இந்திய அமெரிக்க உத்தேச அணுசக்தி உடன்படிக்கை தொடர்பாக ஆளும் காங்கிரஸ் நெருக்கடியான கட்டத்தில் தற்போது உள்ள நிலைமையில்
தமிழ்நாட்டில் இந்தியப் பிரதமர் ஆதரவைப் பெற்றிருக்கிறார்.
இதனால், தமிழ்நாட்டிலுள்ள ஆதரவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை கவனமாக கையாள வேண்டிய தேவை பிரதமருக்கு உள்ளது.
பிரதமருக்கு இது தொடர்பாக எந்தவொரு யோசனையையும் சமர்ப்பிப்பதற்கு முன்பாக கொழும்பின் உண்மையான சூழ்நிலையை அறிந்து
கொள்வதும் இந்தியத் தூதுவின் வருகையின் ஓரங்கமாக இருக்கும்.
இருதரப்பு , பலதரப்பு விவகாரங்களின் சிக்கலான பரிணாமத்தைக் கருத்திற் கொண்டால் இந்திய உயர் நிர்வாக மட்ட அதிகாரிகளடங்கிய
தூதுக்குழுவை இலங்கைக்கு அனுப்புவதைத் தவிர வேறு சிறந்த வழியாக எதுவும் இருக்க முடியாது.
ஆனால், நிர்வாக அதிகாரிகளால் பல யோசனைகளையே வழங்க முடியும். செயற்பாடுகளுக்கு அரசியல் விருப்பம் தேவைப்படுகிறது.
அதுவே இந்தியாவின் கொள்கையிலிருந்துவரும் கவலையான விடயமாகும். இந்தியாவிடமிருந்து புதிய முன் முயற்சிகள் ஏதாவது
ஏற்படுமாக இருந்தால் அது எதிர்வரும் வாரங்களில் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்புகளின்போது தலைப்புச் செய்திகளாக
இடம்பிடிக்கும் . அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.
No comments:
Post a Comment