Monday 17 March, 2008

கொசொவோவில் அரங்கேறும் அமெரிக்க ஆசை: உள்நாட்டு அமைதியின்மை.

கொசொவோவில் அரங்கேறும் அமெரிக்க ஆசை:
உள்நாட்டு அமைதியின்மை.
தனது இராணுவக் காலனியை நியாயப்படுத்த அமெரிக்கா உருவாக்க நினைத்த உள்நாட்டு அமைதியின்மை உடனடியாகவே தொடங்கிவிட்டது! இதை ஒரு உள் நாட்டு யுத்தமாக்க வளர்க்கக்கூடிய அனத்து முரண்பாடுகளும் கூர்மை அடைந்துள்ளன.
கொசோவொவில் சேர்பியர்கள் செறிந்து வாழும் வடக்கு மிற்ரோவிக்கா பகுதியில் சேர்பிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஐ.நா-கொசொவோ படையினருக்கும் இடையில் கடும் மோதல் மூண்டுள்ளது.இதன் விளைவாக அப்பிராந்தியத்தில் இருந்து ஐ.நா.துருப்புக்கள் பின்வாங்கியுள்ளன.70 சேர்பியர்களும் 83 ஐ.நா-கொசொவோ துருப்புக்களும் காயமடைந்துள்ளதாக செய்தி ஸ்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்தவாரம் சேர்பியர்கள் நீதிமன்றவளாகத்தில் ஆரம்பித்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நேட்டோ துருப்புக்கள் முயன்றதன் விளைவாக இக்கொந்தழிப்பு உருவானது.
நீதிமன்ற வளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டோர்- 1999 இல் ஐ.நா.தலையீட்டில் கொசோவோ அடிமைப்படுத்தப்பட்டபோது அந்நீதிமன்றத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இப்புதிய ஐரோப்பிய இராணுவக்காலனியை சில ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளன. செர்பியாவும் ரசியாவும் இது சட்டவிரோதமானது என அறிவித்துள்ளது.

No comments: