Posted on : Wed Jun 25 8:13:21 EEST 2008
வடபகுதி முன்னரங்க நிலைகளிலிருந்து மக்கள் பெரும் எண்ணிக்கையில் இடம்பெயர்வு
வடபகுதி முன்னரங்க நிலைகளில் தொடர்ந்து இடம்பெறும் பெரும் மோதல் கள் காரணமாக அந்தப் பிரதேசங்களில் இருந்து பெரும் எண்ணிக்கையான மக்கள் பாதுகாப்பான பகுதிகளை நோக்கி இடம் பெயர்ந்து வருகின்றனர்.மிகக் குறிப்பாக மன்னார் கட்டுப்பா டற்ற பகுதிகளில் இருந்தும் நெடுங்கேணி மற்றும் வவுனியா வடக்குப் பிரதேசங்க ளில் இருந்தும் மக்கள் பெரும் எண்ணிக்கை யில் இடம்பெயர்ந்து வருகின்றனர். இவர் கள் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட் டான், புதுக்குடியிருப்புப் பகுதிகளை நோக்கிச் செல்கின்றனர்.இவ்வாறு ஐ.நா.முகவர் நிலையங்க ளின் நிலையியற் குழு தனது பிந்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட் டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:வடபகுதி முன்னரங்க நிலைகளில் தொடர்ச்சியாக இடம்பெறும் மோதல்கள் காரணமாக பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால் மனிதாபிமான தொண்டு நிறுவனங்களின் செயற்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல் லைத்தீவு பிரதேசங்களின் முன்னரங்க நிலைகளில் இருதரப்புகளுக்கு இடையில் தொடர்ச்சியாக கடும் மோதல்கள் இடம் பெற்று வருகின்றன. இதனால் இப்பிரதே சங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள் ளது.இந்தப் பகுதிகளில் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பிரதே சத்தில் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் வழமையான செயற்பாடு களாக இடம்பெறுகின்றன. இவ்வாறான பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக தன் னார்வ மனித நேய தொண்டு நிறுவனங் களின் செயற்பாட்டிலும் தடங்கல் ஏற்பட் டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா மின்சார சபை தலைவரும் நிர்வாக அதிகாரிகளும் கூண்டோடு விலகல்
[செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2008, 03:08 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா மின்சார சபை பொறியியலாளர்கள் மேற்கொண்டு வந்த சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் கைவிடப்பட்டதனையடுத்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அழுத்தத்தால் சிறிலங்கா மின்சார சபை தலைவர் உட்பட உயரதிகாரிகள் அனைவரும் தமது பதவிகளிலிருந்து கூண்டோடு விலகியுள்ளனர். இதனால் மின்சார சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நிலவி வந்த முறுகல்நிலை மேலும் தீவிரமாகியிருக்கின்றது.
மின்சார சபை தலைவர் மீதான நம்பிக்கையீனம், சம்பள உயர்வு, தீர்வையற்ற வாகன இறக்குமதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த சில நாட்களாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினர் சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அரச தலைவரின் அழைப்பின் பேரில் நேற்று திங்கட்கிழமை மாலை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தினர் மகிந்த ராஜபக்சவை சந்திக்கச் சென்றனர். அங்கு மின்சார சபைத் தலைவரை அவரது பதவியை விட்டு விலக்குவதாக மகிந்த ராஜபக்ச உறுதிமொழி வழங்கியிருக்கிறார். இதனையடுத்து மின்சாரசபை பொறியியலாளர்கள் தமது போராட்டத்தைக் கைவிடுவதாக நேற்று மாலை அறிவித்தனர்.
இதனையடுத்து நேற்றிரவே மின்சார சபைத் தலைவருடன் தொடர்பு கொண்ட மகிந்த ராஜபக்ச உடனடியாக பணியிலிருந்து விலகுமாறு அவருக்கு கடும் அழுத்தம் கொடுத்திருக்கின்றார். இதனால் விரக்தியடைந்த மின்சார சபை தலைவர் உட்பட உயரதிகாரிகள் அனைவரும் தமது பதவிகளிலிருந்து கூண்டோடு விலகியுள்ளனர்.
முதலில் மின்சார சபைத் தலைவர் தனது பதவியை சொந்த விருப்பின் பேரில் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து உயரதிகாரிகளும் தமது பதவிகளை சொந்த விருப்பின் அடிப்படையில் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் அரச உயர்மட்டத்தில் பெரும் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.
அரிசி மூடைகளை வெட்டி கொட்டி சோதனையிடும் நடவடிக்கை காரணமாக கொழும்புக்கு வவுனியா அரிசி செல்வதில் தடை
வவுனியா நிருபர் 6/25/2008 2:36:04 PM -
வவுனியாவிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படும் அரிசி மூடைகளை மதவாச்சி சோதனைச்சாவடியில் சோதனைக்காக வெட்டிக்கொட்டி, வேறு பைகளில் கட்டி கொண்டு செல்லவேண்டும் என்ற புதிய சோதனை நடவடிக்கை காரணமாக வவுனியாவில் இருந்து கொழும்புச் சந்தைக்கு அரிசி அனுப்புவதை நிறுத்தியுள்ளதாக வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் இவ்வாறு கொழும்புக்கு அரிசி கொண்டு செல்லப்படுவது தடைபட்டுள்ளதாக லொறி போக்குவரத்து நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் அரிசி லொறிகள் முதலில் வவுனியா தேக்கவத்தை சோதனைச்சாவடியில் மூடைகள் முழுமையாக இறக்கப்பட்டு, சோதனையிடப்பட்டதன் பின்னர் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றன. வவுனியாவில் இருந்து 15 மைல் தொலைவில் உள்ள மதவாச்சி சோதனைச்சாவடியிலும் இதேவிதமாக அரிசி மூடைகள் லொறிகளில் இருந்து முழுமையாக இறக்கப்பட்டு கூரிய கம்பிகளினால் மூடைகள் பல இடங்களிலும் குத்திப்பார்க்கப்பட்டு சோதிக்கும் நடை முறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இவ்வாறான சோதனையின் பின்னர் அரிசி மூடைகள் மதவாச்சியில் வேறு லொறிகளில் மாற்றி ஏற்றப்பட்டு கொழும்புக்குச் செல்;ல அனுமதிக்கப்பட்டு வந்தன.
ஆயினும் கடந்த சனிக்கிழமை முதல் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இறக்கப்படுகின்ற அரிசி மூடைகளை வெட்டிக் கிழித்து அரிசியைக் கொட்டி சோதனையிட்ட பின்; வேறு பைகளில் கட்டி ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற நடைமுறை கடந்த சனி;க்கிழமை முதல் அமுல்படுத்தப்பட்டிருப்பதனால் தங்களால் அரிசியை கொழும்புக்கு அனுப்ப முடியவில்;லை என வவுனியா அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 20 லொறிகளில் கடந்த சனி;ககிழமை அனுப்பப்பட்ட அரிசி மதவாச்சியில் இருந்து மீண்டும் வவுனியாவுக்கே கொண்டு வரப்பட்டிருப்பதாக பொருட்களை எற்றிச் செல்லும் லொறி போக்குவரத்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மூடைகளில் இருந்து அரிசியைக் கீழே கொட்டி பின்னர் வேறு பைகளில் கட்டும்போது, அரிசி மூடைகளின் நிறை குறைவடைவதுடன், திறந்த வெளியில் கொட்டப்படும் அரிசியின் சுகாதாரம் பாதிக்கப்பட்டு, புழுதி, தூசி என்பவற்றுடன் மணல் கல் என்பனவும் சேரும் வாய்ப்பு ஏற்படும் என்தனால் வவுனியா அரிசி தரமற்ற நிலையிலேயே கொழும்பு சந்தைக்குச் சென்றடைய நேரிடும் என்றும் அதனால் வவுனியா அரிசியைக் குறைந்த விலைக்கே விற்க நேரிடும் என்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து இன்று வவுனியா அரசாங்க அதிபரை வவுனியா செயலகத்தில் சந்தித்து எடுத்துக் கூறிய அரிசி ஆலைகள் மற்றும் லொறி போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் இது குறித்து மாற்று நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மகஜர் ஒன்றையும் அவர்கள் அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர். இந்த விடயம் குறி;த்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட படைக்கலங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [புதன்கிழமை, 25 யூன் 2008, 05:33 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வவுனியா பாலமோட்டைப் பகுதியில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை சிறிலங்காப் படையினரின் மும்முனை முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் கைப்பற்றப்பட்ட படைக்கலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இரு நாட்களில் போராளிகள் நடத்திய துப்புரவுப்பணியிலேயே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆர்பிஜிகள் - 02,ஆர்பிஜி எறிகணைகள் - 02, ரி-56 ரக துப்பாக்கிகள் - 05, ரவைத்தடுப்பு அணிகள் - 06, ஜக்கற் ரவைக்கூடுதாங்கி அணிகள் - 03, ரவைகளுடன் ரவைக்கூடுகள் - 08, தலைக்கவசங்கள் - 04 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.மணலாறு, மன்னார் மோதல்களில் 5 படையினர் பலி- 4 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 24 யூன் 2008, 03:24 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வன்னிக் களமுனைகளில் இடம்பெற்ற மோதல்களில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். வன்னிக் களமுனைகளான மணலாறு, மன்னார் ஆகிய இடங்களிலேயே இம் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
மணலாறு பகுதியிலேயே மோதல்கள் தீவிரமாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணலாறு கிரிபென்வெவப் பகுதியில் நேற்று காலை முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் காயமடைந்தார்.
இதேபகுதியில் நேற்று பிற்பகல் 12:15 மணியளவிலும் பிற்பகல் 4:00 மணியளவிலும் மாலை 5:45 மணியளவிலும் மோதல்கள் மீண்டும் இடம்பெற்றன.
இதனையடுத்து நேற்றிரவு 8:40 மணியளவில் படையினரை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதல்களை நடத்தினர்.
இச்சம்பவங்களில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2 படையினர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை கிரிபென்பெவ வடக்குப் பகுதியில் நேற்று முற்பகல் 11:20 மணியளவில் விடுதலைப் புலிகள் மீது படையினர் திடீர் தாக்குதலை நடத்தினர்.
இத்தாக்குதலின் போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார்.
மன்னாரின் பல பகுதிகளிலும் மோதல்கள் இடம்பெற்றன.
மன்னாரில் பெரியமடு, நெடுக்கண்டல், ஆண்டான்குளம், பாலமோட்டை ஆகிய இடங்களிலேயே மோதல்கள் இடம்பெற்றன.
நேற்றைய நாள் இடம்பெற்ற இம் மோதல்களில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment