இலங்கையில் 'இயற்கை அனர்த்தம்'?!
விவசாயிகள் ஏழைக்குடிமக்கள் மீது மற்றொரு தாக்குதல்.
______________________________
செய்திகள்:
தெற்கிலும் மலையகத்திலும் தொடர்ந்து கடும் மழை [02 - June - 2008] ]
* பல கிராமங்கள் வெள்ளத்தில் 27 ஆயிரம் மக்கள் இடம்பெயர்வு நாட்டின் தெற்கு மற்றும் மலையக பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் கடும் மழையினால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6
ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 27 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், நீர்த் தேக்கங்கள் பலவும் உடைப்பெடுக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடும் மழையினால் பல இடங்களில் போக்குவரத்துகள், மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண உதவிகளையோ மீட்பு நடவடிக்கைகளையோ மேற்கொள்ள முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை, கேகாலை மாவட்டங்களே மழையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டம்
களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழையினால் இதுவரை 2 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன், களனி கங்கையின் நீர் மட்டம்
5.2 அடியாக உயர்ந்துள்ளதனால் பியகம, வெல்லம்பிட்டி மற்றும் சீத்தாவத்த பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு சகல
அதிகாரிகளுக்கும் இடர் முகாமைத்துவ அநர்த்த சேவைகள் அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரியில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், சுமார் 4 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து ஆலயங்களிலும்
விகாரைகளிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் திருமதி மாலினி எம்.பேமரட்ன தெரிவித்தார்.
கலவான பகுதியில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் சுமார் 400 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில்
தஞ்சமடைந்துள்ளன.
இரத்தினபுரி நகரிலுள்ள களுகங்கையின் நீர் மட்டம் 21 அடி வரை உயர்ந்துள்ளமையால் நகரில் சுமார் 100 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இங்கிருந்து வெளியேறிய மக்கள் தத்தமது உறவினர் வீடுகளிலும் மற்றும் இரத்தினபுரி ஜின்னத் பள்ளிவாசல், முத்துவமூவகம விகாரைகள் உள்ளிட்ட
பல மதஸ்தாபனங்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இவ்வாறு தஞ்சமடைந்தவர்களுக்கு இதுவரை எந்தவிதமான உணவுப் பொருட்களும் வழங்கப்படவில்லை.
இதேவேளை, இரத்தினபுரி, அயகம, நிவித்திகலை, குருவிட்ட, எலாபத்த போன்ற செயலகப் பிரிவுகளிலுள்ள கரன்கொடை, எலபாத்த, அங்கடுவ,
கொடிகமுவ, திருவானகட்டை, கொஹவாகம, தேவாலகாவ, கொட்டாமுள்ள உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனாலும், எவ்விதமான உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை. இரத்தினபுரி
இறக்குவான, இரத்தினபுரி பாணந்துறை, பலாங்கொடை இரத்தினபுரி, மத்துகம களுத்துறை, மத்துகம பாணந்துறை, பொரணுவ காவத்தை உள்ளிட்ட பல
வீதிகளில் சிறு சிறு மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. எனினும், போக்குவரத்துக்கு எவ்வித பாதிப்புமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்யும் அறிகுறிகள் காணப்படுவதால், வெள்ள அபாயமுள்ள பகுதியிலிருந்து மக்களை வெளியேறுமாறு
இரத்தினபுரி மாநகர சபை மற்றும் இடர், அநர்த்த முகாமைத்துவ திணைக்களம் என்பன ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்தவண்ணம் உள்ளன.
இடர் முகாமைத்துவ திணைக்களம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றது.
இது இவ்வாறிருக்க, கலவான பகுதியிலுள்ள கிராமமொன்று நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இது சம்பந்தமான முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லையென மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. நீர் மட்டம் அதிகரித்த காரணத்தினால் இரத்தினபுரி களுத்துறை மாவட்ட எல்லையிலமைந்துள்ள குக்குளுகே கங்க நீர்த் தேக்கத் திட்டத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெகியோவிட்ட நகரத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளமையினால் பல வர்த்தக நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மாத்தறை மாவட்டம் இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக
மாத்தறை மாவட்ட செயலாளர் காமினி ஜயசேகர தெரிவித்தார்.
மொறவக்க, போருபிட்டிய, சியம்பலாகொட, மாலிம்பட உட்பட பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், பல பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தெனியாய காலி பிரதான வீதியில் ஓலகந்த என்னும் இடத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்தது. ஜின்கங்கை, நில்வள கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அத்துடன் பிடபெத்தர உடுகம, மொகவக்க இனிதும ஆகிய பாதைகளில் வெள்ளம் காரணமாக போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கிறது.
இனிதும பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இனிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரன்ஜித் முனசிங்க தெரிவித்தார்.
இதுவரையில் மாத்தறை மாவட்டத்தில் 75 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதாகவும் மேலும் இந்த நிலை அதிகரிக்க
வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மாத்தறை நகரில் உள்ள பாத்திமா மாவத்தை, பதுத்தா வீதி, காளி தாசர் வீதி, சேரம் முதலி மாவத்தை, ஆஸ்பத்திரி வீதி என்பன வெள்ளத்தில்
மூழ்கியுள்ளதால் அப்பிரதேச மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாது சிக்கியுள்ளனர்.
மாத்தறையில் இருந்து கம்புறுப்பிட்டிய, ஹக்மன, ஊருபொக்க பகுதிகளுக்கு செல்லும் வீதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. இதனால் மாத்தறையில் இருந்து தூர இடங்களுக்கான பஸ் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
தெனியாய இறக்குவானை வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்தப்பகுதி மக்கள் இடம்பெயந்துள்ளனர்.
அக்குரஸ்ஸவில் இடிமின்னல் தாக்கியதால் 11 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். காலி மாவட்டத்தில் ஹினிதும, தவளம பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.
அக்குரஸ்ஸ, தெனியாய பிரதேசங்களில் தேயிலை மற்றும் றபர் தோட்டங்களில் வாழும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அக்குரஸ்ஸ போருவ பள்ளி வாசலைச்சுற்றி வெள்ளம் தேங்கியுள்ளதால் அப்பிரதேசத்தில் வாழும் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன.
களனிகங்கையின் நீர்மட்டம் உயர்வு
களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதனையண்டிய பகுதிகளில் வெள்ள அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பியகம, யபரலுவ,
மல்வானை, மாபிடிகம, கந்திய வலவ்வ போன்ற பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கியிருப்பதுடன், அப்பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.
இதனால் இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்கள் வீடுகளிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளன.
பியகம பிரதேச செயலாளர் பிரிவினர் வெள்ளத்தில் இடம் பெயர்ந்தவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி வருகின்றனர். மல்வானை ரக்சபான
மற்றும் மல்வானை நகரும் நீரில் மூழ்கியுள்ளதால் மல்வானை கொழும்பு பிரதான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதோடு, நகர கடைகளும்
மூடப்பட்டுள்ளன.
இடம்பெயர்ந்த மக்களுக்கான உலர் உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளும் மல்வானையில் உள்ள சமூக சேவைகள் அமைப்புகள் மூலம்
தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, இரத்தினபுரியில் 110 மில்லிமீற்றர் ஆகக்கூடிய மழைவீழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 35.2 மில்லிமீற்றரும்
நுவரெலியா மாவட்டத்தில் 25.9 மில்லிமீற்றரும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
களுகங்கையின் நீர் மட்டம் 20 அடி உயருமாயின் இரத்தினபுரிமாவட்டம் நீரில் மூழ்கிவிடும் என்று அநர்த்த முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.
களுத்துறையில் ஏற்பட்டுள்ள மன்சரிவினால் 45 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக. தேசிய அநர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அக்குறஸ்ஸவில் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்குநிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 கோடியே 20 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்படவுள்ளது. இதன்படி இரத்தினபுரி மாவட்டத்துக்கு 1 கோடி ரூபாவும் காலி, களுத்துறை மாவட்டங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. அனைத்து மாவட்ட மக்களையும் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Posted on : Mon Jun 2 8:17:21 EEST 2008
தெற்கில் பெரு வெள்ளத்தால் 1,30,000 பேர் இடம்பெயர்வு! இரத்தினபுரி நகரம் நீரில் மூழ்கும் அபாயம்
கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, களுத்துறை, காலி, கேகாலை ஆகிய ஆறு மாவட்டங் களில் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும்
பேய் மழை காரணமாகப் பெருவெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தினால் சுமார் 26,000 குடும் பங்களைச் சேர்ந்த 1,30,000பேர்
இடம்பெயர்ந்தும் பாதிப்புற்றும் உள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இந்த மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், தாழ்ந்த பகுதிகளில் இருந்து மக்களை இடம் பெயருமாறு மேற்படி நிலையம் கேட்டுள்ளது.கொழும்பு மாவட்டத்தில் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைவதால், அதன் கரையில் உள்ள மக்களை இடம் பெயருமாறு கேட்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வரை ஐவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.இரத்தினபுரி நகரம் நீரில் மூழ்கிடும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.களுத்துறை, காலி, கேகாலை, இரத்தி னபுரி ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்ச ரிக்கப்பட்டுள்ளது.வெள்ளம் பாதிக்கப்பட்ட பிரதேச மக்க ளின் உடனடி நிவாரணப் பணிக்காக 14.05 மில்லியன்ரூபா அரசாங்கத்தினால் ஒதுக் கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்தில் பெருமளவு மக்கள் கடும் மழை காரணமாகப் பாதிக்கப் பட்டுள்ளனர் எனத் தேசிய இடர் நிவாரணசேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.பாலிந்தநுவர, புளத்சிங்கள பகுதிகளே மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதற்காக நீர்த்தேக்கங்களின் வான் தகவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான
இடங்களுக்குச் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.கடும் காற்றினால் பல இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.களுத்துறை மாவட்டத்திலும் மண் சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட,கலவானை, அயகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கடும் மழை வெள்ளம் காரணமாக மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.பதுரலிய நகரம் முற்றுமுழுதாக நீரில் மூழ்கியுள்ளது.இதேவேளை, தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக பல முக்கிய வீதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.மத்துகமவிலிருந்து கலவானை, கெலின் கந்தப் பகுதிக்கு செல்லும் வீதியில் போக்குவரத்துத் தடைப்பட்டுள்ளது. அக்குரஸ்ஸவிற்கான பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.இரத்தினபுரி பாணந்துறை நெடுஞ்சாலையில் பல பகுதிகளும் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று வெள்ளப்பெருக்குக் காரணமாக அவிசாவளை கொழும்பு வீதியும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது.கடுவெல , ஜாஎல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். களனி ஆற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுகின்றது.இரத்தினபுரிப் பகுதிகளிலேயே கடும் மழை பெய்ததாகக் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இரத்தினபுரியில் 110.2 மில்லிமீற்றர் மழையும் கொழும்பில் 35.2 மி.மீ . மழையும் பெய்துள்ளது. இரத்தினபுரியில் களுகங்ககை ஆற்றின் நீர்மட்டம் 19 அடியாகக் காணப்படுகின்றது. இது 20 அடியாக அதிகரித்தால் அந்த நகரம் நீரில் மூழ்கும் அபாயமுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மத்துகமப் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரை ஹெலிக்கொப்டரின் உதவியுடன் காப்பற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment