Wednesday 13 August, 2008

நாராயணா! சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளை போரில் வெல்ல தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.

நாராயணா! சிறீலங்கா அரசு விடுதலைப்புலிகளை போரில் வெல்ல, தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தமிழ்மக்களின் ஆதரவை பெறும்வரை சிறிலங்கா அரசு போரில் வெல்லமுடியாது: எம்.கே.நாராயணன்
சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும்:
ரிச்சேர்ட் பெளச்சர்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தமிழ்மக்களின் ஆதரவை பெறும்வரை சிறிலங்கா அரசு போரில் வெல்லமுடியாது: எம்.கே.நாராயணன்
[செவ்வாய்க்கிழமை, 12 ஓகஸ்ட் 2008, 07:13 பி.ப ஈழம்] [க.நித்தியா]
சிறிலங்கா அரசு தமிழ் மக்களை தமது பக்கம் இழுத்து அவர்களது முழுமையானஆதரவை பெற்றுக்கொள்ளும் வரை விடுதலைப்புலிகளை போரின் மூலம் வெல்லமுடியாது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.
'ஸ்ரெய்ட்ஸ் டைம்ஸ்' என்ற ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிறிலங்கா இராணுவம் கடந்த சில வாரங்களாக களத்தில் பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆனால், களமுனைகளில்
சிறிலங்காபடைகள் என்னதான் வெற்றிகளை குவித்தாலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக சிறிலங்கா அரசு இராணுவ ரீதியில்
வெற்றி பெறும் என்று நிச்சயமாக நான் கூறமாட்டேன். ஏனெனில், சிறிலங்கா அரசின் பக்கம் தமிழ்மக்களது ஆதரவோ பெரும்பலமோ இல்லை.
தமிழ்மக்களுக்கு போதிய அதிகாரங்களை வழங்கக்கூடிய தீர்வை பகிர்வதன் மூலம் அவர்களை தம்வசப்படுத்த சிறிலங்கா அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.
எனக்கு தெரியும் இந்த ஆலோசனை சிறிலங்கா அரசுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தாது. அவர்களுக்கு அறிவுரை கூறுவதில் எங்களுக்கும் நாட்டமில்லை. ஆனால், நோர்வே மற்றும் வேறு எந்த நாட்டையும்விட சிறிலங்காவுக்கு இந்தியாவால் நல்ல ஆலோசனையை வழங்கமுடியும்.
விடுதலைப்புலிகள் கடந்த காலங்களை விட தற்போது பாரிய இழப்புக்களை சந்தித்து பலமிழந்துள்ளார்கள். படைக்கு ஆள் சேர்ப்பது என்பது அவர்களுக்கு சிக்கலான விடயமாகியுள்ளது. மேற்கு நாடுகளில் அவர்களது அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் மூலம் அவர்களது நிதி சேகரிப்பு மற்றும் ஆயுத கொள்வனவுகள் ஆகிய நடவடிக்கைகள் பெரும் சிக்கலை
எதிர்நோக்கியுள்ளன. சகல சமிக்ஞைகளும் விடுதலைப்புலிகளுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துபவையாகவே உள்ளன.
நாங்கள் முன்வைக்கும் வாதம் இதுதான். தமிழ்மக்கள் சகல விடயங்களிலும் தமது தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய
உரிமையை வழங்காதவரை சிறிலங்கா அரசு வெற்றிபெறப்போவதில்லை.

சிறிலங்காவில் தமிழ்மக்களுக்கு உரிமைகளை வழங்கக்கூடிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும்: ரிச்சேர்ட் பெளச்சர்
[புதன்கிழமை, 13 ஓகஸ்ட் 2008, 08:10 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்]
தமிழ்மக்களுக்கு சகல உரிமைகளுடனும் கூடிய நிர்வாக அமைப்புமுறை வழங்கப்படவேண்டும். இராணுவ ரீதியில் மட்டும் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடமுடியாது என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங் களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலர் ரிச்சேர்ட் பொளச்சர் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பும் முன்னர், ஜப்பான் சென்றிருந்த ரிச்சேர்ட் பொளச்சர், அங்கு சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் ஜப்பானிய பிரதிநிதி ஜசூசி அகாசியை சந்தித்து சிறிலங்கா விவகாரம் குறித்து பேசினார்.
அதன்பின்னர், செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-
சிறிலங்கா பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்றை காண்பதற்கு வழி திறக்கப்படவேண்டும். இராணுவ ரீதியாக மட்டும்
இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட முடியாது. இந்த பிரச்சினை முடிவுறாத ஒன்று என்று நாம் நம்புகிறோம்.
அரசியல் வெளி ஒன்று திறக்கப்பட்டு அமைதி வழியில் தீர்வு காண்பதற்குரிய வழிவகைகள் மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால்,
தற்போதைக்கு அப்படியான முயற்சிக்கு அங்கு சாத்தியமில்லாத சூழ்நிலையே காணப்படுகிறது. அங்கு பாரிய சண்டை
நடைபெறுகிறது. இந்த வருடம் சிறிலங்காவின் நிலை மிகவும் பாரதூரமாக உள்ளது. அமைதி முயற்சிகளை மேற்கொள்ளுமாறு
அங்கு போய் கூறமுடியாத நிலை நிலவுகிறது.
அதற்காக, எமது முயற்சிகளை நாம் கைவிட்டுவிட்டோம் என்று அர்த்தமாகாது. சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகளின்
இணைத்தலைமைகள் என்ற வகையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நோர்வே, ஜப்பான் ஆகியவற்றுடன் சேர்ந்து அமெரிக்காவும்
சிறிலங்கா விடயத்தில் அமைதி வழியிலான தீர்வு ஒன்றை ஏற்படுத்த தொடர்ந்து அழுத்தம் வழங்கும்.
- என்று அவர் கூறினார்.
India warns Sri Lanka it might not win war with rebels: report
Tue Aug 12, 9:37 AM ET
India has warned neighbouring Sri Lanka that it may not be able to win an ongoing war against separatist Tamil Tiger rebels despite recent military gains, a report said Tuesday.
Indian National Security Advisor M.K. Narayanan told the Straits Times newspaper that Sri Lanka's Liberation Tigers of Tamil Eelam (LTTE)
had been weakened but retained the ability to stage terror strikes.
"Our argument is: unless you give Tamils a feeling they have the right to their own destiny in many matters, you will not succeed. (The) LTTE's
capacity to carry out terrorist attacks is not diminished," he said.
"The (Sri Lankan army) has made a lot of progress in the last few weeks," Narayanan said. "But even if they win the battle, I am not sure they will win the war.
"I think they haven't got the Tamil population on their side. I know the Sri Lankan government will be unhappy (at this advice) but... that is the best advice they could get," he said.
India directly intervened in the Sri Lankan conflict in 1987 by sending troops to supervise a bilateral peace pact, but ended up fighting Tamil Tigers.
New Delhi withdrew its troops after a 32-month deployment during which it lost some 1,200 soldiers and many more were wounded. Since then, New Delhi has maintained a hands-off policy towards Sri Lanka, but kept close watch.
Sri Lankan troops are currently locked in combat with the Tigers in the north of the island, with the defence ministry reporting a heavy death toll from the area every day.
Sri Lankan military commanders have said they have already crushed the conventional fighting capability of the guerrillas and were on course to defeat them completely within a year.

No comments: