Sunday, 18 May 2008

மன்னாரில் படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 20 படையினர் பலி....

மன்னாரில் படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல்: 20 படையினர் பலி- 40 பேர் காயம்- 3 உடலங்களும் ஆயுதங்களும் மீட்பு
[ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008, 08:21 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புதினம் இணைய தளம்
மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. மன்னார் கருங்கண்டல்குளம் அணை ஊடாக வண்ணாங்குளம் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிமுதல் முற்பகல் 11 மணிவரை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்ந்த படையினர் மீது விடுதலைப் புலிகள் செறிவான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். படையினரின் 3 உடலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் படையினரிடமிருந்து
ஆர்பிஜி - 01,ஆர்பிஜி எறிகணை - 04,ஆர்பிஜி புரப்பலர் - 04,ரி-56 ரக துப்பாக்கி - 03,ரவைக்கூடு - 29,குண்டு - 24,நடுத்தர ரவை - 2,070,நடுத்தர ரவைகள் இணைப்பிகளுடன் - 230,பிகே சுடுகுழல் - 02,பிகே ரவைகள் இணைப்பிகளுடன் - 1,885,பிகே ரவை - 228,கிளைமோர் - 01,ரவைத்தடுப்பு அணிகள் - 10,தலைக்கவசம் - 08,சப்பாத்துக்கள் - 11 சோடிகள், பை - 18,கொமாண்டோ குடிநீர் கொள்கலன் - 31,உரைப்பை - 150 என்பன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதேநேரம், நெடுங்கண்டல்குள அணையால் முன்னேறும் நடவடிக்கையை மேற்கொண்ட சிறிலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

No comments: