மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா?: விடுதலைப் புலிகள் கேள்வி
[செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 02:24 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறிழைக்க இந்திய அரசு முற்படுகின்றதா? என்று தமிழீழ விடுதலைப் புலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:
தலைமைச் செயலகம்,தமிழீழ விடுதலைப் புலிகள்,தமிழீழம்.10.02.2008.
ஈழத்தமிழர்கள் மீதான சிங்கள அரசின் இன அழிப்பு செயலுக்குத் தலைமையேற்று நிற்கும் சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை வரவேற்று உயர் அரச கௌரவத்தை வழங்கிய இந்திய அரசின் செயல் ஈழத்தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிங்கள அரசு ஒரு தலைப்பட்சமாக வெளியேறி தமிழர் தாயகத்தில் போரை விரிவாக்கியுள்ள இக்கால சூழலில்,
தமிழின அழிப்பிற்கு தலைமையேற்று வழிநடத்தும் சிங்களத்தின் இராணுவத் தளபதிக்கு இத்தகைய அரச கௌரவத்தை வழங்கியுள்ள இந்திய அரசின்
செயலை புலிகள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
சிறிலங்கா அரசின் இராணுவ வழித்தீர்வுக்கு ஒருபுறமும் கட்டுக்கடங்காத மனித உரிமை மீறல்களுக்கு மறுபுறமுமாக, உலகளாவிய ரீதியில் சிங்கள
அரசு கண்டனங்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அதிகளவில் உள்ளாகி வருகின்றது.
ஆயினும் இக்கண்டனங்களையும் எச்சரிக்கைகளையும் புறம் தள்ளிவிட்டு அதிகளவிலான ஆட்கடத்தல்கள், படுகொலைகள், இனரீதியான கைதுகள்
என்பனவற்றை சிங்களப்படைகள் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த உண்மையை மூடிமறைப்பதில் அக்கறை காட்டும் சிங்கள அரசு, தொடரும் போரிற்கான பழியைத் தமிழரின் சுதந்திர இயக்கமான புலிகள்
இயக்கத்தின் மீது சுமத்தி தனது இன அழிப்புப் போருக்கு உலகின் உதவியைக் கோரி நிற்கின்றது.
சிங்கள அரசின் இந்த கபட நோக்கத்தைப் பல ஐரோப்பிய நாடுகள் புரிந்துகொண்டு தமிழின அழிப்பிற்குத் துணைபோகக்கூடிய உதவிகளை
நிறுத்தியுள்ளன.
இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக்
கூறிக்கொண்டு, அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே
வழிகோலும்.
இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது, ஈழத்தமிழர்களைத் தொடர்ந்தும் இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு பாரிய இன அழிவு அபாயத்துக்குள்
அவர்களைத் தள்ளிவிடும் என்பதை இந்திய அரசிற்கு சுட்டிக்காட்ட புலிகள் இயக்கம் விரும்புகின்றது. இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச்
செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என ஈழத்தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம்
அன்பாகக் கேட்டுக்கொள்கின்றது.
நாம் போர்நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகவுமில்லை. போரைத் தொடங்கவும் இல்லை. எமது மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு தொடுத்துள்ள இன அழிப்புப் போருக்கு எதிராக ஒரு தற்காப்புப் போரையே நடாத்தி வருகின்றோம்.
நாம் இன்னமும் நோர்வேயின் தலைமையிலான அமைதிவழி முயற்சிகளிலிருந்து விலகவில்லை. நோர்வே அரசின் தலைமையில் முன்னெடுக்கப்படும்
சமாதான முயற்சிகளில் பங்கேற்க புலிகள் இயக்கம் தயாராகவே இருக்கின்றது.
இந்த நிலையில், அரசியல்-இராணுவ- பொருளாதார ரீதியாக தொய்ந்து போயுள்ள சிறிலங்கா அரசிற்கு முண்டு கொடுக்கும் இந்திய அரசின் செயலானது
ஈழத்தமிழ் மக்களை கோபத்துக்குள்ளாக்கியுள்ளது.
"புலிகளுடனான போரில் சிங்களப் படைகள் இராணுவ ரீதியில் தொய்ந்து போவதை இந்தியா விரும்பவில்லை." என்ற இந்தியப் படையதிகாரிகளின்
கூற்று சிங்களத்தின் போர் இயந்திரத்திற்கு முண்டு கொடுக்க முயலும் இந்திய அரசின் செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது.
இந்திய அரசின் இத்தகைய செயற்பாடுகளால் புத்தூக்கம் பெற்றுள்ள சிங்களப்படைகள் மேற்கொள்ளப்போகும் தமிழின அழிப்பிற்கு இந்திய அரசே
பொறுப்பேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழுத்தம்:ENB
செய்தியின் பின்னணியில்:
1) விடுதலைப் புலி இயக்கத்தின் மாவிரர் தின உரைக்கும் மேலான கொள்கைப்பிரகடனம் இது.
2) //மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை// முதல் தவறு என்ன தலைவா?
1987 இந்திய இலங்கை ஒப்பந்தம்,13வது திருத்தச்சட்டம், EPRLF மாகாணசபை, ஆயுதக்களைவு, புலேந்திரன் திலீபன் பூபதி படுகொலைகள்,இந்திய ஆக்கிரமிப்பு யுத்தம். இவைதானே!
இப்போது உங்களுக்கு இவை இந்தியா 'இழைத்த வரலாற்று தவறுகள்'.
1)பாரத தேசத்துக்குப் பாடங்கற்பிக்கும் 'மாமனிதர்களே'; இவை இந்தியா இழைத்த தவறா? இந்திய விஸ்தரிப்புவாத நலனா?
2)வரிக்கு வரி இனம் இனம் என ஊழையிடுகிறீர்கள்.இலங்கையில் தமிழர்கள் ஒரு இனம் அல்ல அவர்கள் ஒரு தேசம்.
3)ஏகாதிபத்திய தாயின் சிறு முதலாளித்துவக் குஞ்சுகளே இனிமேலும் தேசிய விடுதலைப் புரட்சிகளை உங்களால் காவிச் செல்ல இயலாது போனால் 'அகசுயநிர்ணயத்துக்கு' அடிபணியுங்கள்.
4) ஈழ விவசாயிகளுக்கு 'Regaining Sri Lanka' விடுதலை தராது என்பது புரிகிறபொழுது புதிய பொழுது புலரும்.
5) அந்தப் புரட்சிப்பிரவாகம் அண்மித்துள்ளது தோழர்களே!
No comments:
Post a Comment