Friday, 18 July 2008
ஒரு சாமானிய ஈழத்தமிழனின் கேள்வி?
ஒரு சாமானிய ஈழத்தமிழனின் கேள்வி.
தீவிரவாதி பிரபாகரன் உயிருடன் பிடிபட்டால் ஒபாமா என்ன சொல்வார்?
''அமெரிக்க குடியரசு தலைவராக நீங்கள் ( ஒபாமா) பொறுப்பேற்றதும், அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மாற்றம் வரும் என்றும், உலகின் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அவர்களுக்கு ஒரு புதிய விடியல் உதயமாகும் என்றும் நான் நம்புகிறேன்.''
வைகோ
[திங்கட்கிழமை, 14 யூலை 2008 9:29:05 AM ]
''புஷ்ஷினது ஆட்சி முடியும்வரை விடுதலைப் புலிகள் அமைதியாக காத்திருப்பார்கள் என்று 2001 இலேயே நான் எதிர்வு கூறியிருந்தேன். எனது கூற்றுப் பலித்திருக்கின்றது. 2009 ஜனவரியுடன் புஷ் ஆட்சி இழக்கின்றார். அடுத்து, ஒபாமா ஆட்சிக்கு வந்தால், வித்தியாசமான அமெரிக்காவையே நாம் பார்ககமுடியும்.''
அனிதா பிரதாப் [செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 04:29 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்]
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாவுடன் வைக்கோ சந்திப்பு
மெட்ரோ 7/14/2008 9:29:05 AM -
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பாரக் ஒபாமாவை, வைகோ நேரில் சந்தித்து பேசினார். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிடும் பாரக் ஒபாமாவை ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நேற்று முன்தினம் சிகா கோ நகரில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சந்தித்தார்.
ஒபாமாவை பற்றி, வைகோ எழுதிய "ஆம்“ நம்மால் முடியும்'' என்ற தலைப்பிலான புத்தகத்தை வைகோ ஒபாமாவிடம் கொடுத்தார். அந்த புத்தகத்தில் ஒரு பிரதியின் முதல் பக்கத்தில் வைகோவுக்கு, "ஆம்“ நம்மால் முடியும்'' என்று எழுதி பாரக் ஒபாமா கையெழுத்து போட்டார். இந்த சந்திப்பின் போது ஒபாமாவிடம் வைகோ கூறியதாவது:
அமெரிக்க குடியரசு தலைவராக நீங்கள் பொறுப்பேற்றதும், அமெரிக்காவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மாற்றம் வரும் என்றும், உலகின் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அவர்களுக்கு ஒரு புதிய விடியல் உதயமாகும் என்றும் நான் நம்புகிறேன்.
உங்களுடைய வசீகரமும், இயங்கும் வேகமும், காந்த சக்தியும் கண்டங்களின் எல்லைகளை கடந்து உலகின் மூலை முடுக்கில் உள்ள மக்களின் இதயங்களையும் கவர்ந்துள்ளது. உங்களின் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் மகத்தான வெற்றி பெற அருள் பொழிய வேண்டி இயற்கைத்தாயை நான் இறைஞ்சுகிறே என்றார்.
செய்தி
ஒசாமாவை தூக்கிலிட ஒபாமாவுக்கு விருப்பம்
[13 - July - 2008]
வாஷிங்டன் : தீவிரவாதி ஒசாமா பின்லேடன் உயிருடன் பிடிக்கப்பட்டால் தூக்கிலிடப்படவேண்டும் என ஒபாமா கூறியுள்ளார். மன்னிக்க முடியாத குற்றங்களை செய்துவரும் ஒசாமா போன்ற தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை அளிப்பதில் தவறில்லை. இருப்பினும் தூக்குத் தண்டனையை ஆதரிப்பவன் நான் அல்ல என்று தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் ஒபாமா கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment