Sunday, 10 August 2008

குடும்பி மலையில் விடுதலைப் புலிகள்

Posted on : Sun Aug 10 7:55:00 BST 2008
குடும்பிமலை கிளைமோர் தாக்குதல்களில் அதிரடிப்படையினர் 10 பேர் பலி!
விடுதலைப்புலிகள் தரப்பில் தெரிவிப்பு
மட்டக்களப்பு, குடும்பிமலைப் (தொப்பிகலப்) பகுதியில் வெள்ளிக்கிழமை யன்று தாம் படையினர் மீது இரண்டு தடவைகள் நடத்திய கிளைமோர் தாக்கு தலில் பத்து விசேட அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர் என விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் என்று இரண்டு தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்றும் அந்தத் தாக்குதல்களில் காயமடைந்த சிலர் அங்கு தரையிறங்கிய ஹெலி மூலம் சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர் என்றும் விடுதலைப்புலிகள் அறிவித் துள்ளனர்.இதேவேளை இந்த தாக்குதலினால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக எந்த அறிவிப்பும் படைத்தரப் பில் இருந்தும் வெளியாகவில்லை.எனினும், நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு பாவடிக் கொடிச்சேனைப் பகுதியில் தேடு தல் நடத்திய படையினர் 15 கிலோ நிறையு டைய குண்டு ஒன்றையும் 22 கிரனேட்டுக் களையும் 19,500 ரி56 ரவைகளையும் மற் றும் பொருள்களையும் மீட்டுள்ளனர் எனப் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.

Posted on : Sat Aug 9 8:39:30 BST 2008
முல்லைத்தீவு ஆஸ்பத்திரியைச் சூழ அதிகாலை அகோர ஷெல் வீச்சு! அரச அதிபர் உட்பட 18 பேர் காயம்; குழந்தை பலி!!
அரசாங்க அலுவலகங்கள், விடுதிகள், வீடுகள் நாசம்!!! முல்லைத்தீவு ஆஸ்பத்திரி வளாகம் மீது நேற்று அதிகாலை வேளையில் நடத்தப் பட்ட அகோரமான கண்மூடித்தனமானஷெல் வீச்சில் முல்லைத்தீவு அரச அதிபர் மற்றும் மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளரின் மனைவி ஆகியோர் உட்பட 18 பேர் படுகாய மடைந்தனர். மாவட்ட வைத்தியசாலை, மாவட்ட அரச செயலகம், அரச அதிபர் இல்லம் உட்பட அப்பகுதியில் இருந்த
அலுவலகங்களும், வீடுகளும் பலத்த சேதமடைந்தன. ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உடல் வதங்கிப் பலியானது.நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில், மணலாறுப்பக்கமாக இருந்து திடீரென ஏவப்பட்ட பல்குழல் ஷெல்கள் முல்லைத்தீவு வைத்தியசாலை வளாகத்திலும் மற்றும் முள்ளியவளை தண்ணீரூற்று, குமாரபுரம், நீராவிப்பிட்டி, உடுப்புக்குளம்,வற்றாப்பளை, மாஞ்சோலை ஆகிய இடங்களிலும் வீழ்ந்து வெடித்தன.முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை அண்டிய பகுதியிலுள்ள அரச அதிபர் இல்லம், வைத்தியர்கள் குடியிருப்பு பகுதிகளையும் ஷெல்கள் விட்டுவைக்கவில்லை. வைத்தியசாலைக்கு சமீபமாக உள்ள வீடு ஒன்றில் விழுந்த ஷெல்லினால் அங்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த பச்சிளங் குழந்தை ஒன்று கணப்பொழுதில் உடல் சிதறிப் பலியானது.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைப் பணிப்பாளர் சண்முகராஜாவின் மனைவி ரேணுகா உட்பட 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவர்களில் ஐவர் இரு அமபுலன்ஸ் வாகனங்களில் வவுனியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.ஒரு கிலோமீற்றர் தூரத்துக்குள் 40 ஷெல்கள் வீழ்ந்து வெடித்தனஇந்த ஷெல் தாக்குதல் தொடர்பாக, முல்லைத்தீவிலிருந்து உதவி அரச அதிபரான எஸ்.பார்த்திபன் கருத்துத் தெரிவிக்கையில், "முல்லைத்தீவு மாவட்டச் செயலகம், வைத்தியசாலை உட்பட சுமார் ஒரு கிலோமீற்றர் சுற்றளவுக்குள் தொடர்ச்சியாக நாற்பது ஷெல்கள் வரை வந்து வீழ்ந்து வெடித்தன. இதனால் வைத்தியசாலை மற்றும் அரச பணிமனைகளும் பொதுமக்களின் 10
வீடுகளும் சேதமடைந்தன'' என்றார்.""காயமடைந்த எமது அரச அதிபரும் ஏனையோரும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப் படுகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்களையும், தரவுகளையும் அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறோம்'' என்றும் அவர் சொன்னார்.மாவட்ட வைத்தியசாலை சேதமடைந்ததால் அங்கு மருத்துவப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் இதனால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குக்கூட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. இதேவேளை , ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சை நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் ஷெல்
வீச்சுக்களால் முல்லைத்தீவில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

No comments: