''எல்லா உயிரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றும் அறியோம் பராபரமே''.
_______நடேசன்.
*தென்னிலங்கையில் சிவிலியன்கள் கொலையில் எங்களுக்கு சம்பந்தம் இல்லை .
*புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் தாக்குதலானது இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுகிறது.
விடுதலைப் புலிகள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் பி.ஒ.கூ.தமிழ்சேவையில் தெரிவித்துள்ளார்.
பா.நடேசன் செவ்வி
ஆழ ஊடுருவும் அணியினர் உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது உங்கள் அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லையா என்று கேட்டதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளுடன் நேரடியாக மோதமுடியாமல் தோல்வியைத் தழுவும் நிலையிலேயே இலங்கை அரசாங்கப் படைகள் இவ்வாறான அநாகரிகமான
தாக்குதல்களை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இலங்கையின் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்களுக்கும், தமது அமைப்புக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்றும், தமது அமைப்பு ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்றும், தாங்கள் மக்களை நேசிப்பவர்கள் என்றும், அனைத்து
உயிர்களையும் நேசிப்பவர்கள் என்றும் அவர் கூறினார்.
---------------------
பஸ் மீது கிளைமோர் தாக்குதல்! 21 பயணிகள் பலி; 70 பேர் காயம்!!
நேற்றுக்காலை கட்டுபெத்தவில் பயங்கரம் மொறட்டுவ, கட்டுப்பெத்த பகுதியில் நேற்றுக்காலை 7.45 மணி அளவில் பயணிகள் பஸ்ஸை இலக்குவைத்து நடத்தப் பட்ட கிளைமோர்த் தாக்குதலில்
21 பேர் கொல்லப் பட்டனர்; 70 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். கொட்டாவ விலிருந்து பெரும் எண்ணிக்கையான பயணிகளுடன் கல் கிஸை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸே கிளை மோர்த்தாக்கு தலுக்கு உள்ளானது; இக் கோரச் சம்பவம் நடந்திருக்கிறது.கட்டுப்பெத்த பகுதியில் சைலபம்மராமய பௌத்த விகாரைக்கும் மொறட்டுவ பல்கலைக்கழகத்திற்கும் இடையில் வீதியின் அருகே உள்ள சதுப்பு நிலப் பகுதியில் பற்றை ஒன்றுக்குள் இந்தக் கிளைமோர் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரி விக்கப்படுகிறது.தொலைவிலிருந்து இயக்கப்படும் கருவி மூலம் இந்தக் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதாக குண்டு செயலிழக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித் தனர்.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 பேரில் 8 பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப் படுகிறது.இதேவேளை, காயமடைந்த 70 இற்கும் மேற்பட்டவர்கள் களுபோவில வைத்தியசாலையிலும் லுணாவ ஆதார வைத்தியசாலையிலும்
சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். கடும் காயங்களுக்கு உள்ளானவர்கள் கொழும்பு தேசிய
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.விடுதலைப் புலிகளே இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று பாதுகாப்பு அமைச்சு குதெரிவித்தது.ஈவிரக்கமற்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இதுவென இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.குண்டு வெடிப்புக் காரணமாக பஸ் ஒரு பக்கத்திற்குச் சரிந்ததாக அதில் பயணம் செய்து உயிர் தப்பியவர்கள் தெரிவித்தனர்.""பஸ்ஸின் நடுப்பகுதியில் நான் நின்றுகொண்டிருந்தேன். பாரிய சத்தத்தின் பின்னர் பஸ் ஒரு பக்கத்துக்குச் சரிந்தது'' என்று களுபோவில
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 21 வயது யுவதி ஒருவர் தெரிவித்தார். ""கரும்புகை மண்டலம் எழுந்தது. எனக்கு அருகில் பலர் கொல்லப்பட்டநிலையில் கிடந்தனர்.'' என்றும் அவர் கூறினார்பாரிய வெடிப்புச் சத்தத்தின் பின்னர் மக்கள் இரத்தக்காயங்களுடன் அல்லலுறுவதைக் கண்டதாக இந்த பஸ்ஸில் பயணம் செய்த மற்றும் ஒருவர்
தெரிவித்தார். கொழும்பில் இரு வாரகாலப் பகுதியில் பயணிகளை இலக்குவைத்து நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.புதன்கிழமை தெஹிவளைப் பகுதியில் பயணிகள் ரயில் ஒன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர்.மே 26 ஆம் திகதி தெஹிவளையில் ரயிலினுள் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
கட்டுப்பெத்தவில் பயணிகள் பஸ் மீது கிளைமோர் தாக்குதல்
[07 - June - 2008]
* 21 பேர் பலி; 84 பேர் காயம் மொறட்டுவ கட்டுப்பெத்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை தனியார் பயணிகள் பஸ் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதுடன் 84 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கட்டுப்பெத்தவில் பிலியந்தலை கட்டுப்பெத்த வீதியில் சைலம்பிம்பராமய விகாரைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலேயே நேற்றுக் காலை 7.40
மணியளவில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
அலுவலகங்களுக்குச் செல்வோர், பல்கலைக்கழக மாணவர்களென நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த தனியார் பயணிகள் (வழி இலக்கம் 255) பஸ்ஸே இந்தத் தாக்குதலுக்கிலக்கானது.
வீதியோரத்தில் சிறிய பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோரே , தூர இருந்து இயக்கும் கருவிமூலம் இயக்கி வெடிக்க வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பஸ்ஸின் இடப்புறத்தில் முன்வாசல் பகுதியே இந்தத் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது.
பெருமளவு பயணிகள் இந்த பஸ்ஸில் பயணம் செய்ததால் பஸ்ஸின் இரு வாசல்களதும் மிதிபலகையில் பலர் நெருக்கியடித்துக் கொண்டு பயணம்
செய்துள்ளனர்.
இந்தத் தாக்குதலின்போது இரு வாசற்படிகளிலும் நின்று பயணம் செய்தவர்களில் பலர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதுடன், வாசற் பக்கமாக இருக்கைகளில் இருந்தும் பஸ்ஸினுள் நின்றும் பயணம் செய்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஸ் மீதான தாக்குதலால் அந்தப் பிரதேசம் பெரிதும் அதிர்ந்ததுடன் அதைத் தொடர்ந்து பஸ் பயணிகள் மரண ஓலத்தை எழுப்பியதாக அந்தப்
பகுதியில் சென்ற பலரும் தெரிவித்தனர்.
தாக்குதலையடுத்து பஸ் உடனடியாக நிறுத்தப்படவே மிதிபலகைகளில் பயணம் செய்து தாக்குதலில் சிக்கிய பலரும் அவ்விடத்திலேயே இறந்து
வீழ்ந்தனர்.
பஸ்ஸின் முன்புறக் கண்ணாடிகளும் பக்கவாட்டுக் கண்ணாடிகளும் நொருங்கிச் சிதறின. பின்பக்கக் கண்ணாடியும் உடைந்து போனதுடன் பஸ்ஸின் இடப்பக்கத்தில் முன்புற வாசற்படி பகுதியெங்கும் கிளைமோர் தாக்குதலால் ஏற்பட்ட சிறு துளைகள் காணப்பட்டன.
இந்தத் தாக்குதலையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த பொதுமக்களும் பொலிஸாரும் பஸ்ஸிற்குள்ளிருந்தவர்களை அவசர அவசரமாக
வெளியேற்றியதுடன் படுகாயமடைந்தவர்களை உடனடியாக அங்கு வந்த வாகனங்கள் மூலம் களுபோவில ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து , களுபோவில ஆஸ்பத்திரியிலிருந்து வந்த அம்புலன்ஸ்களிலும் படு காயமடைந்தோர் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர்.
தாக்குதலையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பெருமளவு படையினரும் பொலிஸாரும் பிலியந்தலை கட்டுப்பெத்த வீதியை உடனடியாக மூடி வாகனப் போக்குவரத்துகளை வேறு பாதைகளூடாக திசை திருப்பவே அப்பகுதியெங்கும் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
வீதியோரத்திலிருந்து சுமார் ஐந்தடி தூரத்தில் சிறிய புதர்களுக்கிடையே மறைத்து வைக்கப்பட்டே கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதால் அவ்விடத்தில் பெரும் குழியொன்று காணப்பட்டது.
பஸ்ஸினுள்ளிருந்தே குண்டு வெடித்துள்ளதாக முதலில் கருதப்பட்டபோதும் பின்னர் அது கிளைமோர் தாக்குதலெனத் தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோரில் எண்மர் பெண்கள், 13 பேர் ஆண்கள். பல் கலைக்கழக மாணவனொருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர்களில் 80 பேர் களுபோவில ஆஸ்பத்திரியிலும் 13 பேர் லுணாவ ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். களுபோவில
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டோரில் மிக ஆபத்தான நிலையிலிருந்த நால்வர் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர
சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான பஸ்ஸினுள்ளே சகல பகுதிகளிலும் பெருமளவு இரத்தம் தேங்கி நின்றது . பஸ்ஸிற்கு வெளியேயும் வீதியில் பெருமளவு
இரத்தம் வழிந்தோடி உறைந்து காணப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு பாரிய தேடுதல்
இந்தச் சம்பவத்தையடுத்து மொறட்டுவ, கட்டுப்பெத்த , தந்தெனியவத்தை பகுதியில் காலை 9 மணி முதல் பொலிஸாரால் ஊரடங்கு உத்தரவு
அமுல்படுத்தப்பட்டு மாலை 6 மணி வரை அமுலிலிருக்குமென ஒலி பெருக்கிகள் மூலம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெருமளவு படையினரும் பொலிஸாரும் அந்தப் பகுதிகளில் குவிக்கப்பட்டு வீடு வீடாகப் பாரிய தேடுதல்கள் நடைபெற்றன.
இந்தத் தேடுதலின்போது மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு
விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்தத் தாக்குதலை நடத்தியவர் அங்கிருந்து வேறு பகுதிகளுக்குச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மொறட்டுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டியில் பயணிகள் பஸ்ஸில் குண்டுவெடிப்பு; 2 பேர் உயிரிழப்பு
[07 - June - 2008]
* 20 பேர் கடும் காயம் கண்டி, செங்கடகல நிருபர்கள்
கண்டி கட்டுகஸ்தோட்டை பொல்கொல்லை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தனியார் பயணிகள் பஸ்ஸினுள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இருவர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பொல்கொல்லை திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே நேற்று மாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வத்துகாமம் பகுதியிலிருந்து கண்டி நோக்கி சுமார் 25 பயணிகளுடன் வந்த தனியார் பஸ்ஸினுள்ளேயே சக்திமிக்க குண்டொன்று வெடித்துள்ளது.
பஸ்ஸின் பின்புறத்தில் இந்தக் குண்டுவெடித்ததால் பஸ்ஸின் பின்புறம் முற்றாகச் சேதமுற்று சின்னாபின்னமாகியுள்ளது. முன்புறமும் பலத்த
சேதமடைந்துள்ளது.
இக்குண்டுவெடிப்பில் ஒருவர் பஸ்ஸினுள்ளேயே உயிரிழந்ததுடன், பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 21 பேரில் ஒருவர் உயிரிழந்ததாக
ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
பஸ்ஸினுள் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் பஸ் நடத்துநரும் சாரதியும் காயமடைந்துள்ளனர். எனினும், சாரதி பஸ்ஸை வீதியின் கரையோரமாக
நிறுத்தியதால் விபத்து எதுவும் ஏற்படவில்லை.
குண்டுவெடிப்பையடுத்து, படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதிக்கு வந்த வாகனங்கள் மூலமும் அம்புலன்ஸ்கள் மூலமும் கண்டி
ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக அனுப்பப்பட்டனர்.
அத்துடன், அப்பகுதியில் மேலதிக படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டதுடன் அவ்வீதியும் மூடப்பட்டு போக்குவரத்துக்கள் திசை திருப்பப்பட்டன.
குண்டுவெடிப்பையடுத்து அவ்விடத்திற்கு கண்டி மாநகர சபையின் தீயணைப்புப் படைப் பிரிவும் வந்துள்ளது.
இதேநேரம், குண்டுவெடிப்பையடுத்து அப்பகுதியில் பெருமளவு மக்கள் குவிந்திருந்தனர். இவர்களில் ஒருவரது நடவடிக்கை
சந்தேகத்திற்கிடமாயிருந்ததாகக் கூறி அங்கு நின்ற சிலர் அவரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவரிடமிருந்து நஞ்சுப் போத்தலொன்றும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அதேநேரம் அந்தப் பகுதியில் தேடுதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
Posted on : Sat Jun 7 6:33:25 EEST 2008
கண்டியிலும் நேற்றுக் குண்டு வெடிப்பு 2 பஸ் பயணிகள் பலி; 20 பேர் காயம்
சந்தேக நபர் ஒருவர் பொதுமக்களினால் பொலிஸாரிடம் ஒப்படைப்பு கண்டி மாவட்டம், பொல்கொல்ல பகு தியில் நேற்று பஸ்ஸுக்குள் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 2 பேர் கொல்லப் பட்டனர்; 20 பேர் காயம்
அடைந்தனர். பிற் பகல் 3.50 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.வத்தேகமவிலிருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றே இந்த அனர்த்தத்தில் சிக்கியது. பொல்கொல்ல கல்வியியல் பீடத்திற்கு அருகிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர்.பிரஸ்தாப பஸ்ஸில் சம்பவ நேரம் 25 பேர் பயணம் செய்தனர் என்றும் காயம டைந்தவர்கள் அனைவரும் ஆண்களே என்றும் தெரிவிக்கப்படுகிறது.இந்தச் சம்பவத்தின் பின்னர், சந்தேகத்துக்கிடமான ஒருவரைப் பொதுமக்கள் துரத்திப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்ப டைத்தனர் என்றும் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment