Saturday 12 April, 2008

ஈழச்செய்திகள்120408

Posted on : Sat Apr 12 9:25:00 2008
பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் முழு அளவில் உதவும்
சீனாவில் வைத்து முஷாரப் வாக்குறுதி இலங்கை பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைக்கு யுத்தத்துக்கு பாகிஸ்தான் முழு அளவில் உதவும்.பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் மேற்கண்ட உறுதிமொழியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கியுள்ளார் என்று அறியப்படுகிறது.சீனாவில் நடைபெறும் ஆசியாவுக் கான பன்முக நலன் அரங்கம் (பி.ஓ.ஏ.ஓ.போரம்) பிராந்திய மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள ஜனாதிபதி
மஹிந்த ராஜபக் ஷவிடமே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.இரு தலைவர்களும் நேற்றுத் தனியாகச் சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடினர்.பயங்கரவாதத்தினால் இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து மஹிந்த, பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு எடுத்து விளக்கினார்.அப்போதே பாகிஸ்தான் அதிபர் இலங்கையில் நடைபெறும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான முழு ஆதரவு உண்டு என்று உறுதியளித்தார் என அறியப்படுகின்றது.

Posted on : Fri Apr 11 10:15:00 2008
மானிப்பாய் மேற்கில் மழையினால் 6,517 பரப்புக் காணியில் செய்கை பண்ணப்பட்ட பயிர்கள் அழிவு.
மானிப்பாய் மேற்கு பிரதேசத்தில் அண் மையில் பெய்த தொடர் கன மழையினால் 6ஆயிரத்து 517 பரப்புக் காணியில் மேற் கொள்ளப்பட்ட மரக்கறிச் செய்கையும் சிறுதானியப் பயிர்ச்செய்கையும் முற்றாக அழிந்துள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது. மானிப்பாய் மேற்கு விவசாயிகள் சம் மேளனம் இப்பிரதேச விவசாயிகளிடமி ருந்து பயிரழிவு பற்றிய விவரங்களைத் திரட்டி சண்டிலிப்பாய் பிரதேச
செயலகத் திற்குச் சமர்ப்பித்துள்ளது. கீரிமலை விவ சாய போதனாசிரியருக்கும் இது பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளால் 6,517 பரப்பளவில் செய்கை பண்ணப்பட்ட எள், பயறு, கௌபி, உழுந்து, மிளகாய், கத்தரி, பூசணி, வெண்டி, வல்லாரை, பொன்னாங்காணி
ஆகிய பயிர் கள் முற்றாக அழிந்துபோய் விட்டன. இதற்கான நஷ்டஈட்டினை நிவார ணத்தை பெற்றுத் தருமாறு பிரதேச செயல ரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே வேளை பயிரழிவுக்குப் பதிலாக தமது காணிகளில் மீள்நடுகை செய்வ தற்கு விதைகள் மற்றும் விதை தானியங் கள் இல்லாது விவசாயிகள் மிகவும் சிரமம டைந்து வருகின்றனர்.தானிய விதைகளைத் தேடி விவசாயி கள் அலைந்து வருவதாகவும் தெரிய வரு கின்றது. இலங்கையில் செயற்படும் ஆயுதக்குளுக்கள் தம்மிடம் உள்ள சிறுவர் போராளிகளை விடுவிக்க வேண்டும் கொழும்பில் இயங்கும் அமெரிக்க தூதரகம் காட்டமான அறிக்கை

வீரகேசரி இணையம் 4/11/2008 10:52:24 AM
கடந்த வாரத்தில் இலங்கையின் கிழக்கில் செயற்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற அமைப்பு தம்மிடம் இருந்த சிறுவர் போராளிகள் 11 பேரை ஐ.நா.வின் சிறுவர் பாதுகாப்பு நிதியத்திடம் கையளித்திருந்தது .
இது குறித்து சர்வதேச அமைப்புகள் பல வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் கொழும்பில் இயங்கும் அமெரிக்கத் தூதுவராலயம் தற்போதுஅறிக்கை
ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் உட்பட இலங்கையில் செயற்படும் ஆயுதக்குழுக்கள் அனைத்தும் தம்மிடம் உள்ள சிறுவர்
போராளிகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக ஐ.தே.க. மேற்கொண்ட பிரசாரம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது- அனுர பிரியதர்ஷன யாப்பா வீரகேசரி இணையம் 4/11/2008 11:55:20 AM
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றபோதும் இலங்கையில் 6.8 வீத பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்மாகும் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தல் நடைபெற்றபோதே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் புது வருட காலத்தில் பொருட்களின் விலை வெகுவாக
உயர்ந்துவிடும் என்றும் ஐ.தே.க. மேற்கொண்ட பிரசாரம் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் பொய்ப்பிக்கப்பட்டுளளது. புது வருட
காலத்தில் தமக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் மக்கள் இப்போது மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்கின்றனர்.
இலங்கையில் தொழில் இல்லாதோர் தொகையில் 6 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதோடு தனி நபர் வருமானம் 1617 டொலர்களாக அதிகரித்துள்ளது. இதில் பிலிப்பைனையும் நாம் முந்திவிட்டோம். நாட்டில் பண வீக்கத்தைக் கட்டுப்படுத் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.எனவே நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக முகாமைத்துவம் செய்யப்பட்டுவருகின்றபடியால் இந்த வருடத்திலும் குறிப்பிடத்தக்க பொருளாதார அபிவிருத்தியை எதிர்பார்க்கலாம் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இலங்கைக்கான ஏவுகணை விற்பனை: ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்கு முரணானதல்ல ஸ்லோவாக்கியா தெரிவிப்பு
வீரகேசரி நாளேடு 4/11/2008 7:27:07 PM
பல்குழல் பீரங்கிகளுக்கு பயன்படுத்தும் 122 மில்லி மீற்றர் ரகத்திலான 10 ஆயிரம் ஏவுகணைகளை
இலங்கைக்கு விற்பனை செய்துள்ளதாக ஸ்லோவாக்கிய பொருளாதார அமைச்சு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆயுத விற்பனையானது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி தொடர்பான விதி முறைகளுக்கு முரணானதல்ல என ஸ்லோவாக்கிய
வெளிவிவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
எனினும் உள்நாட்டு மோதல்கள்இடம்பெறும் நாடுகள், பொது மக்கள் பாதிக்கப்படும் நிலைமை காணப்படும் நாடுகள் போன்றவற்றிற்கு ஆயுத ஏற்றுமதி செய்யக் கூடாது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறையை ஸ்லோவாக்கியா மீறியுள்ளதாக சர்வதேச நிபுனர்கள்கள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
ஸ்லோவாக்கியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள குறுப்பினா என்ற நிறுவனம் இலங்கைக்கு பல்குழல் பீரங்கிகளுக்கு பயன்படுத்தும் 10 ஆயிரம்
ஏவுகணைகளை விற்பனை செய்துள்ளது. 122 மில்லி மீற்றர் ரகத்தை சேர்ந்த இந்த ஏவுகணைகளானது 20 கிலோ கிராம் வெடி பொருட்களை தாங்கி, 30
கிலோ மீற்றர் தூரம் செல்லக்கூடியது.ஏவுகணையொன்றுக்கு 180 அமெரிக்க டொலர் வீதம், 18 இலட்சம் டொலர்கள் இந்த ஏவுகணைக்
கொள்வனவுக்காக அரசாங்கம் செலவிட்டுள்ளது.
அத்தோடு இதே ரகத்தை சேர்ந்த மேலும் 30 ஆயிரம் ஏவுகணைகளை கொள்வனவு செய்வது தொடர்பில் அரசாங்கம் ஸ்லோவாக்கிய நிறுவனத்துடன்
ஒப்பந்தமொன்றை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மேற்படி ஏவுகணை விற்பனையானது எந்த வகையிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுத ஏற்றுமதி விதிமுறைகளை மீறவில்லை என ஸ்லோவாக்கியா வலியுறுத்தி கூறியுள்ளது.
அத்தோடு ஆயுத ஏற்றுமதி தொடர்பான ஐக்கிய நாடுகளின் விதிமுறைகளுக்கு அமைவாகவே தாம் செயற்படுவதாக ஸ்லோவாக்கிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.
எனினும் உள்நாட்டு மோதல்கள் இடம்பெறும் நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதிக்கான அனுமதியை வழங்கக் கூடாது, உள்ளிட்ட ஆயுத ஏற்றுமதி
தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை ஸ்லோவாக்கியா மீறியுள்ளதாக சர்வதேச நிபுணர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடொன்றின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக இலங்கையில் சாதகமற்ற நிலைமை ஏற்படும்
வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

No comments: