Monday, 26 May 2008

கிழக்கு இருள்கிறது!

கிழக்கு இருள்கிறது
*லண்டன் செல்லும் ஜனாதிபதியின் அணியில் முதலமைச்சர் பிள்ளையான்? *காத்தான்குடியில் மீண்டும் வன்முறை நேற்று 25 பேருக்கு வெட்டுக் காயங்கள் உடன் ஊரங்கு
*கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் 16 பேர் படுகொலை- 53 பேரைக் காணவில்லை- 20 பேர் காயம்- 30 பேர் கைது
*காத்தான்குடியில் நேற்றும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்! கண்ணீர்புகைப் பிரயோகம்; ஊரடங்கு அமுல்
*களுவாஞ்சிக்குடி பிரதேச சபை உபதலைவர், மெய்ப்பாதுகாவலருடன் சுட்டுக்கொலை
*முஸ்லிம் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டமையால் பதற்றம்
*கல்லடியில் வியாபாரி வெட்டிக் கொலை காத்தான்குடியில் நால்வருக்கு வாள் வெட்டு
*அம்பாறையில் இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை உடைத்து பொருட்கள் அபகரிப்பு
*மூதூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
*மட்டக்களப்பில் படைகுவிப்பு
*ஏறாவூர், காத்தான்குடியில் ஹர்த்தால் பாதுகாப்பு கருதி ஏறாவூரில் ஊரடங்கு
*அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் தாக்குதலுக்கு இலக்காகி ஆஸ்பத்திரியில்
*ஏறாவூரில் நேற்று ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட 2 முஸ்லிம்களை விரட்டிச் சென்று மீட்டது பொலிஸ்
*மீண்டும் "ஜிகாத்' குழு கிழக்கில் தீவிரமாம்!
**லண்டன் செல்லும் ஜனாதிபதியின் அணியில் முதலமைச்சர் பிள்ளையான்? காத்தான்குடியில் மீண்டும் வன்முறை நேற்று 25 பேருக்கு வெட்டுக் காயங்கள் உடன் ஊரங்கு
காத்தான்குடிப் பகுதியில் கடந்த நான்கு நாள்களாகப் பதற்றத்துடன் நீடித்த ஹர்த்தால் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து நேற்றுக் காலை வர்த்தக
நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும், ஓரிரு மணித்தியாலங்களில் நேற்று முற்பகலே அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. தமிழர்கள், முஸ்லிம்கள்
என மொத்தம் 24 பேர் கத்திவெட்டுக்காயங்களுக்கும், கல்வீச்சுக் காயங்களுக்கும் உள்ளானார்கள்.நிலைமை மோசமடைந்ததை அடுத்து அப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு நடை முறைப்படுத்தப்பட்டது.தமிழ்ப் பிரதேசமான ஆரையம்பதிக்கு வர்த்தக நடவடிக்கைக்காகச் சென்ற முஸ் லிம் வர்த்தகர் ஒருவர் அங்கு கத்திக்குத் திற்கு இலக்கானார் என்று
பரவிய தகவ லைத் தொடர்ந்தே காத்தான்குடிப் பகுதி யில் மீண்டும் வன்முறைகள் வெடித்தன. மட்டக்களப்பு கல்முனை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தமிழர்கள் மீது கற்களையும் தடிகளையும் பயன்படுத்திக் கும்பல் ஒன்று தாக்குதல்களை
மேற் கொண்டது.இதில் மூன்று பெண்கள் உட்பட 16 தமிழர்கள் காயமடைந்தனர். இவர்களில் நால்வர் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏனைய வர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.இதேவேளை, வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கலைப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர். அதிரடிப் படையினர்துப்பாகிப் பிரயோகம்தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தகரை வீதியில் நிறுத்தி அவர் காயமடையவில்லை என்பதையும் அதிரடிப்படையினர்
காண்பித்துள்ளனர்.ஆரையம்பதிக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காகச் சென்ற இந்த முஸ்லிம் வர்த்தகர் அங்கு அச்சுறுத்தப்பட்டுள்ளார். அவரது உடைகள்
கிழிக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்தே அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்ற வதந்தி பரவியுள்ளது எனக் கூறப்பட்டது.அம்புலன்ஸ் மீதும் தாக்குதல் இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீதும்
இனந்தெரியாதவர்கள் முற்பகல் 11 மணியளவில் மேற்கொண்ட தாக்குதலில் 6 நோயாளிகளும் 3 மருத்துவப் பணியாளர்களும் காயமடைந்தனர்.காயமடைந்த 6 பேரும் முஸ்லிம்கள் எனவும் முஸ்லிம் குழுவொன்றே அம்புலன்ஸ் மீது கற்களை வீசித் தாக்கியதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை
மேற்கொண்டனர். மருத்துவப் பணியாளர்களுக்கும் அம்புலன்ஸ்களுக்கும் உரிய பாதுகாப்பை அதிகரிக்குமாறு அவர்கள் கோரினர்.நேற்றுத் திடீரென மூண்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரிலும் காத்தான்குடிப் பகுதியிலும் உள்ள பாடசாலைகள் அவசர அவசரமாக
மூடப்பட்டன. நகரம் வெறிச்சோடியது பாதுகாப்புப் படையினர் மேலதிகமாகக் குவிக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பாடசாலைகள் அவசர அவசரமாக மூடப்பட்டனகாத்தான்குடியில் கடந்த சில நாள்களாக இடம்பெற்ற கதவடைப்பு முடிவிற்கு வந்து இயல்பு நிலை திரும்பிய ஓரிரு மணித்தியாலங்களில்
வன்முறைகள் திரும்பவும் மூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த வன்முறைகளில் வாகனம் ஒன்று எரியூட்டப்பட்டதாகவும், சில கடைகளின் பொருள்கள் சூறையாடப்பட்டு வீதியில் போட்டு எரிக்கப்பட்டன
என்றும் கூறப்பட்டது.இதேவேளை, நேற்றைய சம்பவங்களில் படுகாயமடைந்து மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் மேலதிக சிகிச்சைக்காகக்
கொழும்புக்கு மாற்றப்பட்டார் என வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் 16 பேர் படுகொலை- 53 பேரைக் காணவில்லை- 20 பேர் காயம்- 30 பேர் கைது: நா.உ.அரியநேத்திரன் [வெள்ளிக்கிழமை, 06 யூன் 2008, 06:12 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் கிழக்கில் 16 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 53 பேர் காணாமல் போய் உள்ளனர். 20 பேர்
காயமடைந்துள்ளனர். 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் அவர் உரையாற்றும் போது
கூறியதாவது:
இந்த நாட்டில் இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை. இருப்பது பயங்கரவாதப் பிரச்சினை மட்டுமே என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க
கூறியுள்ளார். அவ்வாறு எனில் ஏன்? யாரை ஏமாற்றுவதற்காக அனைத்துக்கட்சி மாநாட்டை நடத்துகின்றீர்கள்? பயங்கரவாதப் பிரச்சினையை தீர்ப்பதற்கு
அனைத்துக்கட்சி மாநாடு தேவையில்லையே?
இந்த நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளையும் இரண்டாகப் பிளவுபடுத்தும் வேலையை அரச தலைவர் முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் அவரால் பிளவுபடுத்த முடியவில்லை. ஏனெனில் நாம் மக்களின் பிரதிநிதிகள், கோடிகளுக்கும்
பதவிகளுக்கும் விலை போகின்றவர்கள் அல்ல.
அரச தலைவர், இப்போது டக்ளசையும், ஆனந்தசங்கரியையும் பிரித்து வேடிக்கை பார்க்கின்றார்.
கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்தை ஏற்படுத்திவிட்டதாக அரசு மார்தட்டுகின்றது. ஆனால், அங்கு அரச ஜனநாயகப் படுகொலையினையே
செய்துள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்குள்ள மக்களின் நிம்மதி பறிபோய்விட்டது. இன முறுகல்கள் அதிகரித்துள்ளன. இதனால்
நாளாந்தம் வன்முறைகள் நடக்கின்றன.
மாகாண சபைத் தேர்தலின் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 27 பேரைக் காணவில்லை. 20 பேர்
காயப்படுத்தப்பட்டுள்ளனர். 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, திருகோணமலை மாவட்டத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 26 பேர் காணாமல் போய் உள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் இதே நிலைதான் காணப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், இனமுறுகல் அனைத்தையும் அரசே திட்டமிட்டுச் செய்கின்றது. அங்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஆயுதக்குழுவினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேருவின் பெயர் சூட்டப்பட்ட விளையாட்டு மைதானம் ஒன்றின் பெயரை உடனடியாக மாற்றுமாறு உத்தரவிடப்பட்டிருக்கின்றது.
இவ்வாறு கிழக்கு மாகாணத்தின் நிலை மேலும் மோசமடைந்து செல்கின்றது. இதற்கான அனைத்துப் பொறுப்புக்களையும் இந்த அரசாங்கமே ஏற்க
வேண்டும் என்றார் அவர்.
ஆதாரம்: தினக்குரல்

காத்தான்குடியில் நேற்றும் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்! கண்ணீர்புகைப் பிரயோகம்; ஊரடங்கு அமுல்
காத்தான்குடியைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்கள் நேற்று மட்டக்களப்பு பொதுவைத்தியசாலைக்கருகில் வைத்துக் கடத்தப்பட்டு கடுமையாகத்
தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து காத்தான்குடியில் நேற்றும் முஸ்லிம்கள் பெரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டனர்.ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதான வீதியில் ரயர்களைப் போட்டுஎரித்து பிள்ளையான் குழுவினரின் ஆயுதங்களைக் களையுமாறு கோஷமிட்டு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அங்கு அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் மக்களை விரட்டியடிப்பதற்காக வானத்தை நோக்கித்
துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தபோதிலும் மக்கள் அங்கிருந்து விலகவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது.ஊர் மக்கள் பெருந்திரளாகத் திரண்டுவந்து பிரதான வீதி முழுவதையும் ஆக்கிரமித்து நின்றனர் என்றும், இதனால் படையினர் செய்வதறியாமல்
திணறினர் என்றும் கூறப்பட்டது. பின்னர் நேற்று மாலை 5 மணியளவில் கண்ணீர்ப் புகைக்குண்டு வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார்
கலைத்தனர். நேற்று மாலை 5 மணி முதல் இன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தால் காத்தான்குடி ஊடான போக்குவரத்துகள் அனைத்தும் ஸ்தம்பித்துப் போயின. அநேகமான வாகனங்கள் காத்தான்குடிக்குள்
நுழையமுடியாமல் திரும்பிச் சென்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் "அரசே பிள்ளையான் குழுவின் ஆயுதங்களைக் களை', "முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை
முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் சபை அமர்வில் கலந்துகொள்ளக்கூடாது' போன்ற கோஷங்களை எழுப்பினர்.நேற்று காத்தான்குடியில் கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றவை இரண்டாவது நாளாகவும் மூடப்பட்டிருந்தன. அங்கு அரச அலுவலங்கள்
கூட இயங்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.மட்டக்களப்பு நகரில் உள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும் நேற்று இரண்டாவது நாளாக மூடப்பட்டிருந்தன. நேற்றைய இந்தப் பாரிய ஆர்ப்பாட்டம் காரணமாக காத்தான்குடி நகர் முற்றாக ஸ்தம்பித்திருந்ததோடு எங்கும் பதற்றம் நிலவியது என்று
கூறப்படுகிறது.பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தமிழ் பகுதிகளுக்கும் தமிழர்கள் முஸ்லிம் பகுதிகளுக்கும் செல்லவில்லை என்றும்
தெரிவிக்கப்படுகிறது.

களுவாஞ்சிக்குடி பிரதேச சபை உபதலைவர், மெய்ப்பாதுகாவலருடன் சுட்டுக்கொலை
[03 - June - 2008] [Font Size - A - A - A]
எருவில் கண்ணகி வித்தியாலயமருகில் சம்பவம் மட்டக்களப்பு மண்முனை தென்எருவில்பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச சபை உபதலைவரும் அவரது மெய்ப் பாதுகாவலரும் நேற்று திங்கட்கிழமை
பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தர்களான இவ்விருவரும் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி எருவில் பகுதியில் கண்ணகி மத்திய
வித்தியாலயத்திற்கு முன்னால் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவர்களை சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர்.
ஏ.கே.47 ரக துப்பாக்கியால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை உபதலைவரான கற்றாளன் எனப்படும் ஐயாத்துரை புஷ்பநாதன் (28 வயது),
அவரது மெய்பாதுகாவலரும் அண்மையில் இந்தப் பிரதேச சபைக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டவருமான அன்புராஜா (26 வயது) என்பவருமே கொல்லப்பட்டவர்களாவர்.
கடந்த மாதம் 22 ஆம் திகதி மண்முனை பிரதேச சபைத் தலைவரின் கணவனும் பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தருமான சாந்தன் என்பவரும்
அவரது மெய்ப்பாதுகாவலரும் சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரிந்ததே.
நேற்றைய இந்தச் சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த படையினரும் பொலிஸாரும் தேடுதல்களை நடத்தினர்.
இருவரது சடலங்களும் பின்னர் களுவாஞ்சிக்குடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

முஸ்லிம் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்டமையால் பதற்றம் காத்தான்குடியில் நேற்று ஹர்த்தால்
ஊரவர் கூடி ஆர்ப்பாட்டமும் செய்தனர் காத்தான்குடியைச் சேர்ந்த முஸ்லிம் வியா பாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டமையைக் கண்டித்து நேற்று அங்கு ஹர்த்தால்
அனுஷ்டிக்கப் பட்டது. நேற்றுக்காலை ஊர் மக்களால் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.இதேவேளை, நேற்றுக்காலை அங்கு சென்ற அமைச்சர் அமீர் அலி மீது ஊர் இளை ஞர்கள் கடுமையாகச் சீறிப் பாய்ந்தனர் என்றும், அதனை அடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.கொல்லப்பட்டவரின் ஜனாஸா நேற்றுக் காலை காத்தான்குடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.அந்த இறுதி நிகழ்வில் கலந்துகொள்வ தற்காக அமைச்சர் அமீர் அலி அங்கு சென்னி றிருந்தார். அவ்வேளை அங்கிருந்த இளைஞர் கள் தகாத
வார்த்தைகளால் ஏசி ரகளை செய்தனர். என்றும் இதைத் தொடர்ந்தே அமைச்சர் அங்கிருந்து உடன் புறப்பட்டுச் சென்றார் என்றும் சொல்லப்பட்டது.இறந்தவரின் நல்லடக்கத்தைத் தொடர்ந்து ஊர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடைகள், அலுவலகங்கள், வர்த்தக நிலை யங்கள் அனைத்தையும்
மூடி ஊர் மக்கள் ஹர்த் தாலும் அனுஷ்டித்தனர்.பிரதான வீதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக் கடமையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.காத்தான்குடியில் இருந்து போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறவில்லை. ஒரு சில வாகனங்கள் மாத்திரமே காத்தான் குடி ஊடாகப் போக்குவரத்தில்
ஈடுபட்டன என்று தெரிவிக்கப்படுகிறது.மாவட்டம் முழுவதும் பதற்றம்இதேவேளை மட்டக்களப்பு நகரில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான கடைகள் அனைத்தும் நேற்று மூடிக்கிடந்தன என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாளைச்சேனை போன்ற முஸ்லிம் பகுதிகளில் கடைகள் அனைத்தும் திறந்திருந்தபோதிலும் தமிழ் மக்களின் வருகை
அங்கு இருக்கவில்லை என்றும் இதனால் மேற் படி பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன என்றும் பிரதேச தகவல்கள்
தெரிவிக்கின்றன.இதேவேளை காத்தான்குடி உட்பட முஸ்லிம் பகுதிக ளுக்கூடாகச் சென்ற வாகனங்கள் பெரும்பாலும் பொலிஸ் பாது காப்புடன் சென்றன என்று
தெரிவிக்கப்படுகின்றது.நேற்று மட்டக்களப்பு மாவட்டம் எங்கும் பதற்றம் நிலவியது என் றும் சன நடமாட்டம் குறைந்திருந்தது என்றும் கூறப்பட்டது.

கல்லடியில் வியாபாரி வெட்டிக் கொலை காத்தான்குடியில் நால்வருக்கு வாள் வெட்டு [02 - June - 2008]
மட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மரக்கறி வியாபாரியொருவர் வெட்டிக் கொல்லப்பட்டதையடுத்து காத்தான்குடிப்பகுதியில் நேற்று மாலை நால்வர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர் இதையடுத்து, காத்தான்குடி மற்றும் ஆரையம்பதிப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது.கல்லடி வேலூர் நாகதம்பிரான் கோவில் வீதியிலுள்ள மயானத்திற்கு அருகிலேயே நேற்று நண்பகல் 12.45 மணியளவில் வியாபாரி ஒருவர்ஆயுதபாணிகளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.ஏறாவூரை சொந்த இடமாகவும் புதிய காத்தான்குடி அஸ் சஹீத் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் பாரூக் குத்தூஸ் (48 வயது) என்பவரேவெட்டிக் கொல்லப்பட்டவராவார். இவர் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.இதுபற்றி மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அவரது சடலத்தை எடுத்துச் சென்று மட்டக்களப்புஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.அத்துடன், காத்தான்குடிப் பகுதியிலும் அதன் எல்லைப் புறப் பகுதிகளிலும் பெருமளவு இராணுவத்தினரும் விஷேட அதிரடிப் படையினரும்பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தையடுத்து காத்தான்குடிப் பகுதியில் பதற்றம் நிலவியது. இந்தப் பகுதியூடாகச் செல்லும் சகல வாகனங்களுக்கும் படையினர் பாதுகாப்புவழங்கிவருகின்றனர்.இந்த நிலையில் நேற்றும் மாலை 5.30 மணிய ளவில் ஆரையம்பதி காத்தான்குடி எல்லையின் தென்புறப் பகுதியில் மேசன் தொழிலுக்குச் சென்றுதிரும்பிய மூன்று தமிழர்கள் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தனர்.ரவீந்திரன் (30 வயது கிரான்குளம்), பதீஸ்வரன் (17 வயது மாவிலங்குத்துறை), இராசதுரை (42 வயது மாவிலங்குத்துறை), சிவானந்தம் (49 வயதுதாளங்குடா) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து, காத்தான்குடி ஆரையம்பதி எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

அம்பாறையில் இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளை உடைத்து பொருட்கள் அபகரிப்பு [02 - June - 2008]
பத்மநாதன் எம்.பி. முறையீடு அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடிச்சாறு உட்பட பல்வேறு தமிழ்ப் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் வீடுகள் அழிக்கப்பட்டு அங்கிருக்கும்பெறுமதியான பொருட்கள் படையினரால் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லப்பட்டு படைமுகாம்கள் பலப்படுத்தப்பட்டு வருவது தொடர்பாக கடும்கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் சர்வதேச சமூகம் இதனைத்தடுத்துநிறுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.அம்பாறை மாவட்ட தமிழ்ப் பிரதேசங்களிலிருந்து அப்பகுதி மக்களை வெளியேற்றி அவர்களின் பொருளாதார வளங்களை சீர்குலைக்கும்நடவடிக்கையாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பத்மநாதன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;கடந்த 2002 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அரசு சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து இடம்பெயர்ந்த கஞ்சிகுடிச்சாறு, தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் ஆகிய மூன்று பிரதேசத்தில் 810 குடும்பங்கள் மீளக் குடியேற்றப்பட்டனர்.இவர்களுக்கான வீடுகளை சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்புகள் நிர்மாணித்துக் கையளித்தன.இதில் தங்கவேலாயுதபுரத்தில் நோப் திட்டத்தின் கீழ் 94 வீடுகளை நிர்மாணித்து இடம்பெயர்ந்த மக்களிடம் கையளித்தனர்.பின் 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதல் காரணமாக மீண்டும் இடம்பெயர்ந்து திருக்கோவில் பிரதேசத்தில் உறவினர், நண்பர்கள் வீடுகளில்பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களின் வீடுகளையே படையினர் உடைத்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியதுடன், படைமுகாமும் அமைத்துள்ளனர்.கடந்த வெள்ளிக்கிழமை தங்கவேலாயுதபுரத்தில் 25க்கு மேற்பட்ட வீடுகளை உடைத்து ஓடுகள், கூரை மரங்கள், கதவு நிலைகள், கதவுகள், ஜன்னல்கள்போன்றவற்றை படையினர் 20 உழவு இயந்திரங்களில் தமது படை முகாம்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.இதேபோன்று கடல்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட திருக்கோவில் பிரதேச மக்களில் 30 குடும்பங்களுக்கு காஞ்சிரங்குடாவிலுள்ள நேருபுரத்தில்அமைக்கப்பட்ட வீடுகளின் ஓடுகள், மரங்களையும் படையினர் அண்மையில் உடைத்து எடுத்துச் சென்றுள்ளனர்.இவ்வாறு தொடர்ந்து தமிழ் மக்களின் பொருளாதாரத்தை சிங்கள பேரினவாதமும் படையினரும் திட்டமிட்டு அழித்து வருகின்றனர்.எனவே, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக பலமுறை அரசிடம் நாம் முறைப்பாடு தெரிவித்தும் எதுவித பயனும் கிடைக்கவில்லை. எனவே, தான்நாம் எமது மக்களின் அடிப்படை வாழ்வுரிமையை சர்வதேச மனித உரிமை ஆணைக்குழுவிற்கும் சர்வதேச சமூகங்களுக்கும் தெரிவிக்க வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.பத்மநாதன் தெரிவித்தார்.

மூதூரில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
வீரகேசரி இணையம் 5/26/2008 2:35:24 PM -
மூதூர் பிரதேச செயலகத்திற்கு முன்னால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்ஈடுப்பட்டனர். தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே மீனவர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.மூதூர் பிரதேச செயலத்திற்கு முன்னால் கூடிய ஆயிரக்கணக்கான மீனவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷமெழுப்பியபடி தமது எதிர்ப்பைவெளிப்படுத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்ட(க்)களப்பில் படைகுவிப்பு: பாதுகாப்பு உசார் நிலையில்!
வீரகேசரி இணையம் 5/26/2008 1:06:00 PM -
மட்டகளப்பு மாவட்டம் காத்தான்குடி, ஆரையம்பதி பகுதிகளில் கடந்த வியாழகிழமை இடம்பெற்றஅடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட கொலைசம்பவங்களை தொடர்ந்து அப்பகுதிகள் முதல் மட்டகளப்பு மாவட்டம் முழுவதும்படையினர் பாதுகாப்பை பலபடுத்திவருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.வியாழகிழமை இடம்பெற்ற கொலைகளை தொடர்ந்து கடந்த சில தினங்களாக ஆட் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்திருப்பதாக மட்டகளப்பிலிருந்துதென் இலங்கைவரும் பொதுமக்கள் பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.அத்துடன் மட்டகளப்பின் சில பகுதிகளில் இனந்தெரியாத நபர்களால் துண்டுபிரசுரங்கள் வினயோகிக்கப்பட்டுள்ளதுஇந் நிலையில் இன்றும் மட்டகளப்பின் சில பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு மாறாக தொடர்ந்து கொண்டிருப்பதாகவும்தெரிவிக்கபடுகிறது.இதையொட்டி தற்போது அங்கு படையினரது பிரசன்னம் அதிகரிக்கபட்டு பாதுகாப்பு உசார்படுத்தபடுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.பொலிஸ் இராணுவம் மற்றும் விசேட அதிரடிபடையினரும் கனரக ஆயுதங்கள் சகிதம் ஏறாவூர் காத்தான்குடி ஓட்டமாவடி உட்பட இன்னும் பல தமிழ்- முஸ்லிம் கிராமங்களில் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தபட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் நம்பகரமாக தெரிவிக்கின்றன

ஏறாவூர், காத்தான்குடியில் ஹர்த்தால் பாதுகாப்பு கருதி ஏறாவூரில் ஊரடங்கு [26 - May - 2008] தினக்குரல்
* பஸ்கள் மீது கல்வீச்சு மட்டக்களப்பில் ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட அதேநேரம் ஏறாவூரில் பதற்றநிலையைத் தணிப்பதற்காக நண்பகல் முதல் பொலிஸார் ஊரடங்கு உத்தரவையும் அமுல்படுத்தினர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக வன்முறைகள் தலை தூக்குவதை தடுக்கும் நோக்கிலேயேஇந்த ஊரடங்கு அமுல் செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.பொலிஸ் ஊரடங்கு ஞாயிறு நண்பகல் 12 மணி முதல் அமுலாவதாக இப்பிரதேச பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகள் மூலமாக பொதுமக்களுக்குஅறிவிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் நடமாட்டம் ஏறாவூரில் முற்றாக கட்டுப்படுத்தப்பட்டது. வீதிகளில் நடமாடிய ஒரு சிலர் பாதுகாப்புத் தரப்பினரால்வீடுகளை நோக்கி விரட்டப்பட்டனர்.கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த இரு முஸ்லிம்களும் விடுவிக்கப்படாததைக் கண்டித்து ஏறாவூர், காத்தான்குடி பிரதேசங்களில்நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.இதனால், கடைகள், வர்த்தக நிலையங்கள், சந்தைகள் மூடப்பட்டிருந்தன.ஏறாவூர் நகரின் ஊடாகச் சென்ற சில பயணிகள் பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவங்களும் இடம்பெற்றன. இதனால், சுமார் பத்துப் பேர்காயமடைந்துள்ளனர். பஸ்களும் சேதமடைந்துள்ளன.இச்சம்பவங்களையடுத்து மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் ஊடாகச் செல்லும் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன.பொலிஸார் பார்த்துக் கொண்டு நின்ற போது வீதிகளில் குழுமியிருந்தவர்கள் பஸ்களின் மீது கற்களை வீசியதாகவும் பொலிஸார் கல் வீசியவர்களுக்குஎதிராக எந்த நடவடிக்கையையுமே எடுக்கவில்லை. எனவும். பஸ் பயணிகள் தெரிவித்தனர்.இதேவேளை, காத்தான்குடியிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கபபட்ட போதிலும் எதுவித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை.கொழும்பு, கண்டி, பதுளை, திருகோணமலை, வவுனியா போன்ற தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் கடந்த வியாழக்கிழமை முதல் இதுவரைநடைபெறவில்லை.தமிழ்ப் பிரதேசங்களுக்கு முஸ்லிம்களும், முஸ்லிம் பிரதேசங்களுக்கு தமிழர்களும் செல்லக்கூடிய அளவுக்கு முழுமையான இயல்பு நிலை இதுவரைஏற்படவில்லை.இதனால், அன்றாடம் தொழில் செய்பவர்கள் கடந்த நான்கு தினங்களாக எதுவித வருமானமும் இன்றி கஷ்டப்படுகின்றனர்.இப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வியாபாரிகள் கொள்ளைஇலாபம் அடித்து வருகின்றனர். சில அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.காத்தான்குடி சம்பவங்களையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வையும்ஐக்கியத்தையும் நிலை நாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்ற போது ஏறாவூரில் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.கடத்தப்பட்ட இரு முஸ்லிம்களும் கடந்த வியாழக்கிழமை மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக மட்டக்களப்பு கல்லடிக்கு வந்த போதேகடத்தபபட்டதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.இவர்களை கடத்தியவர்கள் மனிதாபிமான ரீதியில் விடுவிக்குமாறு பல்வேறு தரப்பினாலும் கோரிக்கை விடுக்கப்பட்டும் இது வரை விடுவிக்கப்படாதநிலையிலேயே இந்த ஹர்த்தால் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.மூன்று பிள்ளைகளின் தந்தையும் தனது கணவனுமான கா.சின்னத்தம்பி என்பவரை விடுவித்து உதவுமாறு அவரின் மனைவி மீரா சாகிபு சரீனாவும்தனது நான்கு பிள்ளைகளில் ஒரே ஒரு மகனான அ.க. சனீனா உடனடியாக விடுவிக்குமாறு அவரின் தயாரான பிச்சைக்குட்டி சைத்தூனும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.உறுப்பினர்கள் சந்திப்புஇதேவேளை கடத்தப்பட்ட இரு முஸ்லிம்களின் உறவினர்களை மாகாணசபை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவும் மாகாணசபைஉறுப்பினர்களான பஷீர் சேகுதாவூத் மற்றும் எம்.எம்.சுபைர் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.இவர்களைக் கடத்தியதாகக் கூறப்படும் ஆயுதக்குழுக்களுடன் தாம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றநம்பிக்கை உண்டெனவும் வதந்திகளை நம்பி கலவரப்படவோ, பதற்றப்படவோ தேவையில்லை எனவும் இவர்கள் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் தாக்குதலுக்கு இலக்காகி ஆஸ்பத்திரியில் [26 - May - 2008] தினக்குரல்
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தலைவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரான இவர் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டிருந்தார்.நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அட்டாளைச்சேனை கடற்கரை வீதியிலுள்ள தனது வீட்டில் கட்சி ஆதரவாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுஅங்கு வந்த கோஷ்டியொன்று இவர்கள் மீது பலத்த கல்வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளது.இதனால், மசூர் சின்னலெப்பை காயமடைந்தார். அவர்களுடன் இருந்தவர்களுக்கும் சிறு சிறு காயமேற்பட்டுள்ளது. வீட்டிற்கும் சேதமேற்பட்டுள்ளது.காயமடைந்த மசூர் சின்னலெப்பை பின்னர் அட்டாளைச்சேனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.கடந்த ஒரு வாரமாக தனது வீட்டின் மீது தொடர்ச்சியாக கடும் கல்வீச்சு நடத்தப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று அதிகாலை இந்த மோசமானதாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அமைச்சர் ஒருவரது ஆதரவாளர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.இதேநேரம், சனிக்கிழமை காலை அட்டாளைச்சேனை கடற்கரைப் பகுதியிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் இருவர்மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.இவர்களிருவரும் பின்னர் அட்டாளைச்சேனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சரின் ஆதரவாளர்களே இவர்களைக் கடத்திச் சென்று தாக்கியுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பஸ்மீது தாக்குதல்நேற்றுக்காலை அக்கரைப்பற்று பகுதியிலிருந்து மட்டக்களப்புக்குச் சென்ற இ.போ.ச.பஸ் மீது நடத்தப்பட்ட கல்வீச்சில் பஸ் பலத்த சேதமடைந்துள்ளது.காலை 6.30 மணிக்கு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பயணிகள் எவருக்கும் பாதிப்பேற்படவில்லை.சேதமடைந்த பஸ் பின்னர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பொலிஸ் பாதுகாப்புடனேயே தொடர்ந்துபோக்குவரத்துகள் நடைபெற்றன.

ஏறாவூர் காத்தான்குடிப் பகுதியில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு
வியாழனன்று கடத்தப்பட்ட இரு முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்கக்கோரி மட்டக்களப்பு கல்லடியில் வைத்துக் கடந்த வியாழக்கிழமை கடத்தப்பட்ட பின்னர் காணாமற்போயினர் எனக் கூறப்படும் ஏறாவூரைச் சேர்ந்த இரண்டுமுஸ்லிம்களையும் விடுதலை செய்யுமாறு கோரி ஏறாவூர் காத்தான்குடிப் பிரதேசங்களில் நேற்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.இந்தக் கடத்தல் சம்பவத்தைக் கண்டித்து வர்த்தக நிலையங்களை மூடி எதிர்ப்பை வெளிக்காட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.இதனால் ஏறாவூர்ப் பிரதேசத்தில் நேற்று இயல்பு நிலை முற்றாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வாகனப் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டஅளவிலேயே இடம்பெற்றன. பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.இதேவேளை, இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காத்தான்குடிப் பிரதேசத்திலும் நேற்றுக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டது.கடந்த வியாழக்கிழமை மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் உள்ள இலங்கை மின்சாரசபை அலுவலகத்துக்கு மின்கட்டணம் செலுத்தச் சென்ற இரண்டுமுஸ்லிம் இளைஞர்களே காணாமற்போயுள்ளனர்.காசிமாலெவ்வை சின்னத்தம்பி (வயது 30) மற்றும் அப்துல் ஹமீத் சனீர் (வயது 19) ஆகியோரே காணாமற் போயுள்ளனர். இவர்கள் இருவரும்ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லபபட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இந்தச் சம்பவத்தையடுத்து ஏறாவூரில் கடந்த மூன்று தினங்களாகப்பதற்றம் நிலவுகின்றது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொலிஸார்மேற்கொண்டுவருகின்றனர்.

ஏறாவூரில் நேற்று ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட 2 முஸ்லிம்களை விரட்டிச் சென்று மீட்டது பொலிஸ் அதையடுத்து அங்கு பதற்றத்தைத் தணிக்கஊரடங்கு ஏறாவூரில் வைத்து ஆயுதக்குழுவால் நேற்றும் இரண்டு முஸ்லிம்கள் கடத்தப்பட்டனர். ஆனால் பொலிஸார் பின்னால் விரட்டிச் சென்று அவர்களைப்பாதுகாப்பாக மீட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.எனினும் இக்கடத்தலை மேற்கொண்ட ஆயுதக்குழுவை பொலிஸார் கைதுசெய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பதற்றம் காரணமாக ஏறாவூரில் நேற்றுப் பிற்பகல் இரண்டு மணியளவில் ஊரடங்குச்சட்டம் பொலிஸாரால் நடைமுறைக்குக்கொண்டுவரப்பட்டது.இது தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு:ஏறாவூர் ஐயங்கேணி முஸ்லிம் பகுதியில் மரம் அறுக்கும் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை ஆயுதக்குழுவொன்றுவெள்ளைவானில் கடத்திச் சென்றிருக்கின்றது.இதைக் கண்டவர்கள் உடனடியாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து பொலிஸார் சம்பந்தப்பட்ட வானை விரட்டிச் சென்றனர்.முறக்கொட்டாஞ்சேனை என்ற இடத்தில் வைத்து வானை அவர்கள் மடக்கிப் பிடித்திருக்கின்றனர்.அந்த வானில் இருந்த இளைஞர்கள் இருவரையும் மீட்டெடுத்த பொலிஸார், குறிப்பிட்ட ஆயுததாரிகளைக் கைதுசெய்யவில்லை என்றும்தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து ஏறாவூரில் பதற்றம் நிலவியதால் பிற்பகல் இரண்டு மணி முதல் அங்கு ஊரடங்குச்சட்டம் பொலிஸாரால்நடைமுறைப்படுத்தப்பட்டது.அங்கு கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அதேவேளை, ஏறாவூர் எல்லைப் பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பயத்தின் காரணமாக அங்கிருந்துஇடம்பெயர்ந்து நக ரப்பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted on : Mon May 26 7:55:05 EEST 2008
மீண்டும் "ஜிகாத்' குழு கிழக்கில் தீவிரமாம்!
கிழக்கில் முஸ்லிம் ஆயுதக்குழுவான "ஜிகாத்' மீண்டும் தலைதூக்கியுள்ளதாகக் கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம' ஆங்கில வார இதழ்படைத்தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:கிழக்கில் அண்மையில் தோன்றியுள்ள கலவரங்களுக்கு முஸ்லிம் ஜிகாத் குழுவே காரணம் என்று படைத்தரப்பு தெரிவித்துள்ளது. முஸ்லிம்ஆயுதக்குழுவான ஜிகாத்தின் நடவடிக்கைகள் தற்போது அங்கு அதிகரித்து வருகின்றன.அரசின் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் அணிக்கும் முஸ்லிம் ஆயுதக்குழுவுக்கும் இடையில்கடந்த வியாழக்கிழமை மோதல்கள்வெடித்திருந்தன. அங்கு நடைபெற்ற படுகொலைகளைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினரும், சிறப்பு அதிரடிப்படையினரும் ஊரடங்குச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தனர்.முஸ்லிம் மக்கள அதிகம் வாழும் பகுதிகளில் முஸ்லிம் ஆயுதக்குழுவின் நடமாட்டம் அதிகம் உள்ளது என அப்பகுதி முஸ்லிம் மக்கள்தெரிவித்துள்ளனர்.கிழக்கில் சவூதி அரேபியாவின் நிதி உதவிகளுடன் "வாகாபிசம்' என்னும் தீவிர மதவாதம் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியா, எகிப்து போன்ற நாடுகளுக்குச் செல்லும் இளம் முஸ்லிம்கள் அங்கு தீவிர மத போதனைகளைப் பயின்று வந்து, அதனை இங்குபோதிக்கின்றனர் என உள்ளூர்த் தகவல்கள் தெரிவித்துள்ளன இப்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதயன் Posted on : Wed May 21 7:27:04 EEST 2008
லண்டன் செல்லும் ஜனாதிபதியின் அணியில் முதலமைச்சர் பிள்ளையான்?
அடுத்தமாத முற்பகுதியில் லண்டனுக்கு விஜயம் செய்ய விருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மோடு கிழக்கு மகாண முதலமைச்சர்பிள்ளையானையும் லண்டனுக்குக் கூட்டிச்செல்லத் திட்டமிட்டுள்ளார் என இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.பொதுநல அமைப்பு நாடுகளின் தலைவர்கள் கூட் டத்தில் பங்குபற்றுவதற்காக லண்டன் செல்லும் ஜனாதி பதி, தமது அணியில் கிழக்கு மாகாணத்தின்புதிய முதலமைச் சரையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறார் என்றும் தெரி விக்கப்படுகிறது.லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல கூட்டங் களில் பிள்ளையானைக் கலந்துகொள்ளச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றனஎன்றும் மேற்படி இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.இந்த விஜயம் மூலம் கிழக்குத் தமிழர்களின் தலைவர் இவரே என்று பிள்ளையானை ஜனாதிபதி சர்வதேச சமூகத்திற்கு அறிமுகப்படுத்தவுள்ளார்என்றும் அந்த இணையத்தளம் மேலும் குறிப்பிட்டுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை கிழக்கின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிள்ளையான், ஞாயிற்றுக்கிழமை கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மல்வத்த,அஸ்கிரிய பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசிபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments: