Saturday, 28 June 2008

இருதலை நாகம்:இந்திய விஸ்தரிப்புவாதம், சிங்களப் பேரினவாதம்.

மூன்று ஜெயசிக்குறு நடவடிக்கைகளுக்கு எதிராக புலிகள்: கேணல் தீபன் [வெள்ளிக்கிழமை, 27 யூன் 2008, 07:57 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
சிங்களப் படைகளின் மூன்று ஜெயசிக்குறு நடவடிக்கைகளை ஒரேவேளையில் நாம் எதிர்கொண்டு வருகின்றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். போர் முனைகளில் சிறப்பாகச் செயற்பட்ட பூநகரிப் படையணிப் போராளிகளை மதிப்பளிக்கும் நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஜந்து ஆண்டுகால அமைதிச் சூழலை முறித்துக்கொண்டு சிங்கள அரசு தமிழ் மக்கள் மீது பெரும் போரைத் தொடுத்துள்ளது. மக்களைக் காப்பதற்காக பலமுனைகளில் நாம் போராடி வருகின்றோம்.
பூநகரிப் படையணி களமுனைகளில் பல வெற்றிகளைப் படைத்திருப்பதை தளபதிகள் ஊடாக அறிந்தேன். மன்னார் களமுனையில் அடம்பன் பகுதியில் நிகழ்ந்த சண்டைகள் இப்படையணியின் செயற்பாட்டின் திறனை வெளிப்படுத்தியது.
ஒவ்வொரு போராளியினதும் செயற்பாடு அர்ப்பணிப்பு என்பவற்றினால்தான் களமுனைகளில் எமக்கு வெற்றியைத் தேடித் தருகின்றன. எதிரியின் நடவடிக்கைகளை நாள்தோறும் முறியடிப்பதில் போராளிகளின் அர்ப்பணிப்பு என்பது அளவீடு செய்ய முடியாதது.
எமது பகுதிகளை வன்பறிப்புச் செய்ய வேண்டும் என்ற சிங்களப் படைகளின் திட்டங்களுக்கு போராளிகள் தகுந்த பதிலடிகள் கொடுத்து வருகின்றனர். சிங்களப் படை நினைத்தபடி வெற்றிகளை அடைய முடியாதவர்களாக உள்ளனர்.
சிங்களப் படையினர் மூன்று ஜெயசிக்குறுக்களை இன்று நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். வட களமுனை, மன்னார், மணலாறு, நான்காவதாக வவுனியாவிலும் ஜெயசிக்குறு தொடங்கவுள்ளதாக அறிக்கைகள் விடுத்து வருகின்றன.
சிங்களப் படைகள் எந்த நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வெற்றி அடையப் போவதில்லை. எதிரிகள் இழப்புக்களை மூடிமறைத்து வருகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 4,000-க்கும் அதிகமான சிங்களப் படையினர் உயிரிழந்துள்ள போதும் இழப்புக்களை சிங்களப் படையினர் மூடிமறைத்து வருகின்றனர் என்றார் அவர்.

இலங்கைத் தமிழருக்கு நம்பிக்கை உணர்வை ஏற்படுத்தும் ஒரு"வார்த்தை'யை கூட வெளிப்படுத்தாத இந்திய தூதுக்குழு
[28 - June - 2008]
* வழமையான பாணியிலேயே அறிக்கைகள்; சுட்டிக்காட்டுகிறார் கேணல் ஹரிகரன்
இலங்கை தொடர்பான புதுடில்லியின் நிலைப்பாட்டில் எந்தவொருமாற்றத்தையும் வெளிப்படுத்துவதாக இந்திய உயர் மட்டத் தூதுக் குழுவின் கொழும்பு விஜயம் அமைந்திருக்கவில்லையென சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் வழமையான பாணியிலான அறிக்கைகளையே மீண்டும் இந்தியா வெளியிட்டிருப்பதாகவும் இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் பாதுகாப்பு, நம்பிக்கை உணர்வுகளை ஏற்படுத்த வேண்டிய தேவை குறித்து ஒரு வார்த்தையைத்தானும் உயர் அதிகாரிகள் குழு தெரிவித்திருக்கவில்லையென்றும் ஓய்வு பெற்ற இந்திய இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஆர்.ஹரிகரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலை கொண்டிருந்த காலத்தில் புலனாய்வுத் துறைக்கு தலைமை தாங்கியிருந்த ஹரிகரன் இந்திய உயர்மட்டத் தூதுக்குழுவின் கொழும்பு விஜயம் தொடர்பாக தெரிவித்திருப்பதாவது;
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்பு செயலாளர் விஜேசிங் ஆகியோர் அடங்கிய இந்திய உயர் மட்டத் தூதுக்குழுவின் கொழும்புக்கான திடீர் விஜயம் இலங்கை அரசியல்வாதிகள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பரந்துபட்ட ஊகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
உள்நாட்டு அரச நிர்வாகம் இதுவொரு சிரமமான நடவடிக்கையென தெரிவித்துக் கொள்வதற்கு ஆரம்பத்தில் முயன்றது. 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டுடன் தொடர்புபட்ட விடயங்களை பேசுவதற்காகவே முக்கியமாக இந்த விஜயம் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், தூதுக்குழுவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலைமையில் வெளிவிவகார, பாதுகாப்பு அதி உயர் அதிகாரிகளை உள்ளடக்கமாக கொண்டிருந்தமை இது கிரமமான நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டதொன்று என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, படைத்தளபதிகள், அரசஉயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர் அத்துடன் வடக்கு ஆலோசனை சபைக்குத் தலைமைதாங்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உட்பட தமிழ் அரசியல் தலைவர்களையும் தூதுக்குழு சந்தித்திருந்தது.
இந்தியத் தூதுக்குழு யுத்தம் நடத்துவது குறித்து எந்த அறிவுறுத்தலையும் விடுக்கவில்லையென ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தனா பின்னர் விளக்கமளித்தார். யுத்தம் தொடர்பாகவே தூதுக்குழு அறிவுறுத்தல் விடுக்க வருகை தந்ததாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் அமைச்சர் யாப்பா இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், சமாதானப் பேச்சுக்களை மீள ஆரம்பிப்பது குறித்து இந்தியா கலந்துரையாடியது சமாதானப் பேச்சுக்கு செல்லுமாறு இந்தியா எப்போதுமே எம்மிடம் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், விடுதலைப் புலிகள் பேசுவதற்கு முன், ஆயுதங்களை கைவிடவேண்டுமென ஜனாதிபதி தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் அதனைச் செய்தால் அரசியல் தீர்வுக்காக அவர்களை அணுக அரசு தயாராகவுள்ளது என்று குறிப்பிட்டதுடன் அமைச்சர் யாப்பா, இந்தியாவில் விரைவில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தமிழர் பிரச்சினை இந்தியாவுக்கு கரிசனையை ஏற்படுத்தும் விடயமென்ற ரீதியில் இந் நெருக்கடி தொடர்பாக இந்தியத் தூதுக்குழு ஆராய விரும்பியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் நடவடிக்கைகளை அரசியல் திரை கொண்டு அலங்கரிக்கும் விதத்தில் காரணம் கூறுவது அதாவது, அமைச்சர் மிகச் சிறிய விடயமாக்கிக் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக் கொள்வதற்கு கடினமான விடயமாகும்.
இலங்கை இந்திய உறவுகளில் மூன்று விடயங்கள் தொடர்ந்து இருந்து வருபவையாகும். இரு நாடுகளுக்கிடையிலான உயர் மட்டத் தொடர்பாடலில் இந்த விடயங்கள் மாற்றமின்றி இடம்பிடித்து வருகின்றன. தந்திரோபாய பாதுகாப்பு கரிசனைகள், சர்வதேச உறவுகள் விவகாரங்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் ஆகியவையே மூன்று பிரதான விடயங்களாகும். ஏனைய சகல விடயங்களும் ஏதோவொரு வழியில் இந்த மூன்று பிரதான விடயங்களுடன் தொடர்பு பட்டவையாகவே உள்ளன. இந்நாட்களில் இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கு இந்தியாவின் உதவி, இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகம் என்பன முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. ஆனால், இந்த விடயங்கள் பிராந்திய மற்றும் சர்வதேச சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டே முன்னுரிமையளிக்கப்படுகின்றன.
தந்திரோபாய விவகாரங்களானவை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் முன்னேற்றத்தையும் சீனா, பாகிஸ்தானிடமிருந்து ஆயுதங்கள், யுத்ததளபாடங்களை இலங்கை கொள்வனவு செய்வதையும் தமிழ்நாட்டிலிருந்து விடுதலைப்புலிகளுக்கு கிடைக்கும் வளங்கள் தொடர்பாகவும் பாக்கு நீரிணையில் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளையும் உள்ளடக்கியுள்ளதாக இருக்கின்றது.
இலங்கையில் யுத்தம் பாதுகாப்புப்டையினருக்கு சாதகமாக இடம் பெறுகின்றது. யுத்தத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டால் 2002 இல் கொண்டிருந்த அந்தஸ்தை புலிகள் தக்கவைத்துக் கொள்வது மிகவும் கடினமானதாகிவிடும். இலங்கைத் தமிழர்களின் முழுமையான பேச்சாளராக இருப்பதற்கு தேவைப்படும் ஆகக்குறைந்தளவு நம்பகத்தன்மையை தக்கவைத்துக் கொள்வது கடினமானதாகிவிடும். அது இடம்பெறாமலும் போகக்கூடும்.
கொழும்பிடமிருந்து கடுமையான அறிக்கைகள் வெளியிடப்படுகின்றமை இதனை தெளிவுபடுத்துகிறது. பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு முன்னர் புலிகள் ஆயுதங்களை கீழேபோட வேண்டுமென்ற முன்நிபந்தனையை கொழும்பு திரும்பத்திரும்ப கூறிவருகின்றது. விடுதலைப் புலிகள் யதார்த்தத்திற்கு ஏற்ப செயற்பட முன் வருவதாக தென்படவில்லை. எந்தவொரு அர்த்தமுள்ள அரசியல் பேச்சுவார்த்தைக்கும் அதிகார அந்தஸ்து, சமநிலை முக்கியமானது என்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன் கூறியுள்ளார்.
இப்போது இலங்கை சம அந்தஸ்தோ, அந்தஸ்தில்லையோ பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டவில்லை. இதனையே அவர்கள் இந்தியத் தூதுக்குழுவுக்கு கூறியிருக்கும் சாத்தியம் தென்படுகிறது.
இத்தகைய சூழ்நிலைகளில் கடந்தகால அனுபவமானது ஏதாவதொரு விதத்தில் வழிகாட்டுமாக இருந்தால் மேலும் ஒரு தடவை விடுதலைப் புலிகளை பத்திரமாக இறக்கி விடுவதற்காக வெளிநாடுகளிலுள்ள தமிழர்கள் இந்தியா மீது பார்வையைச் செலுத்தும் சாத்தியம் உள்ளது. ஆனால், இதுதொடர்பாக இந்தியா பரந்த உள்ளம் கொண்டதாக இருக்கும் சாத்தியம் இல்லை. இதற்கு இரு காரணங்கள் உள்ளன. இந்தியாவின் தலையீடு தொடர்பாக புலிகளின் நிலைப்பாடு தெளிவற்றதாக உள்ளது. என்று புலிகளின் அரசியல் ஆலோசகர் கே.வி.பாலகுமாரன் தெரிவித்திருக்கிறார்.
இது இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்தவொரு நாட்டுக்குமே மிகக்கடினமான இலக்காகும். அத்துடன் இலங்கைதனித் தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடர்பாக தனது மனதை இந்தியா மாற்றிக் கொள்ளும்வரை இலங்கையின் மோதலுக்குத் தீர்வு காண்பதற்கான எந்தவொரு ஆரோக்கியமானதும் பயன்தருவதுமான பங்களிப்பை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை தொடர்பான இந்தியாவின் அடிப்படைக் கொள்கைக்கும் இது எதிரானதாகும்.
இந்தியத் தூதுக் குழுவினரை ஆர்.சம்பந்தன் சந்தித்தபோது, இந்த விடயம் கலந்துரையாடப்பட்ட சாத்தியம் காணப்படுகிறது. சந்திப்பின் பின்னர் அவரிடமிருந்து வெளிப்பட்ட எதிர்மறையான கருத்துகள் விடயம் தொடர்பான முன்னைய நிலைப்பாட்டிலிருந்தும் விடுபட்டதற்கான நிலைமையை வெளிப்படுத்தவில்லை. முன்னர் பல தடவைகள் தெரிவித்த கருத்துக்களையே இந்தியதரப்பு மீண்டும் தெரிவித்திருக்கின்றமை இதற்கு சான்றாக காணப்படுகின்றது.
போரை முடிவுக்கு கொண்டுவந்து தமிழ்ச் சமூகத்துக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் பேச்சை ஆரம்பிக்க வேண்டுமென்ற அறிக்கையே மீண்டும் மீண்டும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ் மக்கள் மத்தியிலான பாதுகாப்பு, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்பது பற்றியோ அல்லது யுத்தத்தில் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் தொடர்பாகவோ ஒரு வார்த்தை தானும் கூறப்படவில்லை. பொது மக்களுக்கு எதிரான புலிகளின் வன்செயல் குறித்து கண்டனம் தெரிவிக்கும் வார்த்தையும் தெரிவிக்கப்படவில்லை.
இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் மாற்றமில்லை என்பதையே இந்தியத் தூதுக்குழு சுட்டிக்காட்டியுள்ளமை இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவின் கொள்கையானது முன்பிருந்த நிலையிலேயே தொடர்வதற்கான தன்மை வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இரகசியமான மாற்றங்களுக்கான முயற்சிகள் இடம்பெற்றிருப்பதற்கான சாத்தியம் இல்லை. ஜே.வி.பி. மற்றும் சிங்கள உரிமைக்கான சக்திகள் குற்றச்சாட்டு தெரிவிக்குமாற் போன்று யுத்தம் தொடர்பான இந்தியத் தலையீட்டுக்கான சாத்தியங்கள் இல்லை.
எவ்வாறாயினும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவரை இந்தியாவுக்கு வருகை தருமாறு இந்தியர்கள் அழைப்பு விடுத்ததாக வெளியான செய்திகள் தமிழ்க் கூட்டமைப்பின் சட்ட பூர்வமான பிரதிநிதித்துவத்திற்கு எதிர்பார்ப்பை கொடுத்திருக்க முடியும். இந்த விஜயம் தமிழ் கூட்டமைப்புக்கு ஒரு சமாளிப்பை வழங்குவதாகவும் இருக்க முடியும்.
"தமிழ்நாடு செயற்படுவதற்குரிய நேரம்' என்ற தலைப்பில் தமிழ் நெற் இணையத் தளத்தில் பத்தியொன்று எழுதப்பட்டிருந்தது. அது தமிழ் பிரச்சினையில் இந்தியாவின் ஆர்வம் தொடர்பாக அதிகளவிலான எதிர்பார்ப்புகளுடன் புலிகள் இல்லை. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அதிகாரத்திலிருக்கும் வரை புலிகளுக்கு சாதகமான நிலைமைக்கான முன்னேற்றங்கள் ஏற்படும் சாத்தியங்கள் இல்லை. இலங்கை நெருக்கடி தொடர்பாக நிர்வாக அதிகாரிகள் மட்டத்திற்கு அப்பால் சென்று கையாள்வதற்கு முடியாத அல்லது விருப்பமற்ற நிலைமையே தற்போது இந்திய ஆட்சி மட்டத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக எத்தகைய வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பான மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ள அடுத்த பொதுத்தேர்தலை தமிழ் நாட்டு அரசியல் கட்சிகள் பயன்படுத்த வேண்டும் என்று அக்கட்டுரையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது . அந்த எதிர்பார்ப்புகள் நடைமுறை சாத்தியத்திற்கு அப்பாற்பட்டவையாகும்.
இதேவேளை, சீனா, பாகிஸ்தானிடமிருந்து இலங்கை ஆயுதங்களைக் கொள்வனவு செய்யும் விடயம் தொடர்பாக இந்தியத் தூதுக்குழுவின் பேச்சுவார்த்தையில் நிச்சயமாக ஆராயப்பட்டிருக்கும். ஒவ்வொரு சந்திப்புகளின் போதுமே இது பிரதான விடயமாக இடம்பிடிக்கும் சாத்தியம் உள்ளது.
அடுத்ததாக சார்க் உச்சிமாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் கொழும்புக்கு விஜயம் மேற்கொள்வது என்பது தமிழ்நாட்டில் அரசியல் எதிர்பார்ப்புகளை தோற்றுவிக்கும் விடயமாகும். இலங்கை தொடர்பான கொள்கைகளில் சில முன் முயற்சிகளை ஆரம்பிப்பது எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டிலுள்ள தோழமைக் கட்சிகளுக்கு உதவக்கூடும்.
இந்திய அமெரிக்க உத்தேச அணுசக்தி உடன்படிக்கை தொடர்பாக ஆளும் காங்கிரஸ் நெருக்கடியான கட்டத்தில் தற்போது உள்ள நிலைமையில் தமிழ்நாட்டில் இந்தியப் பிரதமர் ஆதரவைப் பெற்றிருக்கிறார். இதனால், தமிழ்நாட்டிலுள்ள ஆதரவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விதத்தில் இலங்கைத் தமிழர் விவகாரத்தை கவனமாக கையாள வேண்டிய தேவை பிரதமருக்கு உள்ளது.
பிரதமருக்கு இது தொடர்பாக எந்தவொரு யோசனையையும் சமர்ப்பிப்பதற்கு முன்பாக கொழும்பின் உண்மையான சூழ்நிலையை அறிந்து கொள்வதும் இந்தியத் தூதுவின் வருகையின் ஓரங்கமாக இருக்கும்.
இருதரப்பு , பலதரப்பு விவகாரங்களின் சிக்கலான பரிணாமத்தைக் கருத்திற் கொண்டால் இந்திய உயர் நிர்வாக மட்ட அதிகாரிகளடங்கிய தூதுக்குழுவை இலங்கைக்கு அனுப்புவதைத் தவிர வேறு சிறந்த வழியாக எதுவும் இருக்க முடியாது.
ஆனால், நிர்வாக அதிகாரிகளால் பல யோசனைகளையே வழங்க முடியும். செயற்பாடுகளுக்கு அரசியல் விருப்பம் தேவைப்படுகிறது. அதுவே இந்தியாவின் கொள்கையிலிருந்துவரும் கவலையான விடயமாகும். இந்தியாவிடமிருந்து புதிய முன் முயற்சிகள் ஏதாவது ஏற்படுமாக இருந்தால் அது எதிர்வரும் வாரங்களில் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்புகளின்போது தலைப்புச் செய்திகளாக இடம்பிடிக்கும் . அதுவரை நாம் பொறுத்திருக்க வேண்டும்.

No comments: