Thursday 10 April, 2008

மன்னார் மற்றொரு ஜெயசிக்குறு-கேணல் தீபன்

(EW08-2)A soldier from the recently launched Mechanised Infantry Division of the Sri Lanka Army rides in an armoured vehicle during a demonstration in Nakarkovil in Jaffna peninsula, about 396 km (246 miles) north of Colombo, April 6, 2008. Sri Lanka air force jets bombed rebel positions in the far north on Monday while troops killed 49 Tamil Tiger rebels in fresh fighting, the military said. Picture taken April 6, 2008.REUTERS/Buddhika Weerasinghe (SRI LANKA)
ஜெயசிக்குறுவைப் போல் மன்னாரில் சிறிலங்கா இராணுவம் அகப்படத் தொடங்கியுள்ளது: கேணல் தீபன்
[புதன்கிழமை, 09 ஏப்ரல் 2008, 05:39 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புதினம் இணையதளம்
ஜெயசிக்குறுவைப் போல் மன்னாரில் சிறிலங்கா இராணுவம் அகப்படத் தொடங்கியுள்ளது என்று வடபோர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன்
தெரிவித்துள்ளார். பிரேத்தியோகமாக ஒழுங்கு செய்யப்பட்ட இடத்தில் வடபோர்முனைக் களத்தில் சிறப்பாக செயற்பட்ட பேராளிகளுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கேணல் தீபன் பேசியதாவது:
கடந்த ஒன்றரை வருட காலத்தில் வடபோர் முனையில் எதிரியால் தொடுக்கப்பட்ட அனைத்துவிதமான தாக்குதல்களையும் எதிர்கொண்டு முறியடித்து நாம், எமது மண்ணில் எமக்குத் தரப்பட்ட இந்தப் பிரதேசத்தில் ஒரு அங்குலம் கூட எதிரியை நகரவிடாது உறுதியோடு போராடி வருகின்றோம்.
வடபோர் முனையில் நாம் எதிரிக்கு மிகவும் சாவலாக நின்று கொண்டிருக்கின்றோம்.
எத்தகைய சவால்கள் வந்தாலும் அதனை முறியடிக்க எதிரிக்கு மிகப்பெரிய தாக்கத்தை கொடுப்போம் என்ற உறுதியுடன் நீங்கள் இந்தக்களத்தில்
களமாடிக் கொண்டிருக்கின்றீர்கள்.
சிறிலங்கா இராணுவம் எமது தாயக நிலப்பரப்புக்களை அபகரிப்பதற்காக பல களமுனைகளை திறந்து இன்று பேச்சளவில் முன்னேறுகின்ற
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றான்.
மன்னார் களமுனையில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று வவுனியா, மணலாறு வடபோர் முனைகளிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
எதிரி, எமது நிலப்பரப்பை ஆக்கிரமிக்க நாளுக்கு நாள் புதிய திட்டங்களை போட்டு நுழைவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றான்.
ஒவ்வொரு களமுனையிலும் எதிரியை முன்னேற விடாது உங்களைப் போன்று உங்களோடு இணைந்து கொண்ட போராளிகளே
போராடிக்கொண்டிருக்கின்றனர்.
அங்கு ஒவ்வொரு நாளும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இன்று சிறிலங்கா இராணுவம் என்ன செய்வது என்ற நிலையில் தனது நடவடிக்கையை செய்து கொண்டிருக்கின்றது.
சவால்கள் எதிர்பார்த்தது. இங்கு "புலிகள் இல்லை- பூனைகளும் எலிகளும் தான் இருக்கின்றார்கள்" என்று நினைத்து குறுகிய காலத்தில் வன்னி
நிலப்பரப்பை மீட்டு முழுக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையோடு நடவடிக்கையைத் தொடங்கினர்.
எமது மண்ணையும், மக்களையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்று சொன்னால் நாம் ஒவ்வொருவரும் எம்மை அர்ப்பணித்துத்தான் ஆக வேண்டும்.
அத்தகைய அர்ப்பணிப்புக்கள் தான் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு வீரரின் சாவுக்கு முன்னாலும் ஏகப்பட்ட எதிரிகள் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இன்று ஒரு பெயர் வைக்கப்படாத இராணுவ நடவடிக்கையை சிறிலங்கா அரசு செய்து கொண்டுள்ளது.
வன்னியைத் துண்டாடி யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப் பாதையை திறப்பதற்காக "ஜெயசிக்குறு" என்று சொல்லப்படுகின்ற ஒரு பெரிய ஆக்கிரமிப்பு நடவடிக்கையை 1997 ஆம் ஆண்டு நடத்தி அந்தச் சமர் ஒன்றரை வருடம் நீடித்தது.
பின்னர் எமது தேசியத் தலைவரின் திட்டத்தால் ஒரே வாரத்துக்குள் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மீட்கப்பட்டன.
அப்படியான வரலாற்றைப் படைத்தவர்கள் தான் விடுதலைப் புலிகள்.
அதேபோன்ற நடவடிக்கையைத் தான் இன்று மன்னாரிலும் எதிரி மேற்கொண்டுள்ளான்.
ஜெயசிக்குறு நடவடிக்கையில் எதிரி எப்படி அகப்பட்டானோ அதேபோன்று இன்று மன்னாரிலும் சிறிலங்கா இராணுவம் அகப்படத் தொடங்கியுள்ளது.
அகப்பட்ட எதிரியை நாம் வேகமாக நின்று வெல்லவேண்டிய காலமாக இருக்கின்றது.
2006 ஆம் ஆண்டு எதிரி சமாதானத்தை முறித்துக்கொண்டு சண்டையைத் தொடங்கினான்.
அதற்கு எதிராக நாம் மிகக் கடுமையாகப் போரிட்டோம். போரிட்டுக்கொண்டே இருக்கின்றோம். வெற்றிகள் எம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.
அதற்காக நாம் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.
எனவே இனிவரும் காலங்கள் எமது அர்ப்பணிப்பு நிறைந்த காலங்களாக இருக்க வேண்டியுள்ளது.
ஆகவே ஒவ்வொரு வீரரும் வீச்சாகவும், உறுதியோடும் அர்ப்பணிப்போடும் செயற்படவேண்டிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
எதிரி இன்னும் நடவடிக்கையை கைவிடவில்லை. புதிய தந்திரோபாயத் திட்டத்தை வகுத்துக்கொண்டிருக்கின்றான். அது உங்களுக்குத் தெரியும். அதனை எதிர்பார்த்துத்தான் நீங்களும் இருக்கின்றீர்கள்.
தரை வழியாக நகர்ந்து எமது பாதுகாப்பு அரணை உடைத்து உள்நுழைய முடியாத எதிரி இப்போது கவசப்படையணி ஒன்றை உருவாக்கியுள்ளான்.
ஆனால் எந்தப் படைக்கும் நாம் அஞ்சப்போவதில்லை.
ஏன் என்று சொன்னால் எம்மிடம் வீரம் இருக்கின்றது. எம்மிடம் உறுதி இருக்கின்றது. நாம் விடுதலைக்காக போராடும் வீரர்கள். எமது மண்ணில்
யாரையும் அனுமதிக்க மாட்டோம். அந்த உறுதி எம்மிடம் இருக்கின்றது என்றார் அவர்.
அமெரிக்காவுடன் இராணுவ கூட்டு பயிற்சிக்கு தயார்
இந்திய மத்திய அரசு அறிவிப்பு
வீரகேசரி இணையம் 4/9/2008 6:08:36 PM
தீவிரவாத ஊடுருவலை* தடுக்க ‌அமெரிக்காவுடன் இராணுவ கூட்டு பயிற்சிக்கு தயார் என இந்திய தூதர்
ரோனன் சென் கூறியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற இந்திய பெருங்கடல் பாதுகாப்பு குறித்து நடந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்காவிற்கான
இந்திய தூதர் ரோனன் சென் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்தி‌ய பெருங்கடல் பகுதியில் அமெரிக்க
இராணுவத்துடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட இந்தியா தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
(அழுத்தம் நமது-ENB)
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீனா விஜயம்
வீரகேசரி இணையம் 4/9/2008 12:30:48 PM
ஜனாதிபதி மகிந்த ராகபக்ச சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார். இன்று சீனா சென்றடைந்துள்ள ஜனதிபதி மகிந்த ராஜபக்சவை சீனாவின் வெளிவிவகார அமைச்சர் யங் ஜீச்சி, ஹைனான் மாகாண உதவி ஆளுநர் ஜியான் சிக்ஸியான், இலங்கைக்கான சீனத் தூதுவர் டாபோயி மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கே. அமுனுகம ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சீனாவின் ஹைனான் மாகாணத்திலுள்ள போஆவோ நகரில் எதிர்வரும் 11ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெறவுள்ள மாநாட்டில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ச விஷேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ENB பிற்குறிப்பு:
( ஐயஹோ வீரகேசரியே! குறிப்பிடத்தக்கது சீனாவில் மஹிந்த ஆற்றும் உரையல்ல.1)இராணுவத் தளபதியின் இந்திய விஜயம், பிரதமரின்இஸ்ரேல் விஜயம், பாகிஸ்தானிடம் அவசரஆயுதக் கொள்வனவு நடந்த பின்னணியில், வடக்குப்படையெடுப்பில் விடுதலைபுலிகளிடம் வசமாக மாட்டிக்கொண்ட பக்சபாசிஸ்டுக்கள் ஆயுதப்பிச்சைக்கு சீனாவின் புதிய அரசியல் தலைமையை நாடுகின்றனர். 2)வழமையாக அரைக்காலனித்துவ அரசு எந்திரத்தை ஊட்டிவளர்த்த எஜமானர்கள் தம்மைக்ககத்துக் கொள்ள இயலாமல் தத்தளிக்கிறார்கள் .ஏகபோக மூலதன நெருக்கடியும், ஈராக்கிய, ஆப்கானிய மக்களின் வீரம் செறிந்த ஆக்கிரமிப்புஎதிர்ப்பு தேசபக்த யுத்தங்களுக்கும் முகம் கொடுக்க இயலாமல் உலகை ஒட்டச்சுரண்ட மனித உரிமைஎன்கிற ஆயுத்தைப் பாவித்து அரைக்காலனிய சார்பு நாடுகளை அடிபணிய வைக்க முயலுகின்றன. சீனா மனித உரிமையை மதிப்பதில்லையென அமெரிக்காவும் அதன் காவிக்குழந்தை தலாய் லாமாவும் உரத்துக் கத்துகின்றனர்.இந்தியாவிலும், சவூதி அரேபியாவிலும், குவாண்டநாமோ பேயிலும் என்ன மனித உரிமை வாழ்கிறதாம்!?. இதனால் இலங்கை அரசு இந்தியா சீனா ஈரான் என கிழக்கு நோக்கி பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்றது. இவைதான் குறிப்பிடத்தக்கவை)


மடு ஆலயத்தை பாதுகாப்பது அரசு, புலிகளின் பொறுப்பு
நோர்வேயின் பேச்சாளர் தெரிவிப்பு
வீரகேசரி நாளேடு 4/9/2008 8:06:52 AM
மடு புனிதத்தலத்தை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டியது அங்கு மோதலில் ஈடுபடும் அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாகும் என்று நோர்வே தெரிவித்துள்ளது.
புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் மடுவிவகாரம் தொடர்பாக அனுப்பியுள்ள கடிதத்தை அரசாங்கத்தின் பரிசீலனைக்காக
ஒஸ்லோவிற்கு அனுப்பியுள்ளதாக கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்தார். மடு புனித பிரதேசத்தில் இராணுவத்தினர்
மேற்கொண்டுள்ள தாக்குதலை தடுத்துநிறுத்த நோர்வே உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.
நடேசன் நோர்வேயிற்கு நேற்று முன்தினம் எழுதிய கடிதம் தொடர்பாக ""கேசரி''க்கு கருத்து தெரிவிக்கையிலேயே நோர்வே தூதரக பேச்சாளர்
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் மடு புனிதத் தலம் தொடர்பாக அனுப்பியுள்ள
கடிதம் எமக்கு கிடைத்தது. அதனை அரசாங்கத்தின் கவனத்துக்காக ஒஸ்லோவிற்கு அனுப்பியுள்ளோம்.
மேலும், புலிகளின் கடிதம் தொடர்பில் இணைத்தலைமை நாடுகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் அறிவித்துள்ளோம். கலாசார, மதச் சின்னங்களை மோதல் நிலைமைகளிலும் பாதுகாக்க வேண்டுமென சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் வலியுறுத்துகின்றன. எனவே சர்வதேச மனிதாபிமான
சட்டங்களின் கீழ் மடு பிரதேசத்தில் மோதலில் ஈடுபட்டுள்ள அரசாங்க படைகளும், விடுதலைப் புலிகளும் மடு புனிதத் தலத்தை பாதுகாப்பதற்கு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான முழுப் பொறுப்பும் மோதலில் ஈடுபடும் மேற்படி இரு தரப்பினரையுமே சாரும். இதற்கு மேலதிகமாக இவ்விடயத்தில் தற்போது கருத்துக் கூற முடியாது.
தொடர் எறிகணைகளால் மடுத் தேவாலயம் தாக்கப்பட்டுள்ளது.
வீரகேசரி இணையம் 4/9/2008 3:16:07 PM
மன்னார் மடுவை அண்டிய பகுதிகளில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில்
கடந்த சில வாரங்களாக கடும் சண்டை இடம்பெற்று வரும் நிலையில் மடுப் பகுதி மீது மேற்கொள்ளப்பட்ட சரமாரியான எறிகணை தாக்குதல்களால்
மடு மாதா தேவாயத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாக உடைந்தது ஜே.வி.பி.! வீரவன்ஸ பக்கம் 11 எம்.பிக்கள்!!
கட்சிக்குள் தனிக்குழுவாக இயங்கப் போவதாக அறிவிப்பு ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் பிரசாரச் செயலாளருமான விமல் வீரவன்ஸவைக் கட்சியிலிருந்து இடைநிறுத்த ஜே.வி.பி. எடுத்த
முடிவை அடுத்து அக்கட்சி இரண்டாக உடைந்தது. விமல் வீரவன்ஸவுடன் இணைந்து மேலும் பதினொரு எம்.பிக்கள் தனித்து ஒரு குழுவாகச் செயற்படத் தீர்மானித்திருக்கின்றனர்.கட்சியிலிருந்து தம்மை இடைநிறுத்த எடுத்த முடிவு குறித்துப் பகிரங்கமாகக் கருத்து வெளியிடும் வகையில் விமல் வீரவன்ஸ நாடாளுமன்றத்தில்
நேற்று உரையாற்றினார்.அதையடுத்து, கட்சி இரு குழுவாகப் பிரிவது அம்பலத்துக்கு வந்தது.தாம் கட்சிக்குள் தனிக் குழுவாக இருந்து நியாயத்துக்காகப் போராடப் போகின்றார் என விமல் வீரவன்ஸ அறிவித்தார்.அவரது நாடாளுமன்றப் பேச்சை அடுத்து, ஜே.வி.பியின் பின்வரிசை எம்.பிக்கள் சிலர் எழுந்து ஓடி வந்து அவருக்குக் கைகுலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தபோதே அவருக்குப் பின்னால் எம்.பிக்கள் குழு ஒன்று தனி அணியாகிவிட்டமை பகிரங்கமாயிற்று.இதனை உறுதிப்படுத்துமாற்போல அவரது ஆதரவு எம்.பிக்கள் நேற்று மாலை கொழும்பு நிப்போன் ஹோட்டலில் தனியான பத்திரிகையாளர் மாநாடு
ஒன்றை நடத்தி, கட்சி பிளவுபட்டிருப்பதை வெளிப்படுத்தினர்எனினும், கடைசியாக இடம்பெற்ற நடா ளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பியில் வெற்றி பெற்று எம்.பியான பதினொரு புதுமுகங்களே இப்போது விமல்
வீரவன்ஸவுக்குப் பின்னால் அணி சேர்ந்துள்ளனர் என்றும் கட்சியின் 38 நாடாளுமன்ற உறுபினர்க ளில் கட்சியின் மூத்தசெல்வாக்குள்ளதலை வர் கள் எவரும் விமலின் பக்கத்தை ஆதரிக் க வில்லை என்றும்
சுட்டிக்காட்டப்படு கின்றது.களுத்துறை மாவட்ட எம்.பிக்களான ஜயந்த சமரவீர, பியசிறி விஜேநாயக்க, புத்தளம் மாவட்ட எம்.பிக்களான பிரியங்கா திஸநா யக்கா, சமரசிறி ஹேரத், மொனறாகலை மாவட்ட எம்.பியான பத்ம உதயசாந்த, இரத் தின புரி மாவட்ட எம்.பியான அச்சல ஜகொட, தீபல் குணசேகர, நுவரெலியா மாவட்ட எம்.பிக்க ளான நிமால் பிரேமவன்ஸ, மாத் தளை எம். பியான சுஜத அழகக்கோன், தேசியப் பட்டியல் எம்.பியான மொஹமட் முஸாமில் போன்றோரே இப்போது விமலின் அணியில் உள்ளனர்.
தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர் முஸ்லிம் போலவே அங்கு வந்தாராம்!
வீடியோவில் எல்லாம் பதிவாகியுள்ளதாகத் தகவல் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயைக் கொலைசெய்யவந்த தற்கொலைக் குண்டுதாரி முஸ்லிம் நபர் ஒருவர் போலவே அந்த இடத்துக்கு
வருகைதந்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.அந்த நபரிடமிருந்த தேசிய அடையாள அட்டையும் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளைத்தம்பி மொஹம்மது அமீன் என்ற பெயர் அந்த அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரந்துருன்சேனை, வாழைச்சேனை என்ற முகவரியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அடையாள அட்டையில் காணப்பட்ட அனைத்து விவரங்களும் பொய்யானவை எனத் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.(பயங்கரவாதத்தை வேரறுக்கப்போகிறார்களாம்! ENB).அந்த நபர் பிறவுண் நிற "சேட்' அணிந்திருந்தார் என்றும் அமைச்சருக்கு சில அடி தூரம் பின்னாலிருந்து குண்டுத் தாக்கு தலை மேற்கொண்டுள்ளார் எனவும் விசா ரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அந்நபர் குண்டுத் தாக்குதலை மேற் கொள்வதற்கு வருகை தந்த விதம் வீடியோ கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலி ஸார் தெரிவித்தனர்.இந்தத் தற்கொலைக் குண்டுதாரியு டன் அவரது உதவியாளராகச் செயற்பட்ட இன்னொருவரும் அந்த இடத்தில் இருந் தமை வீடியோவில் பதிவாகியுள்ளமை தற் போது தெரியவந்துள்ளதாம்.அந்த உதவியாளர் தனது கைத்தொ லைபேசி ஊடாகப் பல தடவைகள் அழைப் பைப் பெற்றுக்கொண்ட விதமும் வீடியோ நாடாவில்
பதிவாகியிருப்பதைப் பொலி ஸார் உறுதி செய்தனர். தாக்குதல் மேற்கொள்வதற்குச் சில விநாடிகளுக்கு முன்னர் உதவியாளராகச் செயற்பட்டவர் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளமையும்
விசாரணைக ளின்போது தெரியவந்துள்ளது.
பிதாவே இவர்கள் அறிந்தே செய்கிறார்கள்-ENB
இடம்பெயர்ந்த மன்னார் மக்களிடத்தில்தான் "மடு மாதா" சென்றுள்ளார்: ஆயர் இராயப்பு யோசப் [புதன்கிழமை, 09 ஏப்ரல் 2008, 09:26 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
மன்னாரில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் தான் இப்போது மடு மாதா சென்றிருக்கின்றார் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப்
ஆண்டகை தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள தூய அந்தோனியார் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் உரையாற்றியபோது மன்னார் ஆயர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் மடு மாந்தை மேற்குப் பகுதிகளில் கத்தோலிக்க திருச்சபையின் 7 பங்குகள் உள்ளன.
இவற்றில் 6 பங்குகளில் மக்கள் இடம்பெயர்ந்து 7 ஆவது பங்கான தேவன்பிட்டி அதனைச் சூழ்ந்த பகுதியில் வாழ்கின்றனர்.
அந்த மக்களுடன் மடு மாதா சென்று விட்டார். மடு மாதாவும் மக்களும் தமது இடத்துக்கு திரும்ப எல்லோரும் வேண்டிக்கொள்ளவேண்டும் என்றார்
அவர்.

No comments: