Thursday, 17 April 2008

ஈழ மகள் டிலக்ஸனா

டிலக்ஸனா;
காக்கமுடியவில்லை மகளே; மன்னித்துக்கொள்!
எதிரிகள் காட்டுமிராண்டிகள் தாயே!!

======================================

முல்லைத்தீவில் வான்குண்டுத் தாக்குதல்: 15 வயதுச் சிறுமி படுகொலை

[வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008, 02:33 பி.ப ஈழம்] புதினம் இணையதள[தாயக செய்தியாளர்]

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான் படையின் எஃப்-7 ரக வானூர்திகள் நான்கு இன்று நடத்திய குண்டுத்தாக்குதலில் 15 வயதுச் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் விசுவமடு புன்னைநீராவியடியில் உள்ள குடியிருப்பு மீது இன்று வியாழக்கிழமை காலை 6:30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.கொல்லப்பட்டவர் பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி அன்சிலாஸ்தியன் டிலக்சனா (வயது 15) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இத்தாக்குதலில் ஜெராட் என்பவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குண்டுவீச்சுத் தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்களும், பயன்தரு மரங்களும் சேதமடைந்துள்ளன.

நன்றி: செய்தியும் நிழற் படங்களும் புதினம் இணையதளம்

No comments: