"கெரில்லா' புத்தகம்- ஷோபா சக்தி என்கிற சிறுவனின் சிறுமைத்தனம்
புலிகள் முகாமிலிருந்து தப்பிச்சென்ற சிறுவன் பிரான்சில் எழுதிவெளியிட்ட "கெரில்லா' புத்தகம்
[28 - July - 2008]
புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளால் பலாத்காரமாகப் பிடித்துச் செல்லப்பட்டு அவர்களின் படைமுகாம்களிலும் யுத்தப் பயிற்சிமுகாம்களில் தடுத்து வைக்கப்படும் சிறுவர்களுக்கு அங்கு எவ்வாறான சித்திரவதைகள், கொடுமைகளை அனுபவிக்கும் என்பதை விபரிக்கும் ""கெரில்லா' என்னும் தலைப்புக்கொண்ட புதிய புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு புலிகள் இயக்க முகாமிலிருந்து சித்திரவதைகளை அனுபவித்துப் பின்னர் அங்கிருந்து இரகசியமாகத் தப்பியோடி
இறுதியில் தற்போது பிரான்ஸ் போய்சேர்ந்த சிறுவன் ஒருவனே இந்த "கெரில்லா' புத்தகத்தை வெளியிட்டுள்ளன. ஒபூஸிகாசு எழுதப்படிக்கத் தெரியாத சிறுவர் சிறுமிகளைக்கூட இவ்வாறு பலாத்காரமாகக் கடத்திச் சென்று மனிதத்தன்மையற்ற வதைகளைச்செய்து பயங்கரவாதத்துக்குச் சார்பான கொடுமையான சிந்தனைகள் அவர்களுக்கு ஏற்படும் படியாக மூளைச்சலவை "செய்து இறுதியில் அவர்களின் உயிரைப் பயங்கரவாதத்திற் பலியிடுவதே புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனினதும் அவர்
தலைமையிலுள்ள புலிகள் இயக்கக் குழுவினரதும் அடிப்படையான குறிக்கோளாகும் எனத் தனது ""கெரில்லா' நூலில்
குறிப்பிட்டுள்ளன் அந்தச் சிறுவன். அந்தச் சிறுவனின் பெயர் அந்தனியேசுதாசன் என்பதாகும். புலிகள் இயக்க சிறுவர்
படைமுகாமிலிருந்து சித்திரவதை பட்ட இந்தச் சிறுவன் பல்வேறு இடர்களுக்கும் மத்தியில் இறுதியில் பிரான்ஸ் சென்று அங்கு
வாழ்ந்து வருகிறான்.
மேற்படி "கெரில்லா' என்னும் புத்தகத்தை அந்தனி யேசுதாசன் தனது சொந்தப் பெயரில் இல்லாது "சுபசக்தி' எனப்படும் புனைபெயரிலேயே எழுதி வெளியிட்டுள்ளான். இவ்வாறு அவர் தமிழில் வெளியிட்ட இந்த "கெரில்லா' நூலை தற்போது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவில் "கெரில்லா' எனப்படும் GORILLA எனப்படும் ஆங்கிலப்பெயரில் பிரபல
நூல்வெளியீட்டு நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ""கெரில்லா' வெளியீட்டில் அந்தனியேசுதாசன் அவர் புலிகள் இயக்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டது சம்பந்தமாகவும்,
புலிகள் இயக்க முகாம்களில் நடைபெற்றுவரும் சித்திரவதைகள் மற்றும் முகாம் தலைவர்களின் கொடுமைகள் பற்றி விபரமாகக்
குறிப்பிட்டுள்ளார். இதற்கேற்ப அவர் தனது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்து விட்டு
திரும்பிக்கொண்டிருந்த போது புலிகள் இயக்கத்தினரால் கடத்தப்பட்டதாகவும் இவ்வாறே பாடசாலையில் வைத்தும்,
தெருவீதிகளில் வைத்தும் கோவில்கள், தேவாலயங்களுக்கு அருகில் வைத்தும் புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் சிறுவர்
சிறுமியரைக் கடத்தி செல்கிறார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட பின் அடர்ந்த காட்டுப்பகுதியிலுள்ள புலிகள் இயக்கத்தினரின் பயிற்சிமுகாம் ஒன்றுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் இயக்கத்தில் சேரும்படி முகாம் தலைவர்களாக உள்ளவர்களால் சித்திரவதைசெய்யப்பட்டதாகவும் இவ்வாறு யாழ்ப்பாணத்திலுள்ள
""குஞ்சள்காடு' எனப்படும் அடர்ந்த வனப்பகுதிலேயே மேற்படி புலிகள் இயக்க முகாம் இருந்ததாகவும் அங்கு கொடுமையானதும் வேதனையானதுமான நரக வாழ்க்கையை வாழ்ந்ததாகவும் மேற்படி "கெரில்லா' புத்தகம் மூலமாக புலிகள் இயக்கப் பயங்கரவாதத்தின் கொடுமைகள் விபரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு புலிகள் இயக்கப் படைமுகாமிலிருந்த அந்தனியேசுதாசன் தனது "கெரில்லா' புத்தகத்தின் மூலம் புலிகள் இயக்கத்தின் மூலம் புலிகள் இயக்கத்தின் பயங்கரமான ராட்சஷ மூலத்தை உலகத்துக்குக் காட்டியுள்ளதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு சர்வதேச ஊடகங்களும் இதுபற்றிய விமர்சனங்களையும் செய்திகளையும் வெளியிட்டுள்ளன. மேற்படி "கெரில்லா' என்னும் தமிழ் நூல் ஆங்கிலத்தில் ""எணிணூடிடூடூச்' என்னும் பெயரில் இந்தியாவில் கடந்த வாரம்தான் வெளியிடப்பட்டது. இவ்வாறு
ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட பின்னரே ""கெரில்லா' மூலமாக புலிகள் இயக்கப் பயங்கரவாதத்தின் கொடுமைகள் பற்றி
சர்வதேசம் பரவலாக அறிந்துகொண்டுள்ளதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
லங்காதீப வெளிநாட்டு செய்தித்தாள் பகுதி 27.07.2008
No comments:
Post a Comment