Saturday 12 April, 2008
ஈழம் மன்னாரில் 30 சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினர் பலி.
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் 4 முனை முன்நகர்வு தடுத்து நிறுத்தம்:
30 படையினர் பலி- 75 பேர் காயம் [சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 08:00 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னாரில் இன்று சிறிலங்காப் படையினர் 4 முனைகளில் பெரும் எடுப்பில் நடத்திய தாக்குதல்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய
எதிர்த்தாக்குதலில் படைத்தரப்பினர் பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். இச்சமர்களில் 30 படையினர் கொல்லப்பட்டனர். 75 படையினர்
காயமடைந்துள்ளனர். சிறிலங்காப் படையினர் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் ஆட்டிலெறிகள், பல்குழல் வெடிகணைகள் ஆகியவற்றின் செறிவான
சூட்டதாரவுடனும் கிபீர் ரக வானூர்திகளின் தாக்குதல் ஆதரவுடனும் செறிவான நான்கு முனைத்தாக்குதலை நடத்தினர்.
கட்டுக்கரை- மணல்மோட்டை- பாலைப்பெருமாள் கட்டுப்பகுதியிலிருந்து பெரிய உடைப்பு சுலுசுப் பக்கமாக ஒரு நகர்வும்
பரப்பாங்கண்டலில் இருந்து கள்ளி அடைஞ்சான் நோக்கி ஒரு நகர்வும்
இத்திக்கண்டலிலிருந்து புளியங்குளம் நோக்கி ஒரு நகர்வும்
இத்திக்கண்டலிலிருந்து பறையகுளம் நோக்கி ஒரு நகர்வும் சிறிலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இன்று பிற்பகல் 1:30 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்திய உக்கிர தாக்குதலையடுத்து படையினரின் நகர்வுகள் நிறுத்தப்பட்டன.
இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 75 படையினர் காயமடைந்தனர்.
விடுதலைப் புலிகள் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
மேலும் மன்னார் மடு- தட்சணாமருதமடுப் பகுதி மீது சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
தட்சணாமருதமடுவுக்கு மேற்காக உள்ள விளாத்திக்குளம் பகுதியிலும் மோதல் இடம்பெற்றது.செய்தி மூலம்: புதினம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment