Tuesday, 1 April 2008

வடபோர் நிலைமை: புதினம் தகவல்கள்

வடபோர் நிலைமை: புதினம் தகவல்கள்

மன்னார்- வவுனியாக் களமுனை தாக்குதல்களில் 11 படையினர் காயம் [திங்கட்கிழமை, 31 மார்ச் 2008, 07:15 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
மன்னார் மற்றும் வவுனியாக் களமுனைகளில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 11 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் படைத்தரப்பு வெளியிடப்பட்ட விபரம்:
மன்னார் விளாத்திக்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
பெரியவலயன்கட்டுப் பகுதியில் நேற்று முற்பகல் 10:45 மணியளவில் பொறிவெடியில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
கீரிசுட்டானில் நேற்று பிற்பகல் 4:45 மணியளவில் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
மன்னார் மடுவுக்கான களமுனையில் நேற்று முன்நாள் பிற்பகல் 6.30 மணிக்கு இடம்பெற்ற மோதலில் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.
முற்பகல் 11:20 மணியளவில் இடம்பெற்ற பிறிதொரு மோதலில் மேலும் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.
இதே பகுதியில் இடம்பெற்ற பிறிதொரு தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் முற்பகல் 11:30 மணியளவில் இதே பகுதியில் இடம்பெற்ற பிறிதொரு மோதலில் இரு படையினர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா இராமநாதன்குளம் பகுதியில் நேற்று முன்நாள் முற்பகல் 11:50 மணியளவில் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.
கல்லிக்குளம் பகுதியில் நேற்று முன்நாள் பிற்பகல் 3:25 மணியளவில் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.

மணலாற்று தாக்குதல்களில் 2 படையினர் பலி- 5 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2008, 08:24 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
மணலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல்களில் 2 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 5 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்காப் படைத்தரப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. மணலாறு கிரிபன்வேவ வடக்கு மற்றும் ஜனகபுர வடக்குப் பகுதிகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்களிலேயே 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 5 படையினர் காயமடைந்துள்ளனர்.

No comments: