Thursday, 10 July 2008

ஈழச்செய்திகள்: பொது வேலை நிறுத்தம், யுத்தம், மஹிந்த இந்திய விஜயம்!




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா விஜயம்
வீரகேசரி இணையம் 7/10/2008 3:56:52 PM -
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அலரி மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்தியா விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாளை முற்பகல் 10.00 மணியளவில் இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்குடன் விசேட பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், ஜனாதிபதியின் இந்தத் திடீர் விஜயத்திற்கான நோக்கம் என்னவென்று இதுவரையில் தகவல் வெளியிடப்படவில்லை.

போராட்டத்தில் ஈடுபடுவோர் விடுதலைப் புலிகளே - மேர்வின் சில்வா
வீரகேசரி இணையம் 7/10/2008 3:38:48 PM -
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இன்றைய தினம் தொழிற்சங்கப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யுத்த செலவுகளை கட்டுப்படுத்தவும்,படைவீரர்களுக்கு வழங்கப்படும் நிதியை குறைப்பதற்கும் விடுதலைப் புலிகள் இவ்வாறான சூழ்ச்சித் திட்டம் தீட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தினமின நாளேட்டுடான விசேட செவ்வியின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்தப் போராட்டங்களுக்காக நாடு முழுவதும் ஐந்து லட்சம் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்காக 1000 லட்ச ரூபா செலவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு பாரிய நிதி எவ்வாறு அவர்களுக்கு கிடைத்தது? இவ்வாறான தொடர்புகள் இல்லாவிட்டால் பாரிய நிதி எவ்வாறு கிடைக்கும் என மேர்வின் சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.சுவரொட்டி அச்சிடுவதற்கு கிடைக்கப் பெற்ற பணம் எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து ஆராய்வதற்கு இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தாம் ஜனாதிபதியிடம்
கோரிக்கை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்க பேதம் மறந்து ஒன்றிணைந்த தொழிலாளர்கள் 90 வீதமானோர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்
ருத்ரன் 7/10/2008 2:50:07 PM -
சம்பள அதிகரிப்பு மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்கங்கள் நாடளாவிய
ரீதியில் இன்று நடத்தும் அடையாள வேலை நிறுத்தம் மலையகபெருந்தோட்டப்பகுதிகளையும் ஸதம்பிதமடையச்செய்துள்ளது. குறிப்பாக தலவாக்கலை,நுவரெலியா,அக்கரபத்தனை இமஸ்கெலியாஇபொகவந்தாலாவை நோர்வூட்,டயகம போன்ற பகுதிகளில் உள்ள தோட்டப்புறங்களில் 90 வீதத்திற்கும் மேலான தொழிலாளர்கள் கடைமைக்கு சமூகமளிக்கவில்லை. பல தோட்டங்களில்
ஒரு சில தொழிலாளர்கள் பணிக்கு வந்த போதிலும் வரவு குறைவாக இருந்தபடியினால் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களை வீட்டிற்கு செல்லும்படி பணித்துள்ளன.
மலையக தொழிற்சங்கங்கள் பல இன்று வேலை செய்யும்படி அறிக்கைகள் விட்டிருந்தும் அதனை புறக்கணித்த தொழிலாளர்கள் தமது வேதனப்படி மற்றும் வாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வு கோரிக்கையை அங்கீகரிக்கும் படி தொழிலாளர் வர்க்கத்திற்காக தொழிற்சங்க பேதமின்றி இப்பணி புறக்கணிப்பில் கலந்து கொண்டனர்.
இதே வேளை மேற்குறிப்பிட்ட நகரங்களில் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் வழமை போல் சேவையில் ஈடுபட்டன.ஒரு சில பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் வரவில் வீழ்ச்சி ஏற்பட்டதாக அதிபர்கள் தெரிவித்தனர். ஆசிரியர்களின் வரவு திருப்திகரமாக இருந்ததாக அதிபர்கள் தெரிவித்தனர்.
வேலை நிறுத்தத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து வவுனியா, மன்னார் வைத்தியசாலை சிற்றூழியர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை
வவுனியா நிருபர் 7/10/2008 12:39:35 PM -
சம்பள உயர்வு கோரி நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாள வேலை
நிறுத்தத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து, வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளைச் சேர்ந்த சிற்றூழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்கவில்லை. இதனால் இந்த வைத்தியசாலைகளின் சிற்றூழியர் பணிகள் குறிப்பாக நோயாளிகளுக்கான சமையல் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் மாற்று ஏற்பாடாக வெளியில் உணவு பெற்று நோயாளிகளுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது,
வவுனியா மாவட்ட பாடசாலைகளை;ச சேர்ந்த ஆசிரியர்கள் .முழுமையாக இன்று கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்ட அதேவேளை, மாணவர்களின் வருகையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தனியார் மற்றும் மக்கள் போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டிருந்ததைக்
காணக்கூடியதாக இருந்தது. வடபகுதிக்கான ரயில் சேவையும் மதவாச்சி வரையில் வழமைபோல நடைபெற்றதாக ரயில்வே
திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
யேர்மன் - சிறிலங்கா இரகசிய பேரம்: அம்பலப்படுத்துகிறது ஜேர்மன் சஞ்சிகை
[வியாழக்கிழமை, 10 யூலை 2008, 02:03 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்]
ஜேர்மனியிலிருந்து வெளிவரும் Der Spiegel எனும் சஞ்சிகை தனது 23.06.2008 நாளிட்ட இதழில் ஜேர்மனிக்கும் சிறிலங்காவுக்கும் இடையே நடைபெற்ற இரகசிய பேரமொன்றை அம்பலப்படுத்தியுள்ளது. "நேர்த்தியற்ற பேரம்" என்ற தலைப்பில் யேர்மனியில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களைக்கொண்ட இப்பிரபலமான சஞ்சிகையில் வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புச் சபையில் மீண்டும் நுழைவதற்கு தேவையான எந்த விலையைக் கொடுக்கவும் ஜேர்மன் அரசு தயாராக விருக்கின்றது.
எதிர்வரும் 2010, 2011 ஆம் ஆண்டுகளில் பாதுகாப்புச் சபையில் ஒரு பிரதிநித்துவத்தை பெறுவதற்கான ஆதரவாளர்களைத் திரட்டும் முயற்சியில், நியூயோர்க்கில் உள்ள ஜேர்மனிய நிரந்தரப்பிரதிநிதி கடந்த பெப்ரவரி மாதம் மிக இரகசியமான ஒப்பந்தமொன்றை சிறிலங்காவுடன் செய்துள்ளார்.
இந்த நேர்த்தியற்ற பேரம் தொடர்பில் தெரியவருவதாவது:
மே மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆலோசனைச் சபையில் மீண்டும் சிறிலங்கா தெரிவு செய்யப்படுவதற்கு ஜேர்மனி ஆதரவளிக்கும். அதேவேளை 2010 இல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஜேர்மனி பிரதிநிதித்துவம் பெற சிறிலங்கா அரசு ஆதரவு வழங்கும்.
இந்தப் பேரத்தில் சூடான விடயம் என்னவென்றால் மனித உரிமை மீறல்களுக்காக வருடக்கணக்காக சிறிலங்கா குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அத்துடன் மார்ச்சில் மனித உரிமை கண்காணிப்பகம் தமிழர்கள், மனித உரிமைவாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாக 99 சம்பவங்களை பட்டியிலிட்டுள்ளது.
இச்சம்பவங்களில் அரச படையினர் வெளிப்படையாகவே தொடர்புபட்டிருந்தனர். உலக அரங்கைப் பொறுத்தவரை முதன்முதலாக
ஐக்கிய நாடுகள் சபையைச் சேர்ந்த குழுவொன்று 2007 இல் 317 பேர் காணாமல் போனதாக உறுதிப்படுத்தியுள்ளது.
சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கும் ஜேர்மனியின் இந்தப்பேரம் குறித்து ஜேர்மன் வெளிநாட்டமைச்சு கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்தபோதும் இப்பேரம் எதற்கும் உதவவில்லை. ஏனெனில் சிறிலங்கா 21 ஆம் நாள் மே மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவிலிருந்து வெளியேற்றப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் எண்ணெய் அகழ்வு ஆய்வு இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு.
மஹிந்த முன்னிலையில் ஒப்பந்தம் நேற்றுக் கைச்சாத்து மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ளும் உரிமையை இந்தி யாவுக்குக் கொடுத்திருக்கின்றது இலங்கை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வைத்து நேற்று பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியும், இந்தியாவின் "கெயன்' நிறுவனத்தின் பிரதம நிதியதிகாரி இந்திரஜித் பானர் ஜியும் இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டதன் மூலம் மன்னாரில் எண்ணெய் வள ஆராய்ச்சியை மேற்கொள்ளும் உரிமை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது இதனடிப்படையில் அடுத்த ஆறு மாதங் களுக்குள் குறித்த நிறுவனம் மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வள ஆய்வை ஆரம்பிக்கவுள்ளது.நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் எண்ணெய் வள ஆய்விற்காக 10 கோடியே 20 லட்சம் அமெரிக்க டொலர்க ளைச் செலவிடவுள்ளது.மன்னார் கடற்பரப்பில் வர்த்தக ரீதியி லான எண்ணெய் அகழ்வு ஆரம்பமானதும் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் 65 வீதம் இந்திய நிறுவனத்திற்கே செல்லும் என உடன்படிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முதலீட்டுச் செலவை ஈடு செய்வதற்காகவே இவ்வாறு 65 வீதம் நிறு வனத்திற்குச் செல்லவுள்ளதாகவும் கூறப்ப டுகின்றது.இலங்கை அரசிற்கு 10 வீத வருமானம் பங்கு கிடைக்கவுள்ளது.மேலும் உற்பத்தி மிகைவூதியமாக அரசிற்கு 5 கோடி அமெரிக்க டொலர் கிடைக்கவுள்ளதுடன் இலாபத்தில் பங்கு, குத்தகை
இலாபம் மீதான 15 வீத வரி போன்றனவும் கிடைக்கவுள்ளன.எண்ணெய் வள ஆய்வினை மேற்கொள்வதற்கான அனுமதிப் பத்திரம் எட்டு ஆண்டுகளுக்கே வழங்கப்பட்டுள்ளது.மேலும் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் படி எண்ணெய் அகழ்வு தொடர்பான அனைத்து தரவுகளும் அரசிற்கு
வழங்கப்படும்.இதேவேளை இந்தியாவுடனான இந்த உடன்படிக்கைக்கு தொடர்பாக ஜே.வி.பி.கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வந்த நிலையிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.நேற்றைய ஒப்பந்தக் கைச்சாத்திடப்பட்டதற்கான போனஸ் பணமாக 10 லட்சம் அமெரிக்க டொடர்களை இலங்கை அரசுக்கு
இந்திய நிறுவனம் வழங்கியது. இப்பணம் ஜனாதிபதி மஹிந்தவிடம் கையளிக்கப்பட்டது.
ஜூலை 10 புறக்கணிப்பில் தமிழர்களும் பங்கேற்க வேண்டும்: த.தே.கூ. அழைப்பு [திங்கட்கிழமை, 07 யூலை 2008, 06:30 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 10 ஆம் நாள் மேற்கொள்ளப்படவிருக்கும் பாரிய பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு
தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த பணிப்புறக்கணிப்பில் தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ளஅதிகாரபூர்வ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜூலை மாதம் 10 ஆம் நாள் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்தவிருக்கும் வேலை நிறுத்தமானது ஏழைத் தொழிலாளர்களின், சாதராண பொதுமக்களின் விரக்தியை, வெறுப்பை, அவர்களின் கஸ்டங்களை, துன்பங்களை வெளிப்படுத்துவதற்கான ஒரு போராட்டமாகும்.
அந்த வகையில் சகல தொழிற்சங்கங்களும், எந்தவித வேறுபாடும் இன்றி இதில் கலந்துகொள்ள வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுவதுடன், தமிழ் மக்களின் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் தெரிவித்துக் கொள்கின்றது.
சிறிலங்கா அரசின் பிழையான கொள்கைகள் எமது நாட்டைத் தோல்வி கண்ட நாடாக்கியுள்ளதுடன், ஏழை மக்களைப் பிச்சா பாத்திரம் ஏந்தும் நிலைக்கும் தள்ளியுள்ளது. எனவே இன, மத பேதமில்லாமல், கட்சி வேறுபாடுகள் இல்லாமல் சகல தொழிற்சங்கங்களுமே இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு இதனை வெற்றியடையச் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கோருகின்றது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் போரின் பின்னணியில் அரசு தனது பல தவறுகளை மூடி மறைப்பதற்கு முயற்சிக்கின்றது.
இந்த நாட்டில் நீண்ட காலமாக வேரூன்றி வந்திருக்கும் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசால் இற்றை வரையில் ஒரு
நியாயமான தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படவில்லை.
அரசால் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளையே அரசு முறியடித்து 1988 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டு, அந்த நேரத்திலேயே தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட 13 ஆவது அரசியல் சாசனத்தை ஒரு தீர்வாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இதன் மூலம் ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அரசின் விருப்பமின்றி தெளிவாக எடுத்துக் காட்டப்படுகின்றது.
இக் காரணத்தின் நிமித்தமே அரசு தேசியப் பிரச்சினயைத் தீர்ப்பதற்கு இராணுவ நடவடிக்கையைக் கையாள்கின்றது.
ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும் என நீண்ட காலமாக அனைத்துலக சமூகம் சிறப்பாக இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இணைத்தலைமை நாடுகள் போன்றவை வலியுறுத்தி வந்திருக்கின்றன.
அவ்விதமான ஒரு நியாயமான தீர்வை முன்வைப்பதாக அரசாங்கத்தால் வாக்குறுதி கொடுக்கப்பட்ட போதிலும், வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் அரசு சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, இராணுவத் தீர்வின் மீதே தனது முழு நம்பிக்கையை வைத்துச் செயற்படுகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அடக்கி ஒடுக்கினால் ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்கும் பொறுப்பிலிருந்து தாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று அரசாங்கம் நினைக்கின்றது.
நியாயமான அரசியல் தீர்வின் மூலம் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமானால் போருக்காக தற்போது செலவு செய்யப்படும் பாரிய தொகையை அரசு மக்களின் வேறு நியாயமான தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும்.
போரை நடத்துவதனால் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதில் நடைபெறும் பாரிய ஊழல்கள் மக்களுக்குத் தெரிந்த விடயமே.
போரின் காரணமாக தமிழ், சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்டுகிறார்கள். பல இளைஞர்கள், படையினரோ அல்லது
இயக்கத்தினரோ கொல்லப்படுகிறார்கள். பொது மக்களின் சொத்துக்களுக்குப் பாரிய இழப்புக்கள் ஏற்படுகின்றன. பல
இலட்சக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்து அகதிகளாகப் பலவிதமான கஸ்டங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
இவற்றை எல்லாம் உணர்ந்து ஓர் அரசியல் தீர்வைக் கண்டு, போரை நிறுத்தி, போர்ச் செலவீனத்தைக் குறைக்க வேண்டியது அரசின் முதற் கடமை.
அனைத்துலக சந்தையில் மசகு எண்ணெய் விலையேற்றம், அரிசி விலையேற்றம் போன்றவை தான் இலங்கைகயில் ஏற்படும்
விலையேற்றத்துக்கும் காரணம் என்று அரசு கூறுகின்றது. அனைத்துலக சந்தையில் விலை அதிகரிப்பு என்பது உண்மை தான்.
ஆனால், இலங்கையில் எரிபொருள் விலை 20 ரூபா, 30 ரூபாவால் அதிகரிக்கின்ற போதிலும், உதாரணமாக இந்தியாவில்
எரிபொருள் ஆக 2 ரூபாவால் மட்டுமே அதிகரிக்கின்றது.
எமது நாட்டில் ஏற்படும் விலை உயர்வு வளர்ச்சியடைந்த நாடுகளில் நிலவும் விலைக்குச் சமனாகவே உள்ளது. அவ்வாறான
நாடுகளின் தொழிலாளிகள் பெறும் சம்பளம் மிக உயர்ந்ததாகவே உள்ளது. எமது நாட்டில் ஒரு தொழிலாளி பெறும் சம்பளம் அவனது உணவுக்கே போதுமானதாக இல்லை.
மேலும், அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள், ஊடகவியலாளர்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஜனநாயக விரோதச் செயல்கள் போன்றவை அரசினால் நடத்தப்படும் போரின் பெயராலேயே மேற்கொள்ளப்டுகின்றது.
இச் செயல்கள் மக்களின் சுதந்திரத்தைப் பறித்து பீதியும், பயமும் நிறைந்த ஒரு சூழலில் வாழ்வதற்கு மக்களை நிர்ப்பந்திக்கின்றது.
அனைத்துலகச் சந்தையில் விலையேற்றத்தைச் சாட்டாகக் கூறும் அரசு, நூற்றுக்கும் அதிகமான அமைச்சர்களையும், பிரதி அமைச்சர்களையும், அளவற்ற அரச தலைவர் ஆலோசகர்ளையும் நியமனம் செய்து, இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக மக்களின் பெருந்தொகைப் பணத்தை வீண் விரயம் செய்கின்றது என்பதை அரசு இன்னும் உணரவில்லை.
எனவே, மேற்குறிப்பிட்ட தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்துகின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலங்குவானூர்தி மீது சத்தமற்ற தாக்குதலை நடத்திய புலிகள்: அமைச்சர் கேகலிய [புதன்கிழமை, 02 யூலை 2008, 07:53 பி.ப ஈழம்] [வவுனியா நிருபர்]
அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்குடாவில் சிறிலங்கா வான்படையினரின் உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப்
புலிகள் சத்தமற்ற தாக்குதலையே நடத்தியுள்ளனர் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இருந்த பகுதிகளை படையினர் கைப்பற்றியிருப்பது
அரசாங்கத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
நெல் விளையும் பாரிய நிலப்பரப்பையே படையினர் இன்று மீட்டுள்ளனர். இது ஒரு வரலாற்று வெற்றியாகவே கருதப்படுகின்றது.
இதுவொரு இராணுவ வெற்றி மட்டுமல்ல, அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
மீட்கப்பட்ட பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இத்தகைய திட்டங்கள் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிழக்கு மாகாண மக்கள் தீவிரவாதத்தை விரும்பவில்லை
என்பது உலகிற்கு இத்தகைய அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலம் உணர்த்தப்படும். அப்படி ஒரு நிலை வருவதை விரும்பாத
புலிகள் தற்போது கிழக்கு மாகாணத்தில் ஒரு பதற்றமான நிலையை தோற்றுவிப்பதற்கு முனைகின்றனர்.
அறுகம்குடா பாலத்திறப்பு விழாவுக்குச் சென்றபோது அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினைக் குறிவைத்து உலங்குவானூர்தி மீது
தாக்குதல் நடத்தியுள்ளனர். புலிகள் தன்னை இலக்கு வைத்தால் அதனைச் சவாலாக தான் ஏற்றுக்கொள்வதாக இம் மாநாட்டில்
தெரிவிக்கும்படி அரச தலைவர் என்னிடம் கூறினார்.
அரச தலைவர் சென்ற உலங்குவானூர்தி மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய்யான தகவல்களை சிலர் வெளியிடுகின்றனர்.
அதில் உண்மையில்லை.
அரச தலைவரின் பயணத்தின்போது உலங்குவானூர்திகள் செல்வது வழக்கம். அன்றைய நாளும் அரச தலைவரின் பயணத்தினை
முன்னிட்டு அப்பகுதியால் சென்ற உலங்குவானூர்தியின் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதையடுத்தே அது தரையிறக்கப்பட்டது. தரையிறக்கிய பின்னர் அதனைப் பரிசீலித்தபோது துப்பாக்கிச் சூட்டுக்கு அது இலக்காகியிருப்பது தெரியவந்தது.
சத்தமின்றி இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் குறித்த விசாரணைகள் நடைபெறுகின்றன. தாக்குதலுக்கு இலக்கான
உலங்குவானூர்தியின் எண்ணெய்த் தாங்கி பகுதியில் துப்பாக்கிக்குண்டு ஒன்று பாய்ந்துள்ளது.
தற்போது இந்த உலங்குவானூர்தி கட்டுநாயக்காவில் உள்ள வான்படைத்தளத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
புலிகளுக்கு எதிரான போரில் தனது உயிரைப் பணயம் வைத்தேனும் வெற்றியீட்டுவதில் அரச தலைவர் உறுதியுடன் உள்ளார்.
போரில் வெற்றியீட்டுவதில் அவர் உறுதியுடன் இருக்கிறார். அதற்காக எந்த தியாகத்தையும் அவர் மேற்கொள்ளத் தயாராகவே
இருக்கிறார் என்றார் அவர்.
Posted on : Fri Jul 4 7:55:15 EEST 2008
துணுக்காய், மல்லாவி நோக்கி கடும் ஷெல் வீச்சு!
ஆயிரக் கணக்கில் மக்கள் அவசர அவசரமாக இடம் பெயர்வு!! முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம் நகருக்கு அப்பால் மேற்கே துணுக் காய், மல்லாவி போன்ற இடங்களில் இரா ணுவத்தினர் மேற்கொண்டுவரும் ஷெல் தாக்குதல்கள் காரணமாக அந்தப் பகுதிக ளில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர்.படையினரின் ஷெல் தாக்குதல்களால் இடம் பெயர்ந்துள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்று கொண்டிருக் கின்றனர் என்று முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.""சுமார் 5ஆயிரம் குடும்பங்கள் வரையில் உடனடியாக அந்த பிரிவுகளில் இருந்து இடம்பெயரக் கூடிய சூழ்நிலை உள்ளது.
எவ்வளவு பேர் தற்போது இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என்ற விவரம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை'' என்றும் திருமதி சுகுமார் மேலும் கூறினார்.இம்மக்கள் பாதுகாப்புக் கருதி கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்றுள்ளார்கள், செல்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.துணுக்காய் பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் தேவைகளை கவனிக்கும் பொருட்டு மாந்தை கிழக்கு
உதவி அரச அதிபரை அப்பிரதேசத்துடன் சேர்த்து துணுக்காய் பிரதேசத் தையும் கவனிக்குமாறு அரச அதிபரினால் வேண்டுகோள்
விடப்பட்டிருந்தது. எனினும் "கிளைமோர்' கண்ணிவெடி ஆபத்து காரணமாக தன்னால் தமது பிரதேசத்திலேயே பணியாற்ற முடியாது இருப்பதினால்
தன்னை முல்லைத்தீவு பிரதேசத்தக்கு இடமாற்றம் செய்து தருமாறு மாந்தை கிழக்கு உதவி அரச அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று ஒரு தகவல் தெரிவித்தது.இந் நிரையில் இடம்பெயர்ந்துள்ள மக்க ளுக்குரிய அவசர தேவைகளை நிறை வேற்றுவது கடினமான பணியாகி உள்ள தாக முல்லைத்தீவு மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மக்கள் விடுதலை முன்னணியின் இரு அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளன
வீரகேசரி இணையம் 7/8/2008 3:12:25 PM -
வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மக்கள் விடுதலைமுன்னணியின் இரு அலுவலங்கள் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. களேன்பிந்துனுவேவவிலுள்ள வடமத்திய மாகாணத்திற்கான மக்கள்
விடுதலைமுன்னணியின் வேட்பாளர் எஸ் திலக்கசிறியின் அலுவலகம் இன்று காலை 4.00 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் முற்றாக சேதப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஜே.வி.பி யின் பாரளுமன்ற உறுப்பினர்களான ரணவீரபத்திரன மற்றும் வேட்பாளர் அனுர திசாநாயக்க ஆகியோர் நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: