Thursday 17 April, 2008

ஒரு உயிரையும் ஓராயிரம் பயிர்களையும் பாடை ஏற்றிய பக்ச பாசிசம்.




ஒரு உயிரையும் ஓராயிரம் பயிர்களையும் பாடை ஏற்றிய பக்ச பாசிசம்.
முல்லைத்தீவில் வான்குண்டுத் தாக்குதல்: 15 வயதுச் சிறுமி படுகொலை [வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008, 02:33 பி.ப ஈழம்] புதினம் இணையதள[தாயக செய்தியாளர்] முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான் படையின் எஃப்-7 ரக வானூர்திகள் நான்கு இன்று நடத்திய குண்டுத்தாக்குதலில் 15 வயதுச் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் விசுவமடு புன்னைநீராவியடியில் உள்ள குடியிருப்பு மீது இன்று வியாழக்கிழமை காலை 6:30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர் பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி அன்சிலாஸ்தியன் டிலக்சனா (வயது 15) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் ஜெராட் என்பவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குண்டுவீச்சுத் தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்களும், பயன்தரு மரங்களும் சேதமடைந்துள்ளன.
நன்றி: செய்தியும் நிழற் படங்களும் புதினம் இணையதளம்

No comments: