Wednesday 21 May, 2008

பால்ராஜ்: ஈழ மைந்தனுக்கு இனிய பிரியாவிடை

பால்ராஜ்: ஈழ மைந்தனுக்கு இனிய பிரியாவிடை
வந்தபோது: பாலசேகரம் வாழ்ந்தபோது: பால்ராஜ்
தமிழீழ இராணுவம் தன் தானைத் தளபதிகளில் ஒருவரை இயற்கையிடம் இழந்து விட்டது.
பால்ராஜ் என்கிற இளம் பருவப் போராளி பிரிகேடியராய் தன் தேசிய யுத்தகள கடமைகளை நிறைவேற்றி விட்டு, இறுதி வெற்றியிலும்- முகமாலையில்- தனது முத்திரையைப் பதித்து விட்டு, தனது 43 ஆவது வயதில் மாரடைப்பு நோயால் மண்ணுக்குள் விதையாகிப் போனார். வாழ்ந்த காலம் எல்லாம் மலையாக வாழ்ந்தவர்! வீழ்ந்த போது விதையாக வீழ்ந்தவர்!! இந்த அப்பழுக்கற்ற தேசியவாதியின், தேசியப் பற்றாளனின் வரலாற்றுச் சுருக்கம்.
1) 1983- 2008 : 25 ஆண்டுகால யுத்தத்தில் இவர் முகம் கொடுக்காத களம் இல்லை. நமது தேசியப் பெருமிதத்தின் மாபெரும் அடையாளச் சின்னங்களான ஜெயசுக்குறு,ஆனையிறவு,இந்திய விஸ்தரிப்புவாத ஆக்கிரமிப்பு இவற்றில் எல்லாம் வெற்றிகண்டு தமிழீழக் கொடியேற்றிய சாதனைகளின் சரித்திர நாயகன்.
2) 1981-1991 ஆகப் பத்து ஆண்டுகள்.
1981 இல் மாவட்ட அபிவிருத்திச்சபைக்கு கிரனைற் வீசி நமது பலாத்காரப் போர் ஆரம்பமானது. 1991 இல் ஆக பத்தே ஆண்டுகளில் அரசுமுறை இராணுவ-''மரபுவழி இராணுவ''-படைக் கட்டமைப்புக்கு பால்ராஜ் பொறுப்பேற்றார்.
3) 2008 இல் முகமாலையில் இப்படை அமைப்பு பால்ராஜ் வாழ்வின் சிகரத்தை எட்டியது; மட்டுமல்ல அவர் தானே நின்று களமாடினார்.
4) பால்ராஜ் களமுனையின் முதல் நிலைத் தளபதி மட்டுமல்ல, தமிழீழ இராணுவக் கல்விக் கழகத்தின் விரிவுரையாளரும் கூட.
5) அவர் எம்மை சோகத்தில் விட்டுச்செல்லவில்லை. எமக்கு ஒரு தலைமுறையை உருவாக்கித் தந்துவிட்டு எம்மை விட்டுப் போயிருக்கிறார்.
வாழ்வு உயிர் அணுக்களின் இயக்கம்.
எல்லா உயிர்ப்பொருள்களும் ஒரு நாள் சாகும்.அதுதான் வளர்ச்சியின் விதி.
மூட்டைப் பூச்சிகளும் சாகும்! நாட்டை மீட்பவரும் சாவர்!!
''கிளி''களும் சாகும்! புலிகளும் சாவர்!!
தமிழீழ முப்படைத் தளபதி பிரபாகரனின் பிரவாகங்களில் ஒன்றான
பால்ராஜின் போதனைகளும் அவரது இராணுவ சாதனைகளும் என்றும் சாகா!
சாகா வரம்பெற்ற அவரது காணிக்கைகளுக்கும், அவருக்கும், நன்றிகலந்த நமது செவ்வணக்கம்.
உன் மண்ணுக்கு நீ சொன்ன நெறி எதிரிகளைக் கொல்!
நன்றி நம் வேங்கையே நிம்மதி கொள்!!

No comments: