பிட்டிவெல ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
உணவு விஷமடைந்ததாலேயே இவர்களும் நேற்றுக் காலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்ட மேற்படி பெண் உழியர்கள் எவருக்கும் உயிராபத்து எதுவுமில்லையெனவும் எனினும், ஓரிரு தினங்களுக்கு
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டுமெனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
காக்கைகுக் தெரியும் தன் குஞ்சின் அரிமை:
விவசாயிகள் நீரில் அகப்பட்டுள்ள நெற்கதிர்களை மேட்டு நிலங்களிலும், கடற்கரை மணல் வெளிகளிலும் பலத்த சிரமத்தின் மத்தியில் குவித்து மூடி வைத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான நெற்காணிகள் அடை மழை வெள்ளத்தில்.
3/13/2008 6:08:45 PM
வீரகேசரி இணையம் - அம்பாறை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பெய்து வருகின்ற அடை மழையினால் அறுவடைக்கு தயாரான
ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெட்டப்படாத வேளாண்மை, வெள்ள நீரில் அடிபட்டு நிலத்தில் விழுந்திருக்கின்றன. வெட்டப்பட்ட வேளாண்மை வெள்ள நீரில் மிதந்த வண்ணம் காட்சியளிக்கின்றன. சூடாக்கப்பட்ட நெற்கதிர்கள் மழையினால் முற்றாக நனைந்துள்ளன. இவைகளினால் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நெல்
மணிகளும் நிலத்தில் உதிர்ந்து காணப்படுகின்றன.
ஒரு சில விவசாயிகள் நீரில் அகப்பட்டுள்ள நெற்கதிர்களை மேட்டு நிலங்களிலும், கடற்கரை மணல் வெளிகளிலும் பலத்த சிரமத்தின் மத்தியில்
குவித்து மூடி வைத்துள்ளனர்.
நிந்தவூர், இறக்காமம் பகுதியிலுள்ள வயற் கண்டங்களிலேயே மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தொடரான அடைமழையினால் விவசாயிகள்
பெரும் கவலையடைந்துள்ளார்கள். விவசாயிகள் நஷ்டமடைந்து விட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. மழையானது இன்னும் சில நாட்கள் நீடிக்குமாயின் விவசாயிகள் முழு அளவில் நஷ்டமடைந்து விடுவார்கள் எனவும் எதிர்வு கூறப்படுகின்றன.
Yall uthayan Posted on : Sun Mar 16 9:35:00 2008
அதிசக்திவாய்ந்த "மிக் 29' ரக விமானங்கள் ஐந்தை ரஷ்யாவிடமிருந்து இலங்கை கொள்வனவு செய்யும்
ரஷ்யாவிடமிருந்து அதிசக்திவாய்ந்த ஐந்து "மிக் 29' ரக குண்டுவீச்சு போர் விமா னங்களை கொள்வனவு செய்ய இலங்கை அரசு பேச்சுக்களை நடத்தி
வருகின்றது. இலங்கையின் ஆயுத தரகு நிறுவனங் களின் ஒன்றின் நிறைவேற்று அதிகாரியான ஜெயந்த விக்கிரமசிங்கவை மேற்கோள் காட்டி "ஜேன்ஸ் வீக்லி'
என்ற பாதுகாப்பு நிலைவர சஞ்சிகை இத்தகவலை வெளி யிட்டுள்ளது. "மிக் 29 எஸ்.எம்.எஸ்.' ரக விமானங் கள் நான்கையும் "மிக் 29 யு.பி' ரக விமா னம் ஒன்றையும் ரஷ்யாவிடம் கொள்வ னவு செய்வதற்கான
பேச்சுவார்த்தைகளை எமது நிறுவனம் நடத்தி வருகின்றது. இந்தப் பேச்சுக்கள் நேர்த்தியாக முன் னெடுத்துவரப்படுவதாக ஜெயந்த விக்கிர மசிங்க தெரிவித்துள்ளார். இந்த ரக விமானங்களைச் செலுத்து வதற்கான பயிற்சிகள் இலங்கை விமானி களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட் டுள்ளது. இந்த ரக விமானங்கள் பல்வகை வசதி கள் கொண்டவை. தரைப்படையினரின் போர்க் களங்களுக்கு அருகே நின்று தாக்கு தல்களை நடத்தக்கூடியவை. விமானத்தைக் கொள்வனவு செய்பவர் களின் தேவைக்கேற்ற அதி சக்தி வாய்நத நவீன கருவிகளை இந்த விமா னங்களில் பொருத்தி வழங்க முடியும்
என்று தெரிவிக்கப்பட்டது. "லேசர்' கருவி கொண்டு இந்த விமா னத்தினால் இலக்குகளை அச்சொட்டாகச் தாக்க முடியும் என்றும் அதே சக்தியுடன் வானத்திலிருந்து ஏவுகணைகளைச் செலுத்த இயலும் என் றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்கமுடியாதவாறு அதில் தற்காப்புச் சாதனங்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் போர் விமானத்துறைசார்
வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை விமானப் படையிடம் இப் போது தரைத் தாக்குதல்களை நடத்தும் "மிக் 27' ரக விமானங்கள் கைவசம் உள் ளன. அவற்றுடன் இரண்டு சி7 ரக
"கிபிர்' போர் விமானங்களையும் மற்றும் எட்டு சி2 ரக கிபிர் விமானங்களையும் இலங்கை விமானப்படை பயன்படுத்தவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் எவ்16 ரக விமானங் களை முறியடிப்பதற்காக நேட்டோ நாடு களால் மிக் 29 ரக விமானங்கள் 1983ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன.
YU Posted on : Sun Mar 16 9:35:00 2008
கொக்குத்தொடுவாயில் படையினர் முன்னேறும் முயற்சி முறியடிப்பு மணலாறு, கொக்குத்தொடுவாயில் நேற்றுமுன்தினம் மாலை படையினர் மேற் கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக் கப்பட்டது என விடுதலைப்
புலிகள் அறி வித்துள்ளனர்.இந்த முறியடிப்பு தாக்குதலில் பதி னைந்திற்கும் அதிகமான படையினர் கொல் லப்பட்டனர் என்றும் ஆயுத தளபாடங்கள் மீட்கப்பட்டன என்றும்
புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை வெலிஓயாவில் கொக்குத்தொடுவாய் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடம் பெற்ற மோதல்களில்
மூன்று படையினர் கொல்லப்பட்டனர்; 11 படையினர் காயம டைந்தனர் என ஊடகத் தகவல் நிலையம் தெரிவித்தது.இந்த மோதல்களில் விடுதலைப் புலி களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
YUPosted on : Sun Mar 16 9:50:00 2008
பொன். கணேசமூர்த்திக்கு மாமனிதர் கௌரவம்
தமிழ் இன விடுதலைப் போராட்டத் தில் அமரர் பொன். கணேசமூர்த்தி ஆற்றிய பங்களிப்புக்கு மதிப்பளித்து அவருக்கு தேசத்தின் அதி உயர் விருதான "மாமனிதர்' என்ற கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வழங்கியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வே.பிரபாகரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அநீதியில் அமைந்த பழைய சமூக உறவுகளைத் தகர்த்தெறிந்து புதிய சமூக உறவுகளைக் கட்டியெழுப்ப புரட்சிகரமான கருத்துக்களை மக்களது
மனதைப் பற்றிக் கொள்ளும் வகையில் முன்வைத்தவர் பொன்.கணேசமூர்த்தி என்று அந்த அறிக் கையில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமை பற்றிய அமெரிக்க அறிக்கை-நிலைப்பாடு- குறித்து யாழ் உதயன் பத்திரிகையின் இரு ஆசிரியர் தலையங்கள்.ENB
1) அமெரிக்கா மீது சீறும் இலங்கை
உண்மையைக் கூறினால் பலருக்கும் பிடிப்பதில்லை. இது பொதுவான பண்பியல்புதான்.அதுவும் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்வதில் பொய்ப்புளுகு புரட்டுப் பிரசாரத்தில் காரியங் களை நகர்த்தும் கொழும்புக்கு
உண்மை வெந்தணலாகச் சுடு கின்றது. அதனால் இலங்கை இனப்பிரச்சினை பற்றிய உண் மைகளை அம்பலப்படுத்தும் தரப்புகள் மீது சீறிப்
பாய்கின்றது கொழும்பு அரசு.உண்மைகளை நிஜத்தை யதார்த்தத்தை வெளிப் படுத்தி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டும் தரப்புகள் மீது தாரதம்மி யம் பார்க்காமல் சீறி விழுகின்றது
இலங்கை அரச நிர்வாகம்.இந்த வரிசையில் இப்போது கொழும்பின் பாய்ச்சலுக்கும், ஏச்சுக்கும் இலக்காகியிருப்பது அமெரிக்கா.இலங்கை நிலைவரம் பற்றிய அமெரிக்காவின் பக்கச்சார் பற்ற அவதானிப்பு அறிக்கையே கொழும்பை கடும் சீற்றத் துக்கு ஆழ்த்தியிருக்கின்றது.அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழில் அலுவலகப் பிரிவு உலகில் 196 நாடுக ளில் மேற்படி துறைகள்
தொடர்பான தனது அவதானிப்பை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது. அமெரிக்க வெளி விவகார அமைச்சு வருடா வருடம் மேற்கொள்ளும்
வழமை யான நடவடிக்கையே இது. கடந்த ஆண்டுக்கான அவதானிப்பு அறிக்கையே சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதி லேயே கொழும்பு
அரச நிர்வாகத்தின் மோசமான மனித உரிமை மீறல் போக்கை வாங்குவாங்கெனக் கீறிக் கிழித்திருக்கின்றது அமெரிக்கா.இலங்கையில் ஈழத்தமிழருக்கு எதிராக அரச படைகளா லும், துணைப் படைக் குழுக்களாலும் கட்டவிழ்த்துவிடப்பட் டிருக்கும் மிக மோசமான மனித
உரிமை மீறல்கள் இங்கு பெரும் இனப் படுகொலையாக, மனிதப் பேரவலமாக வடி வெடுத்திருக்கின்றன. இதனை தமிழர் தரப்பு மட்டுமல்ல சுயா தீனப்
பார்வையாளர்கள் அனைவரும் அறிவர்.பல்வேறு சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனிதப் பேரழிவு நடவடிக்கைகளை
இனப்படுகொலை கலாசாரத்தை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்துள்ளதுடன் நிலைமை பேராபத்துக் கட்டத்தை எட்டிவிட்டது என்பது தொடர்பான அபாய
எச்சரிக்கையையும் வெளியிட்டு வருகின் றன.இப்படி உண்மையை அம்பலப்படுத்தும் அமைப்புக்க ளின் பட்டியல் சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஆசிய மனித
உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச நெருக்கடிக்கான குழு மற்றும் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸில் உட்பட பல்வேறு ஐ.நா அமைப்புகள்
என்று நீண்டு செல்கின்றது.இவ்வாறு சர்வதேச அமைப்புகள் விசேடமாக மனித உரி மைகள் விவகாரத்தைக் குறிப்பாகவும், பிரத்தியேகமாகவும் கையாளும் அமைப்புகள்
புட்டுக்காட்டிய உண்மைகளையே இப்போது அமெரிக்காவும் அம்பலப்படுத்தியிருக்கின்றது. ஆனால்அமெரிக்கா தனது அறிக்கையில் சுட்டிக்காட்டிய விட
யங்கள் இட்டுக் கட்டியவை என்று கூறுகிறது இலங்கை.நெருப்புக் கோழி தான் நிலத்துக்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்று கருது மாம். அது போலவே
தென்னிலங்கையும், தமிழர் தாயகத்தில் தனது படைகள் மூலமும் ஒட்டுக் குழுக்கள் மூலமும் தான் புரியும் அராஜகங்களை தனது தென்னிலங்கை
ஊடகங்கள் மூலம் சிங்கள மக்களுக்கு மூடி மறைத்து ஒழித்துக் கொண்டு அதனால் முழு உலகத்துக்குமே அது தெரியாமல் போய்விட் டது என்று
எண்ணிக்கொள்கின்றது.அப்படியல்ல, நவீன தொடர்பாடல் முறை வசதிகளின் கீழ் எல்லாமே அம்பலமாகி, சர்வதேசத்துக்கும் சகல உண்மைகளும் தெரியும் என்ற யதார்த்தம்
புரியும்போது அதைக் கொழும்பி னால் சீரணிக்க முடியவில்லை; சகிக்க இயலவில்லை.அதனால்தான் உண்மைகளை அம்பலப்படுத்தும் தரப்புக் களுக்கும் எதிராகத் துள்ளிக் குதிக்கின்றது கொழும்பு. சர்வ தேச பொலிஸ்காரனான
அமெரிக்காவும் இப்படி உண்மை யைப் போட்டுடைத்திருப்பதை கொழும்பால் தாங்கிக் கொள் ளவே முடியவில்லை.அதனாலேயே அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாடு என்று கூடப் பார்க்காமல் அதன் கொழும்புக்கான தூதுவரை அழைப்பித்து தனது காட்டமான
கண்டனத்தைத் தெரிவித் திருக்கின்றது கொழும்பு.அமெரிக்கா அம்பலப்படுத்திய விடயங்களை "வெறுமனே செவி வழித் தகவல்கள்' என்றும் "ஆதாரமற்றவை' என்றும் "வேண்டுமென்றே பெரிது
படுத்தப்பட்டவை' என்றும் "மழுப் பல் விவகாரங்கள்' என்றும் காரசாரமாக விமர்சித்திருக்கின்றது கொழும்பு. அதுமட்டுமல்ல "யுத்த களத்திலும் சர்வதேச மட் டத்திலும் தம்மை ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியாது தடு மாறும் புலிகள் அமைப்புக்கு அமெரிக்காவின் இந்த அறிக்கை உயிர் வாழ்வுக்கான
பிராணவாயுவை அளிக்கின்றது' என்ற அளவுக்கு குறை கூறும் நிலைக்கும் கொழும்பு சென்றுள்ளது. ஆக, இந்த அறிக்கை மூலம் அமெரிக்கா
புலிகளுக்கு உதவ முற்பட்டிருக்கின்றது என்று குற்றம் சுமத்தும் கட்டத்துக்கு கொழும்பின் இக்கட்டு சிக்கலாகியுள்ளது.ஆனால் கொழும்பின் இந்தக் குற்றச்சாட்டைத் தூக்கி வீசிவிட்டது அமெரிக்கா. தனது வெளிப்படுத்தல்கள் நியா மானவை, நேர்மையான நோக்கம்
கொண்டவை என இரண்டு வரிகளில் குறிப்பிட்டு இலங்கையின் குற்றச்சாட்டை அடி யோடு நிராகரித்துவிட்டது அமெரிக்கா.அமெரிக்கா தனது அறிக்கை மூலம் சுட்டிக்காட்டிய விட யங்கள் போலியான தகவல்களையும் வெறும் பத்திரிகைச் செய்திகளையும் பின்னணியாகக்
கொண்டவை என இலங்கை இந்தக் கட்டத்தில் கூறியிருக்கின்ற கருத்தும் கூட இன்றைய நிலையில் கவனிக்கத்தக்கது. ஊடகங்களுக்கு எதிரான
அடக்கு முறை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இச்சமயத்தில் அமெரிக்கா அம்பலப்படுத்திய விடயங்களுக்கு பத்திரிகைகள் மீதும் பொறுப்பைப் போடும்
ஆட்சித் தரப்பின் எத்தனம், புதிய நெருக்கடிகள் குறித்து சிந்திக்கத் தூண்டுகின்றன. தமிழர்கள் எதிர்நோக்கும் மோசமான நெருக்கடிகள் பற்றிய விடயங்களை உலகுக்கு அம்பலப்படுத்தும் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் ஏற்கனவே
பலத்த சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.இந்தச் சமயத்தில் இன ரீதியாகத் தமிழர்களுக்கு இழைக்கப் படும் கொடுமைகள் பற்றிய நிலைமையை அமெரிக்கா அம் பலப்படுத்தியமைக்கு
ஊடகங்களைப் பொறுப்பாக்கும் கொழும்பின் எத்தனம் பல செய்திகளைச் சொல்லாமல் சொல் லுகின்றது. இதனை ஊடகங்களும், ஊடகவியலாளரும்
எச்ச ரிக்கை அறிவிப்பாகக் கவனத்தில் எடுப்பது முக்கியமாகும்.
YU Posted on : Thu Mar 13 9:55:00 2008
2)மோசமான மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசைச் சாடுகின்றது அமெரிக்கா! தமிழ் இளைஞரே பாதிப்பு என ஆண்டறிக்கையில் தெரிவிப்பு

மோசமான மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையையும் இலங்கை அரசையும் மிகக் கடுமையாகச் சாடியிருக்கின்றது அமெரிக்கா.உலக
நாடுகளில் மனித உரிமைகள் பேணப்படும் விதம் தொடர்பான அமெரிக்க வெளிவிவகார அமைச்சின் வருடாந்த அறிக்கையிலேயே இலங்கை குறித்து
மிகக் காட்டமாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றது.வாஷிங்டனில் வெளிவிவகாரத் திணைக்களத்தில், அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீஸா ரைஸ் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில்
நேற்றுமுன்தினம் இந்த வருடாந்த அறிக்கை வெளியிடப்பட்டது.இலங்கை தொடர்பான அறிக்கை வாசகங்களில், அது முற்றாகக் கண்டிக்கப்பட்டிருக்கின்றது; காட்டமாக விமர்சிக்கப்பட்டிருக்கின்றது; இலங்கையில்
மனித உரிமை பேணும் போக்கும் ஆட்சிமுறையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.""கடத்தல், காணாமற்போதல் போன்ற மோசமான மனித உரிமை மீறல்களில் பாதிக்கப்டோரில் பெரும்பாலும் அனேகமானோர் சிறுபான்மை இனத்தைச்
சேர்ந்த ஆண்களான இளம் தமிழர்களே!'' என்று அந்த அறிக்கை திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றது.மனித உரிமை மீறல்களினால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் சிறுபான்மைத் தமிழர்களே என்று சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்க வெளிவிவகார
அமைச்சின் அறிக்கை, மனித உரிமைகள் நிலைமை சீர்கெட்டுப் போனமைக்கு இலங்கை அரசே பொறுப்பு என்றும் குற்றம் சுமத்தியிருக்கின்றது.இலங்கையின் பிரிவினைவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் அத்துமீறல்களை அந்த அறிக்கை கண்டித்துள்ளது. எனினும் காணாமற்போதல்
மற்றும் உரிமை மீறல் விடயங்களைக் கையாளுகின்ற இலங்கையின் ஆட்சி முறைமை தொடர்பில் தொடர்ச்சியாகவும், அதிகமாகவும்
வெளிப்படுத்தப்பட்டு வரும் கண்டனமே அமெரிக்காவுக்கு அதிகம் சிரத்தைக்குரியது என்பதையே அது வெளிப்படுத்தி நிற்கின்றது.அந்த அறிக்கை மஹிந்த ராஜபக்ஷ அரசின் நிர்வாகத்தை "சிங்கள மேலாதிக்க ஆட்சி' என்ற பெயரில் அழைக்கவோ அல்லது "பெரும்பான்மைச் சிங்களத்திற்கும்
சிறுபான்மைத் தமிழருக் கும் இடையிலான இனப் போரில் அந்த ஆட்சி மூழ்கிவிட்டது' எனச் சுட்டிக்காட் டவோ தவறியிருந்தாலும், அந்த அறிக்
கையின் வாசகங்கள் அத்தகைய உணர்வு பூர்வ நிலைக்கு நெருக்கமானவையாகவே அமைந்திருக்கின்றன என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர்."மிகமோசமான பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து தன் னுடைய ஆள்புல ஒருமைப்பாட்டையும், இறைமையையும், ஜனநாயகக்
கட்டமைப் பையும் காப்பாற்றும் தீவிர இராணுவ யுத்தம் ஒன்றில் இலங்கை ஈடுபட்டிருக்கின்றது' என்பதைக் குறிப்பிடாமல் அப்படியே தவிர்த் துள்ள
இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகளை பேணாமல் மீறும் மோசமான செயற்பாட்டைக் காரசாரமாகக் கண்டித்தி ருப்பது, புதிய செய்தி
ஒன்றைக் கூறுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:மனித உரிமைகளை மதிக்கும் அரசின் போக்குத் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரு கின்றது. ஆயுதப் பிணக்கு மோசமடைந்தமை இதற்கு ஒரு பகுதிக்
காரணமாக இருக்க லாம். படுகொலைகள், காணாமற் போதல் போன்ற மோசமான மனித உரிமை மீறல்க ளில் பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்ட வர்கள் நாட்டின் முழு
சனத்தொகையில் 16 வீதத்தைக் கொண்டுள்ள தமிழர்களில் இளம் ஆண்களே.அரச முகவர்களினால் மேற்கொள்ளப் படும் சட்ட விரோதப் படுகொலைகள், இனந்தெரியாத சூத்திரதாரிகளால் மேற் கொள்ளப்படும் கொலைகள்,
அரசியல் உள்நோக்கம் கொண்ட படுகொலைகள், அரசுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படை களினால் சிறுவர்கள் படைக்குச் சேர்க்கப் படுதல்,
காணாமற்போதல், கண்மூடித்தன மான கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள், மோசமான சிறை நிலைமைகள், நீதியான பொது விசாரணை
மறுக்கப்படல்,அரசின் ஊழல் நடவடிக்கைகள், வெளிப்படையற்ற ஒளிவு மறைவான செயற்பாடுகள், மத சுதந் திரங்களை மறுத்தல், நடமாட்டத்துக் கான
சுதந்திரங்களை மறுத்தல், சிறுபான்மை யினருக்கு எதிரான இனப் பாகுபாடு ஆகியவை குறித்து நம்பகரமான அறிக்கைகள் வெளி வந்துள்ளன.குடாநாட்டில் நிலைமை சீர்கெட்டுள்ளதுபொதுமக்களுக்கு எதிரான ஆயுதத் தாக்குதல்கள், சித்திரவதைகள், ஆள்கடத் தல், ஆள்களைப் பணயம் வைத்தல், கப்பம் அறவிடல் போன்றவற்றை
இராணுவம், பொலிஸ் மற்றும் அரச சார்புத் துணைப் படை கள் விசேட சட்ட விலக்களிப்பு வசதிகளுடன் வகைதொகையின்றி முன்னெடுத்தமை
குறித்தும் பல அறிக்கைகள் கிடைத் துள்ளன.நிலைமை மோசமடைந்து செல்கிறது. மிகக் குறிப்பாக அரச கட்டுப்பாட்டில் உள்ள யாழ். குடாநாட்டில் நிலைமை சீர்கெட்டுள்ளது.அங்கு வருட முடிவில் சட்ட விரோதப் படுகொலைகள் தினசரி நிகழ்வாகிவிட் டன. இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் அவர்களுடன் சேர்ந்த துணைப்
படையி னருமே இவற்றின் சூத்திரதாரிகள் எனக் கருதப்படுகின்றது.இவை தொடர்பாக சில கைதுகள் இடம் பெற்றாலும் அதற்கு மேல் எந்த சட்ட நடவ டிக்கைகளும் இல்லை. பழைய முன்னைய சம்பவங்கள்
தொடர்பான வழக்குகள் அங் குள்ள சட்ட முறைமையின்படி தொடர்ந்தாலும் அவையும் மிக மந்தப் போக்கிலேயே அமைந்துள்ளன.பத்திரிகையாளர்கள், சிவில் சமூக உறுப் பினர்கள் உட்பட சிவிலியன்கள் கண்மூடித் தனமாகத் தடுத்து வைத்திருப்பதற்குப் படையினர் தமக்கு
கட்டுமட்டற்ற பரந்த அதிகாரங்களை வழங்கும் 2005 ஆம் ஆண் டின் அவசரகாலச்சட்ட விதிகளைப் பயன்ப டுத்துகின்றனர்.புலிகளின் செயல்கள்வடக்கின் பரந்த பகுதியைத் தனது கட் டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கமும் தொடர்ந்து பொதுமக்களைத் தாக்கி
வருகின்றது. சித் திரவதை மற்றும் கண்மூடித்தனமான தடுத்து வைப்புகளில் ஈடுபடுகின்றது. நீதியான, பொது விசாரணைகளை மறுக்கின்றது. பிற ரின்
தனித்துவத்தில் அத்துமீறித் தலையிடு கின்றது. பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்தி ரம், ஒன்று கூடுவதற்கும் கூட்டாக இணை வதற்குமான சுதந்திரத்தில்
தலையிடுகின்றது. சிறுவர்கள் உட்பட ஆள்களைப் பல வந்தமாகப் படைக்குச் சேர்க்கின்றது. முடிந்த வருடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற் பட்ட பிரதேசங்களிலும் செயற்பட்டு வந் துள் ளனர். திருமலையில்
அவர்கள் அரசியல் உள் நோக்கம் கொண்ட குறைந்தது ஒரு கொலையை மேற்கொண்டிருக்கின்றார்கள். கொழும்பில் அரசியல் உள்நோக்கம் கொண்ட
ஒரு தற்கொலைத் தாக்குதல், மட்டக்களப் பில் இராணுவ மையம் ஒன்றுக்கு அருகில் ஒரு தற்கொலைத் தாக்குதல், கொழும்பு புற நகரப் பகுதியில்
பொதுமக் களின் கடைத் தொகுதி மீதான ஒரு குண் டுத் தாக்குதல், தெற்கில் சிவிலியன் பஸ் கள் மீதான பல குண்டுத் தாக்குதல் கள் எனப்
பலவற்றைப் புலிகள் மேற்கொண் டுள்ளனர்.அரசுத் தரப்பு அத்துமீறல்கள்அரசு அல்லது அதன் முகவர்களும் கண் மூடித்தனமான அல்லது சட்டவிரோதக் கொலைகளில் ஈடுபட்டனர் என்பதற்கு நம் பகரமான அறிக்கைகள்
கிடைத்துள்ளன.கடந்த ஆண்டில் அரசுப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் நடந்த மோதல் களில் உயிரிழந்தவர்கள் என மதிப்பிடப் படும் 3 ஆயிரத்து 200 பேரில்
சுமார் ஆயிரம் பேர் பொதுமக்கள் என பொது வட்டாரத் தக வல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச அமைப் புகள் இவற்றில் மூன்றில் ஒரு பகுதி பற்றிய
விடயங்களை ஆவணப்படுத்தியுள்ளன. குடியிருப்புப் பகுதிகள் மீதான பீரங்கித் தாக்குதல்கள், விமானக்குண்டு வீச்சு, நிலக் கண்ணிகள் மற்றும் ஏனைய இராணுவ நட வடிக்கைகள் இத்தகைய
சிவிலியன் உயிரி ழப்புகளுக்குப் பகுதிக் காரணங்களாக அமைகின்ற போதிலும், பெரும்பாலான சிவிலியன் உயிரிழப்புகள், சட்டவிரோதப் படுகொலைகள்
போன்ற தனித்தனிச் சம்ப வங்களாகவே நிகழ்ந்துள்ளன என்று சர்வ தேச நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன.முறைப்பாடு செய்ய மக்கள் அச்சம்இத்தகைய படுகொலைகள் குறித்து முறைப்பாடு செய்தால் மோசமான விபரீத விளைவுகள் ஏற்படும் என இறந்தவர்க ளின் உறவினர்கள் அஞ்சுவதால்
இத்தகைய படுகொலைகள் பற்றிய பல முறைப்பாடு கள் பதியப்படாமல் போக, நம்பகமான புள்ளி விவரங்களை வெளியிட முடியாத நிலைமை
ஏற்பட்டுள்ளது. இதனால் வித்தியாசமான நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களில் பெரும் எண்ணிக்கை வித்தி யாசம்
காணப்படுகின்றது.மேலும், அத்தகையோரில் பலர் "காணாமற் போனோர்' என்ற வகையிலும் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்துப் பின்னர் எந்தத்
தகவலுமே கிடைப் பதில்லை.அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியா ளர்கள் மற்றும் ஏனைய மனித நேயத் தொண் டுப் பணியாளர்கள் பலர் கொல்லப்பட் டுள்ளனர்.அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர் படுகொலைகடந்த இரு வருடங்களில் சுமார் முப் பது அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என ஐ.நாவின் மனித நேயப்
பணிகளுக்குப் பொறுப்பான கீழ்நிலைச் செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் மதிப்பீடு செய்திருக்கின்றார். ஆனாலும் அரச சார்பற்ற நிறுவன
வட்டாரங்கள் அந்த எண்ணிக்கை 44 என்கின்றன.உதாரணத்துக்கு, கடந்த ஜூன் 3 ஆம் திகதி உயர் பாதுகாப்புப் பிரதேசமான கொழும்பு ரயில் நிலையத்தில் வைத்து ஸ்ரீ லங்கா செஞ்சிலுவைச்
சங்கத்தின் இரண்டு தமிழ்ப் பணியாளர்களைப் பொலிஸ் சீரு டையில் வந்த இருவர் கடத்திச் சென்றனர். அந்த இரண்டு செஞ்சிலுவைப் பணியாளர்
களின் சடலங்களும் அடுத்த நாள் சுமார் நூறு கிலோமீற்றருக்கு அப்பால் இரத்தினபு ரியில் கண்டுபிடிக்கப்பட்டன.முன்னாள் விமானப் படைத்தளபதியும், தற்போது முப்படைகளின் சிரேஷ்ட அதிகா ரியுமான டொனால் பெரேராவின் முன்னாள் நிறைவேற்று
உதவியாளரும் விமானப் படையின் ஓய்வுபெற்ற விங் கமாண்டரு மான நிஷாந்த கஜநாயக்கா என்பவரை குற் றப்புலனாய்வுப் பொலிஸார் கைது
செய்தனர்.இந்த கஜநாயக்கா, பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ஷ வினதும், கொழும்பு பொலிஸ் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்
மா அதிபர் அபேவர்த்தனவினதும் வழிகாட்டலிலேயே செயற்பட்டார் என எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத் தினர் என்று
இலங்கை ஊடகங்களில் விரி வாகச் செய்திகள் வெளியிடப்பட்டன.அரசியல் கடத்தல்கள், கப்பத்துக்காக ஆள் கடத்தல்கள், படுகொலைகளில் ஈடுபட்ட னர் என கஜநாயக்கா மீதும் ஏனையோர் மீதும் அரசு குற்றம்
சுமத்தியது. ஆனால் இவற்றில் சிரேஷ்ட அதிகாரிகளின் சம் பந்தம் பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து அரசு எந்த விசாரணையையும் நடத்தவில்லை.வருட முடிவில் அந்த விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.இலங்கை செஞ்சிலுவைச் சங்க உறுப் பினர் சூரியகாந்தி தவராஜா (வயது 43) டிசம்பர் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அடையாளம் காணப்படாத
துப்பாக்கிதாரிக ளினால் கடத்தப்பட்டார். பின்னர் சிதைவடைந்த அவரது சடலம் டிசெம்பர் 16ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. மிரட்டலுக்கு துணைப்படைக் குழுக்களை அரசு பயன்படுத்துகிறதுபுலிகளுடன் யுத்தம் புரியும் படையின ருக்கு உதவி செய்யவும் நாடாளுமன்றிலும் ஊடகங்களிலும் தன்னை விமர்சிப்போரை மிரட்டவும் துணைப்
படைக் குழுக்களை அரசு பயன்படுத்துகின்றது.புலிகளிடம் இருந்து பிரிந்த கருணாவினாலும், பிள்ளையானினாலும் வழி நடத் தப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு (கருணா குழு)
கிழக்கிலும் அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழி நடத்தப்படும் ஈ.பி.டி.பி. வடக்கிலும் செயற்படுகின்றன.கருணா பிரிட்டனுக்குள் நுழைவதற்கு அரசு போலியான ஆவணங்களை வழங்கி யதாகக் கூறப்படுகின்றது. கடைசியாக நவம்பர் 2 ஆம் திகதி
லண்டனில் கருணா கைதுசெய்யப்பட்டார். ஆனால் இந்தக் கதையில் தனக்குச் சம்பந்தம் ஏதுமில்லை என்று இலங்கை அரசு மறுத்து விட்டது.இதன் பின்னர் பிள்ளையான் அந்தக் குழுவைப் பொறுப்பெடுத்துள்ளார்.எம்.பிக்களின் உறவினர்கள்கடத்தப்பட்டனர் நவம்பரில் கிழக்கில் எதிர்க்கட்சி எம்.பிக் களின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட பாது காப்பை அரசு விலக்க, பிள்ளையான் குழு வினர் வீடுடைத்துப் புகுந்து
எம்.பிக்களின் உறவினர்களைக் கடத்தினர். பிள்ளையானே சம்பந்தப்பட்ட எம்.பிக்களில் ஒருவருக்குத் தானே தொலைபேசி அழைப்பு எடுத்து
எச்சரித்தார். "பட்ஜெட்' வாக்கெடுப்பில் அந்த எம்.பிக்கள் கலந்துகொண்டால் அவர் களின் உறவினர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர்
அச்சுறுத்தினார். அத னால் அந்த எம்.பிக்கள் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்த வாக்கெடுப்பில் அரசு வென்றது.அதன் பின்
பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்ட னர். ஆனாலும், அரசு துணைப்படைகளுட னான தனது தொடர்பை அம்பலத்தில் மறுக்கின்றது.துணைப் படையினர் செயற்படுவதற்கு பெரும்பாலும் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகப்படுவோருக்கு எதிராக அவர்கள் நடவடிக்கை
எடுப்பதற்கு விசேட சட்டவிலக்களிப்பு சிறப்புரிமை அர சால் வழங்கப்படுகின்றது.இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு சிரேஷ்ட அரச அதிகாரிகளின் பணிப்புரைகளுக்கு அமைய செயற்படுவ தாகக் குற்றம் சுமத்தப்படும்
நிலையில் இந்த வருடத்தில் காணாமற் போனோர் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட வில்லை. எனினும் 2006 இல் அரசியல் நோக்கம் கொண்ட
345 ஆள்கடத்தல் சம்ப வங்கள் இடம்பெற்றன என அது கூறியிருந் தது. இந்த வருடம் அது பெரும் எண்ணிக் கையில் அதிகரித்துள்ளது. சகவாழ்வு
மன்ற அறிக்கையின்படி காணாமற் போனோர் எண்ணிக்கை 880 ஆகும்.காணாமற்போனோர் விவகாரத்தில் பாதிக்கப்பட்டோர், இச்சம்பவங்களில் இலக்கத்தகடற்ற வெள்ளை வானில் வந்த ஆயுதமேந்திய தமிழ் பேசுபவர்களே
ஈடு படுகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.அரசு பொதுவாக இது குறித்து விசாரணை செய்யத் தவறியுள்ளது.விடுதலைப்புலிகளினால் சிறுவர்கள் படையணிகளில் சேர்க்கப்படுவது, குறை வடைந்துவருவதாக "யுனிசெவ்' தெரிவிக் கின்றது.கருணாகுழு தொடர்ந்தும் சிறுவர்களை படையணிகளில் சேர்க்கின்றது. பலவந்த மாக அச்சுறுத்தி வன்முறைகளை பயன்ப டுத்தி அவர்கள் இதனை மேற்கொள் கின்றனர் என்று உள்ளது.

No comments: