பத்துக் கற்பனைகள்
1) ஏகாதிபத்தியவாதிகள் ஒரு சேர ஓங்கி ஒலிக்கும் 'பயங்கரவாத்துக்கு எதிரான போர்' அடிப்படையில் தேசியவாதத்துக்கு எதிரான போரே!
2)'சர்வதேச சமூகம்' என்பது ஏகாதிபத்திய G7 ஆளும் கும்பல்களே!
3) சிவில் சமூகம் என கூறப்படும்-NGO-கும்பல்கள் ஏகாதிபத்திய ஏஜெண்டுகளே!
4)பொருளாதார உலகமயமாக்கல் சுதந்திர தேசங்களின் செல்வ வளங்களை சூறையாடும் பகல் கொள்ளையே!
5) இந்தக் கொள்ளை இனிமேல் G7 கும்பல் தம்மைத்தாமே கொள்ளையடிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளது.இது ஏகாதிபத்திய ஏகபோக பொருளுற்பத்தி முறையின் பொது நெருக்கடியாகும்.
6) இதனால் உலக மறு பங்கீடு தொடங்கி விட்டது.
7) அரசியில் ரீதியான உலக மறுபங்கீட்டின் இராணுவ வெளிப்பாடே தேசியவாதத்துக்கு எதிரான யுத்தமாகும்.
8) இந்த உலக மறு பங்கீட்டுப் போர் இறுதியில் மூன்றாம் உலகப் போரிலேயே முடிவுறும்!( இதை நோக்கிய அணிசேர்க்கையில் இந்தியா அமெரிக்காவின் யுத்ததந்திர கூட்டாளியாகியுள்ளது.)
9)இந்த ஏகாதிபத்திய வெறிபிடித்த,யுத்த வேட்கை கொண்ட நவீன
காலனியதிக்கத்துக்கு எதிராக ''முதலாளித்துவ தேசியவாதம்'' ,மார்க்சியம் மீதான தனது தத்துவார்த்த எதிர்ப்பால்-வெறுப்பால்- நிராயுதபாணியாகி தோல்வி அடைகிறது.
10) நவீன காலனியாதிக்கத்துக்கு எதிரான தேசிய விடுதலைப் புரட்சிகள் இனிமேலும் முதலாளித்துவ தேசியவாத வழியில் பயணிக்க முடியாது. மார்க்சிய லெனினிய மா ஓ சேதுங் சிந்தனையை பயின்று புரிந்து புதிய ஜனநாயகப் புரட்சிப்பாதையில் முன்னேறுவதே தேசிய விடுதலைக்கும், ஒட்டுமொத்த மனிதகுல விடுதலைக்கும் வழி வகுக்கும் பாதையாகும்.
No comments:
Post a Comment