Sunday, 11 May 2008

தூ! யாருக்குத் தேவை இந்த ஜனநாயகம்!!

பிள்ளையானை ராஜபக்ச தெரிவு செய்த தேர்தல்!
ஈழத்தமிழர்களின் தாய் நிலம் கிழக்கு மாகாணத்தில் பக்ச பாசிஸ்டுக்கள்
ஆடிய தேர்தல் தெருக்கூத்து முடிவடைந்துள்ளது.
1) இதை ஒரு நேர்மையான தேர்தலாக ஒரு கணம் கருதி, மேலே காணும்
வாக்கு விபரங்கள் வாக்காளர்களால் வாக்குப் பெட்டிகளில் இடப்பட்டவை என எடுத்துக்கொண்டால் கூட ஏறத்தாழ 37% மக்கள் இத்தேர்தலைப் புறக்கணித் துள்ளனர்.
2) ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல;
அ) வாக்காளர் அட்டைகள் வாக்காளர்களுக்கு கையளிக்கப்பட வில்லை.
ஆ) தேர்தல் சாவடிகளில் இதர கட்சிகளின் பிரதிநிதிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவில்லை.
இ) பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஈ) இரகசிய- தனிப்பட்ட-வாக்களிப்பு உரிமையை- உத்தரவாதம் செய்யும் எல்லா விதிமுறைகளும் மீறப்பட்டன, களவாடப்பட்டன.
உ) மக்கள் அச்சுறுத்தப் பட்டனர், தாக்கப்பட்டனர், கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர்.
ஊ) பகல் 2.00 மணிவரையில் ''மந்தகதியில் 20% மக்கள் மட்டுமே வாக்களித்திருந்த நிலையை'', முடிவில் 60% மாற்றியது 'பிள்ளையான்' கலை!
எ) தேர்தல் களம் -''விடுதலை செய்யப்பட்ட பிரதேசத்தில்'' யுத்த களம் ஆக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய படைவீரர்கள் குவிக்கப்பட்டு 'பாதுகாப்பு' வழங்கினர்!
ஏ) தேர்தல் களத்தைச் சித்தரிக்கும் ஒரு புகைப்படமாவது, பெருந்திரளாக தமிழ்மக்கள் வாக்களிப்பில் பங்கு கொண்டதைக் குறிக்கவில்லை.
3) இவை விளக்குவது என்னவெனில், 40% மக்கள் வாக்களிக்க, 20% வாக்குகளைத் திருடி பிள்ளையான் தனக்குத்தானே வாக்களிக்க, 40% மக்கள் புறக்கணிக்க இத்தேர்தல் தெருக்கூத்து அரங்கேறியுள்ளது.
4) வேறு விதமாகச் சொன்னால் இது பிள்ளையானை ராஜபக்ச தெரிவுசெய்த தேர்தல்.முஸ்லிம், சிங்கள மக்களை அவர்களது கட்சிகள் வழக்கம் போல ஏமாற்றியுள்ளன. தமிழர்கள் இத்தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர். கூடவே ஓடுகாலி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
ஐ.தே.கட்சிக்கு வாக்களிக்கும் படியான கோரிக்கையையும் புறம் தள்ளியுள்ளனர்.
5) இதன் மூலம் பக்சபாசிஸ்டுக்களின்,
அ) வடக்குக் கிழக்கு தாய்நிலத் துண்டிப்பு,
ஆ) இந்திய, அமெரிக்க அந்நியர்களுக்கு கிழக்கு தாரைவார்ப்பு,
இ) காடையன் பிள்ளையானை கிழக்கில் தமது காவல் நாயாக்கும் தவிப்பு,
ஆகிய நோக்கங்களுக்கு தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
6)
கிழக்குமாகாணத் தேர்தலின் ஜனநாயகமற்றதன்மை , தேர்தல் நடத்தப் பட்ட முறையிலோ, அல்லது பிள்ளையான் காடையர்களை வென்ற காடையன் என்பதிலோ அடங்கியிருக்கவில்லை. அது தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை மறுத்து, தமிழர் தாய் நிலத்தை துண்டாடியதில் அடங்கியுள்ளது. இதனால் இத்தேர்தலில் தமிழ் மக்கள் - தேர்தலைப் புறக்கணித்து- அளித்த தீர்ப்பு, தேர்தல் பாதையைப் புறக்கணித்து விடுதலைப் போரில் ஊன்றி நிற்பதற்கு வலுச்சேர்ப்பதாய் அமைந்துள்ளது.
7) இத்தேர்தலில் சில முறைகேடுகள் நடந்துள்ளதாக தவிர்க்க இயலாத நிர்ப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளும் இந்திய விஸ்தரிப்புவாதிகளும், ஏகாதிபத்தியவாதிகளும், தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை மறுத்து தாய் நிலத்தை துண்டாடிய விடயத்தில் பக்சபாசிஸ்டுக்களுடன் ஒன்றிணைந்து
ஒத்துழைக்கின்றனர்.
8) இந்த ஜனநாயகப் பாதைக்கு திரும்புமாறு அழைப்புவிடுகின்றனர். இந்தத் தேர்தலில் பக்ச பாசிஸ்டுக்கள், மக்களின் சுயவிருப்பின் அடிப்படையில் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை எவ்வாறு காலில் போட்டு மிதித்தார்கள் என்பதைக் கண்டோம். பத்திரப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் சட்டப் புத்தகங்களை, தூ! யாருக்குத் தேவை 'இந்த ஜனநாயகம்'.
11-05-2008_____>சுபா_____>ENB____>*

No comments: