காபூல் இந்திய தூதரகம் மீது மனித குண்டு தாக்குதல்-41 பேர் பலி
திங்கள்கிழமை, ஜூலை 7, 2008
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே இன்று நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 41 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பலியானவர்களில் 4 பேர் இந்தியர்களாவர்.
காபூலில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே இன்று காலை 8.30 மணிக்கு மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடந்தது. வெடிகுண்டு நிரப்பப்பட்ட காருடன் வந்த தீவிரவாதி, இந்தியத் தூதரகத்திற்குள் நுழைய முயற்சித்தார்.
ஆனால் பாதுகாப்புப் படையினர் அவரை வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அந்த நபர் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் பயங்கர சப்தத்துடன் குண்டுகள் வெடித்துச் சிதறின.
இதில் பலர் உடல் சிதறி உயிரிழந்தனர். அந்த இடமே போர்க்களம் போல காணப்பட்டது. தூதரகம் உள்ள சாலையில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது.
போலீஸாரும், ராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 41 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உயிர்ப் பலி உயரும் என அஞ்சப்படுகிறது.
4 இந்தியர்கள் பலி:
குண்டுவெடிப்பில் தூதரகத்தின் சுற்றுச் சுவர் பலத்த சேதமடைந்தது. இறந்தவர்களில் ஒருவர் தூதரக நுழைவாயிலில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் என்று தெரிய வந்துள்ளது. பலியானவர்களில் மேலும் 3 பேரும் இந்தியர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியத் தூதரகதத்தை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதால் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியர்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
தலிபான் அமைப்பே இந்தத் தாக்குதலுக்கு காரணமாக இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் தலிபான் அமைப்பு இதை மறுத்துள்ளது.
தமிழர்களின் எண்ணெய் வளத்தை சுரண்டும் ஒப்பந்தத்தில் இந்திய நிறுவனம் கைச்சாத்துபலியானவர்களில் 4 பேர் இந்தியர்களாவர்.

[திங்கட்கிழமை, 07 யூலை 2008, 07:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
தமிழ் மக்களின் தாயகப் பகுதியான மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வதற்கான ஒப்பந்தத்தில் இன்று சிறிலங்கா
அரசாங்கமும் இந்தியாவின் கேய்ன் எண்ணெய் அகழ்வு நிலையமும் கைச்சாத்திட்டுள்ளன. அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச முன்னிலையில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 11:00 மணிக்கு
நடைபெற்ற நிகழ்விலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
சிறிலங்காவின் எரிபொருள் வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் இந்தியாவின் கேய்ன் நிறுவன தலைவர் இந்திரஜித்
பெனர்ஜியும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
மன்னாரில் எண்ணெய் அகழ்வுக்கு அனுமதி கொடுத்ததற்காக மேலதிக அன்பளிப்பாக (போனஸ்) 10 கோடி (ஒரு மில்லியன்
அமெரிக்க டொலர்) ரூபாவை அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கேய்ன் நிறுவனத் தலைவர் இந்திரஜித் பெனர்ஜி இன்றைய
நிகழ்வில் கையளித்தார்.
அதேநேரம் மண்னாரில் எண்ணெய் அகழ்வை மேற்கொள்வதற்கான கட்டணமாக கேய்ன் நிறுவனத்திடமிருந்து 1,120 கோடி
ரூபாவை (112 மில்லியன் அமெரிக் டொலர்) சிறிலங்கா அரசாங்கம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வுக்காக அடையாளம் காணப்பட்ட எட்டு வலயங்களில் "பி" வலயமே இந்தியாவின் கேய்ன்
நிறுவனத்திற்கு எண்ணெய் அகழ்வுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
3,400 சதுர கிலோமீற்றர் பரப்பை கொண்ட இந்த வலயத்தில் 200 முதல் 1,200 மீற்றர் ஆழத்தில் எண்ணெய் அகழ்வை
மேற்கொள்ள கேய்ன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இந்தப் பகுதியில் எண்ணெய் அகழ்வு ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் பௌசி
தெரிவித்துள்ளார்.
இதேவேளை மன்னார் கடலில் எண்ணெய் அகழ்வுக்காக அடையாளம் காணப்பட்ட ஏனைய வலயங்களையும் விரைவில்
எண்ணெய் அகழ்வுக்காக ஜப்பானுக்கும் சீனாவுக்கும் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்மக்களின் தாயகப் பூமியில் அவர்களின் வளத்தை சுரண்டும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பது குறித்து பல்வேறு
தரப்புகளிலும் கடும் அதிர்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment