சிங்களக் குடியேற்றங்களின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்த பரிமாணங்களில் மக்களுக்கு விளக்க வேண்டும்: தேசியத் தலைவர் [செவ்வாய்க்கிழமை, 11 மார்ச் 2008, 04:38 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
புலிகளின் அர்த்தத்தில்-இனப்பிரச்சனையாக மட்டுமல்ல-, புரட்சிகர அர்த்தத்தில் தேசிய இனப்பிரச்சனையாவும், மக்களுக்கு விளக்க அரசியல் சுதந்திரம் அளிப்பீர்களா? உங்கள் நிழல் அரசின் அரசியல் யாப்பில் இந்த அடிப்படை ஜனநாயக உரிமையை உத்தரவாதம் செய்யுங்கள்.இல்லையேல் உங்கள்
அடித்தளங்கள் தகர்ந்து போவதை தடுத்து நிறுத்த முடியாது.enb

குடியேற்றங்களின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்த பரிமாணங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறித் தெளிவூட்ட வேண்டிய தேவையும், கட்டுப்பாடும் இன்று இருக்கின்றது என்று தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தெரிவித்துள்ளார். போராளி சி.விபுலேந்திரன் அல்லது அன்புச்செல்வன் எழுதிய "தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்" என்ற நூலுக்குத் தமிழீழத் தேசியத் தலைவர் அளித்துள்ள வாழ்த்துச்செய்தி:
மனிதன் என்பவன் உலக ஜீவராசிகளில் முதன்மையானவன்.
அவன் இயற்கை என்ற மாபெரும் சக்தி படைத்த அற்புதமான கலை வடிவம். உயர்ந்த உயிர் வடிவம். இயற்கை மனிதனை இவ்வாறு படைத்ததோடு மட்டும் நின்று விடவில்லை அவன் தன்னைத்தானே படைத்துக்கொள்ளவும் பாதுகாத்துக்கொள்ளவும் தனது இனத்தை விருத்தி செய்து தனது இனத்தின் இருப்பை இறுதி செய்துகொள்ளவும் நிர்ப்பந்திக்கின்றது.
இந்த இயற்கையின் தவிர்க்க முடியாத நியதிக்குள் நிர்ப்பந்தத்திற்குள் சிக்குண்டு மனித வாழ்வு சுழல்கின்றது.
இந்தச் சுழற்சியின் படிமங்கள் வாழும் மக்களின் அகத்திலும் புறத்திலுமாக பதிவாக்கம் செய்யப்படுகின்றன.
அந்த மக்கள் கூட்டத்தின் சமூகத்தின் இனத்தின் வரலாறாக விரிகின்றன.
இத்தகைய வரலாற்றின் ஒட்டுமொத்த பதிவுகள் அந்த இனத்தின் நிரந்தர நிம்மதியான இருப்புக்குச் சாட்சியாக அவர்களின் கௌரவமான வாழ்வை அலங்கரித்து பெருமை சேர்க்கின்றது.
இலங்கைத்தீவில் ஏலவே வாழ்ந்த இனமொன்றின் மீது ஆக்கிரமிக்க நினைத்த இனம் ஒன்றின் பரிநிர்மாணத் துறவிகள் பின்புலமற்ற புனிதமான புனைவான வரலாறு ஒன்றை வடிவமைத்து அதற்காகவே நிகழ்காலத்தை திரித்து மாலையாக்கி அவர்களே உருவாக்கிய மாலையை அரச குலத்தாருக்கு சூட்டி மகிழ்ந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக வாழ்ந்த இனத்தின் இருப்பியல் அபிலாசைகளுக்கு வேட்டு வைக்கும் படியான வரலாற்று நூல்களை ஆக்கித் தமது வளரும் இளம் சந்ததியினருக்கு திணித்து வந்தார்கள்.
இத்தகைய திரிக்கப்பட்ட வரலாற்றுத்திணிப்பின் விளைவாக சிங்கள இனம் இன்று பேரினவாதப் படுகுழிக்குள் வீழ்ந்து கிடக்கின்றது.
இருண்ட கால இதிகாசங்களின் கருத்துப் போர்வையால் உசுப்பேறி எமது தேசிய இனக்கட்டமைப்பை சிதைத்து எமை இனரீதியாக அழித்துவிட சிங்கள அரசு நீண்டகாலமாக கங்கணம் கட்டி நிற்கின்றது.
தமிழரின் தாயகம், தேசியம் தன்னாட்சி உரிமை எனும் மூலாதாரக்கோட்பாடுகளுக்கு வேட்டு வைத்து வரலாறு ரீதியாக எமக்கு உரித்தான எமது தாயக மண்னில் எம்மை அழித்துவிடத் திட்டம் போட்டது.
அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் தமிழீழத் தமிழர் தாயக மண்ணில் சிங்களக்குடியேற்றங்களை அமைத்து நில அபகரிப்பை ஆரவாரமின்றி அமைதியாகவும் காத்திரமாகவும் முன்னெடுத்தது.
தமிழர்கள் விழித்துக்கொண்ட போது சிங்களப் படைகளையும் சிங்களக் காடையர்களையும் நேரடியாக அனுப்பி எமது மக்களை அடியோடு அடித்து விரட்டி எம் மக்களது பிணக்குவியலின் மேல் குடியிருப்புக்களை நிறுவிக்கொண்டது.
தமிழர்கள் இறுதியாகப் போராட ஆரம்பித்ததும் இராணுவ நடவடிக்கைகளையும் குண்டு வீச்சக்களையும் எறிகணை வீச்சுக்களையும் பெரியளவில் தொடர்ச்சியாக மேற்கொண்டு தமிழரின் குடிமனைகளையும், குடியிருப்புக்களையும் பெரியளவில் ஆக்கிரமித்தது.
பல கோடி செலவில் பல்லாயிரம் இராணுவத்தை குடியமர்த்தி பிரமாண்டமான இராணுவத்தளங்களை அமைத்து. எமது தாயகத்தை நீண்ட இராணுவ வேலிகளால் முற்றுகையிட்டது.இராணுவப் பாதுகாப்பிற்கு மத்தியில் சிங்களக் குடியிருப்புக்களை நிறுவி எமது தாய்நிலத்தை பல கூறுகளாகத்துண்டாடி அதன் புவியியல் ஒருமைப்பாட்டை சிதைக்க முயற்சித்தது.
இப்படி அடாவடியாக முளைத்தெழுந்து இன்று பூதாகாரமாக வடிவம் எடுத்துள்ள இந்தச் சிங்களக்குடியேற்றங்கள் இராணுவக் குறிக்கோளும் அரசியல் ரீதியான அந்தரங்க நோக்கங்களும் கொண்டவை.
நாம் பிறந்து வாழ்ந்த எமது தாய் மண்ணிலேயே எமது இருப்புக்கு ஆப்பு வைத்து எமது நிலங்களை பெரியளவில் வேகமாக விழுங்கி வருகின்றன. இந்தக்குடியேற்றங்களின் உண்மையான தார்ப்பரியத்தை அர்த்த பரிமாணங்களில் எமது மக்களுக்கு எடுத்துக்கூறித் தெளிவூட்ட வேண்டிய தேவையும் கட்டுப்பாடும் இன்று இருக்கின்றது.
எமது போராளியான சி.விபுலேந்திரன் (ரவி) இந்தத் தேவைகளையும் கட்டுப்பாடுகளையும் கவனத்தில் எடுத்து அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி "தமிழீழ எல்லைகளை நோக்கி நகர்வோம்" என்ற நூலை எழுதி வெளியிடுவது எனக்குப் பெரும் மகிழ்வைத் தருகின்றது.
சிங்கள அரசு தாயக மண்ணில் காலத்திற்கு காலம் நிகழ்த்திய மண் பறிப்பையும் நில ஆக்கிரமைப்பையும் அதன் ஆழ அகலங்களில் கால வரிசைப்படி தரிசித்துக் கதையாக கூறும் ஓர் உயர்ந்த வரலாற்று நூலாக இது அமைந்திருக்கின்றது.
நிலங்களைப் பறிகொடுத்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளையும் பெரும் நெருக்கடிகளையும் பெரும் வாழ்வியல் சுமைகளையும் பல்வேறு கோணங்களில் படம் பிடித்துக்காட்டும் காலப்பெட்டகமாக இது எழுதப்பட்டிருக்கின்றது.
சிங்கள அரசின் நில அபகரிப்பு நாடகத்தின் இன்றைய கொடூரமான வடிவத்தையும் அது தமிழின ஆன்மாவில் விழுத்தியுள்ள நிரந்தர வடுவையும் அங்குலமங்குலமாக ஆழமாக அலசிப்பார்த்து விலாவாரியாக இந்நூல் விளக்குகின்றது.
மொத்தத்தில் இது கனமான ஒரு காலப்பதிவேடாக எல்லோருக்கும் விளங்கும் எளிய மொழி நடையில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
தமிழீழ வரலாற்றில் இந்நூல் என்றும் நிலைத்திருக்க வாழ்த்துவதோடு இந்நூலின் ஆக்கத்திற்கு அயராது உழைத்த இந்த போராளிப் படைப்பாளியை நான் மனமாரப் பாரட்டுகின்றேன்.
அத்தோடு இவரது வரலாற்றுப்பணி தொடர்ந்தும் சிறக்க எனது நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தமிழீழத் தேசியத் தலைவர் தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்.

செய்தி மூலம்:யாழ் உதயன் Posted on : Tue Mar 11 9:05:00 2008
மட்டு. மாநகரசபையை 11 உறுப்பினர்களுடன் அரசு - பிள்ளையான் கூட்டணி கைப்பற்றியது
ஈ.பி.டி.பி., புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் அணிக்கு 6 ஆசனங்கள் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாநகரசபையைக் கைப்பற்றியது. மேற்படி முன்னணியின் சார்பில் பதினொரு அங்கத்தவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த வேட்பாளர்களும் போட்டியிட்டனர் என்பது தெரிந்ததே.மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் 8 பிரதேச சபைகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இத் தேர்தலில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் (இம் முன்னணியின் வேட்பாளர்களில் பிள்ளையான் குழு உறுப்பினர்களும் அடங்குவர்) ஈ.பி.டி.பி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா) அணி ஆகியன இணைந்து சுயேச்சைக் குழுவாகவும் போட்டியிட்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணி ஆகியனவும் போட்டியிட்டன.நேற்றைய தேர்தலின் முதலாவது பெறுபேறாக மாநகரசபையின் முடிவு நள்ளிரவு 1.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது.கட்சி ரீதியாக முடிவு வருமாறு:மட்டக்களப்பு மாநகரசபைகிடைத்த அங். வாக்குகள் எண்ணி.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14,158 11சுயேச்சைக்குழு 9,601 6முஸ்லிம் காங்கிரஸ் 1,788 1ஈழவர் ஜனநாயக முன்னணி 424 1மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் என்றுமில்லாதவாறு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்றது. தேர்தலில் 56 சதவீதமானோரே வாக்களித்தனர் என்று மட்டக்களப்பு அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். காலை 7.00 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமான சமயம் மிகவும் குறைவானோரே வாக்களிப்பு நிலையங்களில் காணப்பட்டனர். முற்பகல் 11.00 மணிக்குப் பின்பு சற்று அதிகமானோர் வாக்களிக்க வந்திருந்தனர். 285 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. இடம்பெயர்ந்தவர்களுக்காக 06 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.வாக்களிக்க வந்த மக்கள் முழு அளவில் உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.அதி கூடிய வாக்களிப்பு மண்முனைப் பிரதேச சபைத் தேர்தலில் பதிவாகியுள்ளது. அங்கு 72 சதவீதமான வாக்குகள் பதிவாகியுள்ளன.ஆகக்குறைந்த வாக்களிப்பு கோறளைப்பற்றுப் பிரதேசசபைத்தி தேர்தலில் பதிவாகியுள்ளது. அங்கு 38 சதவீதமான வாக்குகளே பதிவாகியுள்ளன. மட்டக்களப்பு மாநகரசபைப் பகுதியில் 56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.பெரியளவில் வன்முறைகள் இடம்பெறவில்லை என்றும் சில இடங்களில் சிறுசிறு அசம்பாவிதங்கள், சம்பவங்களே இடம்பெற்றன என்று பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் பணிகளில் 5 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.படையினரும், அதிரடிப்படையினரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.வாக்குச் சீட்டுக்களைக் கிழித்து எறிந்தனர்பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் வாக்குச் சீட்டுக்களைக் கிழித்து எறிந்துவிட்டுச் சென்றதை அவதானிக்க முடிந்தது என்றும்பல பகுதிகளில் அச்சுறுத்தல் காரணமாகவே பெரும்பாலானவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றதை அறியமுடிந்தது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 14 வருடங்களுக்குப் பின்பு நடைபெற்ற இந்தத் தேர்தலில் மக்கள் அச்சம் காரணமாகவே வாக்களிப்பதில் ஆர்வமின்றிக் காணப்பட்டனர் என்று மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவித்தன. இம்முறை உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது குறிப்பிடத்தக்க பெரிய அளவில் வன்முறை எதுவும் பதிவாகாத போதிலும் மக்கள் மத்தியில் ஒருவித பதற்றமும் பீதியும் காணப்பட்டன என்று எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.இடம்பெயர்ந்தவர்களுக்கென புறம்பான வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தபோதிலும் தேசிய அடையாள அட்டை இல்லாததால் பலர் வாக்களிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.தமிழ் மக்களை விட முஸ்லிம் மக்களே அதிக அளவில் வாக்களிப்பில் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் முன் அரங்கில் ஓராண்டாகப் படைகள் ஒரு சில சதுரக் கிலோ மீற்றருக்குள் முடக்கம்!
முன்னேற முடியாத விரக்தியில் தளபதிகள் தவிப்பு என்கிறார் நடேசன் [ திங்கட்கிழமை, 10 மார்ச் 2008, 05:27.36 AM GMT +05:30 ] மன்னார் முன் அரங்கில் ஏறத்தாழ கடந்த ஒரு வருடமாக முன்னேற முடியாமல் ஒரு சில சதுரகிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் முடங்கிக் கிடக்கின்றது இலங்கை இராணுவப் படையணி. இதனால் இலங்கையின் பாதுகாப்பு உயர்பீடத்தில் விசனமும் விரக்தியும் ஆதங்கமும் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தோற்றுகின்றது. இந்தப் பின்னடைவைக் சமாளிப்பதற்காக அவசர இராணுவக் கூட்டுக்களை ஏற்படுத்தித் தம்மைப் பலப்படுத்தும் நோக்குடன் இராணுவத் தளபதிகள் அவசர அவசரமாக வெளிநாட்டுப் பயனங்களில் ஓடித்திருந்திருக்கின்றார்இதேசமயம் அரசின் பேரினவாதக் கொள்கையிலான ஆட்சி முறைமை சர்வதேச மட்டத்தில் அம்பலமாகி இருப்பதால் அதன் பெயர் உலகளவில் சீரழிந்து விட்டது.
அதேவேளை அரசின் மோசமான மனித உரிமை மீறல்களினாலும் சர்வதேச சமூகத்தில் இலங்கை அரசின் பெயர் கெட்டுப்போயும் விட்டது.''இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன்.படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கே. சிவநேசனின் அஞ்சலி நிகழ்வு நேற்று முன்தினம் கிளிநொச்சியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய சமயமே நடேசன் இவ்வாறு குறிப்பிட்டார்."மன்னாரில் மட்டுமல்ல, வவுனியா, மணலாறு மற்றும் வடக்குக் களமுனைப் போரிலும் இப்படித்தான் நகர முடியாமல் முன்னேற இயலாமல் அரசுப் படைகள் முடக்கப்பட்டுள்ளன.'' என்றார் நடேசன்.
அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு:யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வறுமையாலும் பட்டினியாலும் வாடிய மக்களுக்கு கூட்டுறவு முறைமை மூலம் உதவுவதில் முன்னின்றவர் சிவநேசன். மக்கள் இடம்பெயர்ந்த போது அவரும் சேர்ந்து இடம்பெயர்ந்தார். விமானக் குண்டு வீச்சுகளில் மக்கள் பாதிக்கப்பட்டபோது அவர்களுக்கு உதவுவதில் முன்னின்றவர் சிவநேசன்.கீழ்மட்டத்தில் உள்ள மக்களை கூட்டுறவுத் திட்டத்தின் மூலம் ஊக்குவித்து வாழ்க்கையில் மேம்படும் நிலைக்குத் தூக்கிவிட முடியும் என்று கருதிச் செயற்பட்டார் அவர்.தமிழர் தேசத்தின் விடுதலை மீது அவர் முழு நம்பிக்கை கொண்டிருந்தார்.தென்னிலங்கையின் நாடாளுமன்ற முறை மூலம் தமிழருக்கு விடிவு கிட்டாது என்று முழுமையாக நம்பிய சிவநேசன், எனினும் அந்த முறைமையின் பின்னடைவுகளை அந்த முறைமை ஊடாகவே சர்வதேசத்துக்கும் அம்பலப்படுத்தினார்.தமிழர்களின் உரிமைக்காகவெளிநாடுகளில் குரல் எழுப்பியவர்.
தமிழ் மக்களின் அரசியல் குரல் அடக்கப்பட்ட போது அவர் வெளிநாடுகள் எல்லாம் சென்று தமிழர்களின் உரிமைக்காக முழக்கமிட்டுக் குரல் எழுப்பினார்.மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும் , தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு. இவ்வாறான இழப்புகளின் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் முழு வீச்சுடன் நகர்ந்து வந்துள்ளது.சிவநேசனை எனக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தெரியும். இவர் இளம் வயதிலிருந்து புரட்சிகர எண்ணங்களுடனும் எமது விடுதலைக்கு அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வந்தார்.கூட்டுறவு வாழ்வின் ஊடாக தேசத்திற்கு பெரும் பங்காற்றினார். போராளிகளுடனும், மக்களுடனும் இணைந்து வாழ்ந்து வந்தவர்.தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு இரவு பகலாக உழைத்தவர். எமது விடுதலையை மிகவிரைவில் பெற்றுவிடுவோம் என்ற நிலையில் ஒரு விடுதலை வீரனாக வாழ்ந்தவர்.
திட்டமிட்ட படுகொலை
அரசு இவரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளது. இவ்வாறான படுகொலைகளினால் எமது தேசம் கலங்கியபோதும், மஹிந்தவின் படுகொலை நடவடிக்கைகளை எதிர்கொண்டு தேசியத் தலைவரின் தலைமையில் அணிதிரண்டு, தனியரசை நிறுவுவதே தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி.இவ்வாறு நடேசன் கூறினார்.கிளிநொச்சியில் "ஏ 9" சாலையை அண்டியுள்ள கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான், புலிகளின் மூத்த உறுப்பினர் கே.வி.பாலகுமாரன் ஆகியோரும் பங்குபற்றினர்.யாழ். மாவட்ட கூட்டுறவு சமாஜத்தின் தலைவர் சொலமன் எஸ்.சிறில்,புலிகளின் மகளிர் மேம்பாடு மற்றும் திட்டமிடல் பொறுப்பாளர் எஸ்.தமிழினி மற்றும் பல கூட்டமைப்பு எம்.பிக்கள் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
இந்நிகழ்வில் தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஜெயானந்தமூர்த்தி,கே.கஜேந்திரன், ராஸின் முகமட் இமாம், பி.அரியநேத்திரன்,சிவநாதன் கிஷோர், சிவசக்தி ஆனந்தன், ஸி.சந்திரநேரு, கே.பத்மநாதன் ஆகியோரும் பங்குபற்றினர்.

ஐ.நா.வுடன் இணைந்து செயற்பட தயார் சர்வதேச கண்காணிப்பை ஏற்க முடியாது - அரசாங்கம் ஜெனிவாவில் உறுதிபட தெரிவிப்பு
3/9/2008 8:22:00 PM வீரகேசரி இணையம் -
மனித உரிமை விடயத்தில் ஐ.நா.வுடனும் சர்வதேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட அரசாங்கம் தயாராக உள்ளது. எனினும் இவ்விடயத்தில் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு தேவை என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெனிவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 7ஆவது கூட்டத்தொடலில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சரும் இலங்கை தூதுக்குழுவின் தலைவருமான மஹிந்த சமரசிங்க அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐ.நா.வின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுவரும் நிலையில் இலங்கையும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பிற்கான எதிர்ப்பும் என்ற தலைப்பிலான கலந்துரையாடல் ஒன்றை ஐ.நா.வுக்கான இலங்கை தூதுவரும் நிரந்தர வதிவிட பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க ஏற்பாடு செய்திருந்தார். கந்துரையாடலில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் அடங்கலாக சுமார் 45 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேலும் கூறியதாவது: மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கத்திடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. நாம் மிகவும் வெளிப்படையான முறையிலேயே செயற்பட்டுவருகின்றோம்.
ஐ.நா.வின் உயர்மட்ட பிரதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது அவர்களின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கியுள்ளது.
ஐ.நா,வின் மனித உரிமை ஆணையாளர் லூயில் ஆர்பர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். சென்று ஆயரை சந்தித்துப்பேசுவதற்கும் சிவில் சமூக பிரதிநிதிகளையும் பொதுமக்களையும் சந்திப்பதற்கும் அரசாங்கம் ஏற்பாடு செய்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த சித்திரவதைகள் தொடர்பான ஐ.நா.வின் விஷேட தூதுவர் மான் பிறெட் நொவெக்கிள் கோரிக்கைக்கு அமைய முன் அறிவிப்பு எதுவுமின்றி சிறைகளையும் தடுப்பு நிலையங்களையும் சென்று பார்வையிடுவதற்கு அரசாங்கம் அனுமதியளித்தது.
ஐ.நா.வின் இடம் பெயர்ந்தோர் தொடர்பான விஷேட தூதுவர் வோல்ட்டர் கெவின் விஜயம் செய்த போது கிழக்கு மாகாணத்திற்கு சென்று இடம் பெயர்ந்த மக்களையும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் ஆய்வுசெய்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தது. அரசாங்கம் இலங்கையிலுள்ள ஐ.நா.உயர் அதிகாரிகளுடனும் இங்கு விஜயம் செய்யும் ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் தூதுவர்களுடனும் ஒத்துழைத்து செயற்படுகின்றது. “இந் நிலையில் இலங்கையில் மனித உரிமைகளின் நிலையை கண்காணிக்க சர்வதேச அமைப்பின் பிரசன்னம் அவசியமென நாம் கருதவில்லை என்றார்.
மனித உரிமைகளை ஆராய இலங்கையில் ஐ.நா. அலுவலகம் அவசியமில்லை -விமல் வீரவன்ச

வீரவன்சவின் விபச்சார விடுதிகள் அம்பலமாகிவிடும் கண்டியளோ. ENB
3/9/2008 7:18:30 PM வீரகேசரி இணையம்
இலங்கையில் மனித உரிமைகளை ஆராய ஐ.நா. வின் அலுவலகம் அமைக்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதனை எம்மால் மேற்கொள்ள முடியும்.அரசாங்கம் ஐ.நா. விற்கு அடிபணிந்து இதற்கு இடமளிக்குமானால் அதனை முழு மூச்சுடன் எதிர்த்து தடுக்கும் சக்தி ஜே.வி.பி. க்கு உண்டு என அதன் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
ஐ.நா. வின் மனித உரிமை அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டுமென்ற வலியுறுத்தல் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே விமல் வீரவன்ச எம்.பி. இதனைத் தெரிவித்தார்.
எமது நாட்டில் ஐ.நா. அலுவலகம் அமைப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கம் அதனை நிறைவேற்ற முயன்றால் தேசப்பற்றாளர்களை ஒன்றிணைத்து அர்ப்பணிப்புடன் போராடி தடுத்து நிறுத்துவோம். அதற்கான பலம், மனோதிடம் ஜே.வி.பி. க்கு உண்டு.
எமது நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை செய்ய ஜனநாயக ரீதியான அரசாங்கம் மக்கள் பிரதிநிதிகள் தேசிய ஜனநாயக அமைப்புக்கள் இருக்கின்றன. எனவே அந்தப் பொறுப்பை வேறொருவருக்கு அதாவது சர்வதேச நாடுகளுக்கு வழங்க வேண்டிய அவசியம் கிடையாது.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா. வின் பிரதிநிதிகளான லூயிஸ் ஆர்பர், அநா??? போன்றோர் அறிக்கைகளை சமர்ப்பித்து அதனூடாக இங்கு வந்து அலுவலகத்தை அமைப்பார்கள். இதன் பின்னர் இலங்கையில் பயங்கரமான சூழ்நிலை தோன்றுவதாக பிரசாரத்தை மேற்கொண்டு சமாதானப் படை என்ற பெயரில் ஐ.நா. ஆக்கிரமிப்பு படையை எமது நாட்டில் நிலைகொள்ளச் செய்வார்கள். பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
இந்த ஸ்டைலிலேயே கொசோவாவில் நேட்டோ படையினரை நிலைகொள்ளச் செய்தும் சூடானில் ஐ.நா. படையை நிலைகொள்ளச் செய்தும் பிரிவினைகளை ஏற்படுத்தினார்கள். எனவே இதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். அதேவேளை இவ்விடயம் தொடர்பாக இந்தியா மௌனத்தை கடைப்பிடிக்கின்றது. அந்த மௌனம் இச் செயலுக்கு ஆதரவாக இருக்குமானால் அதனையும் எதிர்த்து போராடுவோம் என்றும் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்

வன்னியெங்கும் விசேட ஊர்தியில் சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல்
[09 - March - 2008]
ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுசென்று அஞ்சலி வன்னியில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. மாமனிதர் கி. சிவநேசனின் பூதவுடலுக்கு நேற்று சனிக்கிழமை வன்னியில் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை பிற்பகல் கனகராயன்குளம் மன்னகுளம் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணியினரின் கிளைமோர் தாக்குதலில் சிவநேசன் எம்.பி.யும் அவரது வாகனச் சாரதியும் கொல்லப்பட்டனர்.
சிவநேசன் எம்.பி.யின் பூதவுடல் மல்லாவியிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டு நேற்றுக் காலை வன்னியின் சகல பகுதிகளுக்கும் விசேட ஊர்தியொன்றின் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
நேற்றுக் காலை முல்லைத்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் இவரது பூதவுடல் சென்றபோது, ஆயிரக்கணக்கான மக்கள் அவருக்கு தங்கள் இறுதி அஞ்சலியை கண்ணீர்மல்க செலுத்தினர்.
இதன் போது பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலிக் கூட்டங்களும் நடைபெற்றது. இந்தக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களும் இந்தக் கூட்டங்களில் கலந்துக்கொண்டு உரையாற்றினர். இரவது பூதவுடல் தாங்கிய ஊர்தி செல்லுமிடமெங்கும் வீதிகளின் இரு மருங்கிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று பூத்தூவி தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினர்.
இவரது மறைவையொட்டி வன்னியின் சகல பகுதிகளிலும் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டும் வாழை, தோரணங்கள் கட்டப்பட்டும் முக்கிய சந்திகளில் ஒலிபெருக்கிகள் மூலம் சோககீதங்கள் இசைக்கப்பட்டும் வருகின்றன.
நேற்றிரவு இவரது பூதவுடல் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றது. இன்று நண்பகல் மீண்டும் மல்லாவிக்கு எடுத்துச் செல்லப்பட்டும் இவரது பூதவுடல் அன்னாரின் இல்லத்தில் வைக்கப்பட்டு மாலை 4 மணியளவில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடைபெற்று இறுதிக் கிரியைகள் நடைபெறும்.

பிடிவாதம் கொண்ட இந்திய அதிகார வர்க்கத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்- இந்தியாவை அல்ல: சோமவன்ச அமரசிங்க[ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2008, 02:19 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்]
இந்தியாவின் பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம்- இந்தியாவை அல்ல என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ஜே.வி.பி.யின் சோசலிச பெண்கள் ஒன்றியத்தின் சார்பில் கொழும்பில் நேற்று சனிக்கிழமை உலகப் மகளிர் நாள் நிகழ்வு நடைபெற்றது.
அகில இந்திய போர்வார்ட் பிளக் பிரதிநிதி சித்ரா கோஷ் சிறப்புப் பிரதிநிதியாக அந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார்.
நிகழ்வில் சோமவன்ச அமரசிங்க பேசுகையில், நாங்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் அல்ல. இந்த அரசாங்கம்தான் எம்மை இந்தியாவுக்கு எதிரான ஒரு கட்சியாக சித்தரிக்கிறது என்று கூறிவிட்டு, "உங்கள் நாட்டுக்கு நாங்கள் எதிரியா?" என்று சித்ரா கோஷிடம் கேட்க சித்ரா கோசும் சிரித்துக் கொண்டே "இல்லை" என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள "பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தினரையே நாங்கள் எதிர்க்கிறோமே தவிர இந்தியாவுக்கு எதிராக இல்லை" என்று கூறினார்.
மேலும், மக்களை தவறாக வழிநடத்துகிற பிடிவாதம் கொண்ட அதிகார வர்க்கத்தை நான் வெறுத்து ஒதுக்குகிறேன். இந்த நாட்டைப் பாதுகாக்க படையினர் மடிந்து கொண்டிருக்கும் போது இந்த நாட்டினது அனைத்துத் தலைவர்களும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்" என்றார் அவர்.

Saturday, March 8, 2008
பாவலர் வ.ஐ.ச. செயபாலனின் பேட்டி - குமுதம்
31.01.2008 இதழில் வந்தது விடுதலைப் புலிகளைப் பற்றி பல வதந்திகள் நிலவும் சூழலில், உண்மை அறிய நார்வேயிலிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனைத் தொடர்பு கொண்டோம். இலங்கையில் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருப்பவர் இவர்.
இலங்கைத் தமிழர் நிலை இப்போது எப்படி உள்ளது?
‘‘பொதுமக்கள் மீதான தொடர் விமானக் குண்டு வீச்சுகளும் பீரங்கித் தாக்குதல்களும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கு எதிரான கடற்படையின் அட்டூழியங்களும் அதிகரித்துள்ளது. மறு புறத்தில், அதிகரித்துவரும் மருந்து, உணவுப் பொருட்கள் எரிபொருள் நெருக்கடி விரைவில் தமிழ் மக்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ளிவிடும். சர்வதேச கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் தமிழ் மக்களுக்குக் குறைந்த பட்ச பாதுகாப்பாக இருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்டதால், ஜனவரி 16_ல் இருந்து சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறிவிட்டார்கள்.இது விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் என்று சிங்கள அரசால் குறிப்பிடப்பட்டாலும் இது விடுதலைப் புலிகள் உருவாவதற்கு முன்னமே ஆரம்பித்த தமிழர்மீதான யுத்தத்தின் தொடர்ச்சி என்பதை மறைக்கமுடியாது.’’
இந்தப் போர்ச் சூழலில் இந்தியா என்ன நிலைப்பாட்டில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
‘‘இந்தியா, தமிழகம் _ இலங்கைத் தமிழர்களின் நலன்கள் வரலாற்றால் இணைக்கப்பட்டது. இது உடைந்தால் எல்லா தரப்பும் பாதிக்கப்படும். இதனாலும் நீடிக்கும் எங்கள் பகையாலும் சீனாவும் பாகிஸ்தானும் ஏனைய இந்திய விரோதிகளும்தான் பயனடைவார்கள்.தமிழருக்கெதிரான இனக்கொலைப் போரில் இலங்கை அரசுக்கும் கடற்படைக்கும் உதவுவதை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நாம் அழிக்கப்பட்டாலும் தமிழர் இனக்கொலைக்கு இந்தியாவும் உதவியது என்கிற பழிச்சொல் வேண்டாம்.’’
பிரபாகரனின் துணைவியார் மதிவதனி ஈழ அகதிகளுடன் சேர்ந்து மின்னல் வேகப் படகுமூலம் தமிழகம் வந்துவிட்டதாக வரும் தகவல்கள் உண்மையா?
‘‘இதுபோன்ற அடிப்படைகள் இல்லாத வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் எப்படிப் பதில் சொல்வது? ஆயிரம் ஆயிரம் வருடங்களாக சிங்கள அரசுகளிடம் இருந்து இலங்கைத் தமிழருக்கு தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருந்தது. 1620 வரை நீடித்த இலங்கைத் தமிழரின் யாழ்ப்பாண அரசுக்கு தஞ்சாவூரில் இருந்துதான் படை திரட்டப்பட்டது. அதன்பின்னர் போர்த்துக்கீசியர் காலத்தில் மதரீதியான ஒடுக்குதலுக்கு அஞ்சி நம்மவர்கள் இராமேஸ்வரத்துக்கும் வேதாரணியத்துக்கும்தான் தஞ்சமென்று ஓடி வந்தார்கள்.’’
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சமீபத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்து விட்டதாக செய்திகள் வருகின்றனவே?
‘‘இது அடிக்கடி இலங்கைப் படையினரால் சொல்லப்படுகிற சேதிதானே? சிங்கள ஆட்சியாளர்கள் பிரபாகரனோடு போராட்டம் முடிந்துவிடுமென்கிற அவர்களது நப்பாசையில் தங்கள் கனவைச் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகளின் அமைப்பை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் அவர்கள் கனவுகள் எதுவுமே நனவாகாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.’’
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பிரபாகரனின் மகன் தலைமை ஏற்கப் போவதாகச் சொல்கிறார்களே?
‘‘இந்தச் சேதிக்கும் அடிப்படை எதுவும் இல்லை. சார்லஸ் அன்ரனி கல்விக்காக லண்டன் போனபோது தப்பி ஓடி விட்டதாகச் சொன்னார்கள். இப்ப திரும்பிவந்து போராட்டத்தில் இணைந்து கொண்டதும் தலைவராகப் போகிறார் என்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் அடிப்படையில் ஒன்றுதான்.’’.

Posted by பெரியார் பாசறை
No comments:
Post a Comment