Sunday, 27 July 2008

ஈழம்: சென்றவாரத் தமிழ் செய்தித் தொகுப்பு

சார்க் மாநாடு நடைபெறும்போதும் சண்டையை நிறுத்தமாட்டோம்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா [வெள்ளிக்கிழமை, 25 யூலை 2008, 01:19 பி.ப ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவில் சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில், வடபோர் முனையில் நடைபெறும் சண்டை எக்காரணம் கொண்டும்
நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - சார்க் மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் தலைநகர் கொழும்பின் பாதுகாப்புக்கு பெருந்தொகையான படையினர் தேவைப்படுகிறார்கள்.
அதனை வெளிநாட்டு பாதுகாப்புப் பிரிவினர் பார்த்துக்கொள்வார்கள். இந்தியப் பிரதமரின் பாதுகாப்புக்காக கொழும்பு வரவுள்ள இந்திய பாதுகாப்பு பிரிவினர் அவரது பாதுகாப்பை உறுதி செய்துகொள்வார்கள்.
வெளிநாட்டு தலைவர்களுக்கான பாதுகாப்பை அவர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் வழங்குவதால், எமது படையினர் தலைநகரின்
தரை பாதுகாப்பை மட்டும் உறுதிசெய்துகொள்வார்கள். அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்பு ஏற்பாட்டுக்கும் வடபகுதியில் போரில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள்
தொடரந்து புலிகளின் இலக்குகள் மீதான தாக்குதல்களை மேற்கொள்வார்கள்.
தாக்குதலில் ஈடுபட்டுள்ள எமது படையினர் கொழும்புக்கு கொண்டுவரப்படமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

[23 - July - 2008]
இந்தியப் பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பரபரப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற நம்பிக்கைத் தீர்மான இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு வெற்றிபெற்றுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 19 வாக்குகளால் ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ளது.
இதேவேளை, இருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்களிப்பு விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச எழுந்ததும் சபையில் எதிர்க்கட்சியினர்
எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
இதனால் பிரதமரின் பேச்சை எவரும் கேட்கமுடியாத நிலை உருவானதால் பிரதமர் தனது பதிலை சபாநாயகரிடம் தாக்கல்
செய்ததைத் தொடர்ந்து வாக்களிப்பை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார்.
முதலில் குரல் மூல வாக்களிப்பு நடைபெற்று அதனைத் தொடர்ந்து இலத்திரனியல் முறையில் நடத்தப்பட்ட வாக்களிப்பில் அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வாக்குச்சீட்டு மூலமான வாக்களிப்பு நடத்தப்பட்டது.
இதேவேளை, வாக்களிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் பணக்கட்டுக்களை சபாநாயகர்
முன் கொட்டியதால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினரைத் தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி சமஜ்வாடி கட்சியினர் பணம் வழங்கியதாக பாரதீய ஜனதாக் கட்சியினர்
பணக் கட்டுக்களை சபாநாயகர் முன் கொட்டியதால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்விடயம் குறித்து பரிசீலனை செய்வதாக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார். July 25, 2008

[26 - July - 2008]
சார்க் மாநாடா? சார்ஸ் நோய் மாநாடா?
வீடுடைப்பு வியாதியாக பரவுகிறது [26 - July - 2008] தினக்குரல்
* எதிரணி குற்றச்சாட்டு; அரசு நிராகரிப்பு வீடுகளை உடைக்கும் அரசின் வேலைத்திட்டம் மேலும் பல பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் நேற்று கடும்
குற்றச்சாட்டை சுமத்தியதனால் சபையில் அரச தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்குமிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றது.
பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்கு பண்டார தலைமையில்
கூடியது. இதையடுத்து, வாய்மூல விடைக்கான வினாக்கள் இடம்பெற்றன.
ரவி கருணாநாயக்க
இதன்போது ஐ.தே.க. எம்.பி. ரவி கருணாநாயக்க கொம்பனித் தெருவில் அரசு ஆரம்பித்த வீடுடைக்கும் திட்டம் தற்போது
கொலன்னாவ, குண்டசாலை, வட கொழும்பென விஸ்தரிக்கப்பட்டு வருகின்றது. கொம்பனித்தெரு வீடுடைப்புக்கெதிராக செயற்பட்ட
சட்டத்தரணியின் பின்னால் வெள்ளை வான் செல்கிறது.
வீடுடைக்கும் செய்தியை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் இதுவரை எவ்வித
விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லையென குற்றஞ்சாட்டினார்.
அமைச்சர் தினேஷ்
ரவி எம்.பி.யின் இக் குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நகர அபிவிருத்தி அமைச்சரும் அரசதரப்பு பிரதம கொறடாவுமான
தினேஷ் குணவர்தன, வேறு எந்தவொரு இடத்திலும் வீடுடைக்கும் திட்டத்தை அரசு மேற்கொள்ளவில்லை. நாம் வெள்ளை
வான்களை பயன் படுத்துவதுமில்லை.
வெள்ளைவான் பிரசாரத்தை ஸ்ரீ கொத்தாவே முன்னெடுக்கின்றது. ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் சம்பவங்களின் பின்னால் எந்த
சக்தி செயற்படுகின்றதென்பது எமக்கும் தெரியும் என்றார்.
ரவூப் ஹக்கீம்
அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பதிலை தவறெனக் குறிப்பிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான
ரவூப் ஹக்கீம், பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகள், கடைகளை இடிக்கும் பணி நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படுகின்றது. இன்று
(நேற்று) காலை திகன குண்டசாலை வீதியோரக் கடைகளை அகற்றுமாறு அப்பகுதி பிரதேச தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கட்டிடங்களை இடிக்கும் பணிநோயாக மாறிவருகின்றது. கடைகள், வீடுகளை உடைக்குமாறு நகர அபிவிருத்தி சபை
உத்தரவிட்டுள்ளதா? என்பது குறித்து அமைச்சர் பதில் தரவேண்டுமென்றார்.
ஹக்கீமின் குற்றச்சாட்டுக்கும் கேள்விக்கும் பதிலளித்த அமைச்சர் தினேஷ், கொலன்னாவை, குண்டசாலை பகுதிகளில்
வீடுகளையோ, கடைகளையோ இடிக்குமாறு நகர அபிவிருத்தி சபை எவ்வித உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை. உள்ளூராட்சி
மன்றங்களுக்கு அந்த அதிகாரம் உண்டு.
ஹக்கீம் இன்னும் சிறிது காலம் மாகாண சபை உறுப்பினராகவிருந்திருந்தால் உள்ளூராட்சி சபை சட்டதிட்டங்களை நன்கு
தெரிந்திருக்க முடியும். ஆனால், அவர் அதற்குள் மீண்டும் இங்கு வந்து விட்டார் என்றார். அப்போது குறுக்கிட்ட ஐ.தே.க. எம்.பி.
தயாசிறி ஜயசேகர சார்க் மாநாட்டுக்காக வீடுகளை உடைக்கும் பணி நோயாக மாறிவிட்டதால் சார்க் மாநாடு என்பதற்கு பதிலாக
சார்ஸ் நோய் மாநாடென பெயர் வைப்போம் என்றார். இதையடுத்து இருதரப்புக்குமிடையே கடும் தர்க்கம் ஏற்பட்டது.
விவாதம் தொடர்வதை விரும்பாத சபாநாயகர் நாம் நோய் கிருமிகளைப் பற்றி பேசியவை போதும் சபை நடவடிக்கைகளை
ஆரம்பிப்போம் எனக் கூறி விவாதத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

கொம்பனித்தெரு வீடுகள் தகர்ப்பு விவகாரம்
[26 - July - 2008]
கொழும்பு கொம்பனித்தெருவில் 100 ஆம் தோட்டம் என்றழைக்கப்படுகின்ற கிளனி வீதியில் காலாதிகாலமாக குடியிருந்துவந்த
மக்களை திடுதிப்பென வெளியேற்றி அக்கட்டிடங்களை நகர அபிவிருத்தி அதிகார சபை இயந்திரங்களைப் பயன்படுத்தி
தரைமட்டமாக்கிய சம்பவம் கடந்த வாரத்தில் இடம்பெற்றமையும் அதனால் உருவான நெருக்கடி நிலையும் விவகாரத்தை
நீதிமன்றம் வரைகொண்டு செல்லும் நிலைக்குத் தள்ளிவிடுமளவுக்கு கொண்டு சென்றுள்ளது. இந்த கவலைதரக்கூடிய சம்பவத்தை
அனைத்து ஊடகங்களும் முழு நாட்டுக்குமே அறிவிக்கத் தவறவில்லை. இச்சம்பவத்தால் ஆத்திரமுற்ற குடியிருப்பாளர்கள் நகர
அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் மோதுமளவுக்குச் சென்றதுடன் அதனைக் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வருவதற்கு பொலிஸார் கண்ணீர்ப் புகையை பிரயோகிக்கும் நிலைமை கூட உருவானது. ஒரு குடும்பம் வீடில்லாமல்
நடுத்தெருவுக்கு வருவதென்பது மிகவும் வேதனை தரக்கூடியதொன்றாகும். நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்
கொம்பனித்தெருவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதை காண்பவர்களின் உள்ளங்கள்
குமுறாதிருக்க முடியுமா? எமது நாட்டு மண்ணில் நான்கில் இருபங்கு ஆறு, ஓடைகள் போன்ற நீர் நிலைகளைக் கொண்டதாகவும் காடுகளைக்
கொண்டதாகவுமே உள்ளன. ஒருபகுதி நெடுஞ்சாலைகளாகக் காணப்படுகின்றது. மீதமுள்ள ஒருபகுதி மட்டுமே மக்களின்
குடியிருப்புக்காக உள்ளது. இந்த ஒரு வீதத்தில் சட்டபூர்வமாக குடியிருப்பவர்கள் போன்று சட்டவிரோத குடியிருப்புகளும் நாட்டில்
பரவலாகவே காணப்படுகின்றன. சட்டவிரோத குடியிருப்புகள் விடயத்தில் அரசாங்கம் எப்போதுமே பெரிதாக
அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், தாக்கமொன்று ஏற்படுகின்ற வேளையில் அதனுடன் சம்பந்தப்பட்ட பகுதியில் மட்டும் சட்ட
நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் முற்படுகின்றனர். கொம்பனி வீதிச் சம்பவத்தை அதிலொரு அம்சமாகவே
நோக்கவேண்டியுள்ளது. ஒரு வீடு அல்லது கட்டிடம் சட்டவிரோதமாக அமைக்கப்படுமானால் அதனை தகர்த்து விடுவது தவறு
என்று கூற முடியாது. அதில் தர்க்கத்துக்கு இடமேயில்லை. ஆனால், இங்கு முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய
பலவிடயங்கள் காணப்படுகின்றன. சட்டவிரோத கட்டிடங்களை உடைத்து அப்புறப்படுத்த வேண்டியது அவை நிர்மாணிக்கப்படும்
ஆரம்ப கட்டத்திலேயேயாகும். 30, 40 வருடங்கள் வரை அரசும் அதிகாரிகளும் ஆழ்ந்த நித்திரையிலிருந்துவிட்டு திடீர் கனவுகண்டு
பயத்தில் வாரிச் சுருட்டிக்கொண்டு சட்டத்தைப் பயன்படுத்த முனைவதானது ஒரு தவறை மூடிமறைப்பதற்குப் போய் பல
தவறுகளைப் புரியும் செயலாகவே காணப்படும். அந்த நிலைமை தான் இன்று கொம்பனித் தெரு சம்பவத்தால் ஏற்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையொன்று இந்த நாட்டிலுள்ளது. அனைத்து மாவட்டங்களையும் உள்வாங்கப்பட்டவையாக பிரதேச
சபைகளும் நகர சபைகளும் மாநகர சபைகளும் அமைந்துள்ளன. இந்த ஆட்சி நிறுவனங்களின் பிரதான பணிகளில் ஒன்றுதான்
சட்டவிரோத கட்டிடங்கள் உருவாவதை தடுத்தல், சட்டவிரோத குடியிருப்புகளுக்கு இடமளிக்காது பார்த்துக்கொள்வது
என்பவையாகும். எனினும், அந்தப் பொறுப்பை, கடப்பாட்டை உரியமுறையில் இந்த ஆட்சி நிறுவனங்களும் அதிகார சபையும்
நிறைவேற்றுவதாகவே தெரியவில்லை. இது இன்று, நேற்று நடக்கும் சம்பவங்கள் அல்ல. வரலாற்று நெடுகிலும் இது
காணப்படவே செய்கின்றது. கண்களை மூடிக் கொண்டிருந்து விட்டு ஏதோவொரு காரணத்துக்காக திடீரென நடவடிக்கையிலிறங்க
முற்படுகின்றபோது சட்டவிரோத குடியிருப்பாளர்கள் தாம் பிறந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுவதற்கு உதவுவதாகவே
அமைகின்றது.
ஆரம்பத்தில் சட்ட வீரோதமாக வீடுகளையோ, கட்டிடங்களையோ அமைக்கவிடாது குடியமரவிடாது தடுத்து சம்பந்தப்பட்ட மக்கள்
வாழ்வதற்குரிய வசதிகளை அரசு செய்து கொடுக்க முற்பட்டிருந்தால் இத்தகைய அவலங்கள் ஏற்பட வழிபிறந்தே இருக்க
முடியாது. இங்கு இன்னுமொரு விடயத்தை சுட்டிக்காட்டியாக வேண்டும். அரசியல் வாதிகளும் இந்த விடயத்தில் பங்குதாரர்களாக
இருப்பதே அந்த விடயமாகும். மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அதிகாரத்துக்கு வருவதற்காக இந்த அரசியல் வாதிகள்
முறைகேடான செயற்பாடுகளிலீடுபடுகின்றனர்.எங்காவது ஒரு நிலத்துண்டு வெற்றுத் தரையாகக் காணப்பட்டால் அது
யாருக்குரியது, அரசின் எந்தப்பணிக்குரியது என்று சிறிது கூட ஆராயாமல் எடுத்த எடுப்பிலேயே அந்த அப்பாவி மக்களை
குடியேற்றி தாம் மக்களுக்கு பெரும் சாதனை புரிந்து விட்டதாக காண்பித்து தப்பித்துக்கொள்கின்றனர். ஆரம்பத்தில் சலசலப்புகள்
ஏற்படும்போது அதிகாரிகளை தம் கைக்குள் எடுத்து அவர்களுக்கு இரகசியமாக கைம்மாறு ஏதாவது செய்து வாயை மூடி
விடுகின்றனர். இங்குதான் ஊழலும், மோசடியும் ஆரம்பமாகி விடுகின்றன. அத்துடன் அந்த சட்ட விரோத குடியிருப்புகளுக்கு
மின்சார இணைப்புகள், குழாய் நீர் வசதிகள், பெற்றுக் கொடுக்கப்படுவதோடு நகர சபைக்கான வரிகள் கூட பெறப்படுகின்றன.
சட்டவிரோத கட்டிடங்களுக்கு சட்ட பூர்வ அந்தஸ்து இதன் மூலம் கிடைப்பதாக இவற்றைக் கருத முடியாதா எனக் கேட்க
விரும்புகின்றோம்.
இவற்றையெல்லாம் கூர்மையாக கவனத்தில் கொண்டு இந்த மக்களைப் பாதிக்காத விதத்தில் அவர்களை நடுத் தெருவிலிருந்து,
சட்ட பூர்வமான இருப்பிடங்களில் அமர்த்துவதற்குரிய செம்மையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தற்காலிக நடவடிக்கை
என்று கூறப்படுவது அங்கீகரிக்கப்படமுடியாது. ஏனெனில் அது கூட இன்னொரு தவறுக்கு வழிதிறந்து விட முடியும்.
இருப்பிடங்களை இழந்து கண்ணீர் வடிக்கும் இந்த அப்பாவி மக்களுக்கு இச்செயல் மேலும் அவலங்களைத் தந்து விடுவதாகவே
அமைந்து விடும். தவறுகளுக்கு இடமளிக்காது உறுதியானதும், நிரந்தரமானதுமான நடவடிக்கையே அவசரப்பணியாக அமைய
வேண்டும்

புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பு அரசாங்கம் உறுதியாக நிராகரிப்பு
[23 - July - 2008]
"ஆயுதங்களை கைவிடும் முன்நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் பரிசீலனை'
கொழும்பில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டை
முன்னிட்டு விடுதலைப்புலிகள் அறிவித்திருக்கும் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த பிரகடனத்தை நேற்று செவ்வாய்க்கிழமை
நிராகரித்திருக்கும் அரசாங்கம், வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச எம்.பி.யின் இது தொடர்பான கேள்வியொன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பதிலளித்த
வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, புலிகளின் இந்த ஒருதலைப்பட்சமான அறிவிப்பு குறித்து அரசாங்கம் பதில்
எதனையும் அளிக்கப் போவதில்லையெனக் கூறியுள்ளதுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளின் நேச அணியினர்
புலிகள் மீதான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியதுடன் பயங்கரவாதிகளை அரசு தற்போது
தோற்கடித்து வருகிறது. நாம் ஒரு போதும் இந்த நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன் இது தொடர்பாக நோர்வே அனுசரணையாளர்களுடனோ வேறு எந்தக் குழுவுடனோ அரசு பேச்சுவார்த்தை
நடத்தவில்லையென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக முன் எச்சரிக்கையுணர்வுடன் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
""ஆயுதங்களைக் கைவிடாமல் புலிகளிடமிருந்து வெளியிடப்படும் எந்தவொரு போர் நிறுத்தப் பிரகடன அறிவிப்பும் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று என்று தான் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்காக புலிகள் ஆயுதங்களை கைவிடுவார்களா என்பது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டிய
தேவை இருப்பதாக அரச சமாதான செயலக செயலாளர் நாயகம் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார். யுத்த நிறுத்தத்தின்
போது அவர்கள் தமது பலத்தைக் கட்டியெழுப்பும் போக்கே வரலாற்று ரீதியாகக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன, யுத்த நிறுத்தப் பிரகடனம் தொடர்பாக அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையெனக் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான கெஹலிய
ரம்புக்வெல "இந்தப் பொறியில் அரசாங்கம் விழுந்து விடுமென நான் நினைக்கவில்லை. இந்த மாதிரியான அறிவிப்புகள்
தொடர்பாக எமக்குப் போதியளவிலான அனுபவங்கள் கடந்த 30, 40 வருடங்களாக உண்டு' என்று ஐ.ஏ.என்.எஸ். செய்திச் சேவைக்கு நேற்று கூறியுள்ளார்.
வடக்கில் சகல முனைகளிலும் படையினர் முன்னேறிவரும் நிலையில் கடுமையாக தோற்கடிக்கப்படும் தருணத்திலேயே புலிகளிடமிருந்து யுத்த நிறுத்த அறிவிப்பு வெளிவந்திருப்பதாகவும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டிருப்பதுடன் இந்த மாதிரியான யுத்த நிறுத்த அறிவிப்புகள் ஆயுதங்களைக் கைவிடுவதென்ற முன் நிபந்தனையுடன் புலிகளிடமிருந்து வெளிவந்தால் எங்களால் பரிசீலனை செய்ய முடியும் என்றும் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை பிரகடனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாங்கள் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இராணுவம் கூறியுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி
[23 - July - 2008]
இந்தியப் பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை பரபரப்புகளுக்கு மத்தியில் இடம்பெற்ற நம்பிக்கைத் தீர்மான இறுதிக்கட்ட வாக்கெடுப்பில் ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசு வெற்றிபெற்றுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 19 வாக்குகளால் ஆளுங்கட்சி வெற்றிபெற்றுள்ளது.
இதேவேளை, இருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்களிப்பு விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன் சிங் பேச எழுந்ததும் சபையில் எதிர்க்கட்சியினர்
எழுந்து நின்று கூச்சலிட்டனர்.
இதனால் பிரதமரின் பேச்சை எவரும் கேட்கமுடியாத நிலை உருவானதால் பிரதமர் தனது பதிலை சபாநாயகரிடம் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து வாக்களிப்பை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார்.
முதலில் குரல் மூல வாக்களிப்பு நடைபெற்று அதனைத் தொடர்ந்து இலத்திரனியல் முறையில் நடத்தப்பட்ட வாக்களிப்பில் அரசுக்கு ஆதரவாக 275 வாக்குகளும் எதிராக 256 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வாக்குச்சீட்டு மூலமான வாக்களிப்பு நடத்தப்பட்டது.
இதேவேளை, வாக்களிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் பணக்கட்டுக்களை சபாநாயகர்
முன் கொட்டியதால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எதிர்க்கட்சியினரைத் தமக்கு ஆதரவு வழங்குமாறு கோரி சமஜ்வாடி கட்சியினர் பணம் வழங்கியதாக பாரதீய ஜனதாக் கட்சியினர்
பணக் கட்டுக்களை சபாநாயகர் முன் கொட்டியதால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்விடயம் குறித்து பரிசீலனை செய்வதாக சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி தெரிவித்தார்.
கைகளை மேற்கொண்டுள்ளோம்' என்று இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார நேற்று ராய்ட்டருக்கு கூறியுள்ளார்.

அரசும் புலிகளும் மடுவை அமைதி வலயமாக அறிவித்தால் மட்டுமே உற்சவம் நடைபெறும்: மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்
[வெள்ளிக்கிழமை, 25 யூலை 2008, 02:18 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை]
மடு மாதாவின் திருச்சொரூபம் சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்குள் கொண்டுவரப்பட்டாலும் கூட, மடு மாதா
தேவாலயம் அமைந்துள்ள பிரதேசம் சிறிலங்கா அரசினாலும் விடுதலைப் புலிகளாலும் அமைதி வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டால் மாத்திரமே இம்முறை மடு மாதா உற்சவம் நடைபெறும் என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வெள்ளாங்குளம் தேவன்பிட்டி தேவாலயத்திலிருந்து எடுத்துவரப்பட்டு மன்னார் மாவட்ட ஆயர் இல்லத்தில் தற்போது
வைக்கப்பட்டுள்ள மடு மாதாவின் திருச்சொரூபத்தை, மடு மாதா தேவாலயத்தில் வைப்பதற்கு அனுமதி கேட்டு சிறிலங்கா
அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். இது தொடர்பில் எமக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் நாள் மடுவில் வருடாந்த உற்சவம் நடைபெறவேண்டும். அதற்கு மடு தேவாலயம் அமைந்துள்ள
பகுதி அமைதி வலயமாக பிரகடனப்படுத்தப்படவேண்டும். அரசும் புலிகளும் அதற்கு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.
உற்சவம் நடைபெறுவதற்கும் யாத்திரிகர்கள் வந்து செல்வதற்கும் உரிய சூழல்நிலையை உருவாக்கவேண்டியது இருதரப்புக்களினதும் பொறுப்பு ஆகும் என்று கூறியுள்ளார்.

ஈரானின் அணுவாயுத நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதை தடுப்பதற்கு பிரிட்டன் தீர்மானம் [23 - July - 2008]

* இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் கோர்டன் பிறவுண் ஈரான் அணுவாயுத நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதை தடுப்பதற்கு பிரிட்டன் தீர்மானித்துள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிறவுண் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த பிறவுண் உலக வரைபடத்திலிருந்து இஸ்ரேலை
அகற்றுவதற்கு ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதி நிஜாத் விடுத்துள்ள அழைப்பு வெறுப்பூட்டுவதாக அமைந்துள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அணு நிகழ்ச்சித் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் அல்லது மேலதிக தனிமைப்படுத்தல்களை எதிர்கொள்ளநேரிடுமென எச்சரித்துள்ள பிறவுண் ஈரானுக்கெதிராக உறுதியான தடைகளை விதிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் முன்னிலை வகிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் இஸ்ரேலின் உரிமைக்கான போருக்கு பிரிட்டன் பக்க பலமாக இருக்குமெனவும் தெரிவித்துள்ளார்.
பிறவுணின் மத்திய கிழக்கிற்கான மூன்று நாள் விஜயத்தின் முடிவாக இவ் உரை அமைந்துள்ளதுடன், இஸ்ரேலிய
பாராளுமன்றத்தில் பிரிட்டிஷ் பிரதமரொருவர் முதன் முறையாக ஆற்றிய உரை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் இங்கு உரையாற்றுகையில்;
அணுவாயுதமொன்றை ஈரான் பெற்றுக் கொள்வதை தடை செய்வதற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்
என்பன தீர்மானித்துள்ளன. கடந்த 2000 வருடங்களுக்கு மேலாக போர், பயங்கரவாதம், வன்முறை, பாரபட்சம் மற்றும்
பாதுகாப்பில்லாத் தன்மை போன்றவற்றையே எதிர்கொண்டுள்ளது. இஸ்ரேலுக்குள்ள உரிமை, அந்நாட்டு மக்களுக்கான
அச்சுறுத்தல் தொடர்பில் சிலர் கேள்வியெழுப்புகின்றனர். இஸ்ரேல் மக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்குரிய
உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என நாம் கூறுகிறோம். அணுவாயுத நடவடிக்கைகளை இடைநிறுத்தி பேச்சுக்களை
ஆரம்பிப்பதற்கு ஈரானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அது நிராகரித்தால் உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அது
தனிமைப்படுத்தப்படுவதுடன், மேலதிக தடைகளையும் எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தந்தை வாழ்நாள் முழுவதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்தவாறும் குறிப்பிட்ட பிறவுண் தனது வாழ்க்கை
முழுவதும் தனிப்பட்ட ரீதியில் இஸ்ரேலின் நண்பனாக இருப்பாரெனவும் உறுதியளித்துள்ளார்.

புலிகளின் யுத்த நிறுத்த அறிவிப்பு அரசாங்கம் உறுதியாக நிராகரிப்பு

[23 - July - 2008]
"ஆயுதங்களை கைவிடும் முன்நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் பரிசீலனை'
கொழும்பில் இந்த வார இறுதியில் ஆரம்பமாகும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சி மாநாட்டை
முன்னிட்டு விடுதலைப்புலிகள் அறிவித்திருக்கும் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்த பிரகடனத்தை நேற்று செவ்வாய்க்கிழமை
நிராகரித்திருக்கும் அரசாங்கம், வடக்கில் புலிகளின் நிலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தப் போவதில்லை என்று
தெரிவித்துள்ளது.
பாராளுமன்றத்தில் விமல் வீரவன்ச எம்.பி.யின் இது தொடர்பான கேள்வியொன்றுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பதிலளித்த
வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, புலிகளின் இந்த ஒருதலைப்பட்சமான அறிவிப்பு குறித்து அரசாங்கம் பதில்
எதனையும் அளிக்கப் போவதில்லையெனக் கூறியுள்ளதுடன் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளின் நேச அணியினர்
புலிகள் மீதான நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியதுடன் பயங்கரவாதிகளை அரசு தற்போது
தோற்கடித்து வருகிறது. நாம் ஒரு போதும் இந்த நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
அத்துடன் இது தொடர்பாக நோர்வே அனுசரணையாளர்களுடனோ வேறு எந்தக் குழுவுடனோ அரசு பேச்சுவார்த்தை
நடத்தவில்லையென்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக முன் எச்சரிக்கையுணர்வுடன் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
""ஆயுதங்களைக் கைவிடாமல் புலிகளிடமிருந்து வெளியிடப்படும் எந்தவொரு போர் நிறுத்தப் பிரகடன அறிவிப்பும்
அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாததொன்று என்று தான் கருதுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்காக புலிகள் ஆயுதங்களை கைவிடுவார்களா என்பது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டிய
தேவை இருப்பதாக அரச சமாதான செயலக செயலாளர் நாயகம் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க கூறியுள்ளார். யுத்த நிறுத்தத்தின்
போது அவர்கள் தமது பலத்தைக் கட்டியெழுப்பும் போக்கே வரலாற்று ரீதியாகக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோகன, யுத்த நிறுத்தப் பிரகடனம்
தொடர்பாக அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையெனக் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு விவகாரப் பேச்சாளரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான கெஹலிய
ரம்புக்வெல "இந்தப் பொறியில் அரசாங்கம் விழுந்து விடுமென நான் நினைக்கவில்லை. இந்த மாதிரியான அறிவிப்புகள்
தொடர்பாக எமக்குப் போதியளவிலான அனுபவங்கள் கடந்த 30, 40 வருடங்களாக உண்டு' என்று ஐ.ஏ.என்.எஸ். செய்திச்
சேவைக்கு நேற்று கூறியுள்ளார்.
வடக்கில் சகல முனைகளிலும் படையினர் முன்னேறிவரும் நிலையில் கடுமையாக தோற்கடிக்கப்படும் தருணத்திலேயே
புலிகளிடமிருந்து யுத்த நிறுத்த அறிவிப்பு வெளிவந்திருப்பதாகவும் அமைச்சர் கெஹலிய குறிப்பிட்டிருப்பதுடன் இந்த மாதிரியான
யுத்த நிறுத்த அறிவிப்புகள் ஆயுதங்களைக் கைவிடுவதென்ற முன் நிபந்தனையுடன் புலிகளிடமிருந்து வெளிவந்தால் எங்களால்
பரிசீலனை செய்ய முடியும் என்றும் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இது இவ்வாறிருக்க ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை புலிகள் ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை பிரகடனம் செய்வதாக
அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாங்கள் தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இராணுவம் கூறியுள்ளது.
"இப்போதும் கூட நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்' என்று இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார நேற்று
ராய்ட்டருக்கு கூறியுள்ளார்.

தமிழர்களின் பூமி,பொருளாதாரம் கலாசாரம் திட்டமிட்ட முறையில் அழிப்பு தமது சொந்த இடங்களில் வாழ்முடியாத நிலை காணப்படுகிறது என்கிறார் சம்பந்தன் எம்.பி
வீரகேசரி நாளேடு 7/24/2008 7:59:07 AM - வன்னியில் பாரிய கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு தமிழ் சிவிலியன்களின்
நிலைகள் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தி வருகின்றது. தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி, கலாசாரம், பொருளாதாரம் என்பன
திட்டமிட்டமுறையில் இராணுவ நடவடிக்கைகள் மூலம் அழிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தமிழ் மக்களுக்கு தமது
சொந்த இடங்களில் வாழ முடியாத நிலை காணப்படுகின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக்
குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட கூட்டமைப்பு எம்.பி.யுமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அரசாங்கம் சிங்கள இனத்துவத்தையும் மேலாதிக்கத்தையுமே நடைமுறைப்படுத்தி –வருகின்றது. போரினால் ஆயிரக்கணக்கான
தமிழர்கள் இடம் பெயர்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். வடக்கு கிழக்கு தமிழர்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்று
நடத்தப்படுவதில்லை. அச்சத்தின் மத்தியில் நிச்சயமற்ற நிலையிலேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் அவர்
தெரிவித்தார். வடக்கில் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகளினால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம், மனித
உரிமை மீறல்கள் அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் உள்ளிட்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பாக
பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின்
பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். நீண்ட உரையை ஆற்றிய அவர் மேலும் இது
தொடர்பில் கூறியதாவது: சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சி
சர்வகட்சி பிரதிநிதி குழுவின் மூலம் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின்
கூட்டங்கள், கலந்துரையாடல்கள், தீர்மானங்கள், பரிந்துரைகளில் ஜனாதிபதியின் தலையீடு காணப்படுகின்றது. முன்னாள்
ஜனாதிபதிகளான பிரேமதாஸ, சந்திரிகா, மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக்காலத்தில்
மேற்கொள்ளப்பட்ட தீர்வு முயற்சிகளின் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம்
தீர்வு காண முடியாது என்பது தெளிவாகியுள்ளது. ஐக்கியதேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன நாட்டின் பிரதான
கட்சிகளிடையே இனக்கப்பாடு காணப்படாதனாலேய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இணைந்த வடக்கு கிழக்கு என்பது 13 ஆவது திருத்ததச் சட்டத்தில் முக்கிய அம்சமாக காணப்பட்ட போதிலும் இலங்கையும்
இந்தியாவும் கைச்சாத்திட்ட ஒப்பந்தின் உள்ளடக்கமாக உள்ள நிலையிலும் மஹிந்த அரசாங்கம் தன்னிச்சையான முறையில்
வடக்கு கிழக்கை இரண்டாகப் பிரித்துள்ளது. மேலும் அந்தத் திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி
அதிகாரங்கள் கடந்த 20 வருடங்களாக வடக்கு கிழக்குக்கு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் சர்வகட்சிப் பிரதிநிதிகள்
சபையின் தற்போதைய முயற்சிகள் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் நியாயமான
தீர்வு எட்டப்படும் என நான் நம்பவில்லை. ஏனெனில் சர்வகட்சி பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்படும் பரிந்துரைகளில்
ஜனாதிபதியின் தலையீடு அளவுக்கதிகமாக காணப்படுகின்றது. சபையின் பிரதிநிதிகளின் கருத்துக்களை அவை
பிரதிபலிக்கவில்லை. சர்வதேசத்தின் நம்பிக்கை சர்வகட்சி பிரதிநிதிகள் சபையின் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு
நியாயமான தீர்வைக் காணமுடியுமென நம்பிக்கை கொண்டுள்ளன.
இந்தியாவும் இணைத்தலைமை நாடுகளும் அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வைக்காணுமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி
வருகின்றன. எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இன்றி தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை சர்வதேச சமூகம்
ஏற்றுக்கொண்டுள்ளதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வு முன்வைக்கப்படவேண்டுமென்றும் என்ற கருத்தை
வெளிப்படுத்தி வருகின்றது. எனினும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு ஸ்திரமான நடவடிக்கைகள்
எதனையும் மேற்கொள்ளாமல் தீர்வு குறித்து உதட்டளவிலேயே பேசிவருகின்றது. இந்த நிலையில் பாரம்பரிய வதிவிடங்களில்
சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான தமது விதியை தீர்மானிக்கும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு.
அரசாங்கத்தின் ஷெல் தாக்குதல்களுக்கும் கிளைமோருக்கும் தமிழ் மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர். கமத்தொழிலும்
கடற்றொழிலும் பாதிக்கப்பட்டு வாழ்விடங்களும் அழிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் நிர்க்கதியான நிலைக்குத்
தள்ளப்பட்டள்ளனர்.
அதிஷ்டவசமாக சர்வதேச தொண்டர் நிறுவனங்களும் உலக உணவுத்திட்டமும் வழங்கும் நிவாரண உணவிலேயே தமிழ் மக்கள்
வாழ்ந்து வருகின்றனர். இந்த நிறுவனங்களின் உதவிகளை தனது உதவியாக காட்டி அரசாங்கம் பெருமிதம் அடைந்து வருகின்றது.
கிழக்கில் 1866 குடும்பங்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்வதற்கு அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. விடுதலைப்புலிகள்
உருவாவதற்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த அவர்களின் பாரம்பரிய பூமியில் இன்று அவர்கள் வாழமுடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு வலயங்கள் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வாழும் உரிமை பறிகப்பட்டுள்ளது.
அரசாங்கம் சிங்கள மக்களைப் போன்று தமிழ் மக்களையும் சமனாக நடத்த வேண்டும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை
மதிப்பதோடு, மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். யுத்தம் நிறுத்தப்படும் பட்சத்தில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற
பிரச்சினை ஏற்படாது. தமிழ் மக்களது பாரம்பரிய பூமிக்கும் பிரச்சினை ஏற்படாது. சிங்கள காலனித்துவம் சிங்கள
காலனித்துவத்தின் கீழ் தமிழ்மக்கள் பாரிய கொடுமைகளுக்கு உள்ளாகி அவலமான நிலையில் உள்ளனர். சிங்கள மக்களை
குடியேற்றும்போது வீடு கட்ட லீ ஏக்கர் நிலமும் விவசாயத்துக்கு 3 ஏக்கர் நிலமும் வழங்கும் அரசாங்கம் தமிழ் மக்களை 2 பேர்ச்
நிலத்தில் குடியமர்த்தி வருகின்றமை, அரசாங்கம் தமிழ்மக்களுக்கு காண்பிக்கும் நீதிக்கு சிறந்த உதாரணமாகும். இந்த
பாரபட்சமான நடவடிக்கைகள் காரணமாக தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ளனர். அனல் மின் நிலையம்
அமைப்பதாக கூறி வளமான சம்பூரில் இருந்து 16 ஆயிரம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போது கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மிக வேகமாக
முன்னெடுக்கப்படுகின்றது. “கிழக்கின் உதயம்’ என்ற திட்டம் அங்கு வாழும் தமிழ்மக்களை இலக்காக கொண்டதல்ல.
கிழக்கில் குடியேற்றப்படும் சிங்கள மக்களை கருத்திற் கொண்டே அந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிங்கள
மயமாக்கலையும் சிங்கள குடியேற்றத்தையும் தமிழ்மக்களின் பாரம்பரிய வாழுமிடத்தில் மேற்கொண்டதன் விளைவாகவே இன்று
காணப்படும் பிரச்சினையும் இன முரண்பாடும் ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இந்திய அரசாங்கம் தமிழ்
மக்களின் பிரச்சினை தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் மிகவும் அக்கறை கொண்டுள்ளார். தமிழ் மக்களின்
அபிலாஷைகள் நியாயமானது என அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டுள்ள அவர்
இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு இந்த இணைப்பு முக்கியமானது என எமக்கு தெரிவித்துள்ளார்.இலங்கையின்
நீதித்துறையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பங்குபற்றாத நிலையில், இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டதன் பின்னணி
உள்ளிட்ட விடயங்களை ஆராயாமல் வடக்கு கிழக்கு இணைப்பு பிரிக்கப்பட்டுள்ளது. அனுசரணையாளர் சமாதõனத்தின் கதவை
திறந்து வைத்துள்ளதாக கூறும் அரசாங்கம் சமாதான நடவடிக்கைக்கு அனுசரணையாளரான நோர்வேயின் அதிகாரிகள்
கிளிநொச்சிக்கு செல்வதற்கு அனுமதி மறுத்துள்ளது. சம்பந்தப்பட்ட இருதரப்புடனும் நேரடி தொடர்புகளை கொள்ள முடியாத
காரணத்தினால் நோர்வேயினால் சமõதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள
முடியாதுள்ளது.அரசுக்கு அரசியல் தீர்வில் ஆர்வமில்லை அரசாங்கம் யுத்தத்தை முன்னெடுத்து வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு
இராணுவ தீர்வை வழங்க முயல்கின்றது. அரசியல் தீர்வை முன்வைத்து பிரச்சினையை தீர்க்க அரசாங்கம்
விரும்பவில்லை.இப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்கனவே உண்டு. ஆனால் தற்போதுள்ள யுத்த சூழ்நிலையில் அரசியல்
ரீதியான தீர்வு சாத்தியமற்றதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளை ஓரங்கட்டி தமிழ் மக்கள் மீது தான் விரும்பும் தீர்வை திணிக்க
முடியுமென அரசாங்கம் நினைக்கின்றது. ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வு முன்வைக்கப்பட்டது தந்தை செல்வாவின் காலத்தில்
ஆரம்பித்த தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டத்தின் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் அடக்கு முறையின் மூலம் அதனை
தோற்கடிக்க அப்போதைய அரசாங்கம் முற்பட்டது. எனவேதான், தமது பாரம்பரிய வாழ்விடங்களில் சுயநிர்ணய உரிமையுடன்
வாழ்வதற்காக தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். தனி நாட்டு கோரிக்கையானது விடுதலைப்
புலிகளுடையதல்ல. அது தமிழ் மக்களின் கோரிக்கையாகும். ஐக்கிய தேசிய கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, தமிழ்
மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதியான தீர்வை ஒருபோதும் முன்வைக்க
விரும்பவில்லை. படை நடவடிக்கை மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இராணுவ தீர்வை காண்பதற்கே அரசாங்கம்
விரும்புகின்றது. ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருந்தது. எனவே,
இனப்பிரச்சினை தீர்வுக்கு புலிகளே தடையாக இருப்பதாக கூறுவது அர்த்தமற்றதாகும்.சுனாமிக்கு பின்னரான பொதுக்கட்டமைப்பு
புலிகள் முன்வைத்த இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை (ஐகுஎஅ) என்பவற்றை ஏற்று அமுல்படுத்தியிருந்தால் இந்தப்
பிரச்சினை நீடிப்பதற்கு எந்த வாய்ப்பும் இருந்திருக்காது.அபிவிருத்தி என்ற மாயை அரசாங்கம், தனது குறுகிய அரசியல்
நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான குறுக்கு வழியாகவே அபிவிருத்தியை பயன்படுத்துகின்றது. இதன் மூலம் தமிழ்
மக்களின் அபிலாஷைகளை மழுங்கடிக்க முடியாது என்பதை உறுதிபட தெரிவிக்க விரும்புகின்றேன். தமிழர்கள் தமது பாரம்பரிய
வாழ்விடங்களில் வாழ்வதற்கு இந்த அபிவிருத்திகளும் அபிவிருத்தி திட்டமும் வழியேற்படுத்துமா? அபிவிருத்தியினால் இதனை
செய்ய முடியாவிட்டால் அதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
காணி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அபிவிருத்தியின் போர்வையில் உருவாக்கப்பட்டவையாகும். அரசாங்கத்தின்
அபிவிருத்தியினால் தமிழ் மக்களுக்கு எந்த நலனும் ஏற்படவில்லை. தமிழர்களின் பாரம்பரிய பூமியில் குடியேற்றப்படும் சிங்கள
மக்களுக்கே அபிவிருத்தி பயனளிக்க விரும்புகின்றது. எனவே, அபிவிருத்தியினால் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும்
போராட்டத்தையும் மழுங்கடிக்க முடியாது. மனித உரிமை மீறல்கள் கடத்தல்கள், காணாமல் போ தல்கள் என்பன இன்று
கட்டுப்படுத்த முடியாத தடுக்க முடியாத விடயமாக மாறியுள்ளது. அரசாங்க தரப்பு எம்.பி.க்களினால் தயாரிக்கப்பட்ட
அறிக்கையில் ஜூன் மாதம் 64 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை செஞ்சிலுவைச் சங்க
பணியாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் அடங்கலாக எந்த வேறுபாடுமின்றி கடத்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள்
குறித்து மிகுந்த கவலை வெளியிட்டுள்ளன. முக்கியமான சில மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஜனாதிபதி
ஆணைக்குழுவின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் ஆணைக்குழு பல்வேறு
குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தனது பணியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள்
சர்வதேச நியமத்துக்கு அமைவாக இடம்பெறவில்லை. அது வெளிப்படையானதாக நடைபெறவில்லை. விசாரணைக்கு அரச
நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. நீதி சுதந்திரம் இருக்கவில்லை. கட்சிகளைப் பாதுகாக்கும் எந்த ஏற்பாடும் இல்லை
போன்ற குற்றச்சாட்டுக்களை சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் ஆணைக்குழு அரசாங்கத்தின் மீது சுமத்தியது.
மனித உரிமை மீறல்களின் உச்சக்கட்டமாக இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தனது உறுப்புரிமையை
இழந்தது. சர்வதேசத்தின் நிலைப்பாடு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என்று சர்வதேச சமூகம் இலங்கை
அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது. எனினும், அதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு
சர்வதேச சமூகத்தால் முடியவில்லை. சிங்கள அரசாங்கம் இறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றது. தமிழ் மக்கள்
சுயநிர்ணய உரிமையைக் கோருகின்றார்கள்.எனவே, மக்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் ஏற்று அங்கீகரிக்க
வேண்டும். எமது கலாசாரம், பொருளாதாரம், சமூகம் என்பன அழிக்கப்பட்டு இனப்படுகொலையை அரசாங்கம் திட்டமிட்டு
மேற்கொண்டு வருகின்றது. நாம் இறைமையை மதிக்கின்றோம். அரசாங்கம் நீதியான அரசியல் தீர்வை முன்வைக்க விட்டால்
தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையைப் பெறுவதை தவிர வேறுவழியில்லை

வெளிநாடுகள், அரசியல் கட்சிகளின் தேவைக்காக திட்டங்களை வகுக்கமுடியாது - ஜனாதிபதி
வீரகேசரி நாளேடு 7/23/2008 8:56:31 PM -
குடிமக்களின் அபிலாசைகளுக்கு இணங்கவே அரசாங்கம் திட்டங்களை
மேற்கொள்ளவேண்டும். இதனை விடுத்து வெளிநாடுகளினதோ அல்லது அரசியல் கட்சிகளினதோ தேவைக்காக திட்டங்களை
வகுக்க முடியாது என்று ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்ற மாமிச உணவு உற்பத்திபொருள் ஏற்றுமதியாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே
ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது: 2004 ஆம் ஆண்டு
ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பிற்பாட்டிலிருந்து 2008 வரை இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும். பொருட்களுக்கான
ஜி.எஸ். பி பிளஸ் வரிவிலக்கினை பெற்றுக்கொள்வதற்கு அப்பொருட்களை விலைக்கு வாங்கும் நாடுகளின் இணக்கத்திற்கு
இணங்க வரிவிலக்கினை மேலும் 3 வருடங்களுக்கு நீடிக்க அரசு தீர்மானித்துள்ளது.
ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இலங்கைக்கு கிடைக்காமல் செய்து அரசை கவிழ்ப்பதற்கான முயற்சிகளில் சில தரப்பினர்
ஈடுபட்டுள்தாகவும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு கொடுக்கப்படக்கூடாது என்ற வேண்டுகோளை அவர்கள்
சர்வதேச மட்டத்தில் விடுப்பது வேதனைக்குரிய விடயமாகும். நாடொன்றுக்கு கிடைக்கும் நிவாரணமானது ஒரு நபருக்கோ
அல்லது அரசாங்கத்துக்கு மட்டும் கிடைக்கும் நிவாரணம் அல்ல. அது நாட்டில்வாழும் அனைத்து மக்களுக்குமான நிவாரணமாகும்.
இலங்கையை பற்றி தவறான பிரசாரங்களில் ஈடுபடும் நம்மவர்களில் சிலர் இதன் மூலமாக இலங்கையின் நற்பெயருக்கு
களங்கம் விளைவிக்க முனைவதுடன் அது முழு இலங்கையரையும் பாதிக்கக்கூடிய செயலாகும். இன்று நாமனைவரும் முதலில்
நாட்டை பற்றி சிந்தித்தே தீர்மானம் எடுக்கவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது.
எனது பதவி காலத்தில் எச்சந்தர்ப்பத்திலும் இந்நாட்டுக்கு கிடைக்கும் நிதி உதவியோ நிவாரணத்தேயோ இல்லாமற் செய்ய
மாட்டேன். இச் சந்திப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டீ சில்வா, பீலிக்ஸ் பெரேரா, நியோமால் பெரேரா, ஜீ.எல்.பீரிஸ்,
ஜனாதிபதியின் செயாலளர் லலித் வீரதுங்க, நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர, மீனவ அமைச்சின் செயலாளர் பியசேன
உட்பட மாமிச உற்பத்தி ஏற்றுமதியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

வன்னிப்பிரதேசத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
அடிப்படை வசதிகளின்றி அவர்கள் அவதிப்படுவதாகக் கூறப்படுகின்றது வீரகேசரி இணையம் 7/23/2008 3:38:04 PM -
வன்னிப்பிரதேசத்தில் சுமார் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளதாகத்
தெரிவித்துள்ள விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் இவர்களில் 35 ஆயிரம் பேர் முன்பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளது.
வன்னியில் தொடரும் இடப்பெயர்வு காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பாடசாலைகளும் இடம்பெயர்ந்துள்ளதாகவும்,
இதனால் இந்தப் பாடசாலை மாணவர்களையும், ஆசிரியர்களையும் இடம்பெயராதுள்ள பாடசாலைகளில் சேர்த்துக்கொள்ள
வேண்டிய தேவையும் எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையில் இடம்பெயராத பாடசாலைகள் இரண்டாம்
தவணைப் பரீட்சையை நடத்த முடியாமல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், வன்னியில்
தொடரும் மக்கள் இடம்பெயர்வு தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவி;ககப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம்
வன்னிப்பகுதியில் ஒரு செயற்கையான பொருட்களுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கியிருப்பதனால், இடம்பெயர்ந்து
கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை தேவைகளில் முக்கியமான உணவுப்பொருட்களைக் கூட விநியோகிக்க
முடியாத நிலைமை தோன்றியுள்ளது, இந்த நிலைமை காரணமாக சாதாரணமான குடியிருப்பு வசதியைக் கூட இடம்பெயர்ந்த
மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பல மாதங்கள் எடுக்கலாம் எனவும் விடுதலைப் புலிகளின் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது,
வன்னிப்பிரதேசத்தி;ன் மீது இலங்கை அரதசாங்கம் விதித்துள்ள தடைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர
நிவாரண உதவிகளை வழங்கும் நடவடிக்கைகளில், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பற்றாக்குறை காரணமாக பல சிக்கல்களை
எதிர்நோக்கியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
வன்னியில் பெய்யும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் துன்பங்களை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் வன்னிப்பிரதேசத்தில்
இடம்பெயர்ந்துள்ள மக்கள் சொல்லொணாத துயரங்களையும் கஸ்டங்களையும் எதிர்நோக்கியுள்ளார்கள். வன்னியில் ஏற்பட்டுள்ள
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உள்ளுரில் உள்ள செய்தியாளர்களும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் துன்பங்களை நேரில்
பார்வையிட்டு வெளிக்கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் வன்னிப்பிரதேச ம்ககள் தற்போது அனுபவித்து
வருகின்ற துயர நிலைமையை வெளிக்கொண்டு வருவதற்கு சர்வதேச செய்தியாளர்கள் வன்னிப்பிரதேசத்திற்குள்
அனுமதிக்கப்படாமையும் ஒரு தடையாக அமைந்துள்ளது என விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஓரிரு சம்பவங்களில் பொது மக்கள் பலியாகலாம்; அதனை தவிர்க்க முடியாது,சர்வதேச அழுத்தத்தை ஏற்க முடியாது என்கிறார்
அமைச்சர் நிமல்

வீரகேசரி நாளேடு 7/24/2008 7:52:40 AM -
நாட்டின் இறைமையை எதற்காகவும் யாருக்காகவும் காட்டிக் கொடுக்க முடியாது.
சர்வதேசத்தின் அழுத்தத்தின் மூலம் தீர்வு திட்டத்தை மக்களுக்கு பலவந்தமாக திணிக்க முடியாது என்று அமைச்சர் நிமல்
சிறிபால டி சில்வா தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில்
நேற்று முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உøரயாற்றும்போதே அமைச்சர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,பயங்கரவாதிகளுடன் போராடுகின்றபோது சாதாரண
மக்களும் ஆங்காங்கே பாதிக்கப்படுகின்றனர். தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களும் பலியெடுக்கப்படுகின்றனர். எனினும்
ஆப்கானிஸ்தானில் முழு கிராமமே அழிக்கப்படுவது போல இங்கு எதுவுமே நடைபெறுவதில்லை. புலிகள் உயிருக்கு போராடிக்
கொண்டிருக்கின்ற போதே இந்த பிரேரணை சபைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு சர்வதேசத்தின் ஆதரவையும் கூட்டமைப்பு
கோரி நிற்கின்றது. நாட்டின் இறைமைக்கு எவராலும் எந்த நாட்டினாலும் தலையிட முடியாது.
பாரம்பரிய பூமி என்று கூறினால் நாட்டை துண்டுகளாக உடைக்கவேண்டும். வேடுவர்களும் சிறு துண்டைக் கேட்பார்கள் வழங்க
முடியுமா? அதற்கு நாம் இடமளிக்க முடியாது.
புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் சரியானதா? முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வேளியேற்றப்பட்டமை
மனித உரிமை மீறல் இல்லையா? புலிகள் சிங்களவர்களை விடவும் தமிழர்களையே கூடுதலாக பலியெடுத்துள்ளனர்.
கருணாவையும் பலியெடுத்திருப்பர் நூலிழையில் தப்பிவிட்டார்.
மக்களின் உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும். அதற்காக சர்வதேச சமூகம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. கிழக்கில்
தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளது. தாக்குதல்களை புலிகளே ஆரம்பித்தனர். எனினும்
பயங்கரவாதிகளின் பிரதேசங்களுக்குள் மருந்து பொருட்கள், உணவு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இது மனித உரிமையை
பாதுகாக்கும் நடவடிக்கை என்பதை சர்வதேச சமூகத்தின் தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். பயங்கரவாதிகள் வேறு தமிழ் மக்கள்
வேறு என்று பிரிவுபடுத்தியுள்ளோம். எனினும் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளை அழிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி மக்கள்
வாழ்கின்ற கிராமங்கள் அழிக்கப்படுகின்றன. அப்படி நாம் செய்யவில்லை. ஓரிரு சம்பவங்களில் பொது மக்கள் பலியாகலாம்.
அதனை தவிர்க்க முடியாது. ஏனென்றால் கொடூர பயங்கரவாதத்துடன் போராடி கொண்டிருக்கிறோம்.
மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. பண முடிச்சுக்களை
யுத்தத்திற்கு மட்டுமல்ல சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கு பயன்படுத்துகின்றனர் என்பதனால் சர்வதேச சமூகத்தின்
அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. புலிகள் முதன் முறையாக ராஜீவ் காந்தியை ஏமாற்றினர். எங்களையும் ஏமாற்றினர்
என்ற பாடங்களை நாம் கற்றுக் கொண்டுள்ளோம். தோல்வியை தழுவுகின்ற போதே புலிகள் பேச்சு மேசைக்கு வருவார்கள்.
எனினும் சுத்தமான இதயத்துடன் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு பேச்சு மேசைக்கு அவர்கள் வரவேண்டும். சர்வதேச
சமூகத்திற்காக தீர்வை மக்களுக்கு பலவந்தமாக திணிக்க முடியாது. அதனால்தான் மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வை சர்வகட்சி
நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தேசியத்துடன் கிடைக்காத விடயத்தை சர்வதேசத்திடம் மண்டியிட்டு கோருகின்றனர்.

No comments: