உலக தமிழர் பேரவை பயங்கரவாத பட்டியலில் சேர்ப்பு - கனேடிய அரசாங்கம் நடவடிக்கை
வீரகேசரி நாளேடு 6/16/2008 12:30:59 AM
ரொறன்ரோவை தளமாக கொண்டு இயங்கிவந்த உலக தமிழர் பேரவையை கனேடிய அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடைசெய்து அவ்வமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் கனேடிய அரசாங்கம் அண்மைக்காலமாக மேற்கொண்டுவரும் தீவிர நடவடிக்கைகளில் ஒரு செயற்பாடே இதுவென
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி அளித்துவந்தமைக்காகவே உலக தமிழர் பேரவை மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக தமிழர் பேரவைக்கு சொந்தமான வங்கிக்கணக்குகள், காப்புறுதிகள் என்பவற்றை தடை செய்வதற்கான
அறிவிப்பை அந்நாட்டின் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் இன்று வெளியிடக்கூடுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 1980ஆம் ஆண்டு
முதல் தன்னார்வ தொண்டு நிறுவனமாக கனடாவில் செயற்பட்டுவந்த உலக தமிழர் பேரவையின் செயற்பாடுகள் இந்த அறிவிப்பின்
மூலம் முடிவுக்கு வந்துள்ளன.
நேற்றுவரை வன்முறைகளுடன் நேரடி தொடர்புடைய அல்கைதா, ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட 40 அமைப்புக்களை பயங்கரவாத
பட்டியலில் கனேடிய அரசாங்கம் சேர்த்திருந்தது. இந்நிலையில் சட்டரீதியற்ற முறையில் பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவி
செய்வதற்கா உலக தமிழர் பேரவை பயங்கரவாத பட்டியலி“ல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவ்வமைப்பு அரசாங்கத்தின்
இம்முடிவுக்கு எதிராக மேன்முறையீ“டு செய்ய முடியும். எனவே, இவ்விடயத்தில் அடுத்து என்ன நடைபெறப்போகின்றது என்பது
தெளிவற்றுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
"புலிகளின் குரலை' நிறுத்த முயற்சி
[17 - June - 2008]
ஐரோப்பா மற்றும் சர்வதேச நாடுகளில் "புலிகளின் குரல்' வானொலி ஒலிபரப்பை நிறுத்தும் முயற்சிகளை இலங்கை அரசு
மேற்கொண்டுள்ளது. இம் மாதம் 1 ஆம் திகதி முதல் புலிகளின் குரல் வானொலி தனது ஒலிபரப்பை சேர்பியாவிலிருந்து ஆரம்பித்தது. இதற்கான அனுமதியை சேர்பிய அரசாங்கம் வழங்கியிருந்தது.
புலிகளின் குரலானது சேர்பிய செய்மதி ஊடாக ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒலிபரப்பானது.
எனினும், "புலிகளின் குரல்' வானொலியானது விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலியென இலங்கை அரசாங்கம் சேர்பிய அரசிடம்
செய்த முறைப்பாட்டையடுத்து இந்த ஒலிபரப்பை சேர்பிய அரசு நிறுத்தியுள்ளது.
முன்னர், புலிகளின் குரல் வானொலியும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட "இன்ரெல்சற்12'
எனும் செய்மதி ஊடாக ஒலி, ஒளிபரப்பப்பட்டு வந்ததும் தெரிந்ததே.
வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் மீது குண்டுத்தாக்குதல்: அதிகாரிகள் உட்பட 12 காவல்துறையினர் பலி- 40 பேர் காயம் [திங்கட்கிழமை, 16 யூன் 2008, 08:08 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
வவுனியாவில் ஏ-9 வீதியில் உள்ள சிறிலங்கா காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட
குண்டுத்தாக்குதலில் நான்கு அதிகாரிகள் உட்பட 12 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 2 அதிகாரிகள் உட்பட 40 பேர்
காயமடைந்துள்ளனர். வவுனியா பிரதான படைத்தளத்திற்கு அண்மையில் உள்ள காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்து கடமைகளுக்காக
புறப்பட்ட காவல்துறையினரை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை காலை 7:10 மணியளவில் இக் குண்டுத்தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட 12 காவல்துறையினரில் 3 பெண் கான்ஸ்டபிள்களும் அடங்குவர் என்று வவுனியா சிறிலங்கா காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
"இது ஒரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல். உந்துருளியில் வந்த ஒருவரே இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றார்" என்று சிறிலங்கா
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
"குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற போது காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் காவல்துறையின் மூத்த உயர் அதிகாரிகள் எவரும்
இருக்கவில்லை" என்று காவல்துறைப் பேச்சாளர் றஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த காவல்துறையினர் ஏ-9 வீதியில் உள்ள காவல்துறை விடுதியில் தங்கியிருந்தவர்கள்
என்று தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை விடுதியில் இருந்து கடமைகளுக்கு செல்வதற்காக ஏ-9 வீதியில் குழுமி நின்ற காவல்துறையினரை இலக்கு வைத்தே
குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.
உந்துருளியில் வந்த ஒருவரே காவல்துறை அதிகாரிகள் நின்ற பகுதியில் திடீரென நுழைந்து குண்டுத் தாக்குதலை நடத்தினார் என்று
தெரிவிக்கப்படுகின்றது.
குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட உந்துருளி சுக்கு நூறாகச் சிதறியுள்ளது.
இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 12 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 4
பொதுமக்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த அனைவரும் வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 19 காவல்துறையினர் உட்பட 23 பேரே
தொடர்ந்தும் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏனைய 17 பேருக்கும் சிறிய காயங்களே
ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சிகிச்சையை முடித்து வெளியேறியுள்ளனர்.
அதேநேரம் காயமடைந்தவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் அனுராதபுரம் மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலையடுத்து வவுனியா ஊடான ஏ-9 வீதியில் பொதுமக்களின் போக்குவரத்தை தடை செய்த படையினர் சம்பவ இடத்தை
உடனடியாகச் சுற்றிவளைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.
குண்டுத்தாக்குதல் மற்றும் தீவிர தேடுதல்களால் வவுனியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.
நகரில் மக்கள் நடமாட்டம் வழமைக்கு மாறாக குறைந்திருப்பதாகவும் பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்தளவிலேயே
காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் வவுனியா நகர் எங்கும் படையினர் குவிக்கப்பட்டு கடும் சோதனை
நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
சம்பவ இடத்திற்கு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி நேரடியாகச் சென்று விசாரணைகளை நடத்தியுள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு இ.தொ.கா., ம.ம.மு. முடிவு
வீரகேசரி நாளேடு 6/17/2008 9:03:56 AM -
சப்ரகமுவ மாகாண சபைத்தேர்தலில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகிய இரு கட்சிகளும் போட்டயிடுவதற்கு தீர்மானித்துள்ளாக கட்சி
வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
சப்ரகமு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு இருகட்சிகளும் தீர்மானித்துள்ள போதிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியில் இணைந்து போட்டியிடுவதா? அல்லது தனித்து கட்சி சின்னத்தில் போட்டியிடுவதா? என்பது குறித்து இருகட்சிகளும்
இதுவரையில் எவ்விதமான உறுதியான தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்தில் மலையக மக்களின் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமாயின் மலையக மக்களை
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் கட்சி சின்னத்தில் தனித்து போட்டியிடுவதே உசித்தமானது என்று
சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையினால் தனித்து போட்டியிடுவதா? அரசாங்கத்துடன் இணைந்து முன்னணியில் போட்டியிவதா? என்பது
தொடர்பில் உறுதியான முடிவெடுக்கமுடியாதுள்ளதாக கட்சி பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டுவது
தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் ஆளுங்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும்
கட்சிகளில் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் பிரதியமைச்சர் எம்.எஸ் செல்லசாமியும், மலையக
மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி
செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எட்டுக்கோடி தமிழர்களும் குரல் கொடுத்தால் தமிழீழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்கும் [16 - June - 2008] - நடேசன்
எட்டுக்கோடித் தமிழர்களும் குரல் கொடுத்தால் தமிழீழத்தை உலகம் அங்கீகரிக்குமென விடுதலைப் புலிகளின்
அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் கூறியுள்ளார். பொங்கு தமிழாக டென்மார்க் மண்ணில் அணிதிரண்ட புலம்பெயர் வாழ் தமிழீழ மக்களை நோக்கி வன்னியிலிருந்து தொலைக்காட்சி
நேரஞ்சல் வடிவில் உரையாற்றிய அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேலும் கூறியதாவது;
விடுதலைப் புலிகள் மீதான தடைகளை நீக்கி, தமிழீழ தனியரசுக்கு அங்கீகாரம் பெற்று, விடுதலையை வென்றெடுப்பதற்கான பொறுப்பு
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களையே சார்ந்திருக்கிறது.
உலகெங்கும் வாழும் எட்டுக் கோடி தமிழ் மக்களும் தமிழீழ விடுதலைக்காக ஒருமித்துக் குரல்கொடுக்கும் பட்சத்தில், அதற்கு
செவிசாய்த்து தமிழீழ தனியரசை உலகம் அங்கீகரிக்கும்.
1985 ஆம் ஆண்டு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தை தமிழ்நாட்டிலிருந்து லண்டனுக்கு இந்திய மத்திய அரசாங்கம்
நாடுகடத்திய பொழுது, அதனை ஆட்சேபித்து வீதிகளில் இறங்கி, தமிழகத்தின் ஆறு கோடி தமிழ் மக்களும் முன்னெடுத்த போராட்டங்கள்
காரணமாக அவரை மீண்டும் தமிழகத்திற்கு அழைப்பதற்கு இந்திய மத்திய அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டதை அனைவரும் அறிவோம்.
மக்களின் எழுச்சி, எந்தவொரு உலக அரசினதும் மனச்சாட்சியை தொட்டுவிடும் என்பதை இந்த நிகழ்வு தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
உலக நாடுகள் தோறும் உள்ள அரசியல் தலைவர்கள், அரசியல் அறிஞர்கள், கொள்கை வகுப்பாளர்களை சந்தித்து தமிழீழ விடுதலைப்
போராட்டத்தின் நியாயத்தையும் வரலாற்றையும் எடுத்து விளக்கி, தமிழீழ தனியரசுக்கான அங்கீகாரத்தை பெறும் வரலாற்றுப் பணியை
உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் ஆற்ற வேண்டும்.
எல்லாநாடுகளிலும் உள்ள தமிழ் மக்களும் ஒன்றிணைந்து ஒரே சக்தியாகப் போராடி, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வெளிநாட்டு
மக்களின் உதவியைப் பெறுவதற்கான அரசியல் பணிகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும்.
ஈழத்தீவின் வரலாற்றில் தமிழீழ தனியரசை தவிர வேற எந்தத் தீர்வும் சாத்தியமில்லை என்பதை உலக அரசுகளுக்கும், கொள்கை
வகுப்பாளர்களுக்கும் ஆணித்தரமாக புலம்பெயர்வாழ் தமிழீழ உறவுகள் எடுத்துரைக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
Posted on : Tue Jun 17 7:21:56 EEST 2008
குறைந்தது ரூ.5,000 சம்பள உயர்வு கோரி ஜூலை 10 இல் பொது வேலைநிறுத்தம்!
அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும்
என்பது உட்பட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து 366 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அடுத்த மாதம் 10ஆம் திகதி நாடளாவிய
ரீதியில் ஒருநாள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.இந்தப் போராட்டத்திற்கு உரிய பதில்கிடைக்காவிட்டால் மேற்படி கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை தொடர்ச்சியாகப்
போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று இத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.இத்தொழிற்சங்கங்களைக் கூட்டிணைக்கும் "தேசிய தொழிற் சங்க மத்திய நிலையம்' நேற்றுக் கொழும்பில் ஊடகவியலாளர்
சந்திப்பொன்றை நடத்தியது. அப்போதே மேற்படி முடிவு அறிவிக்கப்பட்டது.இந்த மத்திய நிலையத்தின் தலைவரும் ஜே.வி.பியின் எம்.பியுமான கே.டி.லால்காந்த இது தொடர்பாக அங்கு கூறியவை வருமாறு:அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு மூவாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படவேண்டும் என்று இந்த வருடத்திற்கான
வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது நாம் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.அந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. ஆனால் தற்போதைய வாழக்கைச் செலவின அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் இந்த 3
ஆயிரம் ரூபா அதிகரிப்புக் கூடப்போதாது.ஆகக்குறைந்தது 5 ஆயிரம் ரூபாவேனும் அதிகரிப்பு வழங்கப்பட்டால்தான் ஓரளவேனும் மக்களால் வாழ்க்கையைச் சமாளிக்கமுடியும்.
ஆனால் 5 ஆயிரம் ரூபாவும் கூடப்போதாது என்றே மக்கள் கூறுகின்றனர்.இருப்பினும், இந்த 5ஆயிரம் ரூபா அதிகரிப்பையாவது வழங்குமாறு நாம் அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் என்றார்.
No comments:
Post a Comment