'தேசம் சுதந்திரம் அடையாமல் கடல் சுதந்திரம் அடையாது'-ENB

அகற்றப்பட வேண்டுமென அம்மாவட்ட மீனவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்தித்து
முறைப்பாடு செய்துள்ளனர் என பிபிசி தமிழ் சேவை தெரிவித்துள்ளது.
மீன்பிடிக்க விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாட்டின் விளைவாக தாங்கள் பெரும் சிரமங்களை அனுபவித்துவருவதாக இந்தப் பிரதேச மீனவர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர். தங்கள் நாளாந்த வாழ்க்கையினைக்கூட நடத்த முடியாது துன்பம் அடைவதாகவும் இவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக தற்போது விதிக்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு தாங்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் முதலமைச்சரைக் கோரியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்துப் பேசி இதற்கான தீர்வினைக் காண்பதாக முதலமைச்சர் இவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment