Monday, 26 May 2008

பிணந்தின்னி அரசின் முறிகண்டித் தாக்குதல்.

முறிகண்டியில் சிறிலங்காப் படை நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் படுகொலை
[வெள்ளிக்கிழமை, 23 மே 2008, 03:42 பி.ப ஈழம்] [வவுனியா நிருபர்]
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள முறிகண்டி அக்கராயன் வீதியில் சிறிலங்காப் படையினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உட்பட 16 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். படுகொலை செய்யப்பட்டோரில் 4 குழந்தைகள், 3 சிறுவர்கள், 3 ஆண்கள், 6 பெண்கள் அடங்குவர். ஒரு குடும்பம் முற்றாக அனைவரையும் இழந்துள்ளது.
கிளிநொச்சி இரணைமடுச் சந்தியைச் சேர்ந்த மக்கள் முழங்காவிலுக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இக்கிளைமோர்த் தாக்குதலை நடத்தினர். ஹையஸ் ஊர்தியில் மக்கள் சென்று திரும்பிக்கொண்டிருந்த போது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முறிகண்டி கோவிலில் இருந்து அக்கராயன் வீதியில் 2 கிலோமீற்றர் தொலைவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே 15 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிலங்காப் பயங்கரவாத அரசு திட்டமிட்டு அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்யும் வகையில் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
படுகொலை செய்யப்பட்டோர் விபரம்:
ஜந்து பிள்ளைகளின் தாயாரான பன்னீர்ச்செல்வம் அழகுராணி (வயது 45)
சாமிக்கண்டு கறுப்பையா
கறுப்பையா உங்கா
வாகன ஓட்டுநரான கணேஸ் தனறாஜா (வயது 34) செல்வராசா கமலாதேவி (வயது 34)
சுப்பிரமணியம் தனலட்சுமி (வயது 54)
அழகன் சுப்பிரமணியம் (வயது 40)
சுப்பிரமணியம் சரஸ்வதி (வயது 40)
பெரியசாமி விஜி
விஜி லக்சிகா (வயது 18)
விஜி நந்தா
விஜி தனு (வயது 09)
விஜி விதுசன் (வயது 07)
றாசேந்திரம் கலாவல்லி (வயது 29)
சந்திரமோகன் கார்த்திகா (வயது10)
சந்திரசேகரம் கீர்த்திகா
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.

No comments: