[26 - July - 2008] தினக்குரல்
முல்லைத்தீவில் மல்லாவிக்கு தெற்கே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு முதல் கடும் சமர் நடைபெற்று வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை வவுனிக்குளம் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்த படையினர் அங்கிருந்து மேலும் வடக்கே
முன்னேறிய போது கடும் மோதல்கள் வெடித்ததாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை இரவு மல்லாவிக்கு தென் கிழக்கே கடும் சமர் வெடித்ததாகவும் அப்பகுதியில் கடும் மோதல்கள் நடைபெற்று
வருவதாகவும் படையினர் தெரிவித்தனர்.
இந்தச் சமரில் விடுதலைப் புலிகளுக்கு பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் துணைத்
தளபதி பல்லவன் மற்றும் முக்கிய தளபதிகளில் ஒருவரான அன்பு உட்பட 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் படையினர் தெரிவித்தனர்.
இந்த மோதலைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் படையினர் தேடுதல்களை நடத்திய போது புலிகளின் 22 சடலங்களை அவர்கள் அவதானித்ததாகவும் படைதரப்பு தெரிவித்துள்ளது.
இதேநேரம், மன்னார், வவுனியா மற்றும் மணலாறு பகுதிகளிலும் வியாழக்கிழமை மோதல்கள் நடைபெற்றுள்ளதாகவும் இந்த
மோதல்களிலும் 20 க்கு மேற்பட்ட விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டும் தங்கள் தரப்பில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாகவும் படையினர் கூறியுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியில் வவுனிக்குளத்திற்கு அப்பால் பாலி ஆற்றையும் கடந்து தற்போது படையினர் மல்லாவி நோக்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment