Sunday, 8 June 2008

ஈழதேசத்தின் எண்ணெய் வளத்தை கபளீகரம் செய்யும் இந்தியா.

மன்னாரில் எண்ணெய் ஆய்வு உரிமம் இந்திய நிறுவனத்துக்கு வழங்க முடிவு
[07 - June - 2008] தினக்குரல்
மன்னாரின் கரையோரப் பகுதிகளில் எண்ணெய் வள ஆய்வை மேற்கொள்ளும் உரிமத்தை இந்தியாவின் கெயார்ன்ஸ் லிமிட்டெட் நிறுவனத்துக்கு வழங்க இலங்கை முன் வந்திருக்கிறது. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இம்மாதம் நிறைவடையுமென பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கெயார்ன்ஸ் நிறுவனத்துக்கு எண்ணெய், வாயுவள ஆய்வு மேற்கொள்வதற்கு இடமளிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜூன் 30 இல் இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வருகை தருமாறு அந்த நிறுவனத்துக்கு நாம் அறிவித்துள்ளோம் என்றும் பௌசி கூறியுள்ளார்.
3 ஆயிரம் சதுர கிலோமீற்றர் பரப்புடைய பகுதியில் ஆய்வை மேற்கொள்ள கெயார்ன்ஸ் நிறுவனம் 10 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யுமென
எதிர்பார்க்கப்படுகிறது. மன்னார் வடிநிலப் பகுதியில் மில்லியன் பரல் மசகெண்ணெய் படிவுகள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் அறிய வந்துள்ளது. 8
துண்டுகள் எண்ணெய் ஆய்வுக்கென அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் முதலாவது பகுதியே இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.
மன்னார் ஆய்வுப் பணிக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் பணிகள் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

No comments: