Monday, 30 June 2008

இந்திய விஸ்தரிப்புவாதத்தின் பத்துக் கட்டளைகளும் இலங்கை உழைக்கும் மக்களின் கடமைகளும்.

இந்திய விஸ்தரிப்புவாதத்தின் பத்துக் கட்டளைகளும் இலங்கை உழைக்கும் மக்களின் கடமைகளும்.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்குள் அத்துமீறி தான்தோன்றித்தனமாக ஊடுருவிய மூன்று இந்தியவிஸ்தரிப்புவாத அரசின் அரசியல் இராணுவ அதிகாரிகள் இலங்கை மக்களுக்கு பத்துக்கட்டளைகளை இட்டுள்ளனர்.பக்ஸபாசிஸ்டுக்கள் இக்கட்டளைகளை பணிந்து ஏற்று இந்தியாவுக்கு அடிபணிந்துள்ளனர்.
அ) ஈழத்தமிழ் தேசிய இன விடுதலைப்புரட்சியை நசுக்க ஏகாதிபத்தியவாதிகளும், இந்திய விஸ்தரிப்புவாத அரசும், பக்ஸ பாசிஸ்டுக்களும் ஒரே குரலில் ஒலித்த அரசியல் இலங்கையின் இறைமை.
ஆ) இந்தப் பத்துக்கட்டளைகளில் ஒவ்வொன்றும் இலங்கை மக்களின் இறையாண்மையை மீறுகிறது என்பது வெளிப்படை!

இ) இது நான்கு உண்மைகளை நிரூபணம் செய்கிறது:
1) ஈழத் தமிழ்த் தேசிய இன ஒடுக்குமுறைக்கு துணைபோன ஒடுக்கும் சிங்கள பெரும் தேசிய இனம் தனது அனைத்து ஜனநாயக உரிமைகளையும் இழந்துவிட்டது.
2) ஒடுக்கும் சிங்களப் பேரினவாத அரசு தனது அரைக்காலனித்துவ சுதந்திரத்தையும்
இழந்து இந்தியாவின் முழு அடிமை ஆகிவிட்டது.
3) இந்தியாவை ஈழதேசிய விடுதலைப்புரட்சியின் நண்பனாக்கக்கூடும் என்கிற புலிப்பிரச்சாரக் கற்பிதம் பொய்யாகிப் போயுள்ளது.
4) 'ஏகாதிபத்தியம் தேசிய விரோதி, ஒரு தேசிய இனத்தை ஒடுக்கி ஆளும் எந்தத் தேசிய இனமும் தனது சுதந்திரத்தை உறுதிசெய்ய முடியாது.'என்கிற மார்க்சிய லெனினிய மா-ஓ-சே துங் கோட்பாடு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய மூவர் குழுவின் பத்துக் கட்டளைகள்:
(1)

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சருக்கே இந்த விடயம் உயர்மட்டக் குழுவினர் கட்டுநாயக்கவில் வந்து இறங்கிய பின்னரே தெரியவந்தது.
(2)
இனிமேல் பாகிஸ்தான் அதிகாரிகள் எவர் சிறிலங்காவுக்கு வருவதாக இருந்தாலும் அவர்களின் வருகை குறித்து சிறிலங்கா முன்கூட்டியே இந்தியாவுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
(3)
"சீனா பாகிஸ்தான் ஆகியவற்றிடமிருந்து சிறிலங்கா மேற்கொள்ளும் ஆயுதக்கொள்வனவை உடனடியாக நிறுத்த வேண்டும்.தேவையான ஆயுதங்களை இந்தியா வழங்கும்"
(4)
நம்பிக்கையின் அடிப்படையில் சிறிலங்காவுடன் உறவு வைத்துக்கொள்ள இந்தியா தயாராகவுள்ளது.அதற்கு சிறிலங்கா தயார் இல்லை என்றால் அதற்கேற்றவாறு இந்தியாவும் செயற்படும்.
(5)
இந்தியப் பிரதமரின் வருகையின் பொருட்டு இலங்கை நாட்டுக்குள் இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
(6)
"இந்திய மத்திய அரசு இரு பரிமாண ராடார்களை சிறிலங்காவுக்கு
வழங்கியது. சிறிலங்கா இராணுவத்துக்கான முக்கிய பயிற்சிகளை வழங்கியது. விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை கண்டுபிடித்து அழிக்க உதவியதுடன் அவர்களின் ஆயுத மார்க்கங்களை முடக்க சிறிலங்காவுக்கு துணை புரிந்தது"-நாராயணன்
(7)
புலிகளின் வான் தாக்குதல்களை முன்கூட்டியே அறியும் வகையில் கொழும்பில் சில இடங்களில் இந்திய வான்படையின்கண்காணிப்பின் கீழ் ராடார்கள் பொருத்தப்படும்.
(8)
கொழும்பை அண்டிய கடல்பகுதிகளில் இந்திய கடற்படையினர் தமது அதிவேக அதிரடிப் படகுகளில் பாதுகாப்பு சுற்றுக்காவல் கடமையில் ஈடுபடுபவர்.
(9)
சிறிலங்காவில் மன்மோகன் சிங் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவருக்கான பாதுகாப்பை இந்திய கறுப்புப் பூனைப் படைப்பிரிவு வழங்கும்.

(10)
வடக்கு - கிழக்கு மக்களுக்கு விமோசனமளிக்கக்கூடிய ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வுத் திட்டத்தை சிறிலங்கா அரசுஉடனடியாக முன்வைக்க வேண்டும் என்றும் அது சிறிலங்கா அரசு அமைத்த அனைத்துக் கட்சி மாநாட்டின் இடைக்கால திட்ட வரைவை ஒட்டியதாக அமையவேண்டும் என்றும் நாராயணன் அழுத்தமாகக் கூறினார்.

இந்த அரசியல் சூழலில் எமது அரசியல் முழக்கங்கள்

*ஒடுக்கும் சிங்கள பெரும்தேசிய இனத்தின் உழைக்கும் மக்களே
தமிழ் தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரியுங்கள்!

*ஒடுக்கப்படும் ஈழதேசத்தின் உழைக்கும் மக்களே பிரிவினைக்கான ஈழவிடுதலை யுத்தத்தை கைவிடாது தொடரும் அதே வேளையில் சிங்கள உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்படுவதற்குள்ள எந்தச் சிறு கூறுகளுக்கும் சேதம் விளைவிக்காதீர்!

* இதுவே ஏகாதிபத்தியவாதிகளையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசியத் தரகன் இந்தியாவையும் எதிர்த்து இலங்கை- ஈழ- சுதந்திரத்தை வென்றடைவதற்கான அரசியல் யுத்ததந்திரப் பாதையாகும்.

படியுங்கள்! விவாதியுங்கள்! பின்பற்றுங்கள்! பரப்புங்கள்!!

No comments: