வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறுகிறார் ஜனாதிபதி
ஆயுதங்களைக் கைவிட்டாலே விடுதலைப் புலிகளுடன் பேச்சு
இந்த நிபந்தனையை ஏற்றாலும் பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் எதுவும் செய்யமாட்டேன் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டால் மட்டுமே, அவர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும். அவர்கள் பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு விரும்பினால் முதலில் ஆயுதங்களைக் கைவிடவேண்டும். இவ்வாறு லண்டனில் வைத்து ""த ரைம்ஸ்'' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெட்டு ஒன்று துண்டு
இரண்டாகக் கூறியிருக்கிறார். அது மட்டுமன்றி புலிகள் தனது இந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டாலும் கூட, புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் சமாதான ஒப்பந்தம் எதையும்செய்யப்போவதில்லை என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார். லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துவிட்டு நாடு திரும்பியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு வைத்து "த ரைம்ஸ்' பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தார்.அவர் அப்போது கூறியவை வருமாறு:வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, இலங்கையின் உல்லாசப் பயணத்துறை பாதிக்கப்பட்டுள்ளமை போன்றவற்றின் மத்தியிலும் கூட நாம் விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை ஆரம்பிக்கப் போவதில்லை. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அந்த அமைப்பு முதலில் ஆயுதங்களைக் கைவிட வேண்டும்.விடுதலைப் புலிகள்தாங்கள் பலவீனமாக உள்ள சமயத்தில் சர்வதேச சமூகத்தை யுத்தநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோருவார்கள். இக்காலப் பகுதியில் அவர்கள் மீண்டும் போரிடுவதற்காகத் தம்மைப் பலப்படுத்துவார்கள். இம்முறை அவர்கள் பேச்சுகளில் ஈடுபட விரும்பினால் முதலில் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால்
பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை.விடுதலைப் புலிகள் இந்த முன் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும் கூட, விடுதலைப் புலிகளின் தலைவருடன் நான் சமாதான ஒப்பந்தம் எதனையும் செய்துகொள்ள மாட்டேன். ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை."இந்த மனிதரும், அவரைச் சுற்றியுள்ள மூன்று நான்கு அடியாட்களும் இரத்த வெறி பிடித்தவர்கள். அவர்கள் உணர்வில்லாதவர்கள்'' என்று தெரிவித்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

Posted on : Sun Jun 15 7:22:29 EEST 2008
பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆயுதங்களை கைவிடுவது சாத்தியமாகாது
சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக விடுதலைப் புலிகள் ஆயுதங்க ளைக் கைவிடுவது என்பதும் சரணடை வது என்பதும் நடைமுறையில் ஒன்று தான். அது சாத்தியமானது அல்ல. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். ஆயுதங்களைக் கைவிட்டாலேயே விடுதலைப் புலி களுடன் பேச்சு என்று ஜனாதிபதி மஹிந்த விசனம் தெரிவித்துள்ளமை தொடர்பில் கடும் விசனம்
தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டுள்ளார். அந்த அறிக்கையில் ஸ்ரீகாந்தா எம்.பி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: பேச்சுக்களை மீண்டும்ஆரம்பிப்பதற்கு முன் நிபந்தனையாக விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்று ஜனாதிபதி
கோரியிருப்பது நடைமுறைச் சாத்தியமானது அல்ல. ஆயுதமோதல் ஒன் றில் சம்பந்தப்பட்டுள்ள எந்தவொரு தரப் பும் ஆயுதங்களைக்
கைவிடுவது என்பதும் சரணடைவது என்பதும் நடைமுறையில் ஒன்றே தான். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஆயுதங்கள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை கடந்த இருபத்தைந்து வருட கால வரலாறு
நிரூபித்து நிற்கிறது. இந்த யதார்த்தம் அது ஒருவேளை கசப்பாக இருந்தாலுங் கூட முதலில் உணரப்பட வேண்டும். பயங்கரவாதம் என்பது நாடு முழுவதும் வியாபித்திருக்கும் நிலைமையில் விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து மட்டுமன்றி, அரசாங்கத் தரப்பிலிருந்தும் பயங்கரவாதம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது என்பதும் வெளிப்படையானது. இந்தநிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர சமாதா னத்தை ஏற்படுத்துவது என்பது ஒன்றும் இயலாத காரியமல்ல. போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவந்து திட்டமிட்ட குறுகியகால வரையறைக் குள் பேச்சுக்களை நடத்தி முடிக்க முடியும்.இலங்கை ஒரே நாடு என்ற அரசியற் கட்டமைப்புக்குள் தமிழைத் தாய் மொழி யாகக் கொண்டிருக்ககும் தமிழ் முஸ்லிம் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபி லாசைகளை எவ்விதம் திருப்திப்படுத் துவது என்பதுதான் கேள்வி. இது ஓர் அர சியற் சவால். இதனை நேர்மையோடும் துணிச்சலோடும் சந்திப்பதற்கு நாட்டின் அரசியற் தலைமை கடந்த ஐம்பது ஆண்டு களுக்கு மேலாக தொடர்ந்து தவறி
வந்தி ருக்கிறது.சாத்தியங்களைக் கையாளும் கலை தான் அரசியல் என்ற வரைவிலக்கணத் தைப் பின்பற்ற முனைந்தால் இனப்பிரச்சி னையின்
தீர்வுக்கான உகந்த அணுகுமு றையை அரசாங்கமும் அதன் தலைவரான ஜனாதிபதியும் வகுக்க முடியும் இப்படி அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

Posted on : Sat Jun 14 8:06:52 EEST 2008
ஒன்றாகக் குவிக்கப்பட்ட படையணிகள் எல்லாம் தோல்வியைத் தழுவுகின்ற காலம் நெருங்கிவிட்டது:எழிலன்
"இலங்கை அரசின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் இப் போது எம்மை சுற்றி நிற்கின்றன. எப்போது ஒரு ஆக் கிரமிப்புப் படை மக்கள் செறிந்து வாழும் பகுதிக்குள் நுழைகின்றதோ அப்போது அது தோல்வியை தழுவும் காலம் உரு வாகின்றது.
இதனையே அரச படைகள் எதிர்கொள்ளப் போகின்றன.'' புலிகளின் கொள்கை முன்னெடுப்பு பிரி வுப் பொறுப்பாளர் சி. எழிலன் இவ்வாறு
தெரிவித்தார்.பரந்தனில் நேற்று முன்தினம் நடை பெற்ற "வீர முரசு' நிகழ்வில் கலந்து கொண்டு சிறப் புரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரி
வித்தார்.அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:யாழ்ப்பாணத்தில் புலிகள் தாக்குதலை தொடுத்து, தரையிறங்குவார்கள் என்ற அச்ச உணர்வு இப்போது படைத்தரப்பை கிலி கொள்ளச் செய்துள்ளது. இதனால் யாழ். குடாக்கடலில் தொழிலாளர்கள் மீன் பிடிக்க படைத்தரப்பு தடை விதித்துள்ளது. அத்துடன், ஊரடங்குச் சட்ட நேரத்தை அதிகரித்து மக்களை சொல்லொண்ணா துன்பத்திற்குள்ளாக்கியுள்ளது.இதனை விட சிங்கள மக்கள் வாழும் பிரதே சங்களில் மக்கள் பெரும் அச்ச உணர்வினை சந்தித்துள்ளனர். இவ்வா றான நிலையில் படைத்தளபதி சரத் பொன்சேகா விடுதலைப் புலிகளை அழிப் பதற்கு இன்னும் சற்றுத் தூரம் தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அன்று தலைவர் பிரபாகரனை அழித்து விட்டதாக இந்திய அரசு அறிவித்தது. ஆனால் அவரை அவர்களால் நெருங்கவே முடியவில்லை.
இதேபோன்றதொரு செயற் பாட்டைத்தான் தற்போது சிங்கள மக்களுக்கு இலங்கை அரசு தெரிவித்துக்கொண்டிருக்கிறது.விடுதலைப்புலிகளின் பலம் முன்பி ருந்ததை விட தற்போது மேலோங்கிக் காணப்படுகிறது. எனவே எமது தலைவர் இலங்கை படைத்தரப்புக்கு பாடத்தை வெகு விரைவில் புகட்டுவார்.நாம், இதுவரை பெறாத வெற்றி வாய்ப்பை இராணுவம் எமக்கு கொடுத்திருக்கின்றது. அது எவ்வாறு வந்துள்ளது எனில், அரசின் போரிடும் ஆற்றல் கொண்ட படையணிகள் எல்லாம் இப்போது எம்மை சுற்றி நிற்கின்றன என்பதால் ஆகும் என்றார்

யாழை நோக்கி புலிகள் பாரிய நடவடிக்கை: புலனாய்வுத் தகவலால் உயர் விழிப்பு நிலையில் படையினர்
[ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 09:21 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் நோக்குடன் எதிர்வரும் 19 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய படை நடவடிக்கையினை
மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து குடாநாட்டில் நிலைகொண்டுள்ள
சிறிலங்காப் படைகள் முழுநேர உயர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் கல்முனை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்குச் சென்ற குடாநாட்டு மீனவர்களிடம் விடுதலைப் புலிகள் இத்தகவலை
தெரிவித்து, இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் குடாநாட்டின் கடலோரப் பிரதேசங்களான குருநகர், கொழும்புத்துறை, பாசையூர்
பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் கூறியுள்ளதாக படையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவல் மேலும்
தெரிவித்துள்ளது.
இத்தகவலை அடுத்து உயர் விழிப்பு நிலை அடைந்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்டத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி
குடாநாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியுள்ளார்.
முக்கியமாக, குடாநாட்டுக்கும் பலாலிக்குமான படையினரின் போக்குவரத்து குறித்து புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி, கண்டி வீதி ஆகியவற்றால் படையினரின் வாகனப் போக்குவரத்து இடம் பெறும்போது அந்த வீதிகளை பொதுமக்கள் 3 மணிநேரமே பயன்படுத்தலாம் என்று கடந்த 9 ஆம் நாள் முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு வருடங்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்குச் சட்டத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இரவு 9:30 மணி முதல் அதிகாலை 4:30 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்ட நேரம் தற்போது இரவு 7:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரையாக இரண்டு மணித்தியாலங்களால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குடாநாட்டுக் கடல்களில் மீன் பிடிக்கச் செல்லும் கடல் தொழிலாளர்களுக்கும் படையினர் புதிய கட்டுப்பாடுகளை விதித்து,
தாம் அறிவிக்கும் வரை தமது புதிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அறிவித்துள்ளனர்.
குடாநாட்டின் மீதான புலிகளின் நடவடிக்கை குறித்த புலனாய்வுத் தகவல் தொடர்பாக இராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார
தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளால் குடாநாட்டில் மக்களை இலக்கு வைத்து கிளைமோர் வைக்க முடியும், பிஸ்டல் குழுவாக
இயங்க முடியுமே தவிர, முழு யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவது என்பது அவர்களின் கனவுதான் என்று கூறியுள்ளார்.

இடம் பெயர்ந்த மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது அவசியம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வீரகேசரி வாரவெளியீடு 6/15/2008 12:39:24 PM -
சொந்த இருப்பிடங்களில் இருந்து இடம்பெயர்ந்திருப்போரை மீளக் குடியமர்த்த வேண்டிய பாரிய பொறுப்பு தனக்கிருக்கிறது என்றும் சொந்த இடங்களில் குடியேறி மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற
நோக்கத்தில் அதற்கான சுமுகமான நிலையை படிப்படியாகத் தோற்றுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொண்டு
வருவதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயற்பாட்டுக் குழுவின்
தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய நிலையில் முல்லைத்தீவு மற்றும்
கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை
உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தெரிவித்ததுடன், தற்காலிக ஏற்பாடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும்
சொந்த இடங்களில் இம்மக்களை மீளக்குடியேற்றி அவர்களுக்குரிய தொழில் துறைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டியது
அவசியமாகும் என்றும் அதற்குரிய சூழ்நிலையை நாம் படிப்படியாக உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றும் உணர்த்தியுள்ளார்.
எமது மக்களின் நலன்களுக்கு எதிரான தீய சக்திகளின் செயற்பாடுகள் காரணமாக இன்று குடாநாட்டில் கடற்தொழில்துறை
பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்திய அமைச்சர் இவ்வாறான தீய சக்திகளின் ஊடுருவல்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பொது மக்கள்
இடமளிக்கக் கூடாதென்றும் கேட்டுக்கொண்டார். நேற்றைய தினம் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறுமைக்கோட்டின்கீழ்
வாழ்ந்து வரும் இனங்காணப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு மற்றும் சுயதொழில் முயற்சிகளுக்கான கொடுப்பனவுகள் அமைச்சரால்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
_________________________________நோக்கத்தில் அதற்கான சுமுகமான நிலையை படிப்படியாகத் தோற்றுவிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொண்டு
வருவதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வட மாகாணத்திற்கான விஷேட செயற்பாட்டுக் குழுவின்
தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய நிலையில் முல்லைத்தீவு மற்றும்
கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்தும் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைகளை
உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் தெரிவித்ததுடன், தற்காலிக ஏற்பாடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும்
சொந்த இடங்களில் இம்மக்களை மீளக்குடியேற்றி அவர்களுக்குரிய தொழில் துறைகளில் அவர்களை ஈடுபடுத்த வேண்டியது
அவசியமாகும் என்றும் அதற்குரிய சூழ்நிலையை நாம் படிப்படியாக உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றும் உணர்த்தியுள்ளார்.
எமது மக்களின் நலன்களுக்கு எதிரான தீய சக்திகளின் செயற்பாடுகள் காரணமாக இன்று குடாநாட்டில் கடற்தொழில்துறை
பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்திய அமைச்சர் இவ்வாறான தீய சக்திகளின் ஊடுருவல்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பொது மக்கள்
இடமளிக்கக் கூடாதென்றும் கேட்டுக்கொண்டார். நேற்றைய தினம் கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறுமைக்கோட்டின்கீழ்
வாழ்ந்து வரும் இனங்காணப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு மற்றும் சுயதொழில் முயற்சிகளுக்கான கொடுப்பனவுகள் அமைச்சரால்
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
“எல்லாவற்றையும் விழுங்கி விடும் போர்"
இது 2001 பெப்ரவரியில் சரிநிகர்; இறுதி இதழில் வெளியான ஆசிரிய தலையங்கம்.

ஆம், இப்போது போர் எல்லாவற்றையும் விழுங்கிவிட
ஆரம்பித்திருக்கிறது.!ஆம், போர் எல்லாவற்றையும் விழுங்கி வருகிறது. கருத்து வெளிப்பாட்டு உரிமையை, அபிப்பிராயம் தெரிவிக்கும் உரிமையை, மனித உரிமைகளை, தொழிலாளர் உரிமைகளை, பெண்கள் உரிமைகளை, வாழும் உரிமையை என்று எல்லா உரிமைகளையும் விழுங்கி
வருகிறது. இவை எல்லாம் "மக்கார்த்தி யுகத்தை" ஞாபகமூட்டுவதாக கலைஞர்களும் எழுத்தாளர்களும் மக்கள் உரிமைகளைப்
பாதுகாக்கும் பல்வேறு அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
“நீங்கள் பயங்கரவாதிகளின் பக்கம் நிற்கப் போகிறீர்களா அல்லது எங்களுடைய பக்கம் நிற்கப் போகிறீர்களா" என்று ஈராக்கிற்கு மேல்
போர் தொடுத்த போது அமெரிக்க ஜனாதிபதி புஷ் கேட்டது போல இங்கும் ஊடகவியலாளர்களை நோக்கி கேட்டிருக்கிறார் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ச. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கிறதா இல்லையா என்பது பற்றியும் தனக்கு அக்கறை இல்லை என்கிறார் அவர்.
வடக்கு கிழக்கில் ஆரம்பித்த கைதுகளும், கடத்தல்களும், காணாமல் போதல்களும் இன்று தலைநகர் வரை வியாபித்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பாதுகாப்புத் தேடி சிறையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். கொழும்பிலும் சுற்றுச்சூழலிலும் தமிழ்
வர்த்தகர்கள் கப்பம் கேட்டுச் சிறைப் பிடிக்கப்படுகிறார்கள்.
கடற்கோள் பேரனர்த்தம் போல கிழக்கில் ஒரே நாளில் போர் ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட மக்களை அகதிகளாக்கியிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட அமைப்பு கிழக்கில் இடம் பெயர்ந்த மக்களுடைய உணவு மற்றும் அத்தியாவசியத்
தேவைகளுக்கு உதவுமாறு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
தெருவோரங்களில் எரிந்தும் எரியாததுமாக சடலங்கள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. “சுட்டவனைச் சுட்டு சுடச் சொன்னவனையும்
சுட்ட" கதையாகி விட்டது மங்கள சமரவீரவினதும்; சிறிபதி சூரியாராய்ச்சியினதும் கதை.
அரச வளங்களைத் துஷ்பிரயோகம் செய்ததாக சிறிபதி சூரியாராய்ச்சி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதே காரணத்துக்காகக் கைது
செய்வதாயின் அமைச்சரவையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் வெலிக்கடையில் தான் இருக்க வேண்டி வரும். அரசாங்கம்
விமர்சனங்களை ஏற்கத் தயாராகவில்லை என்று இந்த அரசாங்கத்தை ஆட்சியிலமர்த்திய ஜே.வி.பியே சொல்கிறது.
உலகிலேயே அதிக அமைச்சரவையைக் கொண்ட நாடு என்ற சாதனை வேறு. சுடவே "தோல்வியடைந்த நாடு" என்ற அவப் பெயரும்
உண்டு. கொலை, கடத்தல், காரணமின்றித் தடுத்து வைப்பு என்று ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடி தொடர்கிறது. உலகிலேயே
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் 2005, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கை நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது
என்கிறது சர்வதேச செய்தியாளர் பாதுகாப்பு நிறுவனம் (INSI).
எந்த இறைமையைக் காப்பதாகக்கூறி கடந்த இரண்டு தசாப்தத்திற்கு மேலாக பொருளாதார மனிதவள அழிவுகளையும் கொடுத்து போர்
புரியப்பட்டு வருகிறதோ அந்த இறைமையை அமெரிக்காவுடனான ஒரு ஒப்பந்தத்தோடு விழுங்கக் கொடுத்தாயிற்று.
ஆம், போர் எல்லாவற்றையும் விழுங்கி வருகிறது. கருத்து வெளிப்பாட்டு உரிமையை, அபிப்பிராயம் தெரிவிக்கும் உரிமையை, மனித
உரிமைகளை, தொழிலாளர் உரிமைகளை, பெண்கள் உரிமைகளை, வாழும் உரிமையை என்று எல்லா உரிமைகளையும் விழுங்கி

இந்தக் காலகட்டத்தில் தான் சரிநிகர் தனது அடுத்த காலடியை எடுத்து வைக்கிறது. மக்களை அனைத்துத் தளைகளிலிருந்தும்
விடுவிக்கப் போராடும் ஒவ்வொரு வருடனும் தனது கரங்களைப் பிணைத்துக் கொள்ள அது விரும்புகிறது. இந்த நீண்ட பயணத்தில்
வலுச் சேர்க்க வாருங்கள் என அது எல்லோரையும் நோக்கி அறைகூவல் விடுக்கிறது.

No comments:
Post a Comment