Saturday, 10 May 2008

திருமலைத் துறைமுகத்தில் சிறி லங்கா போர்க்கப்பல் கடற் புலிகளால் மூழ்கடிப்பு

திருமலைத் துறைமுகத்தில் சிறி லங்கா போர்க்கப்பல் கடற் புலிகளால் மூழ்கடிப்பு
A- 520 எனப் பெயர்கொண்ட சிப்பாய்களையும் மற்றும் இராணுவ விநியோகங்களையும் போர் முனைகளுக்கு எடுத்துச் செல்லும் இக்கப்பலே கடற்புலிகளால் மூழ்கடிக்கப் பட்டுள்ளது.சனிக்கிழமை அதிகாலை (இலங்கை நேரம்) 2.23 மணியளவில் இத்தாக்குதலை கடற்புலிகளின் ஆழகடல் கரும்புலிகள் நிகழ்த்தி வெற்றிகண்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் இதனை உறுதி செய்ததோடு, இத்தாக்குதலை கடற் புலிகளின் கங்கை அமரன் அணி நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது. தகவல் [TamilNet, 09 May 2008, 21:40 GMT- Breaking News]

மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 5 உடலங்களும் ஆயுதங்களும் மீட்பு [வெள்ளிக்கிழமை, 09 மே 2008, 01:19 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புதினம் இணைய தளம்.
மன்னார் கறுக்காய்குளம் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள்
முறியடித்துள்ளனர். இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிறிலங்காப் படையினர் கறுக்காய்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் பெருமெடுப்பிலான முன்நகர்வை
மேற்கொண்டனர்.
ஆட்டிலெறிகள்-மோட்டார்கள்-பல்குழல் வெடிகணைகள் ஆகியவற்றின் மிகச்செறிவான சூட்டாதரவுடனும் டாங்கிகள், கவச ஊர்திகளின் பீரங்கிச்
சூட்டாதரவுடனும் படையினர் இம் முன்நகர்வுத்தாக்குதலை மேற்கொண்டனர்.
படையினருக்கு ஆதரவாக வான் படையினரின் கிபீர் வானூர்திகள் தாக்குதலை நடத்தியுள்ளன.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் காலை 8:00 மணிவரை மிகச்செறிவான முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியவாறு நேரடி முறியடிப்புத்தாக்குதலை சிங்களப் படைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்தினர். இம் முறியடிப்புத் தாக்குதலையடுத்து காலை 8:00 மணியளவில் படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர்.
இதில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். பெருமளவு படையினர் காயமடைந்தனர். இம் முறியடிப்புத்தாக்குதலில்
படையினரின் உடலங்கள் - 05 ,நடுத்தர ரவை - 18,000 , பிகே ரவை - 14,000
கைக்குண்டு - 40 , பிகே இணைப்பி - 850 , மழைக்கவசம் - 05, பிகே எல்எம்ஜி - 02 , ஏகே எல்எம்ஜி - 03 , ரி-56 2 ரக துப்பாக்கி - 04 , ஏகே மகசின் - 21 , ஏகே ரவை - 340 , எல்எம்ஜி லிங்குடன் ரவை - 265 , பிகே ரவை - 20 , பிகே லிங்கு - 34 , கிற் பாக் (ஜக்கட்) - 14 , தலைக்கவசம் - 04 , ரவை துளைக்காத ஜக்கட் - 03
ஏகே எல்எம்ஜி றம் - 02 , 50 கலிபர் ரவைப் பெட்டி - 02 , பிகே பெட்டி - 02
தண்ணீர் கொள்கலன் - 20 , இராணுவச் சப்பாத்து - 05
மற்றும் பெருமளவிலான படைக்கலங்கள், வெடிபொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

படையினரின் படைக்காவி ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலில் தீப்பற்றி எரிந்த வண்ணம் பின்னோக்கி படையினரால் இழுத்துச் செல்லப்பட்டது.
சிறிலங்காவின் நாடாளுமன்றம் மகிந்தவினால் ஒத்திவைப்பு
[புதன்கிழமை, 07 மே 2008, 07:27 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]
சிறிலங்காவின் நாடாளுமன்றத்தினை அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
ஜூன் மாதம் 5 ஆம் நாள் வரை நாடாளுமன்றத்தினை ஒத்திவைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு
அறிவித்திருக்கின்றது.
அரசியல் யாப்பின் 70 ஆவது சரத்தின் முதலாவது பிரிவின் பிரகாரம் அரசாங்கம் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளது.
இந்த அதிகாரச் சட்டத்தின் படி அடுத்த கூட்டத்தொடருக்கான காலத்தினை அரசாங்கம் தீர்மானிக்க அதிகாரம் உள்ள போதும், அது இரு மாதங்களுக்கு
மேற்படாது இருத்தல் வேண்டும்.
நாடாளுமன்றத்தினை ஒத்திவைப்பதற்கான சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு காரணமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கைகள், நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் என்பனவும்
ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மீண்டும் நாடாளுமன்றம் கூடும் போதே அவற்றினைச் சமர்ப்பிக்க முடியும்.
அரசாங்கத்தின் இந்த முடிவினை ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன கடுமையாக எதிர்த்துள்ளன.
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மேற்கொள்ளவுள்ள வன்முறைகளை மறைக்கும் நோக்குடனே அரசாங்கம் நாடாளுமன்றத்தை
ஒத்திவைத்துள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் திச அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இது ஒரு ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும். நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதனை இதன்
மூலம் அரசாங்கம் தடுத்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (10.05.08) கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் தவறான முறையில் வெற்றி பெறுவதற்கு அரசாங்கம் ஏற்கனவே
பல திட்டங்களை வகுத்துள்ளது என்றார்.
இதனிடையே கிழக்கில் நடைபெற உள்ள மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் ஜனநாயகமற்ற முறையில் பல செயற்பாடுகளை மேற்கொள்ளத்
திட்டமிட்டுள்ளது. அதற்கு அமைவாகவே நாடாளுமன்றத்தினை அது ஒத்திவைத்துள்ளது என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவரான ரவூப் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
இது ஒரு சந்தேகத்திற்கு இடமான நகர்வு, தேர்தலுக்கு நான்கு நாட்கள் இருக்கையில் அரசாங்கம் இந்த நகர்வை மேற்கொண்டுள்ளது. இந்த நகர்வுகள்
நாம் மிகப்பெரும் வெற்றியீட்டுவோம் என்பதனையே என்று அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தல்கள், நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாக பொதுமக்களின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை தெரிவிப்பதனை அரசாங்கம்
தடுக்க முடியாது என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments: