ஏகாதிபத்திய அமெரிக்காவின் ஒற்றைத்துருவ உலகு தழுவிய மேலாதிக்கத்தின் விதிகளுக்கு உட்பட்டுள்ளது இன்றைய உலகம்.
ஏகபோக பொருள் உற்பத்திமுறை, மக்கள் உழைத்து உருவாக்கிய எல்லாச்செல்வங்களையும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில புல்லுருவிக்கும்பல்களின் காலடிகளில் குவித்துள்ளது.
அவர்கள் எல்லா அரசுகளையும் ஆளுகிறார்கள்.எல்லா அரசுகளின் இறைமையையும் தீர்மானிக்கிறார்கள்.தமது நலன்களுக்கு எதிரான ''முரட்டு''அரசுகளைக் கவிழ்க்கிறார்கள்-ஈராக்.தமது புதிய சந்தைப்பங்கீடாக 'சுதந்திர அரசுகளை' முற்றிலும் தான் தோன்றித்தனமாக தோற்றுவிக்கிறார்கள்-கொசோவோ.
தனிச்சொத்துரிமை என்கிற அவமானகரமான தன்னலம் மிக்க சொத்துரிமை வடிவம் ஒரு தேசத்தின் மொத்தத் தேசிய வருமானத்தைக்காட்டிலும் செல்வபலம் மிக்க தனிநபர்களை உருவாக்குகிறது,தேசங்கள் இனிமேல் அவர்களது அடிமைச்சேவகர்கள் ஆகிவிடுகின்றன.பிற்போக்கு தலை விரித்தாடுகிறது, பாசிசம்அரங்கேறுகிறது.அநீதியான யுத்தங்கள் சுதந்திர தேசங்களை துவம்சம் செய்கின்றன.இது ஹிட்லரின் காலம் புஸ்சின் முகத்திரையில்-ஒபாமா ஹில்லறி எந்தப் புல்லுருவியும் இந்தப் போக்குக்கு மாற்றாக முடியாது..
இதன் இறுதி விளைவு,
மூன்றாவது உலகப் போர் தவிர வேறெதுவாகவும் இருக்க முடியாது; புரட்சிகர மக்கள் திரள் ''சர்வதேச சமூகத்தின்'' இந்த அனர்த்தத்தை தடுத்து நிறுத்தினால் ஒழிய!
இந்தப் பின்னணியில் ஈழம் பெறும் முக்கியத்துவம்.
1) ஏகாதிபத்திய உலக மறு சந்தைப் பங்கீட்டின் களம், பிரதான-போர்முனை- (மத்திய)ஆசியாவில் மையங்கொண்டிருப்பதால்;
2)ரசியாவுக்கும், சீனாவுக்கும், மத்திய ஆசிய -முரட்டு-நாடுகளுக்கும் எதிராக இந்தியாவுடனும் ஜப்பானுடனும் அமெரிக்கா கூட்டமைத்திருப்பதால்;
3)மூன்றாவது உலகப்போருக்கான தனது இராணுவத் தளத்தை ஈழக்கிழக்குத் திருமலையில்,இந்தியத் துணையுடன் அமெரிக்கா நிர்மாணிக்கிறது.இதற்கு மகிந்த சிந்தனை சேவகம் செய்கிறது.ஈழத்தில் இராணுவத்தளம் அமைக்க கிழக்கு மாகாணமக்கள் மீது அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து தொடுத்த தாக்குதல்- ஹிட்லரின் பாசிசத்துக்கு எந்தவகையிலும் சளைத்தது அல்ல.நாதியற்றுக் கிடக்கிறது தமிழ்த் தேசம் கேள்விகேட்க யாருமின்றி!
இவ்வாறு உலகெங்கும் தேச விரோத ஏகாதிபத்தியப் பாசிசம் அரங்கேறும் பின்னணியில்தான், பக்ச பாசிஸ்டுக்களும் பிள்ளையானை அமெரிக்க,இஸ்ரேலிய, இந்திய ஆசீர்வாதத்துடன் தமது ஜனநாயகக் குழந்தையாகத் தத்தெடுத்துள்ளனர்.பாலஸ்தீன தேசத்தை எவ்வாறு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் இராணுவ வலயங்களாக துண்டாடி-இறுதியாக காசாப் பகுதிக்குள் முடக்கி- அடிமைப் படுத்தினார்களோ அதே வழி முறையையே ஈழத்தின் குரல் வளையை நெரிக்கவும் பயன்படுத்துகிறார்கள்.அரபாத்தின் 'ஒலிவமரக்கிளை' பாலஸ்தீனத்துக்கு இழைத்த நாசத்தை, பாலசிங்கத்தின் 'அகசுயநிர்ணய உரிமை' ஈழத்துக்கு இழைத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பாதையில் இருந்து முறித்துக் கொள்ளவில்லையென்றால் இன்னும் பல பிள்ளையான்கள் விடுதலைப் புரட்சியை வழி மறித்துக்கொண்டே இருப்பார்கள்.
*ஈழமக்களின் தாகம், மக்கள் ஜனநாயக குடியரசு!
*விடுதலைப் புரட்சி ஓங்குக!
*மக்கள் ஜனநாயகக் குடியரசு மலர்க!!
*இறுதி வெற்றி ஈழமக்களுக்கே!!!
ENB
No comments:
Post a Comment