Saturday 2 August, 2008

நடேசனின் ஆனந்தவிகடம்!

வரலாற்றில் ஒரு ஏடு:
1987 இந்திய ஆக்கிரமிப்புக்காலத்தில் பிரபாகரனைப் படுகொலை செய்ய இந்தியவிஸ்தரிப்புவாத அரசு எல்லாவகையிலும் முயன்றது.மேலும் சதித்தனமாக இந்திய இராணுவ அதிகாரியுடன் ஆயுத ஒப்படைப்பு சம்பந்தமாக பேச்சு நடத்திக் கொண்டிருந்த வேளையில் பிரபாகரனைப் படுகொலை செய்யுமாறு டிக்சிற் உத்தரவிட்டார். அவ் உத்தரவை அந்த இராணுவ அதிகாரி நிறைவேற்ற மறுத்ததால் பிரபாகரன் உயிர்தப்பினார்.

[What was Dixit's approach to your attempts to buy peace with LTTE?
Once he said, Shoot Prabhakaran, shoot Mahathiah. I said, Sorry I don't do that. Those were his orders. When they came to me at 12 o'clock at night for some work, he said shoot them. General, I have told you what I have ordered. I said, I don't take your orders. And we are meeting under a white flag, you don't shoot people under white flag.-General Harkirat Singh]
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் ஏற்படும் - பா.நடெசன்
வீரகேசரி நாளேடு 8/1/2008 9:41:50 PM -


வன்னியில் உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருகின்றது. மக்களை பட்டினி போட்டு கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என இலங்கை அரசாங்கம் எண்ணுகின்றது. அண்மையில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆனந்தவிகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே நடேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கேள்வி: இலங்கையில் இப்போதைய நிலவரம் என்ன?
பதில்: முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கை அரசு, தனது இராணுவத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் மீதும் தமிழீழத்
தேசத்தின் மீதும் மோசமான இனப் படுகொலையை மேற்கொண்டு வருகிறது. தமிழர்களின் வாழ்விடங்கள் மீது வான்குண்டு வீச்சுக்கள், பீரங்கித் தாக்குதல்கள் எனப் பல்வேறு வடிவங்களில் தாக்கி வருகிறது. தினமும் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்.
உணவுப் பொருட்களுக்கும் மருந்துப் பொருட்களுக்குமே இங்கே இப்போது பெரும் தட்டுப்பாடு. மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றொழிப்பதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என இலங்கை அரசு எண்ணுகிறது. அண்மைக்காலத்தில் மட்டும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக விடுதலைப் புலிகள் வீராவேசத்துடன் போராடி வருகின்றனர்!
கேள்வி: ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு புலிகளின் போராட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் குறிப்பாக, தமிழக மக்களின் ஆதரவை எந்த வகையில் எதிர்பார்க்கிறீர்கள்?
பதில்: இதைப் புலிகளின் போராட்டம் என்று குறிப்பிடுவதைவிட தமிழ் மக்களின் போராட்டம் என்று சொல்வதுதான் பொருத்தமானதாகும். எமது விடுதலைப் போராட்டத்துக்கான தமிழக மக்களின் ஆதரவு நீறு பூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. இதனைப் பிழையாக மதிப்பிட வேண்டாம். வரலாற்றுரீதியாக, இன, கலாசாரரீதியாக தமிழக மக்களுக்கும் எமக்கும் தொப்புள் கொடி உறவு இருந்து வருகின்றது. அவர்களின் ஆதரவு எமக்கு எப்போதும் இருந்தேவரும்.
கேள்வி: தனி ஈழம் மற்றும் விடுதலைப் புலிகள் போராட்டம் நியாயமென்று கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை எங்கள் நிருபர்களிடமும் எங்கள் இணையத்தளத்திலும் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதில் எழுப்பப்பட்டிருக்கிறது. இதுபற்றி தங்கள் கருத்து என்ன?
பதில்: உணர்வை வெளிப்படுத்திய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும் நன்றி. எமது விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருருக்கும் இவர்கள், எமது தலைவர் தொடர்பாகத் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தவறானவையாகும். வெகு விரைவில் இவர்களது கருத்துக்களில் மாற்றம் ஏற்படும் என உறுதியாகச் சொல்கின்றேன்.
கேள்வி: இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தப் போராட்டம்?
பதில்: விடுதலைப் போராட்டங்களுக்கு கால எல்லைகள் வகுத்துப் போராடுவதில்லை. ஆனால், முழு மக்கள் பலத்தோடு எமது விடுதலையை விரைவாக வென்றெடுப்போம்.
வவுனிக்குளத்தில் பாரிய மும்முனை முன்நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 60 பேர் படுகாயம்- உடலங்கள் உட்படபடைப்பொருட்கள் மீட்பு
[வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 09:45 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
வவுனிக்குளத்தில் உள்ள பாலையடிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய அளவிலான மும்முனை முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர தாக்குதலால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 60-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மேற்கு வவுனிக்குளத்தில் உள்ள பாலையடிப் பகுதியில் இருந்து மும்முனைகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6:00 மணியளவில் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடனும் எம்.ஜ-24 ரக உலங்குவானூர்தியின்
பீரங்கித்தாக்குதலுடனும் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர்
மல்லாவியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் மும்முனைகளில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வினை முறியடிக்கும்
தாக்குதலை இன்றிரவு 7:00 மணிவரை விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக மேற்கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குலை அடுத்து பாரிய உயிரிழப்பு- படைக்கல இழப்புச் சேதங்களுடன் படையினர் பின்வாங்கி ஓடிவிட்டனர்.
இம்முறியடிப்புத் தாக்குதலில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 60-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
படையினரின் 'லான்ட்றோவர்' ஊர்தி உட்பட பெருமளவிலான படைக்கலங்கள், படைப்பொருட்கள் படையினரின் உடலங்கள்
ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னாரில் விமானத்தாக்குதல்
வீரகேசரி இணையம் 7/31/2008 3:25:30 PM -
இலங்கை விமானப்படையினரின் MI-24 ரக உலங்கு வானூர்திகள் மன்னார்
வெள்ளான் குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் இனங்காணப்பட இலக்குகள் மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளன.இத்தாக்குதல் இன்று காலை 11.30 மணியளவில் இடம் பெற்றதாக விமானப்படை பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மன்னார் பிரதான பாலம் வழியான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வீரகேசரி இணையம் 7/31/2008 11:04:13 AM -
இன்று காலை 8.30 மணிமுதல் மன்னார் பிரதான பாலம் வழியாக மதவாச்சி
செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்.
அதேவேளை மன்னார் பிரதான பாலத்தில் இராணுவத்தினர் ரக் வண்டிகளை பாலத்தின் குறுக்கே நிறுத்தி போக்குவரத்தினை நிறுத்தியுள்ளனர்.இதனால் மன்னார், வங்காலை, நானாட்டான், முருங்கன், வவுனியா, மற்றும் மதவாச்சி பகுதிக்கு செல்ல்விருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பயணத்தினை தொடரமுடியாத நிலையில் பஸ்தரிப்ப்பிடத்தில் காத்து நிற்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Posted on : Wed Jul 30 8:38:16 EEST 2008
அமைச்சர்கள் தொண்டா, முத்துசிவலிங்கம் உட்பட மூன்று இ.தொ.கவினருக்கு எதிராக சிறைத் தீர்ப்பு!
தலா 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாதச் சிறையும் ரூபா 1000 அபராதமும் அமைச்சர்கள் தொண்டமான், முத்துசிவலிங்கம் உட்பட மூன்று இ.தொ.காவின் உயர்மட்டத் தலைவர்களுக்கு நீதிமன்ற
அவமதிப்புக் குற்றச்சாட்டுகளுக்காக தலா ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாதச் சிறைத்தண்டனையும் ஆயிரம்
ரூபா அபராதமும் விதித்து நுவரெலியா நீதிவான் நீதிமன்றம் நேற்றுத் தீர்ப்பளித்திருக்கின்றது. நுவரெலியாவில் உள்ள இ.தொ.கா. அலுவலகம் தொடர்பான சிக்கலை ஒட்டியே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.இளைஞர் வலுவூட்டல் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சரும் தற்போதைய மாகாணசபை உறுப்பினருமான பி.இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, அப்போது இ.தொ.காவிலிருந்த எம்.சதாசிவத்தின் பொறுப்பில் உள்ள நுவரெலியா
அலுவலகத்துக்குள் ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம் , இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பிரவேசிக்கக்கூடாது என
2000ஆம் ஆண்டு ஓகஸ்டில் நுவரெலியா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.பின்னர் இ.தொ.கா.தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரணை செய்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இலங்கைத் தொழிலாளர்
ஐக்கிய முன்னணியை ஆரம்பித்திருக்கும் எம்.சதாசிவம் அந்தக் கட்சியின் செயற்பாடுகளுக்கு இ.தொ.கா. அலுவலகத்தைப் பயன்படுத்தக் கூடாது என 2003 இல் உத்தரவு பிறப்பித்தது.இதனையடுத்து ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இ.தொ.காவினர் அந்த அலுவலகத்தைத் தமது கட்டுப்பாட்டில கொண்டு வந்தனர். அங்கு இ.தொ.கா. அலுவலகம் இயங்கி வருகின்றது.அதை ஆட்சேபித்தும், நீதிமன்றத் தடையை மீறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டியும்
எம்.சதாசிவம் நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஒரு மனுச் செய்தார்.அந்த வழக்கின் மீதே நேற்று மேற்படி குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தாம் மேல்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்போகின்றார்கள் என மேற்படி மூன்று தலைவர்களின்
சார்பிலும் நீதிமன்றத்தில் நேற்றுத் தெரிவிக்கப்பட்டது. அதனால் தாங்கள் அபராதத் தொகையைச் செலுத்த மாட்டார்கள் என்றும்
அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.இதையடுத்து மேன்முறையீட்டுக்குக் கால அவகாசம் வழங்கி அடுத்த மாதம் 26 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார் நுவரெலியா நீதிவான்.
இலங்கை இந்திய எண்ணெய் அகழ்வு ஒப்பந்தம் தொடர்பில் சீனா அதிருப்தி வீரகேசரி நாளேடு 7/12/2008 11:17:41 PM -
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எண்ணெய் அகழ்வு ஒப்பந்தம்
தொடர்பில் சீனா அதிருப்தி அடைந்திருப்பதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் இலங்கைக்கு
வழங்கிவரும் இராணுவ உதவிகளை சீனா குறைக்கும் வாய்ப்புள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்,
வளைகுடாவில் எண்ணெய் அகழ்வு மேற்கொள்வதற்கான தொகுதியொன்றை அரசாங்கம் கடந்த 7ஆம் திகதி இந்திய நிறுவனம்
ஒன்றுக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சீனா, இலங்கையின் அபிவிருத்தி திட்டங்களுக்காக ஒரு பில்லியன் டொலர்களை வழங்கியுள்ள அதேவேளை, இராணுவ
நடவடிக்கைகளுக்காக 37.6 மில்லியன் டொலர்களை வழங்கிவருகிறது. நுரைச்சோலை அனல்மின் நிலையம், அம்பாந்தோட்டை
துறைமுகம், கொழும்பு கலை மண்டபம் போன்ற திட்டங்களுக்கும் சீன அரசாங்கமே உதவி அளித்துவருகின்றது.
இந்த நிலையில் மன்னார், வளைகுடா பகுதியில் எண்ணெய் அகழ்வுக்கான முக்கிய தொகுதியை இந்தியாவிற்கு வழங்கியமை
தொடர்பில் சீனா கடும் அதிருப்தியடைந்துள்ளது.
இதனால் இலங்கைக்கு வழங்கிவரும் இராணுவ, பொருளாதார உதவிகளை குறைப்பது தொடர்பில் சீன அரசாங்கம் பரிசிலிக்கும்
வாய்ப்புள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு "ஜி8' நாடுகள் ஆதரவு
[11 - July - 2008]
இந்தியா அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தை "ஜி8' நாடுகள் வரவேற்றுள்ளன. அமெரிக்க இந்திய நாடுகள் இடையே சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி
இந்தியாவின் ஆக்க பூர்வமான சிவில் அணுசக்திப் பணிகளுக்கு தேவையான அணு மூல பொருளையும் தொழில்நுட்பத்தையும் அமெரிக்கா வழங்கும்.
இந்தியாவில் கடும் எதிர்ப்பை சந்தித்து வரும் இந்த ஒப்பந்தத்துக்கு "ஜி8' எனப்படும் செல்வந்த நாடுகள் ஆதரவு அளிக்க முன் வந்துள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற "ஜி8' நாடுகளின் உச்சி மாநாட்டில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டின் முடிவில் அந்தத் தீர்மானம் வெளியிடப்பட்டது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
அணுவாயுத பரவல் தடை குறித்த இந்தியாவின் நிலையை மேம்படுத்தும் வகையில் அந்நாட்டுடனும் சர்வதேச அணுசக்தி கழகம், அணு எரிபொருள் விநியோகம் செய்யும் நாடுகள் மற்றும் இதர உறுப்பு நாடுகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இதன் மூலம் இந்தியாவில் அதிகரித்து வரும் எரிபொருள் தேவையை அந்நாடு பூர்த்தி செய்ய உதவும் விதமாக சிவில் அணுசக்தி ஒத்துழைப்பில் நியாயமானதொரு அணுகுமுறைக்கு வழிஏற்படும். இது சர்வதேச அணுவாயுத பரவல் தடை
சட்டத்தை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் வகை செய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார பற்றாக்குறையால் திணறி வரும் இந்தியாவுக்கு "ஜி8' நாடுகளின் ஆதரவு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
"ஜி8' நாடுகள் அமைப்பில் பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய செல்வந்த நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இம்மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தலைவர்கள் "ஜி8' மாநாடு ஜப்பானில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வந்துள்ள
முன்னேறிய 17 நாடுகளின் தலைவர்கள் இரு நாடுகளிடையிலான ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்.
இம்மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தலைவர்கள் புவி வெப்ப மடைவதைத் தடுக்க சுற்றுச் சூழலை பாதிக்காத எரிசக்தி அவசியம். அதற்கு அணுசக்தி மிகச் சிறந்த மாற்றாக அமையுமெனத் தெரிவித்தனர்.
இரு நாடுகளிடையிலான ஒப்பந்தம் மூலம் ஆக்கபூர்வமான பணிக்கு அணுசக்தி பயன்படுத்த வழி ஏற்படும். இதன் மூலம்
இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சக்தி தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
குறைவான கரியமில வாயு வெளியாகும் தொழில் நுட்பம் மற்றும் மரபு சாரா எரிசக்திகளை ஊக்குவிக்க வேண்டும். அந்த வகையில் அணுசக்தி மிகச் சிறந்த மாற்றாகும் என்று இந்தத் தலைவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
புவி வெப்பமாதலைத் தடுக்கும் பொறுப்பு, வளரும் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு உள்ளது. இதனை உணர்ந்து தங்களது பங்களிப்பை அந்தந்த நாடுகள் மேற்கொள்ள வேண்டும். என்றும் தலைவர்கள் ஒப்புதல் அளித்த தீர்மானம் தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் சபை வரையறுத்த கியோட்டோ தீர்மானங்களைக் கடந்து புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் தங்களால் இயன்ற அளவு மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்மான வாசகம் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் உட்பட 17 நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்டனர்.

No comments: