Monday, 26 May 2008

சோதியா படையணியால் மணலாறு முன்நகர்வு முறியடிப்பு

சோதியா படையணியால் மணலாறு முன்நகர்வு முயற்சி முறியடிப்பு:
5 படையினர் பலி- ஆயுதங்கள் மீட்பு
[சனிக்கிழமை, 24 மே 2008, 07:17 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] புதினம் இணைய தளம்
மணலாறில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியினை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். படைக்கலங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மணலாறு சிலோன் தியேர்ட்டர்ப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் படையினர் முன்நகர்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகளின் சோதியாப் படையணிப் போராளிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர்.
பிற்பகல் 2:00 மணிவரை நடத்தப்பட்ட தீவிர தாக்குதலில் படையினரின் நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
இத்தாக்குதலில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல படையினர் காயமடைந்துள்ளனர்.
இதில் விடுதலைப் புலிகளால் படைக்கலங்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட படைக்கலங்கள் விபரம்:
ரி-56 - 2 ரக துப்பாக்கி-01,நடுத்தர ரவைகள் - 9,000,ரவைக்கூடுதாங்கி அணிகள் - 04,பிகே-ரவைகள் - 2,000,பிகே ரவை இணைப்பிகள் - 500,சுடுகுழல் - 01,டொப்பிடோக்கள் - 04
படைப்பை - 01,தலைக்கவசங்கள் - 04,ஏகேஎல்எம்ஜி ரவை இணைப்பிகள் - 300
உட்பட்ட படைப் பொருட்கள் பல விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

No comments: