Friday, 16 May 2008

வடக்கில் வெள்ளை வான்! கிழக்கில் பிள்ளையான்!!

வடக்கில் வெள்ளை வான்! கிழக்கில் பிள்ளையான்!!
* மெரிக்க ஏகாதிபத்திய, இந்திய விஸ்தரிப்புவாத, இஸ்ரேலிய கும்பலின் ஆதரவுடன் தான் பக்ச பாசிஸ்டுக்கள் கிழக்கைக் கைப்பற்றினார்கள்!
* கிழக்கின் தமிழ் பேசும் மக்களை மண்ணிலிருந்து வேரறுத்து வெளியேற்றினார்கள்!
* மக்களின் வாழ் நிலங்களை இராணுவ வலயங்கள் ஆக்கினார்கள்!
* நெல்வயல்களைத் தீயிட்டார்கள், கடலுக்குச் செல்ல தடை விதித்தார்கள், கப்பம் வாங்கியே சிறு வியாபாரிகளை கொன்றொழித்தார்கள்!
* மக்கள் விருப்பை மீறி தமிழர் தேசத்தை துண்டாடினார்கள்!
* 60% மக்களின் புறக்கணிப்பை மதிக்காது பிள்ளையான் என்கிற காடையனை கிழக்கும், வெள்ளை வான், சிதறு தேங்காய் கொலைகாரன் டக்ளஸ்சை
வடக்குக்கும் தமது காவல் நாய்களாக நியமித்துள்ளார்கள்!
* 60 ஆண்டுகளுக்கு முன்னால் எவ்வாறு பாலஸ்தீன தேசத்தில் பலவந்தமாக இஸ்ரேலை உருவாக்கினார்களோ அவ்வாறே ஈழதேசத்திலும் கிழக்கு மாகாணத்தில் அமெரிக்காவுக்கு இராணுவத்தளம் அமைக்கிறார்கள்.

* இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளும் இந்தியாவை அமெரிக்காவின் நவீன காலனியாக்கிப் பிழைப்பது என்று முடிவுகட்டி விட்டார்கள். இனிமேல் அண்டை நாடுகளையும் அவர்கள் விட்டுவைக்கப் போவது இல்லை.
* அதனால் தான் இந்து பத்திரிகை கிழக்கைத் துண்டாடியதை வாழ்த்தி பிள்ளையானைக் கொண்டாடுகிறது.
* மூன்றாவது உலகப் பொதுப் பொருளாதார மந்தத்துக்குத் தீர்வுகாண, 'பயங்கரவாத்துக்கு எதிரான போர்', 'மத்திய கிழக்கை ஜனநாயகப் படுத்துதல்', 'தேசங்களை நிர்மாணித்தல்' (Nation Building), ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தல்(Regime Change), போன்ற பாசிசக் கொள்கைகளை ஒழிவு மறைவின்றி தமது அயல் விவகாரக் கொள்கையாக(Foreign Policy), அறிவுத்துள்ள, அமெரிக்க நவபாசிச வாதிகளைப் பின் பற்றி பக்ச பாசிஸ்டுக்களும் கிழக்கில் 'தேச நிர்மாணம்' பற்றிப் பேசுகின்றனர். 60 ஆண்டுகளாக இலங்கையை நிர்மாணித்து சுடுகாடு ஆக்கியதைப்போல!!
* இத்தகைய கேடுகெட்ட பாசிச வழிமுறைகள், ஏகாதிபத்திய வாதிகளினதும் இந்திய விஸ்தரிப்புவாதிகளினதும் பலத்தைக்காட்டவிலை, பலவீனத்தையே காட்டுகிறது.
* மக்கள் ஜனநாயக குடியரசுக்கான புரட்சிகர வேலைத்திட்டத்தாலும், தேசபக்த யுத்தத்தாலும் இந்த எதிரிகளைத் தோற்கடிப்பது முற்றிலும் சாத்தியமான பணியே ஆகும்.
____________________________________
முதலமைச்சராக பிள்ளையான் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம் வீரகேசரி இணையம் 5/16/2008 8:40:05 PM -
கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று மாலை 6.30 மணியளவில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண வைபவத்தில், கிழக்கு மாகாண சபைக்கு 3 அமைச்சர்கள் உட்பட 15 உறுப்பினர்கள்
பதவியேற்றுள்ளனர். மாகாண அமைச்சர்களாக துரைரட்ண சிங்கம் நவரட்ணராஜா, விமலவீர திஸாநாயக்க, மீராசாகிபு உதுமாலெப்பை ஆகியோர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதாகவும் இன்னுமொரு அமைச்சர் விரைவில் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வார் எனவும் ஜனாதிபதி செயலக ஊடக பணிப்பாளரான மகிந்த இல்லே பெரும தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டு அதிக ஆசனங்களைப் பெற்ற முஸ்லிம்களின் பிரதிநிதியான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவையா?
அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற சந்திரகாந்தனையா? முதலமைச்சராக நியமிப்பது என்பது தொடர்பில் கடந்த 6 நாட்களாக இழுபறி நிலை
காணப்பட்டது. இந்நிலையில், சந்திரகாந்தனை முதலமைச்சராக நியமிக்கப் போவதாக மாகாண சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களை சந்தித்தபோது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.
இதன்படி, ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்த சத்தியப்பிரமாண வைபவத்தை இன்று பிற்பகல் நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்தது.
இவ்வைபவத்தை 4 மணிக்கு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் ஹிஸ்புல்லா குழுவினர் திடீரென விடுத்த அறிவிப்பையடுத்து வைபவம்
ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், மாலை 5.15 மணியளவிலேயே இவ்வைபவம் ஆரம்பமானதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வைபவத்தின்போது, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நியமனம் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் ஏமாற்றமடைந்துள்ள போதிலும், அதிகமான முஸ்லிம் அமைச்சர்கள்
இவ்வைபவத்தில் கலந்துகொண்டதாக தெரியவருகிறது. அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்களான எம்.எஸ்.அமீர்அலி, ரிசாட் பதியுதீன், நஜீப் ஏ மஜீத் ஆகியோர் இந்நிகழ்வை பகிஷ்கரித்ததாக அமைச்சர் பதியுதீன் தெரிவித்தார்.

No comments: