Saturday, 9 August 2008

அமெரிக்காவின் பொம்மை அரசு ஆப்கானிஸ்தானை அங்கீகரித்த அடிமை சார்க் அரசுகள்

அமெரிக்காவின் பொம்மை அரசு ஆப்கானிஸ்தானை அங்கீகரித்த அடிமை சார்க் அரசுகள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின்அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவதுதடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழீழ விடுதலைப் புலிகள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
சார்க் நாடுகளுக்கிடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து
சார்க் மாநாட்டின் இறுதி நாளான நேற்று சார்க் வலய நாடுகளுக்கிடையில் நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
1)அபிவிருத்தி நிதி,
2)குற்றவியல் அவதூறுச் சட்டம்,
3)உணவுப் பாதுகாப்பு மற்றும்
4)தெற்காசிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஆப்கானிஸ்தானை இணைத்தல் போன்ற நான்கு ஒப்பந்தங்களே அவை.எட்டு நாடுகளின் தலைவர்களின் முன்பாக அந்த எட்டு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்.சார்க் மாநாட்டின் சார்க் தலைவர்களின் இரண்டாவதும் இறுதியுமான மாநாடு நேற்றுப் பிற்பகல் 3.30 மணிக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது.மேற்படி ஒப்பந்தங்கள் முதலில் கைச்சாத்திடப்பட்டன. அதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
உரையாற்றினார்.இறுதியாக மாலைதீவு ஜனாதிபதி நன்றியுரையாற்றினார். 16 ஆவது சார்க் மாநாடு 2009இல் மாலைதீவில் நடைபெறும் என்று
அவர் தமது நன்றியுரையில் குறிப்பிட்டார். இதில் கலந்துகொள்ளுமாறு அவர் சார்க் நாடுகளுக்கு அழைப்பும் விடுத்தார். பிற்பகல்
4.30 மணிக்கு சார்க் மாநாட்டின் அனைத்து நிகழ்வுகளும் நிறைவுபெற்றன. சார்க் மாநாடு கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி
நேற்றுவரை இடம்பெற்றமை தெரிந்ததே.

No comments: