Thursday 1 May, 2008

மே தினம் 2008

* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
* மார்க்சிய லெனினிய மா ஓ சிந்தனை வாழ்க!!
* ஏகாதிபத்தியம், இந்திய விஸ்தரிப்புவாதம் ஒழிக!!!
* புரட்சிகர தேசபக்த ஈழவிடுதலை யுத்தம் வெல்க!!!!
____________________________
மே நாள் -2008- இலங்கை அரசு:
பயங்கரவாதத்தை தோற்கடிக்கும் சவாலை தொழிலாளர் ஏற்றுள்ளனர்
மக்கள் சார்பு அரசாங்கம் என்ற வகையில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதனூடாக உண்மையான சுதந்திரத்தை அடைவதற்கான நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்தும் அதேவேளை, பல்வேறு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் குறைப்பதற்கும் நம் நடவடிக்கை எடுத்தோம். நாம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கும் தொடர்ந்தும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறோம்.
மேதின செய்தி ஜனாதிபதி

பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த தொழிலாளர் ஒத்துழைக்க வேண்டும்
தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பின்னிற்கப் போவதில்லை. சாதி, இன, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று ஒரே தாயின் சகோதரர்களாக முன்னோக்கிச் சென்று நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள்கொடுப்போம். அதற்காக எமது தொழிலாளர் வர்க்கத்திற்கு பலமும் சக்தியும் கிடைக்க வேண்டுமென இந்த மே தினத்திலே பிரார்த்திக்கின்றேன்
மேதின செய்தி பிரதமர்
(வீரகேசரி இணையம் 5/1/2008 12:04:02 AM)

2008 மே நாளில் இலங்கைத் தொழிலாள வர்க்கத்துக்கு இலங்கை அரசு விதித்திருக்கும் கடமைகள் மூன்று.
1) பயங்கரவாதத்தை தோற்கடிப்பது :இலங்கையில் தமிழ்- சிங்கள தொழிலாள விவசாய உழைக்கும் மக்களை கூறுபோடுவது,
2) நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது:ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு இலங்கை நாட்டை அடிமைப்படுத்துவது,
3) தொழிலாளர்களுக்கு வாழ்க்கைத்தர உயர்வு:இலங்கையின் தொழிலாள விவசாய உழைக்கும் மக்கள், 'எச்சில் பொறுக்கிகள்' இவர்கள் பிச்சை போடுவார்கள்!
இலங்கை நாட்டின் புரட்சிகர உழைக்கும் மக்கள் திரளே;
பரிஸ் கொம்யூனில் உழைக்கும் மக்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்;
ரசியாவில் புரட்சிகர சோவியத் ஒன்றியத்தை நிறுவினார்கள்;
சீனாவில் புதிய ஜனநாயக மக்கள் குடியரசை அமைத்தார்கள்;
உலகெங்கும் தேசிய விடுதலைப் புரட்சிகளுக்கு உத்வேகம் அளித்தார்கள்.
அவர்களின் பாதையில் நாமும் அரசியல் அதிகாரத்துக்காகப் போராடவேண்டும், புதிய ஜனநாயக அரசு முறைக்காகப் போராடவேண்டும்,இரண்டு தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாடான இலங்கையில், ஒடுக்கப்படும் ஈழதேசத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரித்த ஒரு மக்கள் ஜனநாயக குடியரசுக்காகப் போராட வேண்டும்.
ஈழப் புதிய ஜனநாயகவாதிகளாகிய நாம் பின்வரும் முழக்கங்களை புரட்சிகர மே நாளில் பிரகடனம் செய்கின்றோம்.இம் முழக்கங்கள் மீது ஒன்று சேர, ஒடுக்கும் தேசத்து உழைக்கும் மக்களுக்கு தோழமைக் கரம் நீட்டுகின்றோம்!
நமது முழக்கங்கள்:
* மீண்டும் ஒரு இந்தியத் தலையீட்டை எதிர்ப்போம்!
* இந்திய விஸ்தரிப்புவாதத்தைத் தோற்கடிப்போம்!
* இந்திய இலங்கை ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!
* இந்திய விஸ்தரிப்புவாதத்துக்கு சேவகம் செய்யும் தமிழக தரகர்களைத் தனிமைப்படுத்துவோம்! அவர்களது சுயநிர்ணய உரிமையை எதிர்த்த,இன மொழிப் பித்தலாட்டங்களை அம்பலமாக்குவோம்!
* அரசியல் தீர்வுகாண வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவோம்!
* பிரிந்து செல்லும் உரிமையைப் பற்றிப்பிடித்து, விடுதலைப் புரட்சியில் ஊன்றி நிற்போம்!
* கிழக்கு மாகாணத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
* சுயாட்சிப் பிரதேச திட்டத்தின் அடிப்படையில், விடுதலைப் புரட்சியில் முஸ்லிம், மலையகமக்களை ஒன்றிணைப்போம்!
* சிறீலங்கா இனவெறிப் பாசிச அரசின் சிங்கள உழைக்கும் மக்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளையும், பாசிஸ தாக்குதல்களையும் எதிர்ப்போம்!
* ஒற்றைத்துருவ உலக ஒழுங்கமைப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலவள, பிரதேச கைப்பற்றுதலுக்கான ஆக்கிரமிப்பு யுத்தங்களை எதிர்ப்போம்! இதை எதிர்த்த நீதியான தேசபக்த விடுதலை யுத்தங்களை ஆதரிப்போம்!
* மூன்றாம் உலகப்போரை தடுத்து நிறுத்துவோம், மூளும் பட்சத்தில் உள்நாட்டுப் போராய் மாற்றி, தீவிரப்படுத்துவோம்!
* விடுதலை யுத்தத்தில் ஊன்றி நிற்போம், புரட்சிகர ஈழ விடுதலைப் போரை இறுதி வரை தொடர்வோம் !
* யுத்த கால மனிதநேயப் பணிகளுக்காக மக்கள் குழுக்களைக் கட்டியமைப்போம்! மக்களுக்கு ஜனநாயகம் வழங்குவோம்!!
* தமிழர் தாயகத்தில் அனைத்து தன்னார்வ உளவாளி நிறுவனங்களுக்கும் தடை விதிப்போம்!
* விடுதலைப் புரட்சியைக் காக்க, போராடும் தலைமையைப் பாதுகாப்போம்!
* உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று சேருங்கள்!
* மேதினி போற்றும் மேதினம் நீடூழி வாழ்க!
இறுதி வெற்றி ஈழமக்களுக்கே.

No comments: