Friday 18 April, 2008

வை.கோ இந்திய விஸ்தரிப்புவாதியா? ஈழத்தமிழர்களின் காவலனா?

இந்திய விஸ்தரிப்புவாதத்துடன் வைகோவின் பிற்போக்குக் கூட்டும், இழிச்சவாய்ப்புலித்தலைமையின் பிற்பாட்டும்!
வை.கோ இந்திய விஸ்தரிப்புவாதியா? ஈழத்தமிழர்களின் காவலனா?
செய்திவிமர்சனம்: சுபா.
இந்தியப் பிரதமருடன் வைகோ சந்திப்பு: நோர்வேப் பயணம் குறித்து விளக்கம் [வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2008, 04:58 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று சந்தித்து கலந்து உரையாடியதுடன் தனது நோர்வேப் பயணம் குறித்தும் விளக்கியுள்ளார். இச்சந்திப்பு புதுடில்லியில் உள்ள இந்தியப் பிரதமரின் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை 5:10 மணிமுதல் 5:35 மணிவரை நடைபெற்றது.
சந்திப்பின் போது மன்மோகன் சிங்கிற்கும் வைகோவிற்கும் இடையே இடம்பெற்ற உரையாடல்கள் பின்வருமாறு:
சிறிலங்காவிற்கு இந்தியா ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என்று வைகோ கடிதத்தில் எழுதி இருந்ததைக் குறிப்பிட்ட பிரதமர், "நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை" என்றார். "சிறிலங்காவின் இராணுவத் தளபதிகளும், அமைச்சர்களும் இந்தியா ஆயுதங்கள் கொடுப்பதாகச் சொன்னார்களே" (கவனியுங்கள்! சொன்னது ஸ்ரீலங்கா தளபதிகள், வை.கோ அல்ல! இதை நிரூபிக்க அவரிடம் எந்த சொந்தத் தகவல்களும் இல்லை. அவர் குற்றம் சுமத்தப்பட்டவரின் வெறும் பதிலில் மட்டும் திருப்தி அடைந்து விட்டார்! ) என்றவுடன், "அது தவறான தகவல் - உண்மை அல்ல" என்றார் பிரதமர். அப்படியானால், "அங்கே உள்ள மக்களை ஏமாற்றுவதற்காக அப்படிச் சொல்கிறார்களா?" (எப்பேற்பட்ட குத்துக்கரணம் என்று பாருங்கள்! இப்போது அது உண்மையல்ல என்று வை.கோவே ஒத்துக்கொள்கிறார்!!) என்று கேட்டார் வைகோ. "பாகிஸ்தான், சீனாவிடம் சிறிலங்கா ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு இருப்பது எங்களுக்குத் தெரியும்" என்றார் பிரதமர்.
(ஆனால் இந்தியா கொடுப்பதை மட்டும் மறுக்கிறார்! மேலும் அமெரிக்காவை குறிப்பிட தவறி விட்டார்!!)
"தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் தெரிவித்து இருக்கின்றோம்" என்றும் பிரதமர் சொன்னார்
.( விடுதலைப்புலிகளுக்கு உதவுகிறார்கள் என்ற சந்தேகத்தில் தமிழக மீனவத் தொழிலாளர்களை நையப்புடைப்பது இலங்கையின் 'சிங்கள' அரசாங்கம் மட்டுமல்ல, இந்தியாவின்-வை.கோவின் - 'ஹிந்தி' அரசாங்கமும் கூடத்தான் என்பது வைகோ அறியாதது அல்ல!)
"வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீகத் தாயகம்*. அது ஒரே பகுதியாக இணைக்கப்பட வேண்டும் என்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள விதிகளுக்கு ( மோசடி! இப்படி ஒரு விதி, இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இல்லவேயில்லை; இருப்பதெல்லாம் :/ -1.4 Also recognising that the northern and the eastern provinces have been areas of historical habitation* of Sri Lankan Tamil speaking peoples, who have at all times hitherto lived together in this territory with other ethnic groups,.../ '' Habitation '', என்பதும் '' Home Land ''என்பதும் ஒன்றல்ல. வடக்குக் கிழக்கில் இதர சமூகங்களுடன் தமிழர்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்தவர்கள் என இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 இல் சொல்கிறது, ஆனால் 1985 இல் திம்பு பேச்சுவார்த்தையில் தமிழர்கள் கோரியது; 'வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்றும் இலங்கையின் அரசுமுறைக்குள் தமிழர் தாயகம் சிறீ லங்காவுடன் இணைந்து வாழ்வது இனிமேலும் சகிக்க இயலாததாக ஆகிவிட்டதால், இனிமேல் ஒண்றிணைவை சாத்தியமாக்க பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரியுங்கள்' என்பதுதான்! இதை இனவெறி இலங்கை அரசு மட்டுமல்ல இந்திய விஸ்தரிப்புவாத அரசும் சேர்ந்துதான் எதிர்த்தன.. வை.கோ கூறுகிற மாதிரி ஈழதாயகக் கோட்பாட்டை இந்தியா அங்கீகரித்திருந்தால் _இது ஒரு புதினமாம் தோழி, நரியை விழுங்கிச்சாம் கோழி!-_ திம்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்காது. இது தமிழீழ தேசிய தலைவருக்கு நன்கு புரியும் என்று நம்புகின்றோம்!. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லுவது மட்டுமல்ல, இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ஈழத்தமிழர்களின் நலன்களூக்கு எதிராக, இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு ஆதரவாக உள்ள ஏற்பாட்டை ஈழத்தமிழர் நலன்களைக் காப்பவையாக திரித்து தமிழக மக்களையும் ஈழத்தமிழர்களையும் ஏமாற்றுகின்றார் வை.கோ.இங்கேதான் தமிழ் முகமூடிக்குள் ஒழிந்திருந்து இந்திய விஸ்தரிப்பு வாதத்துக்கு சேவகம் செய்யும் தரகு முதலாளிய வர்க்க நலன் தன்னை தானே அம்பலமாக்கிக் கொள்கிறது.) மாறாக, கிழக்கு மாகாணத்தில் தனியாகத் தேர்தல் நடத்துவது, அனைத்துலக சமுதாயத்தை ஏமாற்றுவதற்காக-( அனைத்துலக சமூகம் ஒரு அப்பாவிக் காகம், வாயில் வடையோடு இருக்கிறதாம்! தந்திரம் மிகுந்த நரி ஸ்ரீலங்கா, பாட்டுப் பாடக் கேட்கிறதாம்!! நம்புங்கள் தமிழர்களே 'இனமானத் தமிழன்' வை.கோவை!!) வடக்கு மாகாணத்தோடு நாங்கள் சேர்ந்து இருக்க விரும்பவில்லை என்று கிழக்கில் உள்ளவர்கள் கருதுவதாக ( இது வைகோவின் ஒப்புதல் வாக்குமூலம்!; இந்தியாவின் நோக்கத்தை வாய் தடுமாறி தன் வாயால் உளறிய சோகம்!- ராஜபக்ச நடத்தும் தேர்தல் வடக்கும் கிழக்கும் சேர்ந்திருக்கவேண்டுமா? பிரிந்திருக்க வேண்டுமா என்பது பற்றியது அல்ல. அது கிழக்கு மாகாணத்தின் மீது சிறீலங்கா அரசின் அரசதிகாரத்தை மக்கள் விருப்பத்துக்கு எதிராக போலித் தேர்தல் மூலம் சட்டபூர்வமாக்கும் நடவடிக்கை மட்டுமே!) ஒரு பொய்பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக, இராணுவத்தைக் கொண்டு ஒரு மோசடித் தேர்தலை நடத்தி, உலகத்தை ஏமாற்ற சிங்கள அரசு முயற்சிக்கிறது" என்றார் வைகோ.
"13 ஆவது சட்டத்திருத்தத்தைப் பற்றிச் சொல்கிறார்களே?" ( பாரத மாதாவின் எவ்வளவு அக்கறையான சொற்றொடர்! ''சொல்கிறார்களே'' ) என்றார் பிரதமர்.
"அதைத் தமிழர்கள் எப்போதோ நிராகரித்து விட்டார்கள். அந்த 13 ஆவது திருத்தம் தமிழர்களுக்கு நீதி வழங்காது" என்றார் வைகோ. (இந்திய இலங்கை ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கிடையில் செய்துகொண்ட ஒப்பந்தம்.மேலும் அது இந்திய மேலாதிக்கத்தை இலங்கையில் நிறுவும் ஏற்பாடுகளைக் கொண்டிருந்தது. அதன் காரணமாக அதை உள்நாட்டில் அமூலாக்குவதற்காக இலங்கையின் அரசியல் யாப்பு 13வது தடவையாகத் திருத்தப்பட்டது. இந்திய இலங்கை ஒப்பந்தம் ஈழத்தமிழர்களுக்கு வாழ்வளித்ததாகவும், 13வது திருத்தச் சட்டம் நீதி வழங்கவில்லையென்றும் கூறும் போது வை.கோ மீள முடியாத முரண்பாட்டுக்குள் சிக்கிக்கொள்கிறார். அவர் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் சேவகனாக இருந்து கொண்டு தமிழ்த் தேசியவாத்தின் காவலனாக ஆடும் நாடகம்தான் அந்த 'முரண்பாடு'! இதை மூடி மறைக்க இ.இ.ஒப்பந்தத்துக்கும் 13வது திருத்தத்துக்கும் இடையில் புகுந்து விளயாடுகிறார்...என்னே துரதிஸ்ரம் வசமாக மாட்டிக்கொண்டுவிட்டார்)
மேலும், "இப்போது உள்ள சூழ்நிலையில், (இதற்கு முதல் யார் தாக்குதல் நடத்தினார்களாம்58 இல், 61இல், 72இல், 77இல், 81இல், 83இல்.....??)சிறிலங்கா அரசுதான் தாக்குதல் நடத்தி வருகிறது- அவர்கள்தான் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு, சிறிலங்கா அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கச் சொல்லி இந்தியா வற்புறுத்த வேண்டும்" என்று வைகோ கேட்டபோது, "வெளிவிவகார அமைச்சருடன்
இதுகுறித்து விவாதிக்கிறேன்" என்றார் பிரதமர்.
(பின்னால் காப்பி அருந்தி முத்தமிட்டு கைகுலுக்கி விடைபெற்று வந்து களத்தில் குதித்தார் வை.கோ! தமிழீழம் மலர்ந்தே தீரும் என்றார்! இந்த இனமான தமிழக-இந்திய-த்தமிழனின் வீர உரைகளை, அடிமை ஈழத்தமிழனின் நரம்புகளில் முறுக்கேற்ற முன்னின்று பிரச்சாரம் செய்தது வேறு யாருமல்ல நமது தேசியத்தலைவரின் பிரச்சார சாதனங்கள் தான்! விடுதலைப் புலித்தலைமை சர்வதேச சமூகத்தோடும், இந்தியாவோடும் தற்கொலைக்குப் பந்தயம் கட்டி ஓட்டப் போட்டியில் இறங்கியுள்ளது. இந்தியாவுடன் பேரம் பேசுவதற்காக தமிழர்கள் என்ற போர்வையில் நடமாடும் காங்கிரஸ் கருங்காலிகளை சார்ந்து நிற்கிறது புலிகள் இயக்க தலைமை. அதுதான் விதியென்றால் விதிவழி நடக்கட்டும்.
மேலும் தாய்லாந்திலிருந்து தமிழகம் வரையும் பினாமிகளை வைத்திருக்க உங்களுக்கு உரிமையுண்டு.ஆனால் போடுகிற பிச்சைக்குப் பொறுப்பாக காரியம் ஆற்றிவிட்டு அவர்கள் போய்விட வேண்டும். இந்தப் பினாமி அரசியல் உங்களுடைய யுத்தத்துக்கு பலம் சேர்க்கவில்லை மாறாக பலவீனப்படுத்துகின்றது என்பதை தோழமையுட்ன் சுட்டிக்காட்டும் அதே நேரத்தில், உங்கள் பினாமிகள் தமது எல்லைகளைத் தாண்டி, இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்யும் தமது உண்மை முகத்தை மறைத்து நமக்கு 'சுதந்திர போதனை' அளிக்க முற்பட்டால் அவர்களை நார் நாராய் கிழித்து தோரணமாய் தொங்கவிடுவோமென எச்சரிக்கின்றோம்.) இந்த முறை வை.கோ!!
குறிப்பு: புதினம் செய்திக்குள் புகுந்து நடத்திய சத்திரசிகிச்சை அனைத்தும் அச்சுப்பொறிமுறையில் தெளிவாக வேறு பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பொறுப்பு இச்செய்தி விமர்சகர் சுபா.
18/04/08....................சுபா................................ENB
தமிழ் நாட்டுக்குள் புலிகள் ஊடுருவதை தடுக்க தீவிர கண்காணிப்பாம் வீரகேசரி இணையம் 4/15/2008 2:53:12 PM
இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் வன்னி முன்னரங்குகளில் கடும் சண்டை
இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் நாட்டின் கரையோர பகுதிகளான இராமேஸ்வரம்,தனுஸ்கோடி, அரிச்சல்முனை மண்டபம்,பாம்பன் ஆகிய
கரையோர பிரதேசங்களில் இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருதரப்புக்குமிடையில் போர் உக்கிரமடைந்திருப்பதால் எரிப்பொருட்கள்,மற்றும் ஆயுதங்கள் கடத்துவதற்காக புலிகள் தமிழகத்துக்குள் நுழையலாம்
என இந்திய கடற்படை கருதுவதனால் 24 மணிநேரமும் விமானபடையின் உதவியுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும்
தெரிவிக்கப்படுகிறது
Posted on : Thu Apr 17 9:15:00 2008
வடக்கில் மோதல்கள் தொடருகின்றன
வடக்குப் போர்முனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் படையினருக் கும் இடையில் இடம்பெற்ற மோதல்க ளில் இரு படையினர்
உயிரிழந்தனர் என்றும் 16 பேர் படுகாயமடைந்தனர் என்றும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மணலாறு, ஆண்டான்குளம், கிரிபன்வேவப் பகுதிகளில் நேற்றுமுன்தினம் பிற்பகல் 2.50 மணியளவில் இடம்பெற்றமோதலிலேயே இரு படையினர்
உயிரிழந் தனர். இதில் 12 பேர்வரை படுகாயமடைந் தனர்.இதேசமயம் மன்னார் நரிக்குளம், வெட்டுக்குளம் பகுதிகளில் நேற்றுமாலை இடம்பெற்ற மோதல்களில் நான்கு படை யினர் படுகாயமடைந்தனர்
என்றும் புலி கள் தரப்பில் கூறப்பட்டது.இதேவேளை, மன்னார் பரப்பங்கண் டல், வேப்பங்குளம் பகுதிகளில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகள் தரப்பில்
ஆறுபேர் உயிரிழந்தனர் என்றும் தமது தரப்பில் எவ் வித இழப்புகளும் இல்லை என்றும் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது
________________________________
டிலக்ஸனா
காக்கமுடியவில்லை மகளே; மன்னித்துக்கொள்!

எதிரிகள் காட்டுமிராண்டிகள் தாயே!!
________________________________
முல்லைத்தீவில் வான்குண்டுத் தாக்குதல்: 15 வயதுச் சிறுமி படுகொலை [வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008, 02:33 பி.ப ஈழம்] புதினம் இணையதள[தாயக செய்தியாளர்]
முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் குடியிருப்பு மீது சிறிலங்கா வான் படையின் எஃப்-7 ரக வானூர்திகள் நான்கு இன்று நடத்திய
குண்டுத்தாக்குதலில் 15 வயதுச் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் விசுவமடு புன்னைநீராவியடியில் உள்ள குடியிருப்பு மீது இன்று வியாழக்கிழமை காலை 6:30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.கொல்லப்பட்டவர் பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி அன்சிலாஸ்தியன் டிலக்சனா (வயது 15) என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.இத்தாக்குதலில் ஜெராட் என்பவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குண்டுவீச்சுத் தாக்குதலில் மக்கள் குடியிருப்புக்களும், பயன்தரு மரங்களும் சேதமடைந்துள்ளன.
நன்றி: செய்தியும் நிழற் படங்களும் புதினம் இணையதளம்
யாழ் முன்னரங்கில் விரைவில் சடுதியான பிரமாண்டமான களமுனை திறக்கப்படும்- இராணுவத் தளபதி பொன்சேகா சூளுரை
வீரகேசரி இணையம் 4/15/2008 7:57:58 PM -
விடுதலைப்புலிகள் இதுவரை எதிர் கொண்டிராத யுத்த முனை ஒன்றை தாங்கள் விரைவில் வன்னியில்
திறக்க உள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகா சூளுரைத்துள்ளார்.அவரது பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு
குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது செவ்வியின் மேலதிக விபரங்கள் வருமாறு,அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலை
தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச சமூகம் இலங்கை அரசை பேச்சு மூலமான தீர்வுக்கு வலியுறுத்தி இருந்தது.ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும்
முன்னரை விட உறுதியாக போரை முன்னெடுப்போம் என தெரிவித்திருக்கும் நிலையில் களமுனைகளில் படிப்படியான முன்னேற்றத் தோடு
விடுதலை புலிகளோடு சமரிட்டு வரும் எமது படைகள் யாழ் முன்னரங்கில் இதுவரை கண்டிராத பெரும் படை எடுப்பை விரைவில் தொடரும் எனவும்
இப்போர் மன்னார், மணலாறு களமுனைகளை போல் இல்லாமல் பாரிய சடுதியான, பிரமாண்டமான நகர்வாக இருக்கும் என தெரிவித்துள்ளார்..

யாழ்ப்பாண குடாநாட்டுக்குள் தமிழீழ விடுதலைப்புலிகள் ஊடுருவமுடியாது - மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்
[ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008, 05:57.34 PM GMT +05:30 ]
யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவுவதை தடுப்பதற்கும் அவர்களின் முன்னேற்ற நகர்வுகளை முறியடிப்பதற்கும்
முப்படையினரையும் தயார் நிலையில் வைத்துள்ளதாக யாழ்ப்பாண. மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி
தெரிவித்துள்ளார். வன்னியிலிருந்து பூநகரி ஊடாக குடாநாட்டுக்குள் விடுதலைப் புலிகள் ஊருவி கிளைமோர் தாக்குதல்கள் தற்கொலைத்தாக்குதல்கள் நடத்தக் கூடிய
சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. எனினும் அவற்றை தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு
படைத்தரப்பை தயார்நிலையில் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
மாங்குளம் பகுதியில் விமானக் குண்டுவீச்சு
வீரகேசரி இணையம் 4/15/2008 6:57:00 PM
மாங்குளம் தெற்கு பகுதியில் இன்று பிற்பகல் 12.30 மணியளவில் விமானப் படை விமானங்கள்
குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இனங்காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீதே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
விமானத் தாக்குதலின் போது விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு பரிமாற்று மத்திய நிலையம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டதாக விமானப்
படைப் பேச்சாளர் அன்ரூ விஜேசூரிய தெரிவித்தார். விமானப் படையினரது ஜெட் ரக விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் போது
மேற்படி நிலையம் முற்றாக அழிக்கப்பட்டதாக தாக்குதலில் ஈடுபட்ட விமானப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
___________________________________
* "இலங்கைக்கு நாங்கள் ஆயுதங்கள் கொடுக்கவில்லை" - மன்மோகன் சிங்.
* யூஎஸ்எய்ட் இலங்கைக்கு 12 மில்லியன் டொலர் உதவி
* இலங்கையில் சிறுவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி-சர்வதேச அமைப்பு வேதனை.
* "China emphasized support for Sri Lanka's territorial integrity,"- Minister G.L.Peiris
* Australia to seriously consider LTTE ban: Kohona ___________________________________
வரலாற்றில் இல்லாதளவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கம் அனைத்துலக ஆதரவுத் தளம்: சு.ரவி
[ஞாயிற்றுக்கிழமை, 13 ஏப்ரல் 2008, 06:07 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வரலாற்றில் இல்லாதளவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பக்கம் அனைத்துலக ஆதரவுத் தளம் உள்ளது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியீட்டுப் பிரிவுப் பொறுப்பாளர் சு.ரவி தெரிவித்துள்ளார். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி 18 ஆம் ஆண்டில் கால் பதிப்பதனையிட்டு கடந்த வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற நிகழ்வில்
சிறப்புரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ் மக்களின் போர் வரலாற்றில் சாள்ஸ் அன்ரனி படையணியின் பங்களிப்பு என்பது பிரமாண்டமானது. அதேவேளையில் அந்தப் படையணிக்கு சூட்டப்பட்டிருக்கின்ற பெயரைத்தாங்கிய எமது மூத்த உறுப்பினரும், எமது விடுதலை இயக்கத்தின் முதலாவது
தாக்குதல் தளபதியாகவும் இருந்த லெப். சீலனின் பெயரைத்தாங்கியபடி தமிழினம் பெருமையடைகின்ற போர்ப் படையணியாக உருவாகியிருக்கின்றது.
இந்த மரபு வழிப் படையணியின் உருவாக்கத்திற்கு ஒரு வரலாறு இருக்கின்றது.
எமது விடுதலை இயக்கம் 1991 ஆம் ஆண்டில் ஆனையிறவுப் படைத்தளத்தை மீட்க படை நடவடிக்கையை செய்திருந்தது. அந்த நடவடிக்கை வெற்றி
தரவில்லை. அது வெற்றியைத் தராமலே நாங்கள் அந்த நடவடிக்கையை விட்டு விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அந்தச் சூழலுக்கு முதன்மைக் காரணமாக இருந்தது ஒரு போர் வகைதான்.
அது அந்த ஆனையிறவுப் படைத்தளத்தை நாம் தாக்கியழிக்க முற்படும்போது சிங்களப் படைகள் கடல் வழியாகக் கொண்டு வந்து தரையிறக்கி பெரிய
உதவிப் போர்ப் படையை அந்த ஆனையிறவுப் படைத்தளம் நோக்கி அனுப்பி அதன் பலத்தை அதிகரிக்கச் செய்து தளத்தை வீழ விடாமல் பாதுகாத்து விட்டதாகும்.
அப்போது அங்கு வந்திறங்கிய சிங்களத் தரைப்படைகள் வெற்றிலைக்கேணியில் ஒரு தரையிறக்கம் செய்தன. அங்கே தரையிறங்கிய அவர்கள் ஒரு மரபு வழி வகையில் நகர்ந்து மரபு வழி ஆயுதங்களை பயன்படுத்திக்கொண்டு ஆனையிறவுத் தளம் வரை
வந்தடைந்தனர். எனவே அந்த நிலையில் ஒரு சிங்களப்படை புரிந்த ஒரு மரபுப் போர் வகைக்கு எமது விடுதலை இயக்கம் அன்று தகுந்த பதிலடி கொடுக்க முடியாத
நிலையிருந்தது. ஏனெனில், அன்று ஒரு மரபுப் போர் படை எம்மிடம் இருக்கவில்லை.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தச் சமருக்குப் பின்னர் தான் எமது விடுதலை இயக்கத்திலும் ஒரு மரபுப்போர் படையணியின் தோற்றமும் அந்த போர்ப் படையணிகளுக்குரிய ஆயுத வகைகளின் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டிய ஒரு கட்டத்திற்குள் தேசியத் தலைவர் வந்தார். அந்த அடிப்படையில் தான் எமது முதலாவது போர்ப் படையணியாகிய சாள்ஸ் அன்ரனி படையணி தோற்றம் பெற்றது.
அது எத்தனையோ களங்களில் எத்தனையோ வீர- தீர சாதனைகளைச் செய்து அன்று சிங்களத்தின் மரபுப் படையணிகளுக்கு பலத்த அடிகொடுத்த
வரலாறு இருக்கின்றது. ஆனால் இன்று நாம் எவ்வளவோ உயரத்திற்கு வளர்ந்து விட்டோம்.
அந்த சாள்ஸ் அன்ரனி படையணியுடன் அதற்குத் துணையாக பல்வேறு மரபுவழிப் போர்ப் படையணிகளை தலைவர் உருவாக்கி வருகின்றார்.
இன்று போர் அரங்கில் மிகப்பெரிய களம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
சிங்கள இராணுவ ஆய்வாளர்களே திணறும் அளவுக்கு சிங்களத்தின் ஒட்டுமொத்த மரபுப் போர்முறைக்கு எதிராக எமது விடுதலை இயக்கமும் வலுவைக் காட்டிய படிதான் நிற்கின்றது.
சிங்களப் படையின் போர்ப்படைக்கு நிகராக எமது நிலத்திலும் மரபுப் படையணியை தலைவர் உருவாக்கி வைத்திருக்கின்றார். அங்கே சிங்களத்தின் கவசப் படையணி இருக்கின்றது என்றால் இங்கே எமக்கு ஒரு விக்டர் கவச எதிர்ப்புப் படையணி.
அதே போன்று மாலதி படையணி ,சோதியா படையணி ,குறி பார்த்துச்சுடும் படையணி ,சிங்களத்தின் வான் தாக்குதலை முறியடிப்பதற்காக எமது ராதா வான்காப்புப் படையணி ,இம்ரான்-பாண்டியன் படையணி ,ஜெயந்தன் படையணி ,என ஏராளமான மரபுப்போர் படையணிகளை தலைவர் உருவாக்கி களமிறக்கியிருக்கின்றார்.
அந்தப் போர்ப் படையணிகள் ஒரு பெரிய வீரத்தை வெளிப்படுத்தி சாதனையை நிலைநாட்டி சிங்களத்தின் மரபுப் போர் ஆற்றலுக்கு சவாலை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் போர் தொடங்கி ஒன்றரை ஆண்டாகி விட்டது.
வன்னியில் இந்தப் போரை குறுகிய காலத்தில் முடித்து விடுவோம் என சிங்களப் படைத்தரப்பு கொக்கரித்தது. ஆனால் இந்தப் போர் தொடங்கிய அந்த இடங்களில் தான் போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதற்கு காரணம் எமது தமிழர் படையின் போர் ஆற்றல் களத்தில் வைத்து காட்டப்படுவதால் தான் சிங்களப்படை முடக்கப்பட்ட நிலையில்
இருக்கின்றது. இன்றைய நிலையில் எமது போராட்டத்திற்கு நம்பிக்கை தருகின்ற வெற்றியை நோக்கிய நிகழ்வுகள் நடந்தபடிதான் போர்க்களம் உள்ளது.
அதேபோல் அனைத்துலக அரசியல் களமும் எமக்கு சாதகமாக மாறிக்கொண்டிருக்கின்றது.
உண்மையில் எமது விடுதலை இயக்கம் 25 ஆண்டுகாலமாக களத்தில் போராடி வருகின்றது.
எத்தனையோ பெரிய களங்களில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கின்றோம். இராணுவ மேல் நிலைகளை நாம் அடைந்திருக்கின்றோம்.
ஆனால் அந்தக்காலகட்டங்களில் எல்லாம் அனைத்துலக அரசியல் ஆதரவு என்பது கிடைக்கவில்லை.
நாம் போரில் வெல்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் சிங்களத் தரப்பிற்கு ஒவ்வொரு ஆதரவு இருக்கின்றது.
அதனை நாம் மறுதலிக்க முடியாது. அது ஏனெனில், சிங்கள அரசின் பரப்புரைக்கு பலியாகி அனைத்துலகம் எம்மை பயங்கரவாதிகளாக எமது
போராட்டத்திற்கு ஒரு நியாயமற்ற தன்மை இருப்பதாக சிங்கள அரசு செய்த பரப்புரைக்கு அனைத்துலகமும் பதிலுரைக்கும் முகமாக நடக்கும் போது
அந்த அரசியல் ஆதரவு எமது பக்கம் வரவில்லை. சிங்களவருக்கு போய்க்கொண்டிருந்தது.
ஆனால் தற்போது கடந்த சில ஆண்டுகளாக எமது விடுதலை இயக்கம் அனைத்துலகத்தில் முன்வைத்த அந்த அரசியல் நியாயப்பாடுகள் அனைத்துலக
அரங்கில் செவிசாய்க்கத் தொடங்கினர்.
அதன்பிறகு போர் தொடங்கியது.
தேசியத் தலைவர், கடந்த மாவீரர் நாள் செய்தியில் அனைத்துலகத்தினை நோக்கி ஒரு அறைகூவல் விடுத்திருந்தார்.
சிங்கள அரசு- புலிகள் இயக்கம் பற்றி ஒரு தப்பான அபிப்பிராயம் வழங்கிக்கொண்டிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது அனைத்துலக அரசுகளின் நலன்களுக்கு முரணாக இருக்கின்றது என்றவாறாக சிங்கள அரசு ஒரு பொய்ப் பரப்புரையை மேற்கொண்டது.
அந்தப் பரப்புரையை நம்ப வேண்டாம் என்றும் எமது விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு தருமாறும் தலைவர் ஒரு கோரிக்கையை முன்வைத்து மாவீரர் நாள் உரையை நிகழ்த்தியிருந்தார்.
இன்று தலைவரின் கோரிக்கைக்கு அனைத்துலகம் செவிசாய்க்கத் தொடங்கிவிட்டது.
இதனைத்த்தான் நாம் சொல்லலாம். இன்று சிங்கள அரசு ஏதே ஒரு வகையில் அனைத்துலக நாடுகளால் சுற்றிவளைக்கப்பட்டு அரசியல் அழுத்தங்கள் அரசியல் கண்டனங்கள் சில வகையில் ஏதோ ஒரு தண்டனையும் வழங்குவது போல் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இது 20, 25 ஆண்டு காலத்தில் நடைபெறாத ஒன்று.
எமது விடுதலைப் போராட்டத்தில் மகிழ்ச்சியை அளிக்க கூடிய ஒன்று அனைத்துலக அரசுகள், சிங்களத்தை அரசியல் ரீதியாக- இராணுவ ரீதியாக கூட புறந்தள்ளி- சிங்களத்திற்கான உதவிகளை ஜரோப்பிய அமெரிக்க நாடுகள் விலக்குகின்ற போக்கை காணக்கூடியதானதாகும்
கடந்த 20, 25 ஆண்டு காலமாக இதே ஜரோப்பிய அமெரிக்க நாடுகள் தான் சிங்களத்துக்கு இராணுவ பொருண்மிய அரசியல் ஆதரவுகளை நல்கி
வந்தது.
ஆனால் இப்போது அத்தனை உதவிகளையும் விலக்கிக்கொண்டு சிங்களத்தை ஒதுக்க நினைக்கும்- தனிமைப்படுத்துகின்ற நிலைக்குள் செல்வது என்பது
எமது விடுதலைப் போராட்டத்திற்கான அனைத்துலக ஆதரவுத்தளம் ஒன்று உருவாகி வருவதனைத்தான் காட்டுவதாகும்.
ஆனால் எமது மக்களுக்கு வரலாற்று அனுபவம் ஒன்று உண்டு.
சிங்கள அரசுக்கு அதிரான அனைத்துலக ஆதரவு எமது பக்கம் இருந்தாலும் அல்லது சிங்கள அரசுக்கு எதிரான ஒரு அரசியல் அழுத்தம் என்பது
இருந்தாலும் அரசியல் ஆதரவு என்கின்ற விடயம் எமது மக்களுக்கு விடுதலையை தேடித்தராது என்பதுதான் அது.
ஏனெனில், சிங்கள ஆட்சியாளர்கள் அந்த விதமாக ஒரு இராணுவ முனைப்புடன் போர் மூலம் புலிகளை அழித்து தமிழ் மக்களை இன அழிப்புச்
செய்வதில் திடமாக இருக்கின்றனர்.
அவர்கள் சந்தர்ப்பம் வரும்போது எல்லாம் அனைத்துலக அரசின் சொற்களுக்கு செவி சாய்க்காமல் தமிழினப் படுகொலையை தொடர்ந்து செய்யும் ஒரு நடவடிக்கையை நாம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.
எனவே நாம் களத்தில் பெறுகின்ற இராணுவ வெற்றிகள் தான்.எமது மக்களுக்கு ஒரு விடுதலையைப் பெற்றுத்தரும்.
அத்தகைய ஒரு போரியல் நம்பிக்கையை பெறும் வகையில் தான் கள நிலைமைகளும் சாதகமாக இருக்கின்றன.
சாள்ஸ் அன்ரனி படையணியைப் போன்ற தமிழர்களுக்கு இருக்கின்ற மரபுப் போர் படையணிகள் களத்தில் காட்டிக்கொண்டிருக்கின்ற வீரம்- ஈகம்-
அர்ப்பண உணர்வு இவை எல்லாம் சேர்ந்துதான் பலத்தை தந்து கொண்டிருக்கின்றது.
வரலாற்றில் நாம் என்றும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஆட்பலத்தை பெற்று வைத்துக்கொண்டிருக்கின்றோம்.
அந்த ஆட்பலத்துடன் மரபுப்போர் கட்டமைப்பும் வசதியும் இணையும் போது வெற்றி எமது கைகளுக்குத் தான் வந்து கொண்டிருக்கும்.
எனவே இன்றைய காலம் அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் விடுதலைப் போராட்டத்திற்கு நம்பிக்கை அளிக்கின்ற மக்களுக்கு மகிழ்ச்சி
அளிக்கின்ற காலமாக மாறிக்கொண்டிருக்கின்றது.
பலம்தான் எமக்கு விடுதலையை (பேரம் பேசும் ஆற்றலை-ENB) பெற்றுத் தரும் என்று தேசியத்தலைவர் சொல்வார்.
அதேபோன்று பலம்தான் எமது மக்களுக்கு மகிழ்ச்சியையும் நல்வாழ்க்கையையும் பெற்றுக்கொடுக்கும் என்ற உண்மை வரிகளை மக்கள்
நினைவிருத்திக்கொண்டுதான் இருக்கின்றனர்.
எனவே அத்தகைய பலமான சூழலில் நாம் நின்று கொண்டிருக்கின்றோம்.
பலத்தின் அடிப்படையில் எமக்கு விரைவில் வெற்றி கிடைக்கும் என்றார் ரவி.

No comments: